ராச லீலா!

torment-72dpi

நேற்றிரவு கனவில் விறைத்துப்போய் நீ வந்தாய். நாக்கினை நீட்டியபடி கண்கள் செருக, உடல் வெட்டி நின்ற உன்னைப் பார்க்க ஒரு காக்கா வலிப்புக்காரனைப் போலவே  முதலில் இருந்தது.  உடல் மட்டுமே கொண்டவர்களாய் பெண்களை நிறுவிய உனது வெளியில், நீ நடத்திய ராசலீலாக்களின் கதைகளைச் சொல்லி, ‘மானே, தேனே’ என என்னையும் அழைத்தாய். நான் விலகினேன். மக்கிப்போன பழங்குப்பைகளை முடைநாற்றமெடுக்க கிளறி,  அதிலிருந்து நுலை எடுத்து நீ வைத்துக்கொண்டு, ஊசியை என்னிடம் கொடுத்து அர்த்தத்தோடு சிரித்தாய். நான் ஊசியைத் திருப்பி உன்னைக் குத்தினேன். “ச்சீ... நீ பெண்ணேயல்ல..” என்று கத்தி ஒரு காசநோய்க்காரனைப்போல இருமினாய். தெறித்த உனது  சளியில் நீயே வழுக்கி விழுந்தாய். அறை முழுக்க எனது சிரிப்பு எதிரொலிக்க, நான் எழுந்துகொண்டேன்.

(pic:Woman Tormented by Demons)

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!