ஸ்லம் டாக் மில்லியனரில் கரைந்து போன ஸ்மைல் பிங்கி

_45471392_pinki_cleft226 ட்டு வயது சிறுமி பிங்கியின் உதடுகளில் இப்போது பூத்திருக்கும் புன்னகையை லாஸ் ஏஞ்செல்ஸில், ஆஸ்கருக்கான திரையில் உலகம் காணப் போகிறது.   பிறந்தவுடன் இவள் முகத்தைக் காண சகிக்காமல், முகத்தைத் திருப்பிக்கொண்ட இவளது தாய் ஷிம்லாதேவி இப்போது மகளையே பார்த்துக் கொண்டு  இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் ரம்பூர்தபாஹி கிராமத்தில் இன்று இவள்தான் தேவதை. சிலகாலம் முன்பு வரை  ‘கிழிந்த  உதட்டுக்காரி’ என்று கிண்டல் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று நேசத்துடன் பிங்கி என்று அழைக்கிறார்கள். சகக் குழந்தை ஒன்று இவளைக் கட்டி  அணைத்துக் கொள்கிறது.

யாருடனும் விளையாட முடியாமல், இயல்பாக பேச முடியாமல், பழக முடியாமல் போன பழைய நினைவுகள் எல்லாம் இப்போது ஆறியிருக்கலாம். ஆனால்  அந்தக் காலம் கொடுமையானவை.  பிறக்கும் போதே உதட்டில் இருந்த அந்த சிறு பிளவு இவளை மற்றவர்களிடமிருந்து தொலைதூரத்துக்கு விரட்டியிருந்தது. கண்ணாடியில் தன்னைப் பார்த்து வெதும்பும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகம் வாடிப் போகிறது. ஒருச் சின்னத் துண்டு நிலத்தில் எதோ வயிற்றுக்கும் வாய்க்குமாக ஐந்து குழந்தைகளோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இவளது தந்தை ராஜேந்திர சோங்கர் “இவள் செத்துப் போயிருக்கலாம்” என்று பலநேரங்களில் நினைத்ததுண்டு. முகத்தையே கோரமாக காண்பிக்கும் அந்த உதடுகளை சரி செய்யும் ஞானமும், பணமும் அவருக்கு இல்லை.

39 நிமிடங்கள் ஓடும் “ஸ்மைல் பிங்கி” எனும்  இந்த ஆவணப்படம், பிங்கியின் முகத்தில் இருந்த துயரம் களையப்பட்டு புன்னகை பிறந்த கதையைச் சொல்கிறது. பங்கஜ் என்னும் சமூக சேவையாளர் ஒருவர், மக்களிடம் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது சரி செய்ய முடியும் என நம்பிக்கையளித்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சந்தித்து விளக்குகிறார். அப்படி அவர் காணும் குழந்தைகளில் பிங்கியும் ஒருத்தியாக இருக்கிறாள். ஸ்மைல் டிரெயின் என்னும் அமைப்பின்  மூலம் இலவசமாக இந்த ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. 45 நிமிடங்கள் நடக்கும் ஆபரேஷனுக்குப் பிறகு பிங்கியிடம் கண்ணாடி கொடுக்கப்படுகிறது. ஆபரேஷன் நடந்த வலியையும் மீறி பிங்கி சிரிக்கிறாள்.

ஒவ்வொரு வருடமும் 35000 குழந்தைகள் இந்தியாவில் இப்படி கிழிந்த உதடுகளோடு பிறப்பதையும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் பரிதாபத்திற்குரியவர்களாய் வாழ்வதையும் குறிப்பிடுகிறது  இந்த ஆவணப்படம். பல மேலை நாடுகளில், இப்படிப்பட்ட குறையொன்று இருப்பதே தெரியாதாம். அப்படி பிறந்த குழந்தைகளுக்கு அடுத்த நான்காவது நிமிடமே அறுவை சிகிச்சை எளிதாக நடந்து விடுமாம்! பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் படம் ஜன்னலைத் திறந்து வைப்பதாய் இருந்தால் போதும் என்கிறார் இப்படத்தை இயக்கிய, பிரேசில் நாட்டுக்காரரான மேஹன் மைலன்.

_45471429_smile_226 லாஸ் ஏஞ்செல்ஸுக்கு பிங்கி அவளது தந்தையோடும், அவளை ஆபரேஷன் செய்த டாக்டரோடும் செல்ல இருக்கிறாள். பாஸ்போர்ட், விசா ஏற்பாடு செய்தாகி விட்டது. அந்த நிலமே அதிரும்படியாய் எப்போதாவது மேலே செல்லும் விமானத்தை அதிசயமாகப் பார்த்த அந்த சிறுமி, இன்னும் ஓரிரு நாட்களில், அதில்  பயணம் செய்ய இருக்கிறாள். நிருபர் ஒருவர் பிங்கியிடம் கேட்கிறார். “ஆஸ்கர் என்றால் என்ன?”. பதில் வருகிறது, “தெரியாது”

இதற்கு முன்னர் உலகத்தரத்துக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்களை, நாட்டின் ஏழ்மையை சித்தரிப்பதாகவே இருக்கின்றன என்று விமர்சனம் செய்து ஒதுக்கியது நடந்தது. சத்யஜித்ரேவும் இப்படிப்பட்ட கருத்துக்கு ஆளானார். இன்று ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து தேர்வு செய்திருக்கும் படங்கள் இரண்டு குறித்தும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் எழாமலிருப்பது விநோதமாக இருக்கிறது. எது எப்படியோ, ‘நாடு பொருளாதார வளர்ச்சியில் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது’ என கதைப்பவர்கள் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள்?

அதே நேரம் ஸ்லம் டாக் மில்லியனருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஸ்மைல் பிங்கி ஆவணப்படத்திற்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதும் உறுத்துகிறது. ஸ்லம் டாக் மில்லியனருக்கான ஆர்ப்பாட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் இந்த மிக முக்கியமான நிகழ்வு பலருடைய கவனத்துக்கே வராமல் கரைந்து  போயிருக்கிறது. நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக  முன்வரவில்லை. கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது?

இவளது தேசம் பேசாவிட்டாலும், இவளது ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. “இவள் ஒரு தனலட்சுமி, பரிசோடுதான் வருவாள்” என்கிறார்கள் ஊர்மக்கள்.  இவளது தந்தையும் ஆஸ்கர் பரிசு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். தாய் ஷிம்லாதேவிக்கு அந்த நினைப்பெல்லாம் இல்லை. தன் குழந்தையின் முகத்தில்  இந்த புன்னகை எப்போதும் இருக்க வேண்டும் என்று மட்டுமே வேண்டிக்கொண்டு இருக்கிறார்.

இந்திய இயக்குனர்களால் எடுக்கப்படும் படங்கள் எப்போது இதுபோன்ற பரிசுகள் பெறும் என நாம் வேண்டிக்கொண்டு இருக்கிறோம்.

 

பி.கு:

1.இந்த வருட ஜனவரி இறுதியில் பிங்கிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை. டாக்டரை அழைத்தால் பணம் கேட்பார்  என்று பேசாமல் இருந்திருக்கிறது அவளது குடும்பம்.

2.இந்தப் படத்தின் டிரெய்லரை இங்கே பார்க்கலாம்.

 

*

கருத்துகள்

41 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல அறிமுகம். தலைப்பிலேயே முழு பதிவும். வெற்றியடைய வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  2. உதடு கிழிந்து உள்ளவர்களை நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன்., அவர்களது உதடுகளை மீறி வெளியே நீட்டியிருக்கு பற்களைக் காணூம் பொழுதெல்லாம், உடல் அழகு முக அழகு போன்றவற்றில் அதீத கவனமெடுக்கும் பெண்கள் ஞாபகம் வரும்...



    இவர்களையும் பார், அவர்களையும் பார், உலகம் எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களோடு சுற்றுகிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கும்.



    நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரியும்... இந்த குறும்படம் ஆஸ்கரில் பங்கேற்கிறது என்று..... ஊடகங்களின் ஊனம் இதான்!!! நல்ல குறும்படங்கள் இருந்தும் காண்பிக்காத தொல்லைக் காட்சிகளும் இதற்கு துணண!!



    இருந்தாலும், அப்பாவும் அம்மாவும், தன் குழந்தையை இப்படி நினைத்திருக்கக் கூடாது.... தன் குழந்தை என்ன ஊனமாக இருந்தாலும் அதை தெய்வமாக அல்லவா வணங்க வேண்டும்.... இல்லையெனில் அவர்கள் பெற்றோர்களே அல்லர்.





    மேலை நாடுகளை கவ்னிக்கும் பொழுது, நாம் இன்னும் எவ்வளவோ தூரம் பின் தங்கியிருக்கிறோம் என்பது மாத்திரம் நன்கு தெரிகிறது....

    பதிலளிநீக்கு
  3. ஒரு தகவல்

    மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இம்மாதிரி உதடு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது

    பதிலளிநீக்கு
  4. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  5. ***நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக முன்வரவில்லை. கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது?***
    Sir!You have focused a important news to the readers..A happy news>>We have to feel proud---selvapriyan

    பதிலளிநீக்கு
  6. //கிழிந்து போன இந்த ஊடகங்களின் உதடுகளை எந்த ஆபரேஷன் மூலம் சரி செய்வது?
    //

    உண்மை சுடுகிறது.

    //தாய் ஷிம்லாதேவிக்கு அந்த நினைப்பெல்லாம் இல்லை. தன் குழந்தையின் முகத்தில் இந்த புன்னகை எப்போதும் இருக்க வேண்டும் என்று மட்டுமே வேண்டிக்கொண்டு இருக்கிறார். //

    தாய் பாசம் என்பது இது தான்.

    ஏற்கனவே இந்தப் படத்தைப் பற்றிப் படித்திருந்தாலும், விவரமாக மீண்டும் இட்டத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இது பதிவல்ல புதிய செய்தி.
    நிறய்ய ஓரங்கட்டப்படும் நிகழ்ச்சி நிரல்களை
    மீட்டுத் தருகிற வலைப்பக்கம்

    பதிலளிநீக்கு
  8. dear mathav

    again you are proving your standards in choosing the material for your blog...
    i was instantly reminded of one Akila a little girl in the neighbourhood during my college days in Chennai.. she grew an arrogant girl having been hated, kept away and abused by others around her. she would fight back every one who dared to tease her. people were scared of her screamy noises and unclear speech. she would keep herself locked inside the toilet whenever her mother scolded her and this was the way she would take revenge on her. Her mother would grow restless and keep shouting, but remain helpless until Akila came out.
    subsequently, i learnt that a successful surgery was performed when she entered her teens and people around were shocked to see a totally new Akila, beaming with a smile like an angel and shining like a damsel. She is married happily. but i am yet to find an opportunity to meet her...
    But Akila was an urban middle class personality.... no way nearer to Pinky.
    what they share however between them is a meaningless social exclusion just because of a deviation in her facial features for no falut of theirs.
    mathav, congrats for your
    emotional story..

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  9. நான் சொல்ல‌ நினைத்த‌தையே இங்கெ திரு. காம‌ராஜ் அவ‌ர்களும் திரு.வேணுகோபால் அவ‌ர்க‌ளும் சொல்லிவிட்டார்க‌ள்.

    //இது பதிவல்ல புதிய செய்தி.
    நிறய்ய ஓரங்கட்டப்படும் நிகழ்ச்சி நிரல்களை
    மீட்டுத் தருகிற வலைப்பக்கம்//

    //again you are proving your standards in choosing the material for your blog...//

    Thanks Uncle for such an informative and inspiring post. Simply great.

    பதிலளிநீக்கு
  10. //நமது தேசத்திலிருந்து ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்குபெறுகிறது என்பது முக்கியமான செய்தியாக முன்வரவில்லை. //

    உண்மைதான் வெள்ளித்திரைக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆவணப்படகளுக்கு கொடுக்கபடாது அவர்களின் அறியாமையா அல்லது அலட்சியமா? என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு தோழர்.

    ஆனால் ஸ்லம்டாக் கில் இருக்கும் மசாலாச் சமாச்சாரங்கள் இதிலிருக்கா?

    இருந்தால்தான் பரபரப்பாகப் பேசபபடும்.

    பதிலளிநீக்கு
  12. பெரும்பாலான நமது ஊடகங்கள் நிச்சயமாகவே நடுநிலையாக இல்லை. போட்டிபோடுகிறார்களே ஒழிய, சரியான தகவல்களை மக்களிடம் சேர்ப்பதில்லை, மக்களிடமிருந்து பெறுவதுமில்லை.தகவலுக்கு நன்றி பாஸ்.நானும் இன்று தான் இதைக் குறித்து கேள்விப்படுகிறேன்.இத்தனைக்கும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை நேற்று கூட பார்த்தேன்... என் கண்கள் இரண்டும் ஸ்லம்டாக் மில்லினியரிலேயே குறியாக இருந்திருக்க வேண்டும். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் இங்கே

    பதிலளிநீக்கு
  13. முரளிக்கண்ணன்!

    //மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இம்மாதிரி உதடு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது//

    தகவுலுக்கும், வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நந்தா!

    வலைப்ப்பூக்கள்!

    விமலாவித்யா!

    காமராஜ்!

    தீபா!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஆதவா!

    உங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் உங்கள் பகிர்வின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  16. சொல்லரசன்!

    நிச்சயம் அலட்சியம்தான். இன்னும் சொல்லப் போனால் புறக்கணிப்பு என்பதே சரியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  17. எட்வின்!

    மிக உண்மையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு. ஏதோ ஒரு சானலில் இதைப் பற்றி பார்த்தேன்.

    ஆனால் நீங்கள் சொல்வது போல்
    /*அதே நேரம் ஸ்லம் டாக் மில்லியனருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஸ்மைல் பிங்கி ஆவணப்படத்திற்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்பதும் உறுத்துகிறது. */

    நம் ஊரில் எப்பொழுதும் பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஸ்லம் டாக் என்றால் பிரபலங்கள் உள்ளனர்.

    பதிலளிநீக்கு
  19. வடகரை வேலன்!

    நீங்கள் சொல்வது போல் ஸ்மைல் பிங்கியில் மசாலாச் சமாச்சாரங்கள் இருக்காதுதான்.

    பதிலளிநீக்கு
  20. அமுதா!

    //நம் ஊரில் எப்பொழுதும் பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஸ்லம் டாக் என்றால் பிரபலங்கள் உள்ளனர்.//

    ஆமாம்... அதுதான் இங்கு ஊடகங்களின் தர்மம்.

    பதிலளிநீக்கு
  21. நல்ல பதிவு நண்பரே..

    SDM பேசப்படுவதற்கு பல காரணங்கள். இந்த நாட்டில் ஒன்றில் மற்றொன்று கரைந்து போவது வாடிக்கையான் வேதனை. அதில் இதுவும் ஒன்று.

    வலையிலாவது இந்த மாதிரி நல்ல பதிவுகள் வரட்டும்.

    வாழ்த்துகள் ...

    பதிலளிநீக்கு
  22. எஸ்.வி.வி!

    நான் எழுதியதை காட்டிலும், உங்கள் எழுத்துக்கள் அடர்த்தியாகவும், வலி நிறைந்தாகவும் இருக்கிறது.

    //people were scared of her screamy noises and unclear speech. she would keep herself locked inside the toilet whenever her mother scolded her and this was the way she would take revenge on her.//
    படித்தபோது அழுகை வந்தது.

    உங்கள் கருத்து, இந்தப் பதிவை அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது.

    அகிலா... என்ற பேரை மறக்க முடியாதபடிச் செய்து விட்டீர்கள்.

    நன்றி...

    பதிலளிநீக்கு
  23. வ்ண்ணத்துப் பூச்சியார்!

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. அறியப்பட வேண்டிய விசயம்...

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  25. ச்சின்னப்பையன்!

    என் வலைப்பக்கத்தில் இது தங்கள் முதல் மறுமொழி என எண்ணுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    தமிழன் கறுப்பி!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ///1.இந்த வருட ஜனவரி இறுதியில் பிங்கிக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை. டாக்டரை அழைத்தால் பணம் கேட்பார் என்று பேசாமல் இருந்திருக்கிறது அவளது குடும்பம். ///


    :(((((

    பதிலளிநீக்கு
  27. மதுமிதா!

    உங்கள் உணர்வை வெளிப்படுத்தியதற்கு நன்றி. எங்கே இந்தப் பக்கம் ரொம்ப நாளாய் காணோம்?

    பதிலளிநீக்கு
  28. உங்கள் லிங்க் மடல் இன்றைக்குதான் பார்க்கக் கிடைத்தது.

    அதற்குள் கதை கேள்விகள் பதில்கள் எல்லாம் போட்டு முடித்துவிட்டதால் பங்கேற்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  29. பகிர்விர்கு நன்றி நண்பரே. இந்த படம் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. இதன் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.

    http://oscar.com/oscarnight/winners/?pn=detail&nominee=Smile%20Pinki%20-%20Documentary%20Short%20Subject%20Nominee

    பதிலளிநீக்கு
  30. உங்கள் வார்த்தையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கிழிந்த உதடு ஊடகங்கள் முக்கியத்துவம் தராத போதும், நீங்கள் முக்கியத்துவமளித்து பதிவெழுதியிருந்த இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. நல்லதொரு பதிவை இதற்காக எழுதியிருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. i am very happy to hear the news of Oscar for the documentary film "PINKIIIIIIIIIIIIIIIIIIIII'''HAPPPPPPPPYYYYYYY-SELVAPRIYAN

    பதிலளிநீக்கு
  32. ஸ்மைல் பிங்கிக்கும் சேர்த்து ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது மனதிற்கு இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  33. SanJai காந்தி!

    இந்த சந்தோஷத்தை இங்கு வந்து பகிர்ந்து கொள்ளத் தோன்றியதற்கு ரொம்ப நன்றி. வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. ஜோசப் பால்ராஜ்!

    உங்களது சந்தோஷம் மேலும் எனக்கு சந்தோஷமளிக்கிறது. ரொம்ப நன்றி.

    விமலா வித்யா!
    உங்கள் அருகில் நின்று இந்த தருணத்தை அனுபவித்தது போல இருந்தது. சந்தோஷம் சார்.

    பதிலளிநீக்கு
  35. நந்தா!

    என்னோடு இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. மாதவ் இன்று எனது பதிவிலும் இந்தப் பதிவை மீள்பதிவு செய்துள்ளேன்.

    முத்தமிழ் குழுமத்திலும் இட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  37. மஞ்சூர்ராஜா!

    உங்கள் பதிவையும், முத்தமிழ் குழுமப் பதிவையும் பார்த்தேன்.ரொம்ப சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  38. Ayya, namba naattukaaranga oru VISIL ADICHAAN KUMBAL. Ean ethukkunnu edhayam visaarikka maattanunga. Ellarum kai thatunna ivanum kai thattuvaan. Sondha budhi eppavumae kidayaadhu. Nalla vishayangalukku eppavumaey ingae mariyaadhai illai.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!