இப்போதுதான் தெரியும். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. நமது தமிழ் எழுத்தாளருக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. அவர் எனது மாமனார் (மனைவியின் தந்தை) என்பதில் இன்னும் சந்தோஷம்.
ஒரு பயணம் போலவே அவரது சிந்தனைகளும், உரையாடல்களும் இருக்கின்றன. வழிகளை ஆராய்கிற தர்க்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாய் வெளிப்படுகின்றன. அடிநாதமாய் ஒரு மனிதாபிமானியின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பிரச்சினைகளை தட்டையாக ஜெயகாந்தனின் எழுத்துக்கள் அணுகியதில்லை. சமூகத்தை மிக நெருக்கத்தில் உற்றுப் பார்க்க அவரால் முடிந்திருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தன் அழுத்தமாக தடம் பதித்து, இன்றைக்கும் நிற்பதற்கு இதுவே காரணாமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு எழுத்தாளராக இலக்கியத்தோடு தன்னை நிறுத்திக் கொள்ளாமல், சமூக நிகழ்வுகளிலும், அரசியல் பார்வையிலும் தன்னியல்பான, ஒரு சுதந்திரமான சிந்தனையை செலுத்துகிற மனிதராக எப்போதும் இருக்கிறார். தன்னை ஒரு மார்க்சீயவாதியாக அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு போதும் தயங்கியதில்லை. இலக்கியத்துறையில் ஒரு சகாப்தமாக இருந்திருக்கிறார். இப்போது பேனா மௌனமாய் இருக்கிறது. திரைப்படத்துறையில் ஒரு வெளிச்சம் போல வந்து விட்டு சென்றிருக்கிறார். பிறகு அப்படி வேறு முயற்சிகள் எதுவும் தொடர்ந்து செய்யவில்லை. ஜெயகாந்தனின் ஆளுமையின் தனித்துவம் இப்படியும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
காலத்தை பார்த்து கொண்டே இருக்கிறார் அவர். ஓய்வற்ற அலைகள் அவருக்குள் எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றன.
இப்போதுதான் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
0
பிடித்திருந்தால் ஒட்டு போடலாமே!
மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த வாழ்த்துகள் திரு.ஜெயகாந்தனுக்கு.
பதிலளிநீக்குஒரு தகவலுக்காக, நான் பி.கே.சிவகுமார் அவர்களின் நண்பன்.
http://balaji_ammu.blogspot.com
இந்தியாவிலிருந்து நண்பர் வ.ஸ்ரீனிவாசன் அனுப்பிய எஸ்.எம்.எஸ் மூலம் இம்மகிழ்ச்சிகரமான தகவல் அறிந்தேன். விருதுகளுக்கு ஜெ.கே. தகுதிபெறுவது தந்த மகிழ்வைவிட, அவருக்கு இவ்விருது போவதால் விருதுக்கு வந்த தகுதி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொலைபேசியில் ஜே.கே.வுடன் வாழ்த்துச் சொல்லி உரையாடும்போது, எழுதாவிட்டாலும் சந்தோஷமாக,நலமாக இருக்கிறார் என்பதைக் கம்பீரமான குரல் காட்டியது. அவருக்கும் நீங்கள் உட்பட அவர் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். - பி.கே. சிவகுமார்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குIt was my fault.As a journalist I got the news earlier.But I believed that the news might have passed to JK
பதிலளிநீக்குearlier.So very casually I wanted to exchange the news to you in the evening.Anyhow we all proud to have the happy news.Our congratulations to JK.His writing is a inspiring one
for ever...vimalavidya
இப்போதுதான் பார்க்கிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொன்ன உங்களுக்கு நன்றி மாதவராஜ். நாளை பேசுகிறேன்.
பதிலளிநீக்கு///அடிநாதமாய் ஒரு மனிதாபிமானியின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.///
இதுதான் அவரை இவ்வளவு தூரம் வழி நடத்தி வந்திருக்கிறது.
மனம் குளிர்ந்தது. வேறு எழுத வார்த்தைகளில்லை.
இதைவிட சந்தோசமான செய்தி வேறென்ன இருக்கமுடியும்? தகவல் தித்தித்தது. இது அவருக்கென்ன பெருமை விருதுக்கல்லவா பெருமை. இச்சமயம் நான் அமெரிக்காவில் இருப்பது நெருடல், சென்னையிலிருந்திருந்தால் எனக்கு அடுத்த தெருதான் அவரின் இல்லம், நேரில் சென்றிருப்பேன், வாழ்த்த வயதில்லாவிடினும், கால்களில் விழுந்து ஆசி பெற்றிருப்பேன்! அவர் நீண்ட நெடுங்காலம் உடல் நலத்தோடும், அதே கம்பீரத்தோடும் வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம்! நன்றி!!
பதிலளிநீக்குநவின், அமெரிக்காவிலிருந்து
ஆமாம், உலகத் தமிழ்ப் புத்தக தினம் என்று ஜூன் 3 அறிவித்தபோதே, இந்த வருட பட்டியலில் இவருடைய பெயர் வரும் என்று பலர் கூறியிருந்தார்கள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி, தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!!
பதிலளிநீக்குகிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு பட்டமும், பதவியும், பரிசுகளும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கும் இந்த அரசு, இவர் போன்ற ஒப்பற்ற இலக்கியவாதிகளை கௌரவிப்பதில் தாமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. திரு. ஜெயகாந்தன் அவர்களது படைப்புகள் மூலமான பங்களிப்பு இந்த தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறாது என்பது என்போன்ற படைப்பாளர்கள் நன்கு அறிவார்கள்.
பதிலளிநீக்கு- கிரிஜா மணாளன்.
திருச்சிராப்பள்ளி.
உழைப்புக்குப் பின்னாலுள்ள
பதிலளிநீக்குமனிதர்கள் தெரியாத அந்தக்காலங்களில்
குங்குமத்தில் காற்றுவெளியினிலே தொடராக
வந்தது. அப்போது ஆத்மநாம் எனும் சாகசக்காரனோடு
அந்தக் குதிரை வண்டியில் பயணப்பட்ட எண்பதுகள்.
அதுதான் முற்போக்கு சிந்தனைகள் தமிழ்பரப்பெங்கும்
செழித்து முளைக்கத்தொடங்கிய காலங்கள்.
பின்னர் அவர் ஒரு பொதுவுடமைத் தத்துவத்தின்
வார்ப்பு அவர் என அறிய நேர்ந்தபோது எஞ்சிய அவரது
படைப்புகள் எல்லாம் இன்னும் கூடுதல் ஈர்ப்பானது.
நண்பர்களுக்கும் உரையாடலுக்கும் கூடுதல் நேரம்
ஒதுக்குகிற அவரது சிந்தனையும் தர்க்கமும்
அவரது வசீகரக் கம்பீரம்.
இதோ
காலம் மிகப் பொருத்தமாக அவரைக்கௌரவித்திருக்கிறது
உலகத்தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், வாசககள்
நண்பர்கள் புதுமை விரும்பிகள் கொண்டாடும் நாள் இது.
வாழ்த்துக்கள்.
கேட்கவே சந்தோஷமாக இருக்கு.
பதிலளிநீக்குஎன்றென்றும் அன்புடன்!
பதிலளிநீக்குதங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
பி.கே.எஸ்!
பகிர்தலுக்கும், கருத்துக்கும் நன்றி.
விமலாவித்யா!
தமிழ் கூறும் இலக்கியம் நிச்சயம் பெருமைப்படும்.
மதுமிதா!
பதிலளிநீக்குதமிழன்!
ananymous!
பழமை பேசி!
நம் அனைவருக்குமான சந்தோஷம் இது. தங்கள் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி.
கிரிஜாமணாளன்!
பதிலளிநீக்குதங்கள் வருத்தமும் நியாயமானது. ஜே.கேவின் படைப்புகள் குறித்த கருத்தும் உண்மையானது.
காமராஜ்!
பதிலளிநீக்குவடுவூர் குமார்!
கொண்டாடுவோம்.
ஜெயகாந்தனின் எழுத்துகளைப் படித்து வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு இது பெரு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஆனால் என்ன ரொம்ப காலதாமதமாகக் கிடைத்திருக்கிறது.
மகிழ்ச்சியான விதயம். தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத அத்தியாயத்திற்கு இன்னுமொரு கிரீடம். எங்கள் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்.
பதிலளிநீக்குஆமாம், இதென்ன இரகசியம். மேலாண்மை உங்க நண்பர். அவருக்கு சாகித்ய விருது. ஜெ.கே.உங்க மாமனார். அவருக்கு பத்மா விருது. நானும் உங்க நண்பன்தான். பார்ப்போம், தமிழ்மண விருது கிடைக்குதான்னு :)
அனுஜன்யா
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி!!!
owing to some personal difficulties i couldnt go and wish him in person, and am using this blog for that. there are some creatures writing trash at this important moment.. i hope we will be able to do something about that
பதிலளிநீக்குஅன்பின் மாதவராஜ்
பதிலளிநீக்குபத்மபூஷன் ஜெயகாந்தனின் மாப்பிள்ளையா நீங்கள் ?? ம்ம்ம் - இன்னுமொரு பரிமாணம் - முகம் அறிந்தேன். நன்று
பத்மபூஷன் ஜெ.கே அவர்களுக்கும் தங்களுக்கும் நல்வாழ்த்துகள்
சுந்தர்!
பதிலளிநீக்குஉண்மை. வருகிற தலைமுறை அவரது எழுத்துக்களை அறிந்திருக்க வேண்டுமே..? நண்பர் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தில் ஒரு காட்சி வரும். ஜெயகாந்தன் அவர் பிறந்த ஊருக்கு சென்று அங்கு குழந்தைகளுடன் பேசிக்கொண்டு இருப்பார். ஒரு குழந்தையிடம் கேள்வி கேட்கப்படும். ஜெய்காந்தனைத் தெரியுமா.. என்று. அந்தப் பையனுக்குத் தெரியாது. உடனே ஜெயகாந்தன் சொல்வார். ரஜினிகாந்த் தெரியுமா என்று. குழந்தைகள் ஆமாம் என்பார்கள். அதுபோலத்தான் என் பெயரும்...ஜெயகாந்தன் என்று சொல்லி சிரிப்பார்.
அனுஜன்யா!
பதிலளிநீக்குவிருது பெற வாழ்த்துகிறேன். தங்கள் பகிர்தலுக்கு நன்றி.
ருத்ரன் சார்!
பதிலளிநீக்குநானும் அதைப் படித்தேன். விமர்சனம் செய்வதிலும், முரண்பாடு கொள்வதிலும் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.அது அவர்களுக்கு இல்லை.
பொன்ராஜ்!
பதிலளிநீக்கும்...தமிழில் எழுத வருகிறதே! வாழ்த்துக்கள்.
சீனா!
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குஜே.கே அவர்களுடனான அனுபவங்களையும் அவ்வப்போது பதிவிடுங்கள்.