ஏன் இந்தக் கொலை வெறி!

innocent

ஆர்க்குட் பக்கமே தலைகாட்ட முடியவில்லை. போக மாட்டேன் என்று அங்கு அவர் உட்கார்ந்து அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். முக்கிய இணையப் பக்கங்கள் எங்கு போனாலும் நானே வருவேன் என்று பாடியபடி தோன்றுகிறார். திகிலாய் இருக்கிறது. வெற்றிக்கு அடையாளமாய் இரண்டு விரல்களை நீட்ட வேறு செய்கிறார். திரும்பத் திரும்ப முகத்தைக் காட்டி நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கும் உத்தி இது. செல்போன்களையும் விடப் போவதைல்லையாம். மக்கள் மனதைத் தவிர அனைத்து இடங்களையும் பிடித்துக் கொள்வது என்ற முடிவு போலும். ஏன் இந்தக் கொலைவெறி.  யார் அவர் எனத் தெரிகிறதா?

000

சென்ற வாரம் மதுரைக்குப் போயிருந்தேன். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் அனைத்துப் படங்களின் டி.வி.டிக்களும் கிடைக்கும். ஒரு கடையில் போய் வாரணம் ஆயிரம் கேட்டேன். மேலும் கீழுமாய்ப் பார்த்து “சார் போங்க சார்” என்றார் கடைக்காரர். கொஞ்சம் தள்ளி இன்னொரு கடையில் போய் கேட்டேன். “வேறு எந்தப் படம் என்றாலும் கேளுங்கள்... அந்தப் படம் கிடைக்காது” என்றார்கள். இன்னொருவர் “எங்கு வந்து எதைக் கேட்கிறீர்கள்” என்று அதிர்ச்சியோடு பார்த்தார். “சார்... இங்க நிக்காதிங்க.. போயிருங்க... ஒங்களுக்கும் நல்லதில்ல... எனக்கும் நல்லதில்ல... தொடர்ந்து கடை நடத்தணும்” என்றார். அப்புறம்தான் எனக்குப் புரிந்தது. உங்களுக்குப் புரிந்ததா? ஏன் இந்தக் கொலைவெறி?

000

இப்போது இரண்டு வாரங்களாய் பார்க்கிறேன். நான் எந்தப் பதிவு செய்தாலும் தாறுமாறாய் தமிழ்மணத்தில் எதிர் ஓட்டுக்கள் விழுகின்றன. நமது பார்வைகள், கருத்துக்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என புரிந்து கொண்டேன். அது அவர்களின் உரிமை என்பதும் சரிதான். ஆனால் குழந்தைகள், நாட்டுப்புறக் கதைகள் என எதைப் பற்றி எழுதினாலும் அந்த திருவிளையாடல்கள் தொடர்கின்றன. நேற்று எழுதிய ஜப்பானியப் பழங்கதை பதிவிட்டு ஒரு மணிநேரம் கழித்துப் பார்த்தால் 0/5 என்று ஓட்டுக்கள் விழுந்திருந்தன. அந்தக் கதையில் என்ன பிடிக்காமல் இருக்கிறது எனத் தெரியவில்லை. தமிழ்மண நட்சத்திரம் ஆகியதிலிருந்துதான் இப்படியான ஆதரவுக்கரங்கள் நீட்டப்படுகின்றன. ஏன் இந்தக் கொலை வெறி?

000

நேற்று இரவு இணையத்தில்தான் இந்தக் குட்டிக் கதையைப் படித்தேன். ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருடைய ஒரு கண் நன்றாக இருக்கிறது. இன்னொரு கண் அரைகுறையாய் மூடி பூ விழுந்து போய் இருக்கிறது. தன்னை உள்ளது உள்ளபடியே, தனக்கு திருப்தி அளிக்குமாறு ஓவியம் வரைய வேண்டும் என்று அரசன் ஓவியர்களுக்கு அழைப்பு விடுக்கிறான். மூன்று ஒவியர்கள் முன்வருகிறார்கள். ஒருவன் உள்ளபடியே வரைந்து கொடுக்க, அரசன் தன்னை இப்படி அசிங்கமாக வரைந்து விட்டானே என்று அவனுக்கு மரணதண்டனை கொடுக்கிறான். இன்னொருவன் இரண்டு கணகளையும் முழுமையானதாய், அழகானதாய் வரைந்து கொடுக்கிறான். தன்னை பரிகாசம் செய்துவிட்டதாக அவனுக்கும் மரணதண்டனை அளிக்கிறான் அரசன். ஏன் இந்தக் கொலை வெறி? இந்த நிலையிலும் மூன்றாம் ஓவியன் அரசனைப் படம் வரைந்து கொடுத்து பாராட்டுப் பெற்று விடுகிறான். எப்படி எனத் தெரிகிறதா?

 

*

கருத்துகள்

34 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. முதலில் சொன்னவர் யாரென்றும், இரண்டாவதில் ஏன் என்றும் புரிகிறது :)

  பதிலளிநீக்கு
 2. ரெண்டாவது மேட்டர் மட்டும் நல்லாவே புரியுது. நல்லவேளை கழகக் கண்மனிகள் ய்யாரும் கேக்கல. கேட்டிருந்தாங்க மாட்டுத் தாவணியிலே உங்கள தவிடாக்கிருப்பாங்க:)

  பதிலளிநீக்கு
 3. :)

  ராஜாவை நேருக்கு நேரா வரைஞ்சுருக்கமாட்டாரோ..இல்லாட்டி தூங்கறாப்பல தியானம் செய்யராப்பல வரைஞ்சுருப்பாரா இருக்கும்..
  ஆனா இந்த பதிவில் ராஜாவுக்குத்தான் ரொம்ப கொலைவெறி.. :))

  பதிலளிநீக்கு
 4. THE KING WAS DRAWN WITH BOW AND ARROW.
  BUT I COULD FIND SOME SORT OF COMMON RESEMBLANCE IN ALL THE PASSAGES i.e, the first man love bow and arrow, the second one loves to keep such competitions and would give such awards also........

  பதிலளிநீக்கு
 5. முதல், இரண்டாவது மேட்டருக்கு நோ கமெண்ட்ஸ்.. தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்ன்னு நினைச்சுக்குங்க :-)

  மூணாவது சில நாளா சிலருக்கு மாத்திரம் இப்படி நடந்துட்டிருக்குன்னு தெரியுது. சூடான இடுகை மாதிரி மகுடமும் மாறிடும் போலருக்குது :-)

  புதிர்க்கதைக்கான விடை : வில்லில் நாண் ஏற்றி குறி வைப்பது போல வரைந்திருப்பதில் பூ விழுந்த கண் மூடியிருப்பதால் குறை தெரியாது. அதனால் மூன்றாம் ஓவியர் பரிசு பெறுகிறார். :-)

  பதிலளிநீக்கு
 6. 1)ஆர்க்குட் பக்கமே போவதில்லை
  2)மதுரைகாரன் என்பதால் நல்லாவே புரிந்தது
  3)அதெல்லாம் கண்டுகாதிங்க பலுத்த மரம் தான் கல்லடிபடும் இது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை
  4)சென்ஷி அவர்கள் கூரியுள்ள விடை சரி என்று நினனைகிறேன்

  பதிலளிநீக்கு
 7. மலை ஏறும் போது பல சங்கடங்கள் வரத்தான் செய்யும் ஆனால் அதையும் மிறி ஏறினால்தான், மலை உச்சியை அடைய முடியும்!!!! தங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை, மனம் தளர வேண்டாம்!!!! நாங்கள் உங்கள் பக்கம்!!!!!

  உங்கள் எழுத்தின் ரசிகன்..

  பதிலளிநீக்கு
 8. சிலர் வேண்டுமென்றே எதிர் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறேன்... அதில் என்ன ஆனந்தமோ???

  ஆர்குட்டில் நானும் அவ்வளவாக செல்வதில்லை. என்னைக் காயப்படுத்திய நண்பர்கள் இன்னும் அங்கே இருக்கிறார்கள்~!!

  பதிலளிநீக்கு
 9. சார்... வாரணம் ஆயிரத்தை நீங்க சிடியில கூட பார்க்கவேணாம்!!!

  பதிலளிநீக்கு
 10. முதலாமவது எனக்கு தெறியவில்லை
  இரண்டாமவது நன்றாக தெறிகின்றது
  மூனாவதில் நில்லுங்கள். நீங்கள் ஓட்டை பார்க்கதீரகள் படிக்க நாங்க இருக்கின்றோம். ஓட்டு போட்டு போடுவதில் குழப்பம் இருந்திருக்களாம் அதற்க்காக நீங்கள் எழுதும் சிறுகதை, முடிந்தும் முடியாத கதை, இவைகளை இன்னும் எழுதங்கள்,
  நாளாவது சின்ன்ன்னகதை நால்லயிருந்தது ஆனால் விடை தெறியவில்லை,

  ஆதவா said...
  சார்... வாரணம் ஆயிரத்தை நீங்க சிடியில கூட பார்க்கவேணாம்!!!

  ஆதவா ஏன் இந்த கொலைவெறி...

  பதிலளிநீக்கு
 11. எனக்கு சில விடயங்கள் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 12. உங்களுக்கு மட்டும் இல்லை என்னோட அருமையான பதிவு

  அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்.....

  http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html

  12/22 வோட்டு yaro vishamigal seiranga
  pavi pasanga nalla pathiva eppadi sera vidama panranga, neengalavathu tamil manathil nattachathiram aaneergal nan inum appadi ethum agala athuku munadiyae valara vidama kavukkuranga

  ஆனா மொக்கையா எழுதுனா ஓட்டா விழுவுது

  nanum ungalauku nerya vottum pinnotamum pottutaen neenga namma kadai pakkamae vara matingingra mudincha antha pathiva padichu parung

  பதிலளிநீக்கு
 13. இரண்டாவது மட்டும் புரிந்த்தது.. :)

  பதிலளிநீக்கு
 14. Sir,

  Don't feel about votes, your writing is good keep it up up.

  cheers.

  பதிலளிநீக்கு
 15. சுவாரசியமான தொகுப்பு. மூணாவது மேட்டர் தான் புரியலை. ஏன் இப்படி? ஆனால் எல்லோரும் சொல்வது போல் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. சரி என்ன உங்களுக்கு நேரம் இல்லை போல் ...

  நேரம் இருந்தால்

  நம்ம சக்கரை கடை பக்கம் வாங்க :-)

  பதிலளிநீக்கு
 17. சுந்தர்!

  வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.

  வித்யா!
  வாங்க. நீங்க சோன்னதுக்கு ‘ஆமாங்க’

  பதிலளிநீக்கு
 18. அண்டோ!

  விடை கண்டுபிடிக்கிறதுல சமர்த்தர்தான் நீங்கள்.
  ஆனால் நான் படிச்சதில், ராஜாவை, கண்ணுள்ள பக்கவாட்டில் மட்டும் முகம் வரைவது என்பதுதான் விடை. நீங்கள் சொன்னது இன்னும் நல்லா இருக்கே!

  பதிலளிநீக்கு
 19. முத்துலட்சுமி கயல் விழி!

  பதில் தெரிஞ்சுக்கிட்டீங்களா? வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. சென்ஷி!
  //மூணாவது சில நாளா சிலருக்கு மாத்திரம் இப்படி நடந்துட்டிருக்குன்னு தெரியுது. சூடான இடுகை மாதிரி மகுடமும் மாறிடும் போலருக்குது//

  ஓஹோ! வருகைக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 21. வெங்கடேஷ் சுப்பிரமணியன்!
  //அதெல்லாம் கண்டுகாதிங்க பலுத்த மரம் தான் கல்லடிபடும் இது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை//

  பொன்ராஜ்!
  //மலை ஏறும் போது பல சங்கடங்கள் வரத்தான் செய்யும் ஆனால் அதையும் மிறி ஏறினால்தான், மலை உச்சியை அடைய முடியும்!!!! தங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை,//

  நான் இதற்காக வருத்தப்படவில்லை. எழுதாமல் இருக்கப் போவதில்லை.
  நீங்கள் எல்லாம் என்னோடு இருக்கிறீர்களே.... அது போதும்.
  ஏன் இப்படி என்பதுதான் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 22. ஆதவா!

  சரிங்க. நான் பார்க்கவில்லை. வீட்டில் பார்க்க வேண்டும் என்றார்கள், அதுதான்.அவர்களிடமும் சொல்லி விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. முத்துராமலிங்கம்!
  //அதற்க்காக நீங்கள் எழுதும் சிறுகதை, முடிந்தும் முடியாத கதை, இவைகளை இன்னும் எழுதங்கள், //

  எனது அனைத்து பதிவுகளிலும், உங்களைப் போன்றோர் படிப்பதும் ரசிப்பதும் இருக்கும் போது எனக்கென்ன.... மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. மண்குதிரை!

  வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றிங்க.

  சுரேஷ்!
  //ஆனா மொக்கையா எழுதுனா ஓட்டா விழுவுது//

  ஓஹோ... நாம் எப்படி அப்படி எழுத...?

  பதிலளிநீக்கு
 25. சந்தனமுல்லை!

  தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  தர்ஷினி!
  மேலே உள்ள பின்னூட்டங்களை படித்தால் எல்லாம் புரிந்துவிடுமே...
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. தீபா!

  இதையெல்லாமா பெரிதாய் எடுத்துக் கொள்வேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 27. சுரேஷ்!

  கண்டிப்பாய் வருவேன். இன்று படிக்கிறேன். நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 28. இன்னைக்கு ஓர்குட் - ல வருவாய்ங்க..ஒட்டு போட்டா நாளைக்கே, ஓர்குட் நம்ம கலாச்சாரத்துக்கு எதிரானதுன்னு தடை பண்ணுவாய்ங்க.அதோட உட்டா பரவா இல்ல பாஸு, எதாவது பொம்பளை புள்ளையளுக்கு ஸ்க்ராப் பண்ணியள்னா, அந்த புள்ளைக்கே உங்களை கட்டி வசிருவான்ய்ங்க.ஜாக்ரதை.

  பதிலளிநீக்கு
 29. he had painted the king in side view.(leaving the damaged eye to the other side.)
  correct ah?

  பதிலளிநீக்கு
 30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 31. வோட்டுகளை விட்டு தள்ளுங்க.

  பல பதிவுகள் எழுதியும் என்னை தமிழ்மணத்தில சேக்க மாட்டேங்கிறாளே, ஏன்? (அதில ஒரு சில பதிவுகள் தான் படிக்க முடியும் என்பது வேறு விஷயம்)

  இத்தனைக்கும் ஆங்கில கலப்பில்லாமே தான் எழுதிருக்கேன், குறைந்தது மூன்று பதிவுகளாவது தமிழில் எழுதியிருக்க வேண்டும் என்கிறது எரர் மெசேஜ்!!!

  எப்படியோ தமிலிஷ்-ல பிரச்சனையில்லாமே போகுது.

  பதிலளிநீக்கு
 32. //இப்போது இரண்டு வாரங்களாய் பார்க்கிறேன். நான் எந்தப் பதிவு செய்தாலும் தாறுமாறாய் தமிழ்மணத்தில் எதிர் ஓட்டுக்கள் விழுகின்றன. நமது பார்வைகள், கருத்துக்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என புரிந்து கொண்டேன். அது அவர்களின் உரிமை என்பதும் சரிதான். ஆனால் குழந்தைகள், நாட்டுப்புறக் கதைகள் என எதைப் பற்றி எழுதினாலும் அந்த திருவிளையாடல்கள் தொடர்கின்றன.//

  அப்பாவி மாதிரி ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்களே... இருள்நீக்கி சுப்பிரமணிய பத்தி இப்படி ஒரு பதிவு போட்டுட்டு http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_02.html

  வேறு என்ன எதிர்பார்க்குறீங்க? :)

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!