ஒருவன்
ஒருநாள் சாயங்காலம் அந்தப் பையனின் பெயரை கரும் பலகையில் எழுதி, அவன்தான் வகுப்பில் முதல் மாணவன் என அறிவித்தார் ஆசிரியை. அந்த முதல் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கைதட்டினார்கள். அடுத்தநாள் காலை ஆசிரியை வகுப்புக்குச் சென்றபோது கரும்பலகையில் நேற்று அவர் எழுதிய மாணவனின் பெயர் மட்டும் அழிக்கப்பட்டு இருந்தது.
00000
அம்மாவின் தவறு
“எல்லாரும் ஷோஷியல் சைன்ஸ் புக் எடுங்க”
ஆசிரியை சொன்னதும் குழந்தைகள் தங்கள் பைகளிலிருந்து புத்தகத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். அவன் மட்டும் விழித்தான்.
“நீ மட்டும் புக் எடுக்கலயா?’
“பைக்குள் இல்ல மிஸ்”
“வெளியே போய் முட்டு போடு..”
“ஸாரி... மிஸ்”
“ஸாரியெல்லாம் கிடையாது. முட்டு போடு. அப்பத்தான் புத்தி வரும்”
“எங்கம்மாதான் புக்கை எடுத்து பையில் வைக்க மறந்துட்டாங்க மிஸ்..”
00000
அழிக்க மட்டும் இரண்டு
“காலையில் நான் சீவித் தந்த பென்சில் எங்கே?”
“.....................”
“என்னடா விழிக்கிற.. ஒவ்வொரு நாளும் ஒரு பென்சிலா?”
“....................”
“பென்சிலை ஒழுங்கா வைக்கத் தெரில. நீயெல்லாம் எப்படி படிக்கப் போறியோ?”
“...................”
“இது என்ன...! ஒன்னோட பாக்ஸில் ரெண்டு ரப்பர் இருக்கு?”
“...................”
“இது யாருடைய ரப்பர்..... சொல்லுடா?”
“..................”
“எழுதுறதுக்கு ஒன்னும் இல்ல. அழிக்குறதுக்கு மட்டும் ரெண்டு வச்சிருக்கான்!”
00000
:-)
பதிலளிநீக்கு//எங்கம்மாதான் புக்கை எடுத்து பையில் வைக்க மறந்துட்டாங்க மிஸ்..”// அவ்வ்வ்!!
//“எழுதுறதுக்கு ஒன்னும் இல்ல. அழிக்குறதுக்கு மட்டும் ரெண்டு வச்சிருக்கான்!”//
ஹிஹி..அதெல்லாம் பண்டமாற்று முறை..கண்டுக்கக்கூடாது!!
அம்மாவின் தவறு மற்றும் அழிக்க மட்டும் இரண்டு - சூப்பர் குட்டிக் கதைகள்
பதிலளிநீக்குஅம்மாவின் தவறு என்ற தலைப்பை யார் தவறு என்று மாற்றி கொள்கிறேன் ... :)
பள்ளிப்பருவம்....கவலையில்லா பிராயம்....ம்..அது ஒரு கனாக்காலம்.
பதிலளிநீக்குஆருமையான பதிவு..
பதிலளிநீக்குஹி ஹி ஹி!!
பதிலளிநீக்கு:-)) ஜாலியா இருக்கு வாலு குறும்பு.
ரசித்தேன்.
பதிலளிநீக்கு‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
ரொம்ப நுணுக்கமா கவனிச்சிருக்கீங்க... முதல் கதை மட்டும் புரியலை!!!
பதிலளிநீக்குநல்லப் பதிவா இருக்கே, ரசிச்சுப் படிக்கவும் சிந்தனை பெறவும் வைக்கும் பதிவு.
பதிலளிநீக்குமூன்றையும் மிகவும் ரசித்தேன், சிந்தனையைத் தூண்டும் விதமாகயிருக்கிறது.
பதிலளிநீக்கு3ம் அருமை ;)
பதிலளிநீக்கு//எங்கம்மாதான் புக்கை எடுத்து பையில் வைக்க மறந்துட்டாங்க மிஸ்..”// அவ்வ்வ்!!
பதிலளிநீக்குசந்தனமுல்லை!
பதிலளிநீக்குஇருப்பதைக் கொடுத்து இல்லாததை பெறுவதுதானே பண்டமாற்றுமுறை?
நந்தா!
அம்மாவின் தவறு என்பதுதான் சிறப்பு என நினைக்கிறேன்.
ராஜ்!
குழந்தைகளிடமிருந்து அந்தக் கனவுகளை மீட்டெடுக்க முடியும்.
கேபிள்சங்கர்!
நன்றி.
தீபா!
பதிலளிநீக்குகுழந்தைகளிடம் வால் இருக்கிறது. பெரியவர்களிடம் கொம்பு இருக்கிறது.
அகநாழிகை!
நன்றி.
ஆதவா!
நன்றி. முதல் கதை புரியலையா?
ஆ.முத்துராமலிங்கம்!
வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.
யாத்ரா!
எழுதும்போது உங்கள் நினைப்பு வந்தது. ரசிப்பீர்கள் எனத் தெரியும்.
மணிப்பாக்கம்!
பதிலளிநீக்குநன்றி.
மங்களூர் சிவா!
பயந்துட்டீங்களா...