-->

முன்பக்கம் , , , � மாதவராஜ் பக்கங்கள் - 25

மாதவராஜ் பக்கங்கள் - 25

திவர் நேசமித்ரன் அவர்கள் நான்கு நாட்களுக்கு முன் போன் செய்து “அண்ணே, திண்டுக்கல் வந்துட்டேன். உங்களைப் பார்க்கணும்” என்றார். சந்தோஷத்தோடு, “வாங்க. எப்போது வேண்டுமானாலும் பார்ப்போம்” என்றேன். எழுத்தாளர் கோணங்கியையும் அவர் சந்திக்க விரும்புவதை ஒரு முறை சாட்டில் தெரியப்படுத்தியிருந்தது நினைவுக்கு வர, “கோணங்கியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன். அவரையும் பாத்த மாதிரி இருக்குமே” என்றேன். “ரொம்ப சந்தோஷம் அண்ணே” என்றார். கோணங்கி, நேசமித்ரனை தனக்குத் தெரியும் எனச்சொல்லி, திங்கட்கிழமை சந்திக்கலாம் என்றார். அன்றைக்குத்தான் என் தம்பி விபத்தில் இறந்து ஐந்து வருடங்களாகின்றன என்பதை தெரியப்படுத்தவும், “ஒண்ணும் பிரச்சினையில்ல. செவ்வாய்க்கிழமை சாயங்காலம் சாத்தூர் வருகிறேன், சந்திப்போம்” என்றிருக்கிறார். நேசமித்ரனும் அன்றைக்கு சாத்தூர் வருகிறார். ஆக....

 

சென்ற தடவை சென்னைக்குச் சென்றிருந்தபோது இது நடந்தது. நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் யாரையும் ஒரு பொருட்டாக நினைக்காதது போல இருந்தது. கூட்டம் நிரம்பியிருந்த அந்த ஒட்டலில் மேல்சட்டையக் கழற்றி, பனியனோடு விறுவிறுவென கை கழுவும் இடத்தை நோக்கி நடந்து கொண்டு இருந்தார். அவர் பின்னாலேயே பலரது பார்வைகளும் சென்று கொண்டிருந்தன. தண்ணீர்க்குழாயைத் திறந்து, சட்டையின் குறிப்பிட்ட பகுதியைக் காண்பித்து கசக்க ஆரம்பித்தார்.

சர்வரிடம் கேட்டதற்கு, “சாம்பாரைத் தூக்கிக்கொண்டு போகும் போது உட்கார்ந்திருந்த அவர் முதுகில் கொஞ்சம் சிந்திவிட்டது” என்றார். வலது தோளில் சட்டையைத் தொங்கவிட்டபடியே கல்லா அருகில் வந்து அவர் பில்லுக்குப் பணம் கொடுத்தார். அப்படியே ஓட்டலை விட்டு வெளியேறவும் செய்தார். நான் அவர் சென்ற திசையிலேயே ஆழ்ந்திருந்தேன். சமீபத்தில் நான் இங்கு எழுதியிருந்த ‘கறை’ ஓடிக்கொண்டு இருந்தது. கறை என்றால் என்ன என்பதை தெளிவாக உணர்த்திவிட்டுச் சென்றிருந்தார்.

 

ன்றோடு என் தம்பி இறந்து ஐந்து வருடங்களாகின்றன. நான் என்று “தோழர், என்ன இந்தப் பக்கம்” என்று அவனிடமும், “ஸார், அந்த போட்டோ ரெடியாய்ட்டா” என்று என்னிடமும் கேட்டு, இந்த ஊர் ஏமாந்து பார்த்த இரட்டையர்கள் போல இருந்தோம். ஏர் ஃபோர்ஸில் இருந்தாலும் தண்ணியடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. கேண்டினுக்கு அவன் போகும் போது ஒயிட் ரம் கேட்பேன். “குடிகார நாயே, சாருக்கு  அஞ்சு தோப்புக்கரணம் போடு” என்பான். “போடா மயிரு” என்பேன். “குடிகாரனுக்கு என்னலே ரோஷம்” எனச் சீண்டுவான். ஆனால் சாயங்காலம் “ஒங்க அருமைத் தம்பி, ஆசையா உங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்காங்க ஒண்ணு” என பாட்டிலைக் காண்பிப்பாள் அம்மு.

எங்காவது அலைந்து திரிந்து விடியும் வேளையில் வந்து படுத்துக் கிடப்பேன். சரியாக ஒன்பது மணிக்கு தனது டிஜிட்டல் போட்டோ ஸ்டூடியோவைத் திறக்க எங்கள் தெரு வழியாகச் செல்லும் அவன் பைக்கை நிறுத்தி  உள்ளே வருவான். பூட்ஸ் காலோடு என்னருகில் வந்து படுத்து, கால் போட்டு “என்னல தூக்கம். எழுந்திரு” என்பான். பாடி ஸ்பிரே மணக்கும்.

அவன்தான் எழுப்ப முடியாமலே போய்விட்டான்.  “அத்தான், விருதுநகருக்கு போற வழில உங்க தம்பிக்கு ஆக்ஸிடெண்டாம். யாரோ போன் செஞ்சாங்க. எனக்கு பயமா இருக்கு” என்று அவன் மனைவி தெரு வழியா ஓடிவந்து கதறியது இன்னும் அறுக்கிறது.  காமராஜையும், பிரியா கார்த்தியையும் வரவழித்து போவதற்குள் தெரிந்து விட்டது. எல்லாம் முடிந்து அவனைக் கொண்டு வந்த போது, என்னைப் பார்த்து “ஓடிவந்து சொன்னேனே அத்தான், இப்படி ஏமாத்திட்டீங்களே” என அவள் கதறினாள். நெஞ்சு வெடித்து ’ஐயோ’வென அழுதேன்.

நினைவுகளாக சுற்றிச் சுற்றி வருகின்றன. அவனது ஓவியங்கள் எங்களது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் எல்லாம் இருக்கின்றன. அவனைப் பற்றிச் சொல்கின்றன. அப்படி ஒரு ஓவியம்....

raj art

Related Posts with Thumbnails

19 comments:

 1. என்ன எழுத என்று தெரியவில்லை மாதவ்ஜி..

  அஞ்சலிகள்.

  ReplyDelete
 2. // ஜனனமும், மரணமும் வாழ்க்கையை ஆரம்பித்து முடித்து வைக்கிற ஒரு வரிக்கணக்கான போதும், நினைவுகள் மட்டும் காலத்தாலும் கழிக்க முடியாத, தீராது அழுத்துகிற பாரம். //


  இந்த வார்த்தைகள் மனதைக் கனக்கச் செய்கிறது. இழப்பு மிகவும் கொடுமையானது. உங்கள் தம்பிக்கு என்னுடய அஞ்சலிகள்!! மற்றும் உங்கள் தம்பி குடும்பத்தார்க்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 3. அன்பு மாதவ்

  உங்கள் தம்பியின் நினைவுகள் எங்களைப் பொறுத்தவரையில், Bank Workers Unity இதழோடு கலந்து விட்டவை. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த பத்திரிகையின் அட்டைப் படங்கள் அவரது கற்பனையும், உழைப்பும், வண்ணங்களும் இழைந்திருந்ததையே நான் தாமதமாகத் தான் தெரிந்து கொண்டேன்.

  இப்படியான ஒரு ஆகஸ்ட் 23 அன்று செப்டம்பர் இதழை முடிக்கும் நேரம், வழக்கம் போல், அட்டைப் படம் குறித்து உங்களோடு பேச நான் ஓயாது முயற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரம். பிற்பகல் நேரமொன்றில், பிறிதொருவர் உங்களது அலைபேசியில் தெளிவற்ற ஏதோ பதிலைச் சொல்லவும், விபத்தில் இறந்தது உங்களது தம்பி என்று மறுநாள் தான் அறிந்து அதிர்ந்து போனது கொடுமையானது.

  அடுத்த இதழில் தோழர் எஸ் காமராஜ் எழுதிய உருக்கமான அஞ்சலிக் கட்டுரையில் உங்களது அன்பு இளவலின் ஆளுமையின் வண்ணங்கள் பெருமைக்குரியதாகவும், இழப்பின் வழியை மேலும் உணர்த்துவதாகவும் வந்திருந்தது.

  வண்ணங்களின் காதலனுக்கு மீண்டும் எமது புகழஞ்சலி....

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 4. வார்த்தைகள் ஆறுதலில்லைதான். ஆனாலும்...பிரிய இழப்பு பெரிய இழப்பு.

  ReplyDelete
 5. may his soul rest in peace.

  ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 6. எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியாது தான் ....
  ஆழ்ந்த வருத்தங்கள்

  ReplyDelete
 7. இழ‌ப்பின் வ‌லி இத‌ய‌த்தில் ஆணிக‌ள்தான்.
  சுவாசிக்கும் ஒவ்வொரு க‌ண‌மும் அதை உர‌சிக் கொண்டேதான்....

  ReplyDelete
 8. மறக்கமுடியாத மனிதர் குட்டி அங்கிள். அவர் சீரியஸாக இருந்து பார்த்ததே இல்லை. அவரது இழப்புக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை.
  அஞ்சலிகள்.

  ReplyDelete
 9. மௌனம் மட்டுமே..........!!

  வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு!!!

  நினைவுகள் மட்டுமே....!!

  என்றும் மறவா .............!!

  ReplyDelete
 10. பாலா சார் சொன்னதுதான். என் வார்த்தைகள் உங்களுக்கு ஆறுதலை வரவழைத்தால் நன்றே. உங்கள் சகோ அவர் ஓவியங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  ReplyDelete
 11. என்ன எழுத என்று தெரியவில்லை

  ReplyDelete
 12. அடப்பாவி நேசா, எனக்கு முன்னால மாதுவை நீ பார்க்கப் போறியா? என பொறாமையுடன் கீழிறங்கி வந்தால் தம்பி விஷயத்தில் கலங்க வைத்து விட்டீர்கள் மாது.

  அஞ்சலிகள் மக்கா.

  ReplyDelete
 13. ஈடு செய்ய முடியாத இழப்பு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை மாதவ் அண்ணா. தம்பியைப் பற்றிய உங்களது முந்தைய பதிவையும் படித்துள்ளேன். இந்தப்பதிவும் அவரது வண்ணங்களால் ஆன உலகை அழகுறப் பதிவு செய்கிறது. அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  ReplyDelete
 14. எழுதும்போது உங்களின் மனநிலை எப்படியிருந்ததோ அதே நிலைதான் உங்களின் தம்பியைப்பற்றி படிக்கும்பொழுதும். எனது அஞ்சலியும்..

  ReplyDelete
 15. அது எங்கு கிடைக்குமென்று தோழர் கேட்டபோது இங்கு கிடைக்குமென சிரித்த சிரிப்பொலி அருகில் கேட்கின்றது ... வண்ணங்களின் சிரிப்பலைகள் ஒருபோதும் மறைந்து விடப் போவதில்லை தோழர் ....

  ReplyDelete
 16. அன்னாருக்கு எனது அஞ்சலிகள்!

  ReplyDelete
 17. ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 18. இத்தனை காலம் தெரியமல் போனது வருத்தமை உலது.

  ReplyDelete