உண்மைகள் கலைஞரின் பேனாவுக்கே தெரியும்!

கலைஞர் கருணாநிதி இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும், “இந்தப் பேனா வேண்டுகிறது” என்று தங்கள் கூட்டணிக்கு, கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சார விளம்பரமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

சின்ன வயதில் ஒரு தாம்பாளத்தில் கொழுக்கட்டை, நகை நட்டுக்கள், வடை, பேனா, சிறிய கத்தி ஒன்றை வைத்திருந்தார்களாம். குழந்தையாயிருந்த கலைஞர் தவழ்ந்து சென்று அதில் பேனாவை எடுத்தாராம். அந்தப் பேனாதான் அடுக்கடுக்கான சாதனைத் திட்டங்களை இன்று  நிறைவேற்றி கையெழுத்திட்டிருக்கிறதாம். அதற்கு தமிழக மக்கள் நன்றியினைத் தெரிவித்திடும் நாள்தான் மே 13ம் தேதியாம். தங்கள் காங்கிரஸ், கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமாம்.

பேனா கூசாமல் இப்படியெல்லாம் எழுத ஒரு தைரியம் வேண்டும்தான். அது கலைஞருக்கு நிறையவே இருக்கிறது!

அவரது அப்பாவி மகன் அழகிரியோ, ‘தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்தால் என்ன தவறு’ என்று கேட்டு 500 என்றும், 1000ம் என்றும் வாக்காளர்களுக்கு அள்ளி வழங்கியதாகவும், பல இடங்களில் அவரது ஆட்கள் பிடிபட்டதாகவும் தொடர்ந்து பத்திரிகை, டி,விச் செய்திகள் வருகின்றன. நேர்மையும், கண்ணியமும் மிக்க கனவான் சீவகங்கைச் சீமான் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் சென்ற காரில் கட்டுக்கட்டாய் பணம் இருந்ததை கையும் களவுமாக பிடித்தும் போலீஸார் தப்பவிட்டிருக்கின்றனர். இதோ விருதுநகரில்  பாரத ஸ்டேட் வங்கியில் ஆறு கோடிக்கு 1000, 500 நோட்டுக்களை 100, 50 நோட்டுக்களாக மாற்றி, ஒவ்வொரு வாக்குக்கும் 100+50 கொடுத்து வருகின்றனர். இதே கதிதான் பல தொகுதிகளிலும் என மக்கள் பரவலாகவேப் பேச ஆரம்பித்து விட்டார்கள். உண்மையில் இந்தப் பணத்திற்கு நன்றியினைத் தெரிவிக்கும் நாளாகவே மே 13 கருதப்படுகிறது.

கொள்கைகள், தேர்தல் அறிக்கைகள், பிரச்சாரங்கள், கணிப்புகள், இன்னபிற வெங்காயங்கள், புடலங்காய்கள் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. இப்படி ஜெயித்து ஆட்சியில் உட்காரப் போகிறவர்களின் கனவுகளும், இலட்சியங்களும் என்னவாக இருக்கும்? ஒருநாள் விதைத்த பணத்தை ஐந்து வருடங்களாக உட்கார்ந்து அறுவடை செய்யப் போகிறார்கள். பாராளுமன்றத்தில் ஒரு முக்கிய கொள்கை சார்ந்து ஓட்டெடுப்பு நடக்கும்போது, அதற்கும் கோடி கோடியாய் பணம் வாங்கி , ஆதரித்தோ, எதிர்த்தோ வாய் கிழியப் பேசவும் செய்வார்கள். இந்த வெட்கங்கெட்ட இழிசெயல்களை அரங்கேற்றிவிட்டு, “உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு” என்று மார்தட்டல்கள் எதற்கு? ஜம்பம் எதற்கு?

இப்படி வாங்குகிற வாக்குகள் யாருடைய கொள்கைகளுக்குமான ஆதரவாக இருக்க முடியாது. ஆட்சியழகுக்கான தீர்ப்பாகவும் இருக்க முடியாது.

இந்த உண்மைகள் கலைஞரின் மனசாட்சிக்குத் தெரியாவிட்டாலும், அவரது பேனாவுக்குத் தெரியும்.

ஏனென்றால், அதுதான் அவரது இதயத்தின் அருகே எப்போதும் இருக்கிறது.

 

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சரியான நேரத்தில் அவசியமான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. "இப்படி ஜெயித்து ஆட்சியில் உட்காரப் போகிறவர்களின் கனவுகளும், இலட்சியங்களும் என்னவாக இருக்கும்? ஒருநாள் விதைத்த பணத்தை ஐந்து வருடங்களாக உட்கார்ந்து அறுவடை செய்யப் போகிறார்கள்."

    கடமை
    கண்ணியம்
    கட்டுப்பாடு
    அண்ணா நாமம் வாழ்க!

    :-))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  3. அருமை!

    //பேனாவுக்குத் தெரியும். ஏனென்றால், அதுதான் அவரது இதயத்தின் அருகே எப்போதும் இருக்கிறது.//

    :-) மனசாட்சி எங்கோ தொலைந்து விட்டது என்பதைச் சொல்லாமல்....

    அழகு!

    பதிலளிநீக்கு
  4. கொலைஜன் இப்படி மாறுவான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை!
    பிழைப்புக்காக தமிழர்கலை காட்டிகொடுக்கலாமா?
    மேக்கப் போடாத நடிகன்!

    பதிலளிநீக்கு
  5. //பேனாவுக்குத் தெரியும். ஏனென்றால், அதுதான் அவரது இதயத்தின் அருகே எப்போதும் இருக்கிறது.//

    super

    பதிலளிநீக்கு
  6. கொடுப்பதை வாங்கும் மக்கள் இருக்கும்வரை இது போன்ற அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்....

    இலவச டிவியை வாங்கிவிட்டு, இங்கே ஜனநாயகம் பேசுபவர்கள் பெரும்பாலோர்...

    மக்களின் ஐந்து வருட தலைவிதியை ஓட்டுப்போடும் சமூகம் எழுதும் நாளில் மிக நல்ல பதிவு.

    மதி

    பதிலளிநீக்கு
  7. அந்த பேனா இப்போது தமிழகத்தை வாரிசுகளுக்கு உயில் எழுதவே பயன்படுகிறது

    பதிலளிநீக்கு
  8. //பேனாவுக்குத் தெரியும். ஏனென்றால், அதுதான் அவரது இதயத்தின் அருகே எப்போதும் இருக்கிறது.//

    நெத்தியடி.....சார்

    என் அருமை உடன்பிறப்புகளே....
    பணம் மூன்றெழுத்து,
    பதவி மூன்றெழுத்து,என் குடும்ப
    பாசம் மூன்றெழுத்து
    இவற்றை மட்டுமே வேண்டி நிற்கும் என்
    உயிர் மூன்றெழுத்து.

    தேர்தல் நேர நேசத்துடன்.
    (கொ)கலைஞர்.

    //கடமை
    கண்ணியம்
    கட்டுப்பாடு
    அண்ணா //
    அப்படீன்னா???

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா13 மே, 2009 அன்று 10:06 PM

    For all you know, your party may align with DMK soon or will support UPA from outside and help it to form government.So why make all this fuss. I will not be surprised to see after May 16, 2009, the photo of Karat visiting Karunanidhi's house and presenting a shawl. One can see Karat then in the 'august' company of Stalin,Kanimozhi, Dayanidhi and Azhagiri with the cheerful Karunanidhi at the centre. Of course Varadarajan or Rengarajan will also be there with Karat.

    CPI(M) and CPI have no shame. They will join hands with anyone to keep BJP out of power. That is their only agenda. So why all this talk of morality, secularism, blah blah as if your party really cares about them.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா13 மே, 2009 அன்று 10:08 PM

    Left did not oppose the freebies like Color TV. They have no moral right to criticise Karunanidhi now.

    பதிலளிநீக்கு
  11. திலிப் நாராயணன்13 மே, 2009 அன்று 11:58 PM

    நண்பரே
    அனைத்தும் ஒரு லக்ஷம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தானேயன்றி வேறென்ன. ஆசியாவின் முதல் பத்து பெரும் முதலாளிகளின் ஒருவராகிவிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதி நிதி யிடம் இருந்து வேறென்ன எதிர் பார்க்க முடியும்? அருந்த்தியர் அல்ல ஆதி திராவிட நாகரிகத்தை அழித்த அந்தணர்களே ஆனாலும் சரி நமது சம்பாத்தியம்அழியாமல் இருந்தால் சரிதானே.

    பதிலளிநீக்கு
  12. மனிதம் தொலைந்து விட்டது என்பதை
    நெத்தியில் அடிச்சதுபோல் சொல்லியுள்ளீர்.
    நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
    உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
    www.kalakalkalai.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. ஐயா,
    தக்க நேரத்தில் தக்க பதிவு..!
    மிகவும் அற்புதமாக குறிப்பிட்டுள்ளீர்கள்.......
    மனசாட்சியே இல்லாமல் எழுதிவிட்டு.. மக்களை வடிகட்டிய முட்டாளுக்கும்... தேர்தல் பச்சோஞ்திகளை பற்றி அருமை...!
    தாமதமாக படித்து கருத்து அளிப்பதில் வருத்தம் ! தங்களுக்கு அளிக்கும் முதல் கருத்து!

    பதிலளிநீக்கு
  14. //கலைஞரின் மனசாட்சிக்குத் தெரியாவிட்டாலும், அவரது பேனாவுக்குத் தெரியும். ஏனென்றால், அதுதான் அவரது இதயத்தின் அருகே எப்போதும் இருக்கிறது.//

    ”என்னை வச்சு காமடி கீமெடி பண்ணலையே!”ன்னு கலைஞர் பின்னூட்டம் போட்டாலும் போடுவார் இந்த வரிகளை படிக்க நேர்ந்தால்.பின்னே மனசாட்சி,இதயம்ன்னு ஏதெதோ அவர் இதுவரை கேள்விபடாத விஷயங்களை வச்சு எழுதினால் மனுஷன் டென்ஷன் ஆகமாட்டாறா?

    பதிலளிநீக்கு
  15. வண்னத்துப் பூச்சியார்!
    புதுவை சிவா!
    தீபா!
    ttpian!
    ஜோதி!
    மதி!
    அத்திரி!
    தண்டோரா!
    பாரதி!
    அனானி!
    திலிப் நாராயனன்!
    கலையரசன்!
    பிரவீன்குமார்1

    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் மாதவராஜ்

    தங்களின் ஆதங்கம் புரிகிறது - அடி மேலடி வைத்தால் அம்மியும் நகரும் எனக் காலம் காலமாகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் தான் இருக்கின்றனர். என்ன பயன்.

    இவ்வுண்மைகள் அறியாத அரசியல்வாதி யாரேனும் உண்டா ? இத்தகைய செய்லகளில் ஈடுபடாத அரசியல்வாதிகள் யாரேனும் உண்டா ?
    இன்றைய நிலையில் எல்லோரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். அவரவர்களின் ஆதரவு திரட்டும் திறமையினைப் பொருத்து அவர்களின் தர நிர்ணயம் மாறுகிறது. அவ்வளவுதான்.

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. Democracy, it was said, is the rule of the people, by the people and for the people. After the last round of elecions, politics and government are going to be OFF the people because polticians who are FAR from the people come out during elections to BUY the people.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!