பஸ்ஸுக்கு காத்திருக்கும் அந்த இடத்திற்கு மிக அருகில், சுவரில் அந்த சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், பஸ்ஸில் ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பவர்களின் பார்வைகள் சட்டென அதில் நிலைத்துப் பின் கலைந்தன. ஏறத்தாழ ஒரு பெண் அதில் நிர்வாணமாய் கைகளை ஒரு மாதிரி நெளித்துத் தூக்கியபடி நின்றிருந்தாள். அந்த ஆறு வயதுக் குழந்தை, தன் அம்மாவிடம் அந்த போஸ்டரை கைநீட்டி காட்டியது. பெற்றவர்கள் இருவரும் சங்கடத்தில் நெளிந்து, குழந்தையின் கவனத்தை திசை திருப்ப, எதிரே இருந்த பொம்மைக் கடையை காண்பித்தனர். திரும்பவும் அந்தக் குழந்தை போஸ்டரை நோக்கி கைகாட்டி, கண்ணை மூடியபடி, அம்மாவிடம் சொன்னது:
“ஷேம்... ஷேம்.... பப்பி ஷேம்!”
0000
ஐந்து வருடங்கள் கடந்து விடுகின்றன.
00000
அதே பெண்குழந்தையும், அவள் அம்மாவும் உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழில் டப் செய்யப்பட்ட அந்த ஆங்கிலப் படத்தில் எதிர்பாராத நேரத்தில் ஒருவன் ஒருத்தியை கட்டிப்பிடித்து, இழைக்கிற மூச்சோடு சோபாவில் தள்ளி மேலே விழுந்து, மொத்த உதடுகளையும் உறிஞ்சினான். அம்மா சட்டென்று ரிமோட் மூலம் சேனலை மாற்றினாள். மகள் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்:
“அம்மா...இது கொஞ்ச நேரம்தான்... பிறகு கதை வந்துரும்”
0
எல்லாம் காலம் மாற்றிவிடும் என்று சும்மாவா சொன்னார்கள்..
பதிலளிநீக்குதமிழில் டப் செய்யப்பட்ட ஆங்கிலப்படங்களில் மட்டுமல்ல..இன்று தமிழ்ப்படங்களில் கூட இவைகள் நேரடியாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.. :(
பதிலளிநீக்குஆங்கிளத்தில் டப் செய்ய வேண்டிய அளவுக்கு இங்கே உள்ளது.
பதிலளிநீக்குகுழந்தைகளின் முன் மனைவியிடம் (அல்லது கணவரிடம்) அன்பை வெளிப்படுத்தத் தயங்கும் நாம் டிவி யில் எல்லாவகையான காட்சிகளையும் அவர்கள் பார்க்க அனுமதிக்கிறோம். (டிவி 24 மணி நேரமும் ஓடுகிறது என்றால் நாம் அனுமதிக்கிறோம் என்று தான்
பதிலளிநீக்குஅர்த்தம்)
Public display of affection தவறில்லை. அதற்கு அஞ்சும் நாம் public display of obscenity - ஐ எப்படி சகித்துக் கொள்கிறோம்?
லோஷன்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நநன்றி.
ரிஷான் ஷெரிப்!
பதிலளிநீக்குநட்புடன் ஜமால்!
ஒப்புக் கொள்கிறேன்.
தீபா!
பதிலளிநீக்குமிக முக்கியமான புள்ளியில் உன் கருத்து ஒலிக்கிறது. நிறைய யோசிப்பதற்கும், விவாதிப்பதற்குமான வெளி இருக்கிறது.
The advent of medias....really destracting our children in the maximum thru various methods...Thats why lots educational institutions are now trying to teach adoloscent students...about the so called things thru scientific methods...nothing wrong in understanding the human relationships in the right age,in the right way and by the right people...its my opinion only...
பதிலளிநீக்குhmmmmm
பதிலளிநீக்குராமசுப்பிரமணிய ஷர்மா!
பதிலளிநீக்கு//nothing wrong in understanding the human relationships in the right age,in the right way and by the right people...its my opinion only...//
உங்கள் கருத்து மட்டுமல்ல, ஆரோக்கியமாக சிந்திப்பவர்கள் இப்படித்தான் சொல்ல முடியும்.