கேள்விகளால் அறிவோம்!

இது ஒன்றும் போட்டியில்லை. சில கேள்விகள் தந்திருக்கிறேன். முடிந்தவரை சொல்லுங்கள். இல்லையென்றால் கொஞ்சம் காத்திருங்கள். அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகவே இவை இருக்கும். முக்கியமாக, இலக்கியம் குறித்த கேள்விகளே இடம்பெறும்.

 

தகவல்களை கேள்விகள் மூலம் அறிவது சுவராசியமானது. புதிர்களின் மீது எப்போதுமே ஆவல் கொண்டவன்தானே மனிதன்!

 

மீண்டும் சொல்கிறேன். இது போட்டியில்லை. தெரிந்து கொள்வதற்கான ஒரு முறை. ஒரு விளையாட்டு. அவ்வளவே. இனி இது போன்ற கேள்விகள் தொடரும்.....

 

கேள்விகள்-1

 

இங்கே புத்தகத்தின் மீது தீராக் காதல் கொண்ட மகத்தான மனிதர்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன். யார் இவர்களெனச் சொல்லுங்கள், இல்லை அறிந்துகொள்ளுங்கள். (நன்றி:புத்தகம் பேசுது)

 

1.தனிமைத் தீவில் ஒருவருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட போது, ‘புத்தகங்களோடு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வருவேன்’ என்ற இவர் சுதந்திர இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்.

 

2. ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறதென்று’ எனச் சொன்ன உலகப் பகுத்தறிவாளர்.

 

3. மனிதனின் ஆகப்பெரும் கண்டுபிடிப்பு எது என்று கேட்கப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் புத்தகம் என்ற இவரோ மிகப்பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திய விஞ்ஞானி.

 

4. 'பெண்விடுதலையின் ஒற்றைவரி தீர்வாக’கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்ற இவர் தமிழகத்தின் மகத்தான சிந்தனையாளர்.

 

5. ‘எனது மவுனம்  புத்தகங்களின் சாரங்களினால் ஆனது’ என்று இவர் தனது வாய் பேசமுடியாத மவுனத்தை வர்ணித்தார். கண்களால் படிக்க முடியாத இவர் உலகுக்கே முன்மாதிரியானவர்.

 

6.புத்தகம் வாசிக்க வேண்டும் என சிறைக்குள் ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அந்த உரிமையைப் பெற்ற இவர் ஒரு இனத்தின் உரிமைக்காக போராடிய உலகம் போற்றும் தலைவர்.

 

7. பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என்றார் உலகின்  மகத்தான தலைவர்களுள் ஒருவரான இவர். 150 மொழிகளில் பல லட்சம் புத்தகங்கள் குவிந்தன. அவரது தேசத்தின் தலைநகரில் இருக்கும் மாபெரும் நூலகமாக அந்த புத்தகங்கள் உருவெடுத்தன. இன்று உலகிலேயே மிகப்பெரிய நூலகம் அது.

 

8. ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகங்கள் வாங்குவாராம் உலகமே அறிந்த, போற்றக்கூடிய இந்த நடிகர்.

 

9. ‘துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் எவை’ என்று கேட்கப்பட்ட போது ‘புத்தகங்கள்’ என்று சொன்னாராம். இவரும் ஒரு  தேசத்தில், இன விடுதலைக்காக போராடிய உலகம் போற்றும்  தலைவர்.

 

10. ‘ஒரு கோடி ருபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்ற இவர், உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பச் செய்த மகத்தான  தலைவர்.

 

11.பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டியிருந்ததால் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரான இவர் விமானத்தில் செல்லாமல், காரிலேயே பயணம் செய்தார்.

 

12..‘எங்கே தங்க விரும்புகிறீர்கள்?’ என்று லண்டனில் சில நண்பர்களின் முகவரிகளைக் கேட்டபோது, ‘எது நூலகத்திற்கு அருகில் உள்ளது?’ என்று கேட்டாராம் இந்த மேதை. இந்திய சமூகத்தில் ஒரு மாபெரும் இயக்கத்தின் அடையாளமாகி இருக்கும் இவர்.

 

13. தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை புத்தகம் படித்துக் கொண்டிருந்த  போராளி இவர்.

 

(யார் இவர்கள் என்பதை அறிந்து கொள்ள இங்கே வாருங்கள்)

 

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. விடை எனக்கு கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் தெரியும்

  தெரியாதவர்கள்

  இங்கே சென்று தெரிந்து கொள்ளுங்கள்

  தவறாயிருந்தால் மன்னிக்கவும்

  http://muduvaihidayath.blogspot.com/2009_04_19_archive.html

  பதிலளிநீக்கு
 2. புத்தகங்களைப் பற்றி இவ்வளவா?

  ஆச்சரியமாக இருக்கிறது.

  4. பெரியார்.
  12.அம்பேத்கர்.


  இன்னும் ப்டிக்கவேண்டியதை விடையளிக்கமுடியாத கேள்விகள் கூறுகின்றன.

  பதிலளிநீக்கு
 3. ராம்ஜி!
  பரவாயில்லை. நாலை காலையில் தெரிந்து கொள்வீர்கள்.

  கார்த்திக் பிரபு!
  நன்றி. நீங்கள் தந்திருக்கும் சுட்டியை புக்மார்க் செய்துகொண்டு இருக்கிறேன். அவசியம் படிபேன்.

  வால்பையன்!
  ஆமாம் ஒருவரே.... அவர் பெயர் வால்பையன்!!!!!!!!!!
  :))))))  ஹரிஹரன்!
  நன்றி. சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.


  லவ் டேல் மேடி!
  நாளைதன் எல்லாம் அறிந்து கொள்வீர்களே.... பிறகென்ன..!
  :))))

  பதிலளிநீக்கு
 4. 1.ஜவஹர்லால் நேரு,
  4.பெரியார்
  12.அம்பேத்கர்
  13.பஹத் சிங்

  பதிலளிநீக்கு
 5. தங்கமான பதிவு! (எப்படி புது அடைமொழி?)

  6. நெல்சன் மண்டேலா
  13. பகத் சிங்

  பல செய்திகள் ரொம்பப் பரிச்சயமாக இருந்தாலும் யார் என்று நினைவுக்கு வரவே இல்லை.

  பதில்களை அறிய ரொம்பவும் ஆவலாக இருக்கிறது. விரைவில் அளியுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. காமராஜ்!
  தீபா!

  இருவரும் சொன்ன வரைக்கும் சரியான விடைகளே!

  பதிலளிநீக்கு
 7. நண்பர்களே!

  பொறுமையை சோதித்ததற்கு மன்னிக்கவும்.

  முதன் முதலாய் இதற்கு பிரியமுடன் வசந்த் அத்தனைக்குமான விடை அறியும் சுட்டி ஒன்றை இணைத்திருந்தார். சுவராசியத்திற்காக அதனை வெளியிடவில்லை.(இப்போது வெளியிட்டு விட்டேன்) புத்தகம் பேசுது இதழில் வந்த இந்த சுவராசியத் தகவல்களை ஏற்கனவே இங்கு ஒரு நண்பர் வெளியிட்டு இருக்கிறார்!

  நானும் இந்தப் பதிவிற்கான விடைகளை எனது அடுத்த பதிவில் வெளியிட்டு இருக்கிறேன்.

  http://mathavaraj.blogspot.com/2009/09/blog-post_05.html

  பதிலளிநீக்கு
 8. புத்தகத்தின் மேல் இருக்கும் ஈர்ப்பை மேலும் கூர் தீட்டும் இடுகை...

  நன்றி

  பதிலளிநீக்கு
 9. லேட்டா வந்ததால விடைகள் இருக்கிற பதிவைதான் முதலில் படித்தேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. கதிர்!
  நன்றி.

  மங்களூர் சிவா!
  அதனால் ஒன்றும் பாதகமில்லை. நன்றி.

  பதிலளிநீக்கு
 11. லேட்டா வந்ததால விடைகள் இருக்கிற பதிவைதான் முதலில் படித்தேன்.

  ஒன்றிண்டு கேள்விகளை தவிர பதில் தெரியவில்லை. நான் இன்னும் நிறைய படிக்கவேண்டும் போல

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!