சின்னஞ்சிறு வயதில்...

childhood தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன் வேகமாக வீட்டிற்கு வந்து படுக்கையில் போய் கவிழ்ந்துகொண்டான். யாரும் கூப்பிடாமல லேசில் இப்படி வீட்டிற்கு வர மாட்டான். அவனது அமைதி சரியில்லாததாய் தோன்றியது.

அருகில் போய் அமர்ந்து “என்னடா” என்றேன். முகத்தைத் திருப்பினேன். முகம்  உம்மென்று இருந்தது.

“என்னப்பா... ஒரு மாதிரி இருக்கே” தலையைத் தாங்கினேன். அவ்வளவுதான். ஏங்கி ஏங்கி அழுதான். யாருடனோ தெருவில் சண்டை போட்டு விட்டான் என்று தெரிந்தது. முதுகைத் தட்டிக்கொடுத்தேன்.

“அப்பா... இந்த ஷோபியா ரொம்ப மோசம்ப்பா... இனும அவ கூட பேசவே மாட்டேன்”.

“சரி. அவ என்ன செஞ்சா...” கனிவாகக் கேட்டேன்.

“அப்பா, என்னோட சைக்கிள்ள அவ ரெண்டு ரவுண்டு போனாப்பா. நா ஒரு ரவுண்டுதான் கேட்டேன். தர மாட்டேங்குறா..”

பாவமாய் இருந்தது. “இப்ப சைக்கிள் எங்க?”

“கொண்டு வந்துட்டேன்பா. அவ சைக்கிள் இல்லாமக் கெடக்கட்டும்.” அவனது முகம் பிடிவாதம் கொண்டு கடுமையானது. சமாதானப்படுத்தினேன். “வா.. கார்ட்டூன் சேனல் வைக்கிறேன்.. வா.” தூக்கிக்கொண்டு வந்து என்னருகில் வைத்துக் கொண்டேன்.

டி.வி பார்த்துக் கொண்டிருந்தவன் திடுமென எழுந்து வெளியே போனான். வினாடிகளில் திரும்பி வந்து அருகில் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் திரும்பவும் எழுந்து போனான். அப்புறம் வந்து உட்கார்ந்தான்.

“என்னப்பா..” என்றேன்.

“ஒண்ணுமில்லப்பா... சைக்கிளை பாத்துட்டு வர்றேம்பா” என்றான். தொண்டையடைத்து குரல் கம்மி ஒலித்தது. நெருக்கமாக அணைத்துக் கொண்டு தலையைக் கோதி விட்டேன்.

திரும்பவும் எழுந்து வெளியே போனான். ஆனால் இந்த தடவை வரக் காணோம். வராண்டாவைத் தாண்டி வெளியே போய்ப் பார்த்தேன்.

வாசலில் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையில் ஷோபியா இன்னொரு பையனுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

“நிகில்” இவனை அழைத்தேன். திரும்பியவன் முகம் வலியில் தவித்திருந்தது.

“அப்பா... ஷோபியா ஏங்கூட பேச மாட்டாளா?” சைக்கிளை அப்படியேப் போட்டுவிட்டு, ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தான்.

 

*

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //“அப்பா... ஷோபியா ஏங்கூட பேச மாட்டாளா?” //

    நெஞ்சம் நெகிழ்ந்தது அன்பரே.சிறு வயதில் பாசத்திற்காக மட்டுமே குழந்தைகள் ஏங்குகின்றன.பிஞ்சு உள்ளம் மனதில் பிறர் குற்றங்கள்,தவறுகள் எல்லாம் சில நிமிடங்கள் தான் நிற்கிறது.சற்று நேரத்திற்குள் மறந்தும் விடுகின்றன.

    பெரியவர்கள் நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பது என் சிந்தனை.

    ஆனாலும் சிறிய தவறுகள் அல்லாத சில பாதிப்புகள் மனதில் ஆழமாய் பதிந்து விடுகின்றன.பக்குவப்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையே.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான பதிவு.

    குழந்தைகளை போல மறக்கவும்,மன்னிக்கவும் கூடிய மனது இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் வாழ்க்கை

    பதிலளிநீக்கு
  3. \\சிறு வயதில் பாசத்திற்காக மட்டுமே குழந்தைகள் ஏங்குகின்றன.பிஞ்சு உள்ளம் மனதில் பிறர் குற்றங்கள்,தவறுகள் எல்லாம் சில நிமிடங்கள் தான் நிற்கிறது.சற்று நேரத்திற்குள் மறந்தும் விடுகின்றன.
    \\

    உண்மை

    பதிலளிநீக்கு
  4. அச்சோ நிகில் குட்டி... தங்கம்டா நீ!

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு.சொந்தக் கருத்துக்கள் எதையும் வைக்காமல், அப்படியே பதிவுமட்டும் செய்துவைப்பது, அவரவரின் சிந்தனையைத் தூண்டும் .வெள்ளத்தனையது மலர் நீட்டம்...

    பதிலளிநீக்கு
  6. குழந்தைகள் அப்படித்தாங்க..... புரிந்து கொள்ள முடியாமல், முழிப்பவர்கள் நம்மைப் போன்றவர்கள். ஒரு சிலர் சண்டையிட்டதை மறந்து திரும்பவும் சிரித்துக் கொள்வார்கள்...



    குழந்தைகள் உலகம் தனி!!! அது இழந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்.... (எனது அடுத்த பதிவு குழந்தைகளின் உலகம்... எழுதி வைத்தது, தள்ளிக் கொண்டே போகிறது!!)

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நல்லா வந்திருக்கு.

    //சொந்தக் கருத்துக்கள் எதையும் வைக்காமல், அப்படியே பதிவுமட்டும் செய்துவைப்பது, அவரவரின் சிந்தனையைத் தூண்டும் .வெள்ளத்தனையது மலர் நீட்டம்//

    மிகச் சரி.

    http://blog.nandhaonline.com

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான பதிவு ...
    நாம் தொலைத்த சந்தோசம் , அதை தேடும் போதுதான் புரிகிறது ...

    பதிலளிநீக்கு
  9. மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

    இப்படியான ஒரு பால்யத்தில்தானே நாமுமிருந்தோம். எல்லாமும் ஏக்கங்களாகவும் பேசிப்போன பழங்கதைகளாகவுமே எஞ்சியிருக்கின்றன இன்று :(

    பதிவு அருமை நண்பரே !

    பதிலளிநீக்கு
  10. இவ்வளவு சிறிய பதிவில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் மாதவ். குழந்தைகள் குழந்தைகள் குழந்தைகள் - அவர்கள் நம் கடவுள்கள் ஆக இருக்கத் தகுதியானவர்கள்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  11. குழந்தையும் தெய்வமும்(இருந்தால்) ஒன்றல்லவா!!!!!

    பதிலளிநீக்கு
  12. இங்கு வந்து வாசித்து, நெகிழ்ந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

    குழந்தைகள்தான் நமது தெய்வங்கள்.

    நாம் அவர்களிடம் இருந்து கற்றுகொள்வதற்கும் , பெறுவதற்கும் நிறைய இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு.. குழந்தைகளின் உலகம் தனி.. அதை மிக நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்..

    பதிலளிநீக்கு
  14. mazhalaien manasai appadiye padam pedichi urai ezhuthi wow something great.....atharku kavalai kurai illainu nenaikira petravargalukum matravargalum unarthitenga mazhalaigalukum manavali undu endru arumai pa...

    பதிலளிநீக்கு
  15. கார்த்திகைப்பாண்டியன்!

    தமிழரசி!

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அந்தப்பால்யம் தொலைந்து போகக்கூடாது என்று அப்பொழுதில் நாங்கள் நினைப்பதில்லை.

    இப்பொழுது முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  17. தமிழன் கறுப்பி!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!