ஆயிரமாயிரம் அறைகள் கொண்ட ஆகப்பெரும் கட்டிடம் இது

 

 

blogs 1

அறை அறையாய் நிறைந்த மாபெரும் உலகம் அது.  எனக்கென்று அறை பிடித்துக் கொண்டேன்.

ஜன்னல் வழியே பார்க்கிற போது யார் யாரோ வந்து போய்க் கொண்டு இருந்தார்கள். ஒன்றும் முதலில் புரியவில்லை.

பிறகு என் அறைக்குள்ளும் வர ஆரம்பித்தார்கள். சிலர் சிரித்தார்கள். கைகொடுத்தார்கள். பேசவும் ஆரம்பித்தார்கள். சிலர் அமைதியாய் மேலும் கீழும் பார்த்தார்கள். இன்னும் சிலர் இவன் ஏனிங்கு என்று முறைத்தார்கள்.

நானும் மற்றவர்களின் அறைகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். சிரித்தேன். கைகொடுத்தேன். பேசினேன். முறை தெரிந்து கொண்டேன். பத்திரமாக திரும்பி வந்தேன்.

திடுமென சிலர் வேகமாக வ்ந்து கதவைத் திறந்து பார்த்துவிட்டு, “ஓ.ஸாரி” என சடாரென்று கதவடைத்துவிட்டும் போனார்கள்.

ஓசைப்படாமல் கதவைத் திறந்து என் பின்னால் நின்று பார்த்துவிட்டுப் போனவர்களும் உண்டு.

உலகின் சகல மூலைகளிலிருப்பவர்களும் இங்கு இருந்தார்கள்.

ஒருவருக்கொருவர் பழகியவர்கள் சிலர் மாறி மாறி அவர்களின் ஒவ்வொருவர் அறைகளுக்கும் முறைவைத்து கும்பல் கும்பலாய் சென்று அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தார்கள்.

பெரும் சண்டைகளும் நடந்த வண்ணம் இருந்தன சில அறைகளில் எப்போதும்.

யார் அறைக்கும் போகாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்றும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் அறைக்கும் மற்றவர்கள் செல்வது நாளாக, நாளாக குறைந்து போனது. பிறகு சில காலம் கழித்து உள்ளே கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டார்கள் அவர்கள்.

அடுத்தவர் அறைக்குப் போன சிலர் தங்கள் அறைக்குத் திரும்பாமல், அங்கேயே வாசம் செய்ததும் நடந்தது.

அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்து விட்டு இதோ வருகிறேன் என்று வெளியே போன சிலர் திரும்பவேயில்லை. யாருமற்ற அவர்கள் அறைகள் பத்திரமாகவே இருந்தன.

நிறைய கதவுகள் வெளியே பூட்டியேக் கிடந்தன.

நாளாக நாளாக எந்நேரமும் யார் யாரோ என்னறைக்குள் வந்து போய்க்கொண்டு இருந்தார்கள்.

வெளியே சென்றிருந்தாலும், தூங்கிக் கொண்டு இருந்தாலும் என்னைப் பேச அழைத்தார்கள்.

”இது உன்னுடைய அறைதான், ஆனால் உன்னுடையது மட்டுமல்ல..” தூக்கத்தில் உளறிக்கொண்டிருந்தேன் நான்.

 

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. புரிந்தும் புரியாத மாதிரி இருக்கு தோழரே :)

    பதிலளிநீக்கு
  2. புரிந்தது:)))))

    ஆரம்பத்தில் சொன்ன கமெண்ட் மாடரேஷன் இப்போதாவது போட்டீர்களே
    வலையுலகில் இரண்டற சங்கமித்துவிட்டீர்கள்.

    தூங்கும் நேர‌த்தில் போய்த் தூங்குங்க‌ள். இல்லையென்றால் மாதுவுக்கு ஓய்வு தேவை. கவனிங்ங்ங்க்ங்க யென்று அம்முவிட‌ம் போட்டுக்கொடுத்துவிடுவேன்:)

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது வலைபூ தளம் பற்றிதானே

    பதிலளிநீக்கு
  4. இது ஒரு பின்நவீனத்துவ கதை(கவிதை?) மாதிரி தெரிகிறது!!!

    கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.. (இரவு அல்லவா!!)

    எதற்கும் விடியற்காலையில் வந்து படித்துப் பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. யார் அறைக்கும் போகாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்றும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் அறைக்கும் மற்றவர்கள் செல்வது நாளாக, நாளாக குறைந்து போனது. பிறகு சில காலம் கழித்து உள்ளே கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டார்கள் அவர்கள். // :)

    பதிலளிநீக்கு
  6. ஜீவா!

    மதுமிதாவும், சொல்லரசனின் பின்ன்னூட்டங்களைப் பார்த்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. மதுமிதா!

    கவிதையைப் புரிந்து கொண்டதற்கும், அக்கறைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சொல்லரசன்!

    புரிதலுக்கு நன்றி.

    ஆதவன்!

    தூங்கி எழுந்து விட்டீர்களா? பின்நவீனத்துவம் எதுவும் இல்லை. மிக நேராக எழுதப்ப்பட்டதுதான்.

    பதிலளிநீக்கு
  9. செல்வேந்திரன்!

    வருகைக்கும், புன்னகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இந்தக்கதை (படைப்பு) பல பரிமாணங்களைச் சொல்கிறது. அறை என்பதை ஒரு படிமமாகவே கொள்ளவேண்டியுள்ளது. அது உணர்த்தும் சாத்தியங்கள், நம் மனவெளி, அன்றன்றைய நாட்கள், நம் விருப்பு-வெறுப்பு, உறவுகள் இப்படி நீண்டுகொண்டே செல்லாம்..... மிக நல்ல படைப்பு... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கிருத்திகா!

    தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!