காணாமல் போனவர்

 

 












 

 

மேலே படத்தில் இருப்பவர் காணவில்லை.

 

இதே முகத்தோடு பலர் காணாமல் போயிருக்கிறார்கள் என ஊர்ஜிதமான தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.

 

சென்ற வருடம்  எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர், ஊரில் கொஞ்சம் இருந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு இருந்தவர், பங்குச்சந்தையில் சேமிப்பையெல்லாம் போட்டு வைத்தவர், கந்தசாமியைப் போல ஒரு படத்தை இரண்டாம் முறையாக பார்த்தவர், வியாபாரம் நொடித்துப் போக கடன் தொல்லையால் அவதிப்பட்டவர் என தொடர்ந்து பலர் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு இல்லாத வாழ்க்கைதான் காரணம்  என தெரிய வந்துள்ளது.

 

இவர்களும் இந்தியப் பிரஜைகள் என்பது  அடையாளத்திற்கான கூடுதல் தகவல்.

 

ஊடகங்களில் விளம்பரதாரர்களே சிறு அறிவிப்புக்கும் இடமின்றி அடைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசுக்கு வேறு முக்கியப் பணிகள் இருப்பதால் ரெகார்டுகளில் மட்டும் பதியப்படுகிறது. எனவே பொதுமக்களே இவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

தயவுசெய்து யாரும் அவர்களுக்காக பிரார்த்திக்க மட்டும் வேண்டாம்.

 

பி.கு: எத்தனையோ முறை அப்லோட் செய்துவிட்டேன். படமும் காணாமல போய்விடுகிறது.

 

*

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //பி.கு: எத்தனையோ முறை அப்லோட் செய்துவிட்டேன். படமும் காணாமல போய்விடுகிறது. //

    :) குசும்பு !

    பதிலளிநீக்கு
  2. //இவர்களும் இந்தியப் பிரஜைகள்//

    அதற்காக....!!! எல்லோர் உயிரும் ஒன்றாகி விடுமா!!! ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மதிப்பிருப்பதாகத்தான் ஊடகம் மூலம் அறிய நேர்கிறது

    பதிலளிநீக்கு
  3. காணாமல் போனவர் பற்றி
    பதிவு போடறதுக்கும் சிலர் தான் காரணமா இருக்காங்க ல அண்ணா

    பதிலளிநீக்கு
  4. கட்டத்துக்குள்ள போட படம் வேணும்னா சொல்லுங்க... :)

    பதிலளிநீக்கு
  5. சூப்பர்!!

    //பாதுகாப்பு இல்லாத வாழ்க்கைதான் காரணம் என தெரிய வந்துள்ளது. இவர்களும் இந்தியப் பிரஜைகள் என்பது அடையாளத்திற்கான கூடுதல் தகவல். //

    அவ்வ்வ்வ்! :-)

    பதிலளிநீக்கு
  6. "கந்தசாமியைப் போல ஒரு படத்தை இரண்டாம் முறையாக பார்த்தவர்"

    இப்படி ஒருவர் தொலையாமல் இருந்தால் தான் தவறு.

    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  7. என்ன ஆச்சு அங்கிள் உங்களுக்கு!
    :-))) பின்னிட்டீங்க

    பதிலளிநீக்கு
  8. தொலைந்தவர்கள் என எடுத்து கொள்ளலாமா?
    அல்லது
    அடையாளத்தை தொலைத்தவர்கள் என எடுத்து கொள்ளலாமா!?

    பதிலளிநீக்கு
  9. கோவி கண்ணன்!
    வருகைக்கு நன்றி. குசும்பாக இருந்தாலும், வேதனையோடும் அதில் ஒரு செய்தி இருக்கிறது நண்பரே. நான் குறிப்பிட்டு காணமல் போனவர்களை ‘முகமற்றவர்கள்’ தானே!


    கதிர்!
    புரிகிறது... புரிகிறது...!


    ஜோதி!
    ஆமாம் தம்பி.


    பீர்!
    இது ஒரு மாயக் கட்டம்!


    சந்தனமுல்லை!
    நன்றி.


    ஆரூரன்!
    சட்டென்று சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள்! நன்றி.


    மண்குதிரை!
    உண்மையாகவா!!! நன்றி.

    உலவு!
    நன்றி.


    அமிர்தவர்ஷிணி அம்மா!
    நன்றி.


    தீபா!
    உன் உற்சாகம் எழுத்துக்களிலேயே தெரிகின்றன. நன்றி.


    வால்பையன்!
    தொலைக்கப்பட்டவர்கள் என எடுத்துக்கொள்ளலாமே!

    யாத்ரா!
    நன்றி.


    நந்தா!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!