குழந்தைகள் விற்கப்படும் தேசம்

mother and child அதைத் தவிர ரஜிதாவுக்கு வேறு வழி இல்லாமல் போயிருக்கிறது. அப்போதுதான் பிறந்த தன் குழந்தையை, தனக்குத் தெரிந்த ஒரு ரிக்‌ஷாக்காரர் மூலமாக  ஆறாயிரம் ருபாய்க்கு விற்பதற்கு துணிகிறார். பிரசவம் பார்த்த அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவச் செலவுக்கு இரண்டாயிரம் ருபாய் கேட்டார்களாம். தகவலறிந்த  போலீஸார் இதைத் தடுத்து நிறுத்தி, அரசு ஆஸ்பத்திரியில் யார் பணம் வேண்டும் என கெடுபிடி செய்தது என தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு  வருகிறார்களாம். இது நேற்றைய தினகரன் பத்திரிக்கையில் வந்த செய்தி.

அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானதுதான். ஆனால் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாயே விற்க  முன் வரும் வறுமை குறித்து விசாரிக்க வேண்டியது அதையும் விட முக்கியமானது. ஒரு வாரத்துக்கு முன்பு இது போல நமது மாநிலத்தில், கடலூரில் ஒரு  தாய் இருபதாயிரம் ருபாய்க்கு தனது குழந்தையை தெருவில் நின்று கூவி கூவி விற்க முயன்றதாக ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது.

விற்கப்படும் குழந்தைகளை வெறும் செய்திகளாக அல்லது ஒற்றை வார்த்தையாக நம் கண்கள் கடந்துவிடக் கூடும். பெற்ற தாய்க்கு அது இரத்தமும்  சதையுமான அவளது ஜீவன். பத்து மாதம் சுமந்த உயிர்க்கனவு. நெஞ்சில் முட்டும் அமுததத்தைப் பருக விடாமல், குழந்தையை விலக்கும் வலியை தாயே  அறிய முடியும். அந்தக் குழந்தையின் அழுகை, வாழ்வு முழுவதும் தீனக் குரலாக கூடவே வரும். அதன் பிறகு எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அவளது  உடலும், உள்ளமும் தீயில் வெந்து போகும்.

இதெல்லாவற்றையும், மீறி ஒரு தாய் தன் குழந்தையை விற்கத் துணிகிறாள் என்பதுதான் அதிச்சியாய் இருக்கிறது. தன் குழந்தை சிரிப்பதை, தவளுவதை,  மழலை பேசுவதையும், தத்தி தத்தி நடப்பதையும் பார்க்க முடியாமல் வறுமை இந்த தேசத்தில் ஒரு தாயை அலைக்கழித்திருக்கிறது. பாராடா.... பாரடா... என  நடுத்தெருவில் நின்று தொப்புள் கொடியின் இரத்தம் சொட்ட சொட்ட ஒரு தாய் வந்து நின்று குழந்தையோடு கதறுகிற காட்சியாய் நம் நரம்புகளை அறுக்கிறது.
என்ன தேசம் இதுவென அவமானம் வருகிறது.

ஆனால் நமது முன்னாள் நிதியமைச்சரும், இன்னாள் உள்துறை அமைச்சருமான மாண்புமிகு சிதம்பரம் அவர்கள் தேசம் வளர்ச்சிப் பாதையில் சென்று  கொண்டிருப்பதாய் பெருமிதத்தோடு முந்தாநாள் பேசுகிறார். இதற்கு ஆதாரமாகவும், குறியீடாகவும் அவரும் ஒரு காட்சியை முன் வைக்கிறார். இளநீர் விற்கும்  பெண்மணி கூட இந்தியாவில் செல்போன் வைத்திருக்கிறாராம். ஆஹா... எப்பேர்ப்பட்ட ஆழமான கருடப் பார்வை இந்த கனவானுக்கு. குழந்தைகளை விடவும் செல்போன்கள் மதிப்பு வாய்ந்தவையாகி இருக்கின்றன. இவர்தான் இந்தியாவின்  பொருளாதார மேதைகளில் ஒருவர் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல், பெரியார் அடிக்கடிச் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை மட்டும் வேகமாய் வெளிவருகிறது.

 

*

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. \\வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல், பெரியார் அடிக்கடிச் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை மட்டும் வேகமாய் வெளிவருகிறது. \\

    what is that word please.......

    பதிலளிநீக்கு
  2. தாங்கவே முடியவில்லை. இப்போது புரிகிறது, வாடகைத் தாய்கள் ஏன் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக மலிந்து போனார்கள் என்று.

    // இளநீர் விற்கும் பெண்மணி கூட இந்தியாவில் செல்போன் வைத்திருக்கிறாராம். ஆஹா... எப்பேர்ப்பட்ட ஆழமான கருடப் பார்வை இந்த கனவானுக்கு. குழந்தைகளை விடவும் செல்போன்கள் மதிப்பு வாய்ந்தவையாகி இருக்கின்றன. //
    தொண்டை அடைக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. P.C = waste..

    Never mind his comments.

    As a finance minister he was instrucing everyone to keep investing.. keep investing.. Now what the hell he can say.. Will he keep investing... ?????

    பதிலளிநீக்கு
  4. தோழரே நீங்க வேற!! நான் காரைக்குடிதான் எங்க சாலைகளை பார்த்தாலே தெரிந்து போகும் இந்தியாவிற்கு ப.சிதம்பரம் என்ன செய்ஞ்சாருனு (செய்வாருன்னு). போன தடவையே இவர் தோத்து போயிருப்பார், நம்ம ஊர்ல ஒரு ஆள்கூட விடாம கெஞ்சி கூத்தாடித்தான் ஜெயிச்சாரு. அவர் எங்களுக்கு கொடுத்த வாக்கு "ஒவ்வொரு தடவையும் இந்தியாவில் இருந்துதான் சிவகங்கையை பார்ப்பேன் இந்த தடவை சிவகங்கை மூலம் இந்தியாவை பார்ப்பேன் என்று" அவர் சொன்னது சரிதான் சிவகங்கை பேருந்து நிலையம் முதல் அரண்மனைவாசல் வரை பார்த்தாலே போதும் ஒட்டுமொத்த இந்தியா எப்படி இருக்கும் என்று.. பீகார் எல்லாம் தோத்து போய்டும்.எங்க ஊருக்கு புதுசா யாராவது இரவு நேரம் தேவகோட்டை ரஸ்தா வழியா பயணம் செய்தால் அது அவருக்கு இறுதி பயணமா இருக்கும்..ஆனா அப்பாவும் மகனும் சேர்ந்து வாரம் ஒருதரம் வங்கி கிளைகளை துவங்கி வைப்பார்கள்.

    என்ன சொல்லி என்ன பண்ண! இவர் பணக்கார வீட்டு கணக்கு பிள்ளைதான்.. ஏனா அவங்க எல்லாம் ராசபரம்பரை ரேசன் அரிசி சாப்பாடு சாப்பிட்டதில்லை, செருப்பு இல்லாமல் நடந்ததில்லை, அதனால் அவரால் சராசரி மக்களுக்கு ஏதும் செய்ய முடியாது.

    இவரு ஈழ விசயத்தில் சமீபத்தில் சொன்ன தகவலே நல்ல நகைசுவை.

    என்ன இருந்தாலும் ஒரு விசயத்தில பாராட்டனும் இன்னைக்கும் நமது பாரம்பரியத்தை வடஇந்தியர்களுக்கு உணர்த்தும் விதமா வேஷ்டி கட்டுவது மட்டும்..

    அதுக்காக தங்கத்தட்டுல --- கொடுத்த சாப்பிடவா முடியும்.

    துரோகிகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  5. திருப்பூர்ல ஒருதடவ இந்தமாதிரி நடந்திருக்கு.....

    வறுமைக்காக விற்றாலும், விற்ற தாய்க்கு அக்குழந்தை பற்றிய ஏக்கம் வருமா வராதா??? யோசிக்கவேண்டிய கேள்வி!

    பதிலளிநீக்கு
  6. வறுமை சிலசமயங்களில் தாய்மையை அடித்துப் போட்டுவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  7. மனோ!

    வார்த்தை கிடைத்து விட்டதா?

    ஜீவா!

    RVC!

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தீபா!

    உண்மைகள் இப்படித்தான் இருக்கின்றன.
    இவைகளையும், இவர்களையும் தொடர்ந்து அமபலப்படுத்த வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. Anonymous!

    ஹேமா!

    கவின்!

    ஆதவா!

    அனைவரின் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அன்புத் தம்பி பாருக்!

    பார்த்து நாளாச்சு.

    அந்த கனவானை சொந்த ஊரிலேயே தோலுரித்து காட்டியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. அந்த "வெங்காயத்தை" சொல்லியிருக்கலாம்.. இவர்களுக்கு என்ன மரியாதை வேண்டியுள்ளது... நல்ல பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ஞானசேகரன்!

    ம்ம்ம்ம்... சொல்லியாச்சா!

    பதிலளிநீக்கு
  14. இந்த தேசத்தில் GDP வளர்ச்சி மட்டுமே பிரதானமாகப் பார்க்கபடுகிறது, அது குறைந்துவிட்டால் அரசு கவலைப்படுகிறது, ஆனால் GDP ல் குழந்தைத்தொழிலாளர்களின் பங்கும் இருக்கிறது என அரசு பார்க்கவேண்டும். 1991ம் ஆண்டின் படி இந்தியாவில் மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமான குழ்ந்தைத்தொழிலாளர்களை நம் தேசம் கொண்டிருக்கிறது.
    இதைப்பற்றி ஒரு பதிவிட்டுள்ளேன்.
    http://arivoliiyakkam.blogspot.com/2009/02/blog-post_9363.html.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எனது பின்னுட்டத்துக்கு நல்ல பதில் கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி மாதவராஜ். ஆனால் நான் மேலும் சில விள்க்கங்களை கூற விழைகின்றேன்.

    புதுக்கோட்டை சாந்திக்கும், ஷில்பா ஷெட்டிக்கும் எந்தெந்த பக்கங்கள் என்பதை பத்திரிகைகள் தீர்மானிப்பதில் முரண்பாடு எதுவும் இல்லை.புதுக்கோட்டை சாந்தி தொடர்பான செய்திகள் விளையாட்டு செய்திகள் இடம் பெறும் பக்கத்தில் வருகின்றன. ஷில்பா ஷெட்டி செய்திகள் வேறு பக்கங்களில் வெளியாகின்றன. விளையாட்டு செய்தி பக்கம் பெரும்பாலும் பத்திரிகையின் பின்பகுதியில்தான் இடம் பெறுகின்றன. இதனை நீங்கள் தவறாக கருத தேவையில்லை. புதுக்கோட்டை சாந்திக்கு ஏற்பட்டது தேசிய அவமானம் என்று நீங்கள் கருதுவதில் தவறு இல்லை.நியாயமான ஆதங்கம்தான். ஆனால் சாந்திக்காக யாராவது போராட முன்வந்து இருந்தால், போராடி இருந்தால் அந்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து இருக்கும்.

    அப்துல் கலாம் சேரிகளுக்கு சென்று இருந்தால் ஊடகங்கள் நிச்சயம் அவரை புறக்கணித்து இருக்கும் என்று ஊகத்தில் கூறி இருக்கிறீர்கள். அன்னை தெரசா உயர்வர்க்கத்தினருக்கு சேவை செய்யவில்லை. அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் ஊடகங்கள் உடன் சென்று முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன. இளவரசர் சார்லஸ் மும்பை வந்தபோது, 'டப்பா வாலா'க்களை சந்தித்தார், அந்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டன. சந்தன வீரப்பன் செய்திகளுக்காக அடர்ந்த காடுகளுக்குள் அலைந்து திரிந்த ஊடகங்களுக்கு, சேரிகளுக்குள் செல்ல எந்த தயக்கமும் இருக்க வாய்ப்பு இல்லை.
    டயானா, ஜெயலட்சுமியின் அந்தரங்கம் பறிபோனதாக பதறி இருக்கிறீர்கள். 'பிரின்சஸ் ஆப் வேல்ஸ்' என்று அழைக்கப்பட்ட டயானா தன்னுடைய குதிரை பயிற்சியாளர், சமையல்காரர், பாகிஸ்தான் டாக்டர், முஸ்லிம் வணிகரின் மகன் என்று பலருடன் தொடர்பு வைத்து இருந்தார். போலீஸ் துறையில் ஏட்டு முதல் எஸ்.பி. வரை வளைத்துப் போட்டதாக கூறப்பட்டவர் ஜெயலட்சுமி. இவர்கள் குடும்பமா நடத்தினார்கள்? கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி அல்லவா ந்டத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு அந்தரங்கம் இருந்ததா? அதற்குள் அடுத்தவர்கள் எட்டிப் பார்த்து விட்டார்கள் என்று நீங்கள் ஆத்ங்கப்படுகிறீர்களே...!

    திருதராஷ்டிரனை மக்களுக்கு உவமானம் செய்து கேலி பேசவில்லை. எல்லா செய்திகளையும் கூறினாலும், குறிப்பிட்ட சில செய்திகளை மட்டுமே கூறுவதாக சஞ்சயன் மீது கோபப்பட்டார். நீங்கள் எல்லா செய்திகளும் ஊடகங்களில் இடம் பெற்றாலும், சில குறிப்பிட்ட செய்திகளுக்கே முக்யத்துவம் தருவதாக கோபப்ப்ட்டு இருந்தீர்கள். எனவே வருத்தத்துடன் சொல்கிறேன், உங்களைத் தான் திருதராஷ்டிரனுடன் ஒப்பிட்டு இருந்தேன்.

    ஜனநாயகத்தின் 4 தூண்கள் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகங்கள். பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால், அதன் உறுப்பினர்கள் லஞ்சம்- ஊழலில் திளைத்துப்போய் உள்ளனர். நிர்வாகத்துறையும் ஊழலிலும், முறை கேடுகளிலும் சளைக்கவில்லை. நீதித்துறை மீதும் நம்பகத்தன்மை குறைகிறது. விமர்சனங்கள். வரத்தொடங்கிவிட்டன. ஆனால் இந்த 3 துறைகளைப் போல ஊடகத்துறையில் லஞ்சம்- ஊழல் மலிந்துவிடவில்லை. ஏராளமான விஷயங்களை தெரிந்து வைத்துள்ள தாங்கள் இதனை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பல சந்தர்ப்பங்களில் லஞ்சமும், ஊழலும் ஊடகங்கள் வாயிலாகவே வெளிவந்துள்ளன என்பதும் உண்மை. இன்னொன்று பத்திரிகைகள் சேவை செய்கின்றன என்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை. அவை தங்களின் வேலையை செய்கின்றன என்றே சொல்கிறேன்.

    ஊடகங்களில் வரும் செய்திகள் மக்கள் ரசனைக்கேற்பதான் வருகின்ற்ன. மக்கள் ரசிக்காத எதையும் ஊடகங்களால் திணித்துவிட முடியாது. சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் ஊடகங்களை மக்கள் புறக்கணித்தால், உடனடியாக ஊடகங்கள் சினிமாவை புறக்கணித்துவிடும் என்பது நிச்சயம். டயானா, ஜெயலட்சுமி,ஷெரினாவின் செய்திகள் வெளியிட்டால் விற்பனை குறையும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த செய்திகளின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிடும். மக்களின் ரசனை மாறுபட்டால்தான் ஊடகங்களின் தரம் உயரும்.

    நான் சொல்லி இருக்கும் விஷயங்களுடன் முரண்படுவதாக தெரிவித்து இருக்கிறீர்கள், பிரியத்துக்குரிய மாதவராஜ், நான் உங்களுடன் முரண்படவில்லை. நட்சத்திர பதிவாளரான நீங்கள், எனது கருத்துடன் உடன்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். ஷெரினா, ஜெயலட்சுமி, டயானா ஆகியோர் மீது கோபப்படாமல் ஊடகங்கள் மீது ஆத்திரப்படுகிறீர்களே..! சமூக அவல்ங்களின் மீதான உங்கள் கோபம் இலக்கு தவறிய அம்பாக போய்விடக்கூடாது.

    பதிலளிநீக்கு
  16. என்ன தேசம் இதுவென அவமானம் வருகிறது,,,!


    உண்மைதான் அய்யா...!

    இந்தா நாடும் நாட்டு மக்களும்...?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!