“அவர்கள் கொள்ளைக்காரர்கள்”: பாரதியார்

படிக்கும்போது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. நமது மகாகவி பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் இப்படி எழுதியிருக்கிறார்.

 

"முதலாளிகள் தொழிலாளிகளின் லாபத்தையும், சுகத்தையும் சிறிதேனும் பொருட்டாக்காமல், கழுகுகள் போலத் தமது லாபத்தையே கருதி வேலையாட்களை வற்றடிக்கும் முறைமை இந்தியாவிலே அதிகரித்துவிட்டது. நவீன நாகரீகத்திலேயே பண ஆசை ஒரு முக்கிய அமிசமாதலால் நமது நாட்டும் முதலாளிகளின் முறைமைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே, தொழிலாளிகளும் மேல் நாட்டுத் தொழிலாளிகளின் மாதிரியைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்.

 

முதலாளிகளிடமிருந்து நமது குறைகளைத் தீர்ப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் உண்டாகுமானால், மேல்நாட்டுத் தொழிலாளிகள் கூட்டங்கூடி மொத்தமாக தொழில் நிறுத்தி விடுவது வழக்கம். அதுபோலவே நமது தொழிலாளிகளும் செய்யத் தலைப்பட்டு விட்டனர். என் செய்வார்கள் பாவம்.

 

விவசாயத் தொழிலைப் பரப்புவதற்கு கவர்ன்மெண்டார் போதுமான சகாயங்கள் செய்து கொடுப்பதில்லை. அரிசி, கோதுமை முதலிய உணவு தானியங்களை பெருமடங்காக ஏற்றுமதி செய்யப்பட்டு, உள்நாட்டுக்கே கஷ்டம் வந்துவிடாமல் தடுக்க, கவர்ன்மெண்டார் யாதொரு முயற்சியும் செய்வதில்லை. தொழிலற்றுக் கிடக்கும் ஜனத்தொகை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. இவர்களுக்கெல்லாம் தொழிலேற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்கிற சிரத்தையே ஆட்சி செய்வோருக்கில்லை.

 

எனவே, ஒவ்வொரு தொழிலிலும் ஆட்கள் ஈ மொய்ப்பதுபோல் மொய்க்க ஹேது உண்டாகிறது. இடையிடையே மழையும் பெய்யாமல் நின்று விடுகிறது. இவற்றையெல்லாம் சவுகரியங்களாக வைத்துக்கொண்டு முதலாளிகள் வேலையாட்களைக் கூடிய வரை இறுக்கி, லாபத்தை தாங்கள் சாப்பிடப் பார்க்கிறார்கள்.

 

முதலாளி என்றால் யந்திரசாலைத் தலைவனாயிருப்பினும் அல்லது ரெயில்வே அதிகாரியாக இருப்பினும் அல்லதுன் அச்சு யந்திர சாலைத் தலைவனாக இருப்பினும், கவர்ன்மெண்ட் பிரதிநிதியான போஸ்டாபீஸ் தலைவனாயிருப்பினும், வேறெவ்விதமாக இருந்த போதிலும் எல்லாம் ஒன்றுதான். தொழிலாளியைக் கஞ்சிக்குப் பறக்க விட்டுவிட்டுத் தனது பணப்பெட்டிகளை நிரப்பிக்கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் கொள்ளைக்காரரே யொழிய வேறில்லை”

 

18-8-1906ம் தேதி, அதாவது நூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இவை. பம்பாயில் நடந்த தபால்கார ஊழியர் வேலைநிறுத்தம் ஒட்டி, மகாகவியின் பார்வையும் சிந்தனையும் இவை.

 

அந்த கவர்ன்மெண்ட்டுக்கும், இந்த கவர்ன்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என யோசிக்க வைக்கிறது.

 

இன்று பாரதி என்னும் மகாகவி இறந்து 88 ஆண்டுகள் ஆகின்றன. பாரதியின் நினைவு நாள்!

 

அவரை மட்டுமில்லாமல், அவரது எழுத்துக்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

 

*

கருத்துகள்

27 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. avan kuriththu
  ovvoru murai ariyum pothum
  piramikka vaikkiraan...

  mahakavi...
  neruppin magan....

  பதிலளிநீக்கு
 2. பகிர்வுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
  நினைவு கொள்வோம் பாரதியை என்றுமே.

  பதிலளிநீக்கு
 3. தொழிலாளியைக் கஞ்சிக்குப் பறக்க விட்டுவிட்டுத் தனது பணப்பெட்டிகளை நிரப்பிக்கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் கொள்ளைக்காரரே யொழிய வேறில்லை” /

  எவ்வளவு உண்மையான வார்த்தைகள்...
  உண்மை சுடுகிறது!!!!

  பதிலளிநீக்கு
 4. பாரதி தீர்க்கதரிசி என்பதில் துளியும் சந்தேகமில்லை..

  சரி 100 ஆண்டுகள் கழிந்தும் அவர் சொன்னது கிட்டத்தட்ட அப்படியெதான் நடந்துகொண்டிருக்கிறது...

  என்ன செய்ய!!!??

  பதிலளிநீக்கு
 5. அவன் 1906 இல எழுதியது 2009 இல மட்டும் அல்ல 3025 இலும் பொருந்தும்.

  இலக்கியா சொல்வது போல அவன் நெருப்பின் மகன், இன்னும் சொல்ல போனால் இயற்கை தந்த கொடை.

  தெளிந்த சிந்தனை கொண்ட தீர்க்கதரிசி அவன்.

  ஒரு தோழனைப் போல,சகோதரனைப் போல் பாரதி மீது அன்பு உள்ளதால் தான் அவன் இவன் என அழைப்பது.

  பதிலளிநீக்கு
 6. மறப்பது மனித இயல்பு-அதை
  நினைவுபடுத்துதல் நம் கடமை

  என்று எங்கோ படித்தது நினைவில் வருகிறது. அந்தக் கடமையை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்

  வாழ்த்துக்கள்

  அன்புடன்
  ஆரூரன்

  பதிலளிநீக்கு
 7. கதிர் - ஈரோடு said...
  பாரதி தீர்க்கதரிசி என்பதில் துளியும் சந்தேகமில்லை..

  சரி 100 ஆண்டுகள் கழிந்தும் அவர் சொன்னது கிட்டத்தட்ட அப்படியெதான் நடந்துகொண்டிருக்கிறது...

  என்ன செய்ய!!!??


  பதிவை படித்து முடித்தவுடன் எனக்கும் இதே எண்ணம்தான் தோன்றியது :(

  பதிலளிநீக்கு
 8. பகிர்வுக்கு நன்றி! உங்களால் பாரதியை நினைவுக்கூர்ந்தேன்!

  //அந்த கவர்ன்மெண்ட்டுக்கும், இந்த கவர்ன்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என யோசிக்க வைக்கிறது. //

  அதே!!!!

  பதிலளிநீக்கு
 9. padhavi varum podhu panivu varavendum thozhaa. Indha nilai indraiya mudhalalikalluku illai. Etho, ivargal kaalam muzhukka owner galave iruppargal endra ninaippu. Vazha Bharathiyun pugash.

  பதிலளிநீக்கு
 10. //எனவே, ஒவ்வொரு தொழிலிலும் ஆட்கள் ஈ மொய்ப்பதுபோல் மொய்க்க ஹேது உண்டாகிறது. இடையிடையே மழையும் பெய்யாமல் நின்று விடுகிறது. இவற்றையெல்லாம் சவுகரியங்களாக வைத்துக்கொண்டு முதலாளிகள் வேலையாட்களைக் கூடிய வரை இறுக்கி, லாபத்தை தாங்கள் சாப்பிடப் பார்க்கிறார்கள்.//

  பாரதி கண்ட கனவுகள் பல நிறைவேறிவிட்டது...சிலது மட்டும் விட்டகுறை தொட்டகுறையாக தொங்கிக்கொண்டுள்ளது...அதில் மேற்சொன்ன விடயமும் அடங்கும்....இதற்கும் ஒரு விடிவுகாலம் வரும்....பார்ப்போம்...

  நல்ல பகிர்வு அன்பரே....

  பதிலளிநீக்கு
 11. இதை படிக்கும்ப்போது பாரதியின்

  உழுதுவிதைத்தறுப்பவருக்குஉணவில்லை
  பிணிகள் பலவுண்டு
  பொய்யைத்தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்களுண்டு

  இந்த வரிகள் தான் ஞாபகம்வருது இப்போ இருக்குற கவர்ன்மெண்ட் பத்தி...

  பதிலளிநீக்கு
 12. நல்லதொரு பகிர்வு.

  பைந்தமிழ்கவிஞன் பாரதிக்கு எமது நினைவாஞ்சலிகளூம்.......

  பதிலளிநீக்கு
 13. மேட்டர் ரொம்ப சீரியஸ்
  குவாட்டர் அடிச்சிகிட்டே தான் படிக்கனும்!

  பதிலளிநீக்கு
 14. இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
  நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

  http://www.srilankacampaign.org/form.htm  அல்லது

  http://www.srilankacampaign.org/takeaction.htm  என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
  அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

  பதிலளிநீக்கு
 15. //18-8-1906ம் தேதி, அதாவது நூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இவை. பம்பாயில் நடந்த தபால்கார ஊழியர் வேலைநிறுத்தம் ஒட்டி, மகாகவியின் பார்வையும் சிந்தனையும் இவை.

  அந்த கவர்ன்மெண்ட்டுக்கும், இந்த கவர்ன்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என யோசிக்க வைக்கிறது.//

  ஒன்றும் இல்லை தானே !!

  பதிலளிநீக்கு
 16. இவை அனைத்தும் அவரெழுதிய ஒரே கட்டுரையில் இருந்தா? இருக்கலாம். பம்பாய் தபால் ஊழியர் வேலைநிறுத்தத்தைப் பற்றித்தானே?

  ஒரு சிறுகுழப்பத்துக்கு ஆளாகிறார் பாரதி இங்கே.

  இறுதிப்பத்தியில், அரசு அதிகாரிகளை, முதலாளிவர்க்கத்துடன் சேர்க்கிறார். அவர்கள் தன்கீழ் வேலை பார்ப்போரை தன்னலத்தின்பொருட்டு நசுக்குவதாக முறையிடுகிறார், இல்லையா?

  உண்மை என்ன? அரசு அதிகாரியும் ஒரு அரசு ஊழியனே. அவனும் இன்னொருவனைத்திருப்திபடுத்தத்தான் வேலை செய்யவேண்டும்.

  அரசு என்பது ஒரு இயந்திரம். ஊழியர்கள் - மேலதிகாரியானாலும், கடையூழியரானாலும் சரி - ஒவ்வொருவரும் அந்த இயந்திரத்தின் ஒரு கருவி. ஒவ்வொன்றுக்கும் ஒருவேலையுண்டு. ஒன்றின்மேல் ஒன்று இருப்பதை hierarchy எனபார்கள்.

  எனவே, அரசு அதிகாரி, தன்கீழ் வேலை பார்ப்பவனைப் பிழிகிறான் தன்னலத்திற்காக் என்பது அரைகுறைப்பார்வையாகும். இது பொதுவாக கம்யூனிஸ்டுகள் பார்வை.

  கடைனிலை ஊழியன் சரி. அவன் மேலதிகாரி தவறு - இது சரியா?

  பாரதியின் மற்ற கருத்துகளையும் தாராளமாக குறை சொல்லலாம். ஆனால், அதற்கு இங்கு இடம் போதாது.

  பாரதி பக்தர்கள் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 17. பகிர்வுக்கு மிக்க நன்றி, பாரதி தீர்க்கதரிசி.

  பதிலளிநீக்கு
 18. இலக்கியா!
  நன்றி.


  பாலா!
  நன்றி.


  தீபா!
  நினைவுகொள்வோம் பாரதியை.  இர.குணசீலன்!
  நன்றி.


  கதிர்!
  நன்றி.


  ராம்ஜி!
  ஆம். அவர் அக்கினிக்குஞ்சு எழுதியவர் அவர்.


  ஆரூரன்!
  மிக முக்கியமான வரலாற்று ஆசரியர் எரிக் ஹோப்ஸ்வாம் எழுதிய வரிகள் அவை.


  அமித்து அம்மா!’
  உண்மை.


  மண்குதிரை!
  நன்றி.


  சந்தனமுல்லை!
  அதே....! நன்றி.
  அனானி நண்பரே!
  நன்றி.  பாலாஜி!
  பாரதி கண்ட கனவுகள் எவை நிறைவேறி இருக்குதுங்க....?


  பிரியமுடன் வசந்த்!
  சரியான பார்வை. நன்றி.


  துபாய் ராஜா!
  நன்றி.


  வால்பையன்!
  மேட்டர் சீரியஸ் என்றாலும் குவார்ட்டர்தானா..!


  தங்கமணி பிரபு!
  நன்றி. செய்துவிட்டேன்.


  புருனோ!
  ஆமாங்க. ஒன்றுமில்லை.


  அம்பிகா!
  என அருமை தங்கையே...! வலையுலகம் உன்னை வரவேற்கிறது.


  சிந்திக்க விரும்பும் சிலருக்காக!
  முதலில் இது கம்யூனிஸ்டுப் பார்வையல்ல.
  பாரதியின் பார்வை.
  அரசு குறித்து அவருக்கு இருக்கும் பார்வையில் வெளிவந்த கருத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. ''முதலாளி என்றால் யந்திரசாலைத் தலைவனாயிருப்பினும் அல்லது ரெயில்வே அதிகாரியாக இருப்பினும் அல்லதுன் அச்சு யந்திர சாலைத் தலைவனாக இருப்பினும், கவர்ன்மெண்ட் பிரதிநிதியான போஸ்டாபீஸ் தலைவனாயிருப்பினும், வேறெவ்விதமாக இருந்த போதிலும் எல்லாம் ஒன்றுதான். தொழிலாளியைக் கஞ்சிக்குப் பறக்க விட்டுவிட்டுத் தனது பணப்பெட்டிகளை நிரப்பிக்கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் கொள்ளைக்காரரே யொழிய வேறில்லை”


  Executive Officer in a factory - works for his master if it is a private concern, to the government if it is public concern,

  Railway Officer works for the government to the satisfaction of his government higher officers

  Printing Press manager...ditto

  Post Master ...ditto...ie. he works for the governments to the satisfaction of his higher PMG

  Bharati refers to all the above officials/officers and then call them, கொள்ளைக்காரர்கள்.

  Why? Because, according to him, they want to enrich their own coffers by squeezing the employees who work under them.

  Is it correct? Should it all be in their day work? Isn't hierarchy in any organisation whereby, the man above you question you, and you, below him, are answerable to him.

  As a bank worker, do you think it is proper to call your officers 'dacoits' because they want you to work more?

  In your fervour and worship of Bharati, your mind accepts anything only because it was written by Bharati.

  If it had been written by an ordinary person, you would have really thought again in the matter.

  If we hero-worship anyone, we are not worthy to judge anything that comes from that person. We will misjudge and, in that process of miscarriage of justice, we do harm to the other side.

  The statements were written more than half a centurey; and you hve reproduced it here,and the respondents ha-ha-ed it : How relevant it is today? etc.

  Other parts are indeed relevant; but not the last para calling government officers dacoits.

  Be fair, Madhava raj!

  பதிலளிநீக்கு
 20. சிந்திக்க விரும்பும் சிலருக்காக!

  நான் தெளிவாகச் சொல்ல்விட்டேன், இது பாரதியின் பார்வை என்று. அதில் முதலாளி குறித்து பொதுவாகச் சொன்னதில் எனக்கு கருத்து உடன்பாடு உண்டு. யார் முதலாளி என்பதில் முரண்பாடு உண்டு. நிச்சயம் போஸ்ட் மாஸ்டரோ, வங்கி அதிகாரியோ முதலாளிகள் அல்ல.

  பதிலளிநீக்கு
 21. நன்றி. இறுதிப்பத்தியிலுள்ள பாரதியின் கருத்துகளில் இருந்து முரண்பட்டதற்கு.

  இப்படிப்பட்ட சுயசிந்தனைகளை நான் வரவேற்கிறேன்.

  வெல் டன், சார்.

  பதிலளிநீக்கு
 22. /
  அந்த கவர்ன்மெண்ட்டுக்கும், இந்த கவர்ன்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என யோசிக்க வைக்கிறது.
  /

  எதாச்சும் கண்டுபிடிக்க முடிஞ்சதா??
  :))))))))

  பதிலளிநீக்கு
 23. சிந்திக்க விரும்பும் சிலருக்காக!
  மங்களூர் சிவா!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 24. Mathavaraj, the moment i saw sinthikka maranthavar..... i ignored it.pl try to ignore such people.they deserve only that much...kashyapan

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!