ஜெ என்றால்....

 

முதல் வகுப்பு படிக்கும் மகனுக்கு, தினசரி காலையில் ‘வெளியே’ போவதை வழக்கமாக்க பிரயாசைப்பட்டாள் தாய். அப்போதுதான் கழிப்பறையில் உட்கார வைத்து, வந்து தனது வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தாள்.

கொஞ்ச நேரத்தில் கழிப்பறையிலிருந்து மகன்காரன் ‘அம்மா இங்க வாயேன்’ என ஆரம்பித்தான். கொஞ்சமும் முயற்சி செய்யாமல் உடனே இப்படிக் கத்துவது அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சென்ற பிறகு ஒவ்வொருநாளும் ‘வெளியே’ செல்கிறேன் என கால்ச்சட்டை முழுக்க நனைத்து உட்கார்ந்திருக்கிறான் என ஆயாம்மா பலமுறை சொல்லி விட்டார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்து பாருடா’ என அதட்டினாள்.

அவன் திரும்பத் திரும்ப “அம்மா இங்க வாயேன்.... அம்மா இங்க வாயேன்” என பெருங்கூச்சல் போட ஆரம்பித்தான். எதாவது பல்லி, கரப்பான்பூச்சி பார்த்துவிட்டிருப்பான் என நினைத்துக்கொண்டு கழிப்பறை சென்றாள்.

பெரும் சாதனை படைத்தவனைப்போல நின்று கொண்டு இருந்தான். ‘அடேயப்பா போய்விட்டானாக்கும், இதுக்குத்தானா’ என்று நினைத்துக்கொண்டே “நல்ல புள்ள” என்று தண்ணீர் ஊற்றப் போனாள்.

“அம்மா, அதை நல்லாப் பாரு.....” என்று கைநீட்டி காண்பித்து “ஜெ மாதிரியே வந்திருக்கு” என்றான். அத்தோடு நில்லாமல் “ஜெ ஃபார்.... ” என்று முகமெல்லாம் குறும்பு பொங்க கேட்கவும் செய்தான்.

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நல்ல சிரிப்பு...

  ஜெ ன்னதும் எனக்கு எங்க வீட்டு வாண்டு ஒன்று சொன்னது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

  பள்ளிக்கூடத்தில் கழிப்பறைக்குப் போவதற்கு கையில் ரெண்டு விரலை உயர்த்திக்காட்டிப் பழக்கப்பட்ட வாண்டு, தொலைக்காட்சியில் அவங்க (ஜெ) கையில் ரெண்டுவிரலைக் உயர்த்திக் காட்டியதைப்பார்த்து "அம்மா ஆய் சொல்லுது" என்று சொல்லி எல்லாரையும் அதிரடியாகச் சிரிக்கவைத்தது :)

  பதிலளிநீக்கு
 2. கூட்டணி மாறப் போறீங்க போலருக்கு?

  பதிலளிநீக்கு
 3. மாதவ் சார், உங்களுக்கு டபுள் தைரியம் :‍-)
  முதல் தைரியம் சொல்லத் தேவையில்லை (பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்), ரெண்டாவது பொதுக்கழிப்பிடங்களில் எழுதப்பட்ட ஒரு சில நகைச்சுவைக் கவிதைகளை :-) 'கக்கூஸ் கவிதைகள்' என்று தலைப்பு வைத்து
  ஒரு பதிவு போடலாமா என்ற நினைப்பும் அடிக்க வருவார்களோ என்ற தயக்கமும் இருந்தது. Now :-)

  சுந்தரா சொன்னதும் நல்லாருக்கு

  பதிலளிநீக்கு
 4. நல்ல காமடி... உட்பொருள் மறைந்திருப்பதாக உணர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. அய்ய,,,,,,,,,.. முகம் சுளிக்க வைத்தாலும் சிரிக்க வைக்கிறது.. நல்ல ரசனை,... உங்களுக்கு...

  பதிலளிநீக்கு
 6. Mathavji! it is in bad taste. We should never hit below the belt....kashyapan

  பதிலளிநீக்கு
 7. Really in bad taste. Can't enjoy it. Better to keep a restraint. Even yesterday's post was also pretty personal I think. Why to invite trouble?

  பதிலளிநீக்கு
 8. பதிவிட்டதிலிருந்து எதிர்பார்த்த கமெண்ட்கள் இப்போதுதான் வந்திருக்கின்றன.

  எழுத யோசித்து, பிறகு வேண்டுமென்றுதான் இப்படி ஒரு பதிவை எழுதினேன்.

  அடுத்து தைரியம் என பகிர்ந்தவர்களின் புரிதல்களுக்கு நானோ, அந்தக் குழந்தையோ பொறுப்பாக முடியாது.

  ஒரு எழுத்தை, உலகில் ஒருவருக்கு மொத்தமாய் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, அது அவர்தான், அவர் மட்டும்தான் என உறுதி பூண்டு கொண்டால் நான் என்ன செய்ய? அய்யா... அது ஒரு எழுத்து. வழமையாகிப்போன நமது தவறான புரிதல்கள் குறித்து யோசிக்கலாமே....

  இரண்டாவது, இப்படி ஒரு விஷயத்தை எழுதுவதற்கும் தைரியம் வேண்டும் என்பது. இப்படி ஒன்று நடந்தால், நம் வீடுகளில், நன்றாகத் தெரிந்தவர்களிடம் சொல்லிச் சிரிக்க முடிகிறபோது ஏன் எழுத்து மட்டும் முகம் சுளிக்க வைக்கிறது. அது குறித்தும் யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

  எல்லாம் மறந்து (ஆம், எல்லாம் மறந்து) அந்தக் குழந்தையை, குழந்தமையை மட்டும் ரசித்தவர்களுக்கு, ரசிக்க முடிந்தவர்களுக்கு என் நன்றி.

  காஸ்யபன் தோழர் & சேது தோழர்! நிச்சயமாய் bad tasteல் எழுதவில்லை. நமக்கு ஏற்கனவே இருக்கும் taste குறித்து ஒரு குழந்தை மூலமாக கேள்விகள் எழுப்பி இருக்கிறேன் என புரிந்து கொள்ளுங்களேன்.

  பதிலளிநீக்கு
 9. I take it in right spirit after seeing the reply. Also I just want to share with you all a note, not specific to any one personally, including Mr. Mathavaraj who is great social worker and noble person.

  I was a college student in Madras in 84-86 and at that time there was an election held for both assembly and parliament. Mr.VPC was contesting in Villivakkam assembly (against SDK Jakkaian or someone, not sure) in DMK’s alliance. Congress fielded for the first time Vyjayanthimala Bali against veteran Era. Sezhiyan ( I think he was in Janata Party at that time) in South Madras parliament seat. In one of the election meeting in Villivakkam, Mr. VPC said “I am not worried about me winning the seat, but I don’t want a veteran like Era. Sezhiyan loosing against a person, who is novice in politics. This is an insult to politics and I am requesting you (South Madras constituency) people to vote for him to win the election”. I don’t remember now whether Era. Sezhiyan was in alliance and also Villivakkam comes under the same parliament constituency (I don’t thinks so, not sure), but shows how our elders had respect to others. Now we hear in politics the words like “Ondikku Ondikku varaiyaa!”, etc., against veteran politicians. Looking back after 25 years really feel political life has changed a lot. I remembered these lines of VPC while reading Mr.Tamilselvan’s book “Jindabad, Jindabad” where he mentioned about VPC in few lines.

  பதிலளிநீக்கு
 10. மாதவ்

  இந்த உங்களது பதிவை இப்போதுதான் பார்த்தேன்..மிகவும் தாமதமாக. உங்களது பதிலில் நீங்கள் சொன்ன கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.

  ஒரு குழந்தை புதிதாக தான் கற்றுக் கொண்டிருக்கும் ஓர் ஆங்கில எழுத்தின் வடிவில் அத்தனை அதிசயித்து லயித்து அதே போன்ற ஒன்றைத் தனது "வெளிப்பாட்டிலிருந்தே" காண முடியும் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்பட்ட குதூகலத்தைக் கொஞ்சமும் ஒளிவு மறைவு இன்றித் தனது சொந்தத்திடம் முக்கியமாகத் தாயிடம் 'தனக்கு இது தெரிந்திருக்கிறது' என்று சத்தமாகப் பகிர்ந்து கொள்வதை ஒரு சின்னஞ் சிறு கதையாக நடந்ததை நடந்தது மாதிரியாகவே ஓர் எழுத்து கூடுதலாக அல்லாமல் பதிவு செய்திருக்கிறீர்கள்...இதில் அருவருக்க என்ன இருக்கிறது...

  இதில் அந்த "ஜே" எங்கிருந்து வந்தார்....கூட்டணி பற்றிய விசாரம் இங்கு எதற்கு...

  குழந்தைக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கழிப்பறையினுள் பிரவேசிக்கும் நேரங்கள் வெவ்வேறு அனுபவங்களை அவரவர் சூழல், மனநிலை, அப்போதைய நிகழ்வு பொறுத்து ஏற்படுத்தும்....

  வங்கி ஊழியர் இயக்கத்தின் உன்னதத் தலைவர்களில் ஒருவரான அசிஸ் சென் ஒருமுறை "தியான மண்டபத்திற்குச் " சென்று வருகிறேன், காத்திருங்கள் என்றார். அதன் தியானம் என்றேன்...வேறெங்கே டாய்லெட்டைதான் அப்படி சொல்கிறேன். கோயில் என்றோ, மசூதி என்றோ, சர்ச் என்றோ சொன்னால் பிரச்சனையாகும். தியானம் என்றால் யாரும் சண்டைக்கு வரமுடியாது. மேலும், உள்ளே போய் சிந்திக்காதவர் உண்டா..தியான மண்டபம் என்றால் என்ன தப்பு... என்றா என்னிடம்.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 11. சேது தோழர்!
  புரிதலுக்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்ல வருவதும் புரிகிறது. அதற்கும் ஒரு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. எஸ்.வி.வி!

  நான் சொல்ல நினைத்து, தவறவிட்டதையெல்லாம், அழுத்தமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லி விட்டீர்கள்.

  தோழர் அசிஸை நினைவு கூர்ந்தது சிறப்பு. குறும்பு, கோபம், தெளிவு.... உறுதி.... எப்பேர்ப்பாட்ட மனிதர்!

  இந்தப் பதிவு உங்களால் சிறப்புற்றது அருமைத் தோழா! நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அன்பு மாதவராஜ்,

  எப்படி இருக்கீங்க!

  ரொம்ப அழகான பதிவு... எவ்வளவு இயல்பாய் எழுத வருகிறது... எத்தனை இருக்கிறது இந்த பதிவில் என்று சொன்னால், சிலர் கேலி செய்யக்கூடும்... ஆனால் திரும்பவும் சொல்வது என்னன்னா... அருமையா இருக்கு!

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 14. நாளை முதல் சற்று கூர்ந்து கவனித்து பாருங்கள், வேறு சில எழுத்துகளும் தெரியும்!!!

  என்ன ஒரு பதிவு!!!!!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!