செருப்புடன் ஒரு பேட்டி- மேலும் சில கேள்விகள்

shoe

கவிஞர் மேத்தாவின் ‘செருப்புடன் பேட்டி’ (செருப்புக்கும் பேட்டிக்கும் அப்படியொரு பொருத்தம்) கவிதைக்குப் பிறகுதான் கவிஞர் கந்தர்வன் இப்படியொரு கவிதையை எழுதியிருந்தார்.

“இல்லாதவன் காலுக்குச் செருப்பாக வா
இருப்பவன் தலைக்கு நெருப்பாக வா”

எனவே செருப்பிடம் கவிஞர் கந்தர்வனின்  இந்தக் கவிதை குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அந்தக் கவிதையில் பொருட்பிழை  இருப்பதாகச் செருப்பு சொன்னது.
விளக்கம் கேட்டபோது-
“இல்லாதவன் காலுக்கு நெருப்பாக வா
இருப்பவன் தலைக்கு செருப்பாக போ” என்றிருக்க வேண்டும் இருந்தது.

“இந்த தடவையும் குறி தவறிவிட்டதே” அடுத்த கேள்வி.
“விவசாயிகளின் மரணத்தை  வாயில் கூல் டிரிங்க்ஸ் குடித்து படித்தவர்
பங்குச் சந்தையின் வீழ்ச்சி பார்த்து காலில் வென்னீர் ஊற்றிக்கொண்ட மாதிரி துடித்ததை
என்னிடம் சொல்லி அனுப்பவில்லை.
அமெரிக்காவின் மூளைகொண்டு
நயவஞ்சக நாக்குப் பேசியதையெல்லாம்
என்னிடம் நினைவு படுத்தவில்லை” என்றது.

“இதில் வருத்தம் எதேனும் உண்டா?”
“ஆம். செக்கிழுத்தவர் என்றிருந்த பேர்
செருப்படி பட்டவர் என்று ஆனதால்”

“வேறு ஏதேனும்...”
“வரப் போகிற தேர்தலுக்கு முன்னுரை இது”

கூட்டத்தில் இருந்து செருப்பை நோக்கி ஒருவன் செருப்பை வீசினான்.
என்ன ஆச்சரியம்! 'கை' மட்டும் பறந்து போனது. செருப்பு கையாக அவனுக்கு ஒட்டிக்கொண்டது.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. என்ன மாதவராஜ்,
    ஊரில் இல்லை என நினைத்தேன்.

    அந்த மூன்றாவது செருப்பு இவ்வளவு
    அடர்த்தியான சேதிகள் வைத்திருக்கிறதே.

    காலணி தாசர்களுக்கு
    பாதனிகள் பாடம் சொல்லட்டும்.

    பதிலளிநீக்கு
  2. நச்.........
    செருப்பாலடிச்சு சொல்லிக்கொடுக்கறுதுன்னு ஊர்ல சொல்வாங்க.... அது இதுதாம் போலிருக்கு ;)
    -வழுத்தூரான்.

    பதிலளிநீக்கு
  3. //காலணி தாசர்களுக்கு
    பாதனிகள் பாடம் சொல்லட்டும்.//

    ரிப்பீட்டேய்....
    -வழுத்தூரான்

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு ஆமா எங்க கடைப்பக்கம் வாங்கனா ஆளே காணோம்

    பதிலளிநீக்கு
  5. நச்.........
    செருப்பாலடிச்சு சொல்லிக்கொடுக்கறுதுன்னு ஊர்ல சொல்வாங்க.... அது இதுதாம் போலிருக்கு ;)
    --ரிப்பிடெய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    பதிலளிநீக்கு
  6. சரியான நாளில் வந்த பதிவு.

    புஷ் மீது ஷூ வீசப்பட்டதை தொடர்ந்து செருப்புகளுக்கும் ஷூக்களுக்கும் மதிப்பு கூடிவிட்டது. இன்று சிதம்பரம் மீது வீசப்பட்ட ஷூ நீதி கிடைக்காததற்கு கண்டனம் தெரிவிப்பது தான்.

    பதிலளிநீக்கு
  7. செருப்பு கவிதையும் கேள்வியும் நெருப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. “இந்த தடவையும் குறி தவறிவிட்டதே” அடுத்த கேள்வி.//

    சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்!!


    நல்ல பதிவு!!

    பதிலளிநீக்கு
  9. எதிர்பார்த்து வந்தேன்.
    எதிர்பார்ப்புக்கு மேலாகவே....!

    பதிலளிநீக்கு
  10. காமராஜ்!
    அனானி!
    சுரேஷ்!
    வெங்கடசுப்பிரமணியம்!
    ஹரிஹரன்!
    முத்துராமலிங்கம்!
    ஷீ-நிசி!
    தீபா!

    அனைவரின் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!