-->

முன்பக்கம் , , � புதிய பதிவர்கள் அறிமுகம் -1

புதிய பதிவர்கள் அறிமுகம் -1

தங்கள் கருத்துக்களை, எழுத்துக்களை நான்கு பேருக்குச் சொல்ல வேண்டுமென்று வலைப்பக்கங்களில் புதிய பதிவர்கள் தினம்தோறும் வந்து சங்கமமாகிக்கொண்டே இருக்கின்றனர். தண்ணீரில் குதித்து அவர்களாகவே கைகால்களை அசைத்துக்கொண்டு நீச்சல் பழகுகின்றனர். அவர்கள் யார், என்ன எழுதுகிறார்கள் என்று பலருக்கும் தெரிவதில்லை. அவர்களை வலையுலகத்திற்கு வரவேற்று, வாழ்த்துக்கள் சொல்லும் விதமாகத்தான் இந்த ஏற்பாடு.

 

1.ஹரிஹரன்:

இவரது வலைப்பக்கம் என் எண்ணம்.  இதுவரை ஐந்து பதிவுகள் எழுதி இருக்கிறார். அனைத்துமே முக்கியமான விஷயங்களைத் தொட்டு எழுதிய நல்ல பதிவுகள். அரசியலும், சமூகமும் தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களாகச் சொல்கிறார். எந்தத் திரட்டிகளிலும் இன்னும் தன் வலைப்பக்கத்தை இணைக்காமல் இருக்கிறார்.

 

2.முனியாண்டி:

இவரது வலைப்பக்கம் அடிசுவடு. (அடிச்சுவடு என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்). லாஸ் ஏஞ்சல்சில் இருக்கிறார். இதுவரை 14 பதிவுகள் எழுதியுள்ளார். கவிதை முயற்சிகளாய் இருக்கின்றன. தோன்றுவதை அப்படியே எழுதுகிறார். கவிதைகளாவதற்கு இன்னும் மெனக்கெட வேண்டும். இவரும் எந்தத் திரட்டியிலும் தன் வலைப்பக்கத்தை இணைக்கவில்லை.

 

3.காஸ்யபன்:

இவரது வலைப்பக்கம் kashyapan. (தமிழில் வைக்கலாமே!). முன்னர் மதுரையில் இருந்தவர் இப்போது நாக்பூரில் இருக்கிறார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், ஒரு நாடகமும் எழுதியிருக்கிறார். தொடர்ந்த இலக்கியப் பரிச்சயமுடைய இந்த 73வயதுக்காரர், அபூர்வமான விஷயங்களை சின்னச் சின்னதாய் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து எழுதுகிறார்.

 

4. திலீப் நாராயணன்:

இவரது வலைப்பக்கம் அழகிய நாட்கள். இவரைப் புதிய பதிவர் என்று சொல்லிவிட முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிவிட்டார். ஆனால் புதிய பதிவராகவே இருக்கிறார். இப்போதுதான் எனது முயற்சியினால் திரட்டிகளில் இணைந்திருக்கிறார். விருதுநகரில் தொலை தொடர்புத் துறையில் கணக்கியல் அலுவலராக இருக்கும் இவர் தன்னை செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். வாழ்வின் மீது அக்கறையும், விமர்சனமும் கொண்ட இவரது எழுத்துக்கள் இன்னும் அடர்த்தியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

 

5. ராசராசசோழன்:

இவரது வலைப்பக்கம் அ..ஆ... புரிந்துவிட்டது... கற்றது கைமண் அளவு . இவரும் இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். ’சராசரி மனிதன்.... கொஞ்சம் தமிழ் இன உணர்வுடன்’ என தன்னை அடையாளப்படுத்தும் இவர் நிறைய எழுதுகிறார். எழுத்தும் நடையும் இயல்பாய் இருக்கிறது. இன்னும் கூர்மை பெற வேண்டும்.

 

இந்த ஐந்து பதிவர்களுக்கும் நாம் நமது வாழ்த்துக்களையும், ஆதரவினையும் தெரிவிப்போம்.

(புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை jothi.mraj@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தீராத பக்கங்களில் அறிமுகப்படுத்த முடியும்.)

Related Posts with Thumbnails

32 comments:

 1. நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள். சில புதிய பதிவர்களை பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவர்கள் பக்கங்களுக்கு சென்று எட்டி பார்த்ததில்லை. இது அவர்களை உற்சாகப்படுத்தும்!

  ReplyDelete
 2. நன்றி மாதவராஜ்...உங்கள் அன்புக்கு நன்றி...கண்டிப்பாக நல்ல பதிவர் என்று பெயர் எடுப்பேன்.

  ReplyDelete
 3. புதிதாய் அறிமுகமாகும் ஐந்து வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  உங்கள் புதிய/ அவசியமான முயற்சிக்கும் வாழ்த்துக்கள் மாதவராஜ்.

  ReplyDelete
 4. இந்தியா- சீனா தகறாரின் போது கட்சியோடு நெருக்கமாக பழக வெண்டியதாயிற்று.மேடைகளிலும்,சிறு சிறு கூட்டங்களிலும் (ரகயசியமாக.) பேசும் தலைவர்களை அழைத்துப்போகவேண்டும். defence of india rules அமலில் இருந்தது.பொதுத்துறை நிறுவனத்தில்பணி செய்வதால் உண்மையான பெயரைச் சொல்ல முடியவில்லை.எண்ணாயிரப் பிராமணர்கள்.எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்ப்ட்டார்களே அவர்களின் வாரிசுகள் என்றும் நம்பப்படுகிறது. நான் காஸ்யப கோத்திரத்ததை ச்சார்ந்தவன்.அபோதிருந்த சேயலாளர் காஸ்யபன் என்று கூப்பிடஆரம்பித்தார்.நிலைத்துவிட்டது......காஸ்யபன்...

  ReplyDelete
 5. மிக நல்ல முயற்சி மாதவ் அண்ணா. புதிய பதிவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நல்ல முயற்சி... தொடருங்கள்...

  ReplyDelete
 7. அன்புத்தோழர் மாதுவுக்கு வணக்கம். என்னையும் சேர்த்து நானூறுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் தங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.'வீர சுதந்திரம் வேண்டி' சாத்தூரில் வெளியிட்டது முதல் என்று சொல்லலாம் அல்லது 'விழுது' பத்திரிகை சந்தா செலுத்தியதிலிருந்து என்று குறிப்பிடலாம்... ஒவ்வொரு அசைவையும் கவனித்த என்னை இரண்டு திரட்டிகளில் இணைத்து கொடுத்ததோடல்லாமல் ஒரு பதிவாகவும் என்னை தங்கள் வலைப்பக்கத்தில் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நானும் பதிவுலகமும் இதை மறவோம்.
  வாழ்த்துக்களுடன்,
  திலிப் நாராயணன்.

  ReplyDelete
 8. புதிய பதிவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்..

  அறிமுகத்துக்கு மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 9. நன்றி மாதவ்...
  அப்புறம் காஷ்யபன் அவர்களது (www.kashyapan.blogspot.com)வலைப்பூவையும், ராம்கோபால் (www.sramgopal.blogspot.com) வலைப்பூவையும் கூட நீங்கள் அறிமுகம் செய்யலாம்.

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 10. வரவேற்போம்.
  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 11. //புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை//

  பெயர்: சரவணவேல்
  வலைப்பக்க முகவரி: kusumbuonly.blogspot.com
  சிறுகுறிப்பு: உயரம் 5 அடி 8 அங்குலம், நிறம்: கருப்பு.

  :)))

  அறிமுகம் செய்தவகளுக்கு ஊக்கும் கொடுத்துட்டா போச்சு! நன்றி

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்

  ReplyDelete
 13. you are doing very good job.All the blogger shall add their name/blog in the >>>http://www.tamilblogger.com/
  also.So the http://www.tamilblogger.com/can be put as all blogger's front page of computer.so we can browse all the list of blogs easily..

  ReplyDelete
 14. ஐவருக்கும் வாழ்த்துக்களுடன் வரவேற்பு..
  அறிமுகப்படுத்தி ஊக்கம் கொடுக்கும் அண்ணன் மாதவராஜுக்கும் ஒரு ஜே..

  ReplyDelete
 15. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
  கணினி தொடாமல் முழுக்க கைப்பேசியிலேயே பதிவிட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் இந்தப் பதிவு பொருந்தும்.

  ReplyDelete
 16. பகிர்வுக்கு நன்றி நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் மாது சார்

  ReplyDelete
 17. நல்ல முயற்சி, தொடருங்கள். புதியவர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள். தாங்கள் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட கிழமையில், ஐந்து பேரை அறிமுகம் செய்யலாமே!

  நேரம் கிடைத்தால், எனது பிளாக் பக்கம் வந்து கருத்துச் சொல்லவும்.

  http://amaithiappa.blogspot.com

  நன்றி.

  ReplyDelete
 18. நல்ல முயற்சி.
  புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. பகிர்வுக்கு நன்றி நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. ஆஹா அருமையான முயற்சி . வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்களின் அறிமுக பதிவர்களுக்கும் மன்னிக்கவும் இன்றுமுதல் நாம் பதிவர்கள் .

  ReplyDelete
 21. //அறிமுகம் செய்தவகளுக்கு ஊக்கும் கொடுத்துட்டா போச்சு! நன்றி//

  இருக்குற ஊக்குகள் பத்தாதாக்கும்:)

  ReplyDelete
 22. எனது வலைப்பக்கத்தை அறிமுகப் படுத்திய மாதவராஜ் மற்றும் ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி.

  உங்கள் வலைப்பக்கத்தில் வரும் செய்திகளின் தாக்கமே என்னையும் எழுதத் தூண்டியது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 23. நல்ல அறிமுகங்கள்.பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. வலைபூக் கடலில் புதியதாய் குதித்திருக்கும் ஒரு சின்னக் குழந்தை நான், நீச்சலடிக்க ஆசை எனக்கு, ஆனால் கை கால்களை அசைத்தும் சில சமயம் மூழ்கி விடுகிறேன்.

  ReplyDelete
 25. நல்ல முயற்சி, தொடருங்கள்.

  ReplyDelete
 26. நல்ல அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 27. அன்பின் மாதவராஜ்

  நல்லதொரு செயல் - புதிய பதிவர்கள் அறிமுகம்

  இதனைத்தான் வேறு முறையில் வலைச்சரத்தில் செய்கிறோம்

  நன்று நன்று - நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 28. நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.பூங்கொத்து!

  ReplyDelete
 29. நன்றி முதலில் என் வலைதளத்தை அறிமுகம் செய்தமைக்கு. தொடர்ந்து எழுதுகிறேன் உங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கி ......

  ReplyDelete
 30. நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்
  லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
  சமுதாய தகவல் களஞ்சியம்
  http://lalpetexpress.blogspot.com/
  வலைப்பூவையும் கூட நீங்கள் அறிமுகம் செய்யலாம்.

  ReplyDelete
 31. நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.....

  அறிமுகமாகும் வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete