மெயின் ரோட்டில் பஸ்ஸும், லாரியும் கிளப்பிய புழுதியில் எரிச்சல் அடைந்தவனாய் மாரியம்மன் கோவில் தெருவில் திரும்பினேன். வாகனங்களின் இரைச்சல் தாங்க முடியவில்லை.
டீக்கடையருகே முதுகு காட்டி நின்றிருந்த அவனைப் பார்த்ததும் ஆச்சரியமாயிருந்தது. 'சொல்லவேயில்லையே.... சென்னையிலிருந்து எப்போது வந்தான்' அருகில் சென்ற பிறகுதான் அப்படி தோன்றியது. பின்னாலிருந்து அவன் கண்களை மூடினேன்.
“யாரு” என்று வேறு குரல் கேட்டதும் கைகளை விலக்கி அவமானத்தில் நின்றேன். திரும்பியவன் முகத்தில் மீசை இல்லை.தாடி இருந்தது. செண்ட் வாசனையும் அதிகமாய் இருந்தது
"மன்னிக்கவும்... என் நண்பன் ரவி என்று நினைத்து..." முடிக்காமல் மெல்ல முணுமுணுத்தேன்.
"பரவாயில்லை...நானும் உங்கள் நண்பன்தான்.... டீ சாப்பிடுறீங்களா?"
"இருக்கட்டும். நன்றி...வர்றேன்...."
வேகமாய் திரும்பியவன் கொஞ்சதூரம் நடந்ததும் திரும்பிப் பார்க்கத் தோன்றியது. அவனும் என்னைப் பார்த்து புன்னகைத்தான். நானும்தான். என்னைக் கடந்து சென்ற சைக்கிள் மணிச்சத்தம் உற்சாகமாய் ஒலித்தது.
(இது ஒரு மீள் பதிவு)
*
//முகத்தில் மீசை இல்லை.தாடி இருந்தது. செண்ட் வாசனையும் அதிகமாய் //
பதிலளிநீக்கும்ம்ம் புரிந்தது
கண்ணை மூடியதால் நண்பரென்று சொன்னார். மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்திருந்தீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.. என்ன நடந்திருக்கும்.. ஹிஹி..
பதிலளிநீக்குஇப்போ எதுக்கு இது?
பதிலளிநீக்குநானும் உங்கள் நண்பன் தான்.....
பதிலளிநீக்குஇது ஏன் இன்னும் இங்குள்ள பலருக்கும் புரிவதில்லை தோழர்....
இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் வந்தேறிகள் என்று....
ஒரு விதத்தில் எல்லோருமே வந்தேறிகள் தான்...
என்ன எழவு தேசியமோ.....இவர்கள் பேசுவது......
சரியான நேரத்தில் மீள்பதிவிட்டதற்கு நன்றி
அன்புடன்
ஆரூரன்
இன்று காலையில் நீ சொன்ன இந்தச் சம்பவத்தை நினைத்துக்கொண்டேன்.
பதிலளிநீக்குஇந்த பூவுலகமெல்லாம் சந்தோசத்தை விதைக்கிற, அன்பை அறுக்கிற மனிதர்கள்
இருக்கவே இருக்கிறார்கள். அன்பை பரப்புகிற பதிவு.
அட ச்ச... போங்க தலைவரே... ஓசியில கெடைக்குற டீய வேணாமுன்னு சொல்லீட்டீங்களே....!! நானா இருந்தா பாதாம் பாலே குடுச்சுருப்பேன் ...!!
பதிலளிநீக்குநல்லாருக்கு...
பதிலளிநீக்குஅவன் எனக்கும் நண்பன் தான்.
பதிலளிநீக்குநல்லாயிருக்கு.
ஆமா கண்ணைப் பொத்துன ஆள் யாரு பெண்ணு மாதிரி கடைசில இருக்கு, ஆனா ஆணா பெண்ணானு சொல்லியிருந்தா நல்லா இருக்கும். ஏன்னா ஆண்கள் முதுகில் அல்லது தலையில் தட்டுவார்கள், கண்களை பெத்தும் வழக்கம் பெண்கள் உடைய விளையாட்டு. நன்றி.
பதிலளிநீக்குநன்றாக உள்ளது
பதிலளிநீக்குsuper brother
பதிலளிநீக்குஇத்தருணங்கள் அனைவருக்கும் நடக்கக் கூடியதுதான். அந்த மனிதர் அருமையானவர். “நீங்களும் என் நண்பர்” என்று சொல்வதற்கு ஒரு மனது வேண்டும்.
பதிலளிநீக்குவாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குஇளவட்டம் அவர்கள் இப்போது எதற்கு இது என்று கேட்டு இருக்கிறார். புரிந்துதான் கேட்டு இருக்கிறார்.
ஆதிமூலக்கிருஷ்ணனுக்கு இருந்தாலும் கடுமையான குசும்புதான். பித்தனுக்கும், ஆதிக்கும் வந்த மாதிரி யோசனை நல்லவேளை எனக்கு வரவில்லை.
அட இப்படிதான் நானும் ஒரு நாள் எனது தொழிலகத்தில் ஒருவரின் பின்னுருவைப்பார்த்து எனது நண்பன் போல இருக்கவே அவரது கீழ் தொடையில் தட்டினேன் அவர் திரும்பி என்னைப்பார்த்து விட்டார் பாருங்கள் ஒரு பார்வை அவர் மட்டும் கொளுத்தப்பட்ட ஒரு ராகேட்டாய் இருந்திருந்தால் உங்கள் எழுத்துக்களை படிக்கவோ அன்றி இதனை எழுதவோ நான் இருந்திருக்கமாட்டேன்
பதிலளிநீக்குஹி ஹி அவர் ஒரு அய்யப்பனுக்கு மாலை போட்ட ஆசாமியாம்