காலகந்தி என்பது ஒரிசா மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய மாவட்டம். நிரந்தரமாய் வாடிக்கொண்டு இருக்கிறது. காலம் காலமாக பஞ்சம் தொடருவதால், மக்கள் பல தலைமுறைகளாக வதைப்பட்டு வாழவும், இறக்கவும் பழகிவிட்டனர். இப்போது பல மாவட்டங்கள் இந்தியா முழுவதும் காலகந்திகளாகிக் கொண்டு இருக்கின்றன. காலகந்தியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜே.பி.தாஸ் எழுதிய கவிதை இது. (ஆதாரம்- இந்தியன் லிட்டரேச்சர். தமிழில் மொழிபெயர்த்தவர் வசந்தா)
ரோடு மேப்புகளை இப்போது
தூக்கி எறியுங்கள்
நீங்கள் அங்கே போவதற்கு
ஹெலிகாப்டர் அல்லது
வேறெதுவும் வேண்டாம்
எங்கெல்லாம் பசியிருக்கிறதோ
அங்கெல்லாம் காலகந்தி இருக்கிறது.
மழைக்கடவுள் தனது
முகத்தைத் திருப்பிக்கொண்டான்
மரங்களில் ஒரு பச்சை இலைகூட
சாப்பிடுவதற்குக் கிடையாது
கிராமம் முழுவதும் ஒரு இடுகாடாய்
நிலம் பிளந்து கிடக்கிறது
ஆற்று மணலில் ஈரமில்லை
திட்டங்களெல்லாம் தோல்விதான்
வறுமைக் கோடுகள்
வரம்பு மீறுகின்றன
குழி விழுந்த கண்கள்
எலும்புக்கூடு மனிதர்கள்
கந்தைத் துணிகளால்
உடலை மூட முடியவில்லை
பாத்திரங்களில்
ஒரு பருக்கையும் இல்லை
பாடாவதிக் குடிசைகளுக்கு
மேற்கூரைகளே இல்லை
செல்வம் கொழிக்கும் அவர்கள்து வீட்டில்
இரண்டே மண்பானைகள்
தர்மச் சத்திரங்களுக்கு முன்பு
பட்டினிப் பட்டாளங்கள் அணிவகுப்பு
சந்தைக் கூடுமிடங்களில்
குழந்தைகள் ஏலம் விடப்படுகிறார்கள்
கன்னிப் பெண்கள்
விற்பனை செய்யப்படுகிறார்கள்
அனாதரவான மக்களின்
அமைதி ஊர்வலங்கள்
முதலைக் கண்ணீரில்
பொய்யான பத்திரிகைகளின் அறிக்கைகளில்
மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விபரங்கள்
கம்ப்யூட்டரில் எடுக்கப்பட்ட பிரதிகள்
மலிவான அனுதாபங்கள்
மாநாடுகளில் கண்ணீர்
திட்டக் கமிசன் பேர்வழிகளின்
பொய்யான வாக்குறுதிகள்
அபூர்வமாய் மனத்திற்குள் வருந்தி
அச்ச உணர்வால்
நிம்மதியான தூக்கமற்று
வழக்கமான நமது ஆன்மாக்களை
மனசாட்சியை
அது குறைகூறுகின்றது
அழகுமிக்க நுழைவாயில் வழியே
இருபத்தோராம் நூற்றாண்டிற்குள்
காலகந்தியை முதுகில் சுமந்து கொண்டு
பிறகு எப்படித்தான்
நாம் நடப்பது?
*
கவிதை அருமை, ஒரு கவிதையாய்.
பதிலளிநீக்குஆனால் எனக்கு என்னவோ இந்த செய்தி உண்மை இல்லாது போல தான் தெரிகிறது.
அப்படி உண்மையாக இருந்தால் மக்கள் பிசு பட்னாயகிர்க்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்து இருக்க மாட்டார்கள் தொடர்ந்து.
vகாலககந்தி வரலாற்றிலும் சரி, தொண்ம இலக்கியங்களிலும் அழுத்தமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குநாம் போய் வந்த கயாவுக்கு முந்திய புகைவண்டி நிலையம் காலகந்தி. காலகண்டி எனப்பெயர் பெறும் அந்த ஊர்ப்பெயரும் அரிச்சந்திர புராணத்தில் வரும். அங்கு தான் ஒரு நிலவுடமை சாஸ்திரியிடம் மன்னன் அரிச்சந்திரனின் மகனும், மனைவியும் அடகு வைக்கப்படிருப்பார்கள்.
கவிதை நிலைகுலையவைக்கிறது.
ஆனாலும் நிலைமை கவிதையை விடக்கொடூரமானது. அங்கிருந்துதான் இதோ தமிழகத்தின் நாற்கர சாலைகளெங்கும் மண்சுமந்து அலையும் மனிதர்கள் வந்திருக்கிறார்கள்.
அழகுமிக்க நுழைவாயில் வழியே
பதிலளிநீக்குஇருபத்தோராம் நூற்றாண்டிற்குள்
காலகந்தியை முதுகில் சுமந்து கொண்டு
பிறகு எப்படித்தான்
நாம் நடப்பது?
Two things:
1. Govt can displace the entire population to nearby places. Instead of posting so many govt employees to that location, they can divert the funds to the displacement operation.
2. Since (1) would take years to mature and get into effect, people should get enough mental strength to move out of that place.
thanks for sharing sir
பதிலளிநீக்கு@Ramji.yahoo
பதிலளிநீக்குIt is not one district's vote count that determines the CM of the state.
This reminds me of the movie 'Thaneer thaneer (1981).
கவிதை தாங்கமுடியாததாய் இருக்கிறது! என்ன ஒரு கொடுமை...:(
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றிகள்!!
ராம்ஜி!
பதிலளிநீக்குஅங்கு பணிபுரிந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வாக்குமூலம்தான் இது. தவிர நீங்கள் நம் நாட்டின் தேர்தல் முறையை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ப்வர்கள்தானா வெற்றி பெற்றவர்கள் எல்லாம்?
காமராஜ்!
உனது பகிர்வு, இந்தப் பதிவுக்கு அடர்த்தியான பொருள் தருகிறது. வரலாறும் , இலக்கியமும் சாட்சியாக நிற்கும் காலகந்தியைப் பற்றி தெளிவாக புரியவைத்துவிட்டாய் என் தோழனே! நன்றி....!
CK!
அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியுமா? இந்தியாவில் நிறைய காலகந்திகள் இருக்கிறது நண்பரே! அங்கு மக்கள் வாழ என்ன செய்யலாம் என யோசிக்கவே முடியாதா?
மண்குதிரை!
நன்றி.
பகிர்வுக்கு மிக்க நன்றி. அருமையான கவிதை.
பதிலளிநீக்கு//மலிவான அனுதாபங்கள்//
//வதைப்பட்டு வாழவும், இறக்கவும் பழகிவிட்டனர். //
//சந்தைக் கூடுமிடங்களில்
குழந்தைகள் ஏலம் விடப்படுகிறார்கள்
கன்னிப் பெண்கள்
விற்பனை செய்யப்படுகிறார்கள்//
:-((((((
:((((
பதிலளிநீக்குஒரு அதிகாரியையே இப்படி எழுதத்தூண்டுகிறது என்றால் காலகந்தியின் கொடுமையை உணர முடிகிறது.
காலம் காலமாக பஞ்சம் தொடருவதால், மக்கள் பல தலைமுறைகளாக வதைப்பட்டு வாழவும், இறக்கவும் பழகிவிட்டனர். //
கவிதையின் வரிகளை விடவும் இந்த வரிகள் தாம் அதிகம் பாதித்தது.
//தர்மச் சத்திரங்களுக்கு முன்பு
பதிலளிநீக்குபட்டினிப் பட்டாளங்கள் அணிவகுப்பு
சந்தைக் கூடுமிடங்களில்
குழந்தைகள் ஏலம் விடப்படுகிறார்கள்
கன்னிப் பெண்கள்
விற்பனை செய்யப்படுகிறார்கள்
அனாதரவான மக்களின்
அமைதி ஊர்வலங்கள் //
கொடுமை....
பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குstill I cant believe this story, because our English TV channels (NDTV IBN, Times) are hungry for hot news. If this incident has been happening, they would have made so much coverage, opposition parties would have also made it as a big issue.
பதிலளிநீக்குThat is why I cant believe this.
கவிதை ரசிக்க முடியாததாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை எப்பொழுதுமே ரசிக்கப் பட முடிவதில்லை..
காலகந்தி நிலை ஒரு வேளை இங்கும் வந்தால் என்ற கற்பனையே மிகப் பெரிய பள்ளத்தை மனதில் ஏற்படுத்துகிறது...
இதற்கெல்லாம் விடைதான் என்ன? நம்முடையா மூன்றாவது, நாண்காவது தலைமுறை எப்படி வாழும்...
எங்கே இதற்கான உண்மையான வெளிச்சப் புள்ளி இருக்கிறது...
//மரங்களில் ஒரு பச்சை இலைகூட
சாப்பிடுவதற்குக் கிடையாது//
நினைக்க அதி பயங்கரமாய்
சந்தனமுல்லை!
பதிலளிநீக்குதீபா!
அமிர்தவர்ஷிணி அம்மா!
பாலாஜி!
கதிர்!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
ராம்ஜி!
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள இந்தியன் லிட்டரேச்சரில் வந்ததுதான் இது. இப்போதும் மாறவில்லை என்பதுதான் உண்மை.
:((((((((
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்கு