கொலைகாரர்களுக்கு எதிராக....

இலங்கை அரசு மனித உரிமை மீறல் குற்றங்களிலிருந்து  இன்று தப்பித்து விடலாம். ஆனால் உண்மைகளிலிருந்து ஒருநாளும் தப்பித்துவிட முடியாது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கவிதை காலத்தின் குரலாய் ஒலிக்கிறது.

வான்வெளியில் கொல்லப்பட்டன
அந்தப் பறவைகள்
கொலைகாரர்களுக்கு எதிராக
நட்சத்திரங்களும் மேகங்களும்
காற்றும் கதிரவனும்
சாட்சி கூறாவிட்டாலும்
அடிவானம் அதற்கு
செவிமடுக்க விரும்பாவிடினும்
மலைகளும் அருவிகளும்
அவற்றை மறந்து விட்டாலும்
ஏதேனுமொரு மரம்
அக்கொடுஞ்செயலை
பார்த்துதானிருக்கும்
தன் வேர்களில்
அக்கொடியோரின் பேர்களை
எழுதிவைக்கத்தான் செய்யும்.

-கிர்கிஸ்தான் கவிஞர் ஷெர்கோ பெகாஸ்

 

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. \\அக்கொடியோரின் பேர்களை
    எழுதிவைக்கத்தான் செய்யும்\\

    ஆம் நிச்சயமாக,,,

    பதிலளிநீக்கு
  2. தன் வேர்களில்
    அக்கொடியோரின் பேர்களை
    எழுதிவைக்கத்தான் செய்யும். //

    உண்மையில் குரல்

    பதிலளிநீக்கு
  3. கவிதைகளின் உண்மையான ஆழம், அடர்த்தி.... வேறெந்த படைப்பிலும் வராது...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா29 மே, 2009 அன்று 7:56 AM

    ஆம் மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து யாரும் நிரந்தரமாகத் தப்பித்துவிட முடியாது.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா29 மே, 2009 அன்று 1:13 PM

    மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான நீதியான தண்டனை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கிடைத்துள்ளது.

    பதிலளிநீக்கு
  6. தன் வேர்களில்
    அக்கொடியோரின் பேர்களை
    எழுதிவைக்கத்தான் செய்யும். //

    ஆம் கண்டிப்பாக அக்கொடியோரின் பேர்களை எழுதி வைத்திருக்கும்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா30 மே, 2009 அன்று 10:21 AM

    அப்படி என்றால் கருணாவுக்கும் நீதியான தன்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  8. அனானி,
    புலிகளின் மனித உரிமை மீறல்களுக்காக அவர்கள் தண்டிக்க பட்டு விட்டார்கள் என்றே வைத்து கொள்வோம். ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களுக்காக தண்டிக்க பட்டவர் யார். அரசு ஆயதங்களை கையில் எடுத்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆனால் ஒரு இனத்தால் அங்கீகரிக்க பட்ட ஒரு குழு எடுத்தால் அது பயங்கர வாதமா. நீங்கள் என்ன தான் மறுத்து சொன்னாலும் இலங்கையின் வரலாறு சொல்லும் சிங்கள பேரினவாத சக்திகளின் கொடுமைகளை.ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த இளைனர் ஆயுதத்தை வன்முறையை கையில் எடுத்ததை தவறு சொல்ல இயலாது.

    பதிலளிநீக்கு
  9. வா(வ)ரம்!
    மிக்க நன்றி.

    யாத்ரா!
    நன்றி.

    ஆ.முத்துராமலிங்கம்!
    நன்றி.

    ஆதவா!
    நன்றி.

    அனானிகள்!
    அப்பாவி மக்களைக் கோலும் பாதகச் செயல்களில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது.

    நேத்ரா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!