இந்திய முதலாளிகளின் தூதர் அன்னா ஹசாரே!

sharmila anna

 

சமூகத்தின் நாடித்துடிப்புகளை  கச்சிதமாக அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தும் முதலாளித்துவத்தின்  இப்போதைய அழுகுணி ஆட்டத்தில் அவர்தான் மதிப்பிற்குரிய ராஜா.  ஊழலில் ஊறித் திளைத்த அதிகார வர்க்கத்தின் மீது சாதாரண மனிதனுக்கு கோபமும், வெறுப்பும் மண்டிக்கிடந்த வேளையில் அவரது வருகையை முதலாளித்துவ ஊடகங்கள் அறிவித்தன. தங்களது ஆக்டோபஸ் சக்தியால் ஒரே நாளில் அவர்தான் தேசத்தின் தலைவர் என்று அடையாளம் காட்டின. விடாமல் எந்நேரமும் அவரது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டாம் சுதந்திரப் போரை அவர் துவக்கி விட்டதாக கணிக்கின்றன.

 

இந்த நாடகத்தின் ஆரம்பத்திலேயே ஒரு ஊழல் இருந்தது. சட்டங்களை வரையறை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றம் இருக்கும்போது அதன் எல்லையை மீறினார் அன்னா ஹசாரே. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது லோக்பால் மசோதாவை வரைவு செய்கிற குழுவில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தார். அப்படியொரு அதிகாரபூர்வமற்ற அதிகாரத்தை அவரே எடுத்துக்கொண்டார்.  உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று நேரான வழிகளில் போராடுவதாய் சொல்லிக்கொண்ட அன்னா ஹசாரேவின்  குரல் புறவாசல் வழியாக தான் இப்படி நுழையக் கதவை  திறக்கும்படி அரசிடம் அடாவடியாக எழுப்பியது. பாராளுமன்றம், அதன் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது அவருக்கு நம்பிக்கையில்லையென்றால் முதலில் அவரது போராட்டம் அரசியல் கட்சிகளுக்கு எதிராக இருந்து தேர்தலை சந்தித்து, வென்று, பாராளுமன்றம் சென்று, சட்டத்தை தாங்கள் நினத்தது போல இறுதி செய்து, அமல் படுத்த முனைந்திருக்க வேண்டும். அப்படியெல்லையென்றால், இந்தப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானதாக இருந்திருக்க வேண்டும். அதைச் செய்ய மாட்டார். இந்த முதலாளித்துவ ஊடகங்கள் அவரை ஒரே நாளில் குப்பையில் தூக்கி எறிந்துவிடும்.  அரசோ ‘தேசத் துரோகி’ என குற்றஞ்சாட்டி  சிறையில்  அடைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.

 

அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல்  குறுக்கு வழியில், முதலாளித்துவத்தின் தேரோட்டவே அன்னா ஹசாரே விரும்புகிறார். லோக்பால் மசோதாவை இவரெல்லாம் சேர்ந்து வரைவு செய்வார்களாம். அதை பாராளுமன்றம் இறுதிப்படுத்துமாம். விளக்கெண்ணய்த்தனமாக இல்லை இது?  இதற்குத்தான் இத்தனை செய்திகளும், ஆரவாரங்களும் பேரிரைச்சலாய் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

 

எல்லாம் இந்திய முதலாளிகளின் திட்டப்படியே வெற்றிகரமாக அரங்கேற்றப்படுகிறது. இந்த சிவில் சமூகத்தின் மத்திய தர வர்க்கத்தில் ஒரு பகுதி எப்போதும் போல், எதையும் யோசிக்காமல்,  ‘தங்கள் தேவ தூதன் வந்துவிட்டார்’ என சட்டென தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொள்கின்றனர். இருண்ட இந்தியாவின் ஓளிவிளக்கு அவர்தான் என வாய் கிழிய பேசுகின்றனர். அவர் குறித்து கேள்விகள் எழுப்பினால் ‘யாருமே பூனைக்கு மணி கட்டவில்லை, இவராவது முன் வந்திருக்கிறாரே” என வியாக்கியானம் வேறு. ஐயா, இந்த லோக்பால் மசோதா என்றால் என்ன, யார் யாரெல்லாம் இதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் என்று இருபது வருட வரலாற்றை கொஞ்சமேனும் அறிந்துகொண்டு பேசுங்கள் என்றுதான் அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. அவை எல்லாவற்றையும் நேற்று வரை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் இன்று இவர் ஒருத்தர் முகத்தின் மீது மட்டும் வெளிச்சம் காட்டியதும் ஏன் இப்படி ‘கண்டுகொண்டேன்’ என துள்ளிக் குதிக்கிறார்கள்.

 

முதலாளித்துவ ஊடகங்கள் இவ்வளவு மெனக்கெட்டு இவர்தான்  இந்தியாவில் ஊழல் எதிர்ப்புக்கென்றே பிறந்தவராக  ஏன்  இப்படி ஜோடனை செய்கின்றன என்று யோசிக்க வேண்டாமா? இதோ, மணிப்பூரில் ஷர்மிளா என்னும் பெண் ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, பத்து வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார் என்னும் செய்தி எத்தனை பேருக்குத் தெரியும். அவரை சிறையிலடைத்தும், வலுக்கட்டாயமாக குழல் மூலமாக உணவை அவருக்குள் திணித்தும், ஏற்றுக்கொள்ளாத  அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அலைக்கழித்தாலும், விடாமல் இராணுவத்திற்கும், இந்திய அரசுக்கும் எதிராக தன் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார் அவர். இந்த ஊடகங்கள் அவரை ஏன்  நமக்குத் தொடர்ந்து காட்டுவதில்லை. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு  தெரிவிக்கும் ஆதரவை ஷர்மிளாவுக்கு ஏன் நாம் தெரிவிக்க முடியவில்லை?

 

இதே ஊழல் எதிர்ப்புக்காக, நாளை பெரும் மக்கள் போராட்டம் வெடித்தால் இதே முதலாளித்துவ ஊடகங்கள்  தங்கள் முகங்களை வேறு திசையில் திருப்பிக் கொள்ளும். அப்படி எதுவும் விபரீதமாக நடந்துவிடக் கூடாது என்று அனுப்பப்பட்ட தூதரே அன்னா ஹசாரே. தெளிவான பார்வை, தீர்க்கமான செயல்திட்டம் இல்லாமல் விளக்கெண்ணய்த்தனமான குழப்பங்களுக்குள் மக்களின் கோபத்தையும், வேகத்தையும் நீர்த்துப் போகவைக்கவே இந்த ஏற்பாடுகள். பெரும் ஆதரவைத்  திரட்டி, மிகப் பிரம்மாண்டமானதாய் அவர்களே காட்டி, கடைசியில் அன்னா ஹசாரேவால் கூட முடியவில்லை என அவநம்பிக்கையையும்  விதைத்து,  ஒரு தலைமுறையை காயடைக்கும் வேலையே இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

 

ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே, ஊழலை ஒழிக்க வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்கிறார். அவர்  சமீபத்தில் சொன்னதைக் கேளுங்கள்  “மன்மோகன் சிங் நல்ல மனிதர். நம்பிக்கையானவர். சோனியா காந்திதான் அவரை கட்டுப்படுத்துகிறார்”. அதாவது இந்திய முதலாளிகளுக்கு சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட மன்மோகன்சிங் மீது எந்தத் தவறும் இல்லையாம். மொத்தப் பழியையும்  சோனியா காந்தி மீது சுமத்தி, மன்மோகன்சிங்கை பாதுகாப்பதில் இந்திய முதலாளிகளுக்கு இருக்கும் அக்கறையே அன்னா ஹசாரேவிடமிருந்து இப்படி வெளிப்படுகிறது.

 

இவரை காந்தியென சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. ஒத்துழையாமை இயக்கமும், வெள்ளையனே வெளியேறு இயக்கமும், மக்களின் போராட்டமாக பரிணாமம் கொண்டபோது காந்தி  தனது அஹிம்சைக்கு எதிரான போராட்டங்களென அவற்றை நிறுத்திக்கொண்டார். அப்போது ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா தங்கள் வசம் வரவேண்டும் எனும் அபிலாஷை கொண்ட இந்திய முதலாளிகளின் ஆதரவு காந்திக்கு இருந்தது. அதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவே இப்போது அதே முதலாளிகள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

 

ஆனால், காந்தியின் கை மீறி போராட்டங்கள் மக்களின் கைகளுக்கு வந்த பிறகே, வெள்ளையன் இந்தியாவை விட்டு புறப்படும் காலம் தனக்கு நெருங்கியதை உணர்ந்தான். அதுதான்  வரலாறு இந்தியாவுக்கு. ஊழலுக்கும்தான்.

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. துனிஷியா, எகிப்து போன்ற நாடுகளில் மன்னராட்சியை எதிர்த்து மாபெரும் மக்கள் விடுதலை சக்திகள் அவர்கள் சொல்லும்படியான ஜன நாயகத்திற்கு திரும்பி இருக்கிறார்கள். ஓரடி முன்னால்.லிபியா,ஏமன், ஜோர்டான் போன்ற நாடுகளில் நிலைமை மாற்றத்திற்காக மக்கள் நிர்பந்திக்கிறார்கள் ஆட்சியாளர்களை. அது போன்ற ஒரு நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு விடாமல் இருக்க முதலாளித்துவ சக்திகளும் அதனுடைய ஊடகங்களும் செய்து வரும் மிகப்பெரிய சதி தான் இது (ஜன நாயகத்தின் பேரால்)

    பதிலளிநீக்கு
  2. ஹசாரே மன்மோகனை வருடிவிட்டது ஒருபுறம் இருக்கட்டும்.

    அவருக்கு மிகவும் பிடித்த தலைவர் நரேந்திர மோடியாம்.

    அது போல ராஜ்தாக்கரேவைக்கூட ரெம்ப பிடிக்குமாம்.அவரின் வழிமுறைகள் தான் தவறு என செல்லம் வேறு.என்னத்த சொல்ல..!

    பதிலளிநீக்கு
  3. சரிங்கண்ணா //காந்தியின் கை மீறி போராட்டங்கள் மக்களின் கைகளுக்கு வந்த பிறகே, வெள்ளையன் இந்தியாவை விட்டு புறப்படும் காலம் தனக்கு நெருங்கியதை உணர்ந்தான்// இப்போ கூட அன்னா ஹசாரே கையை மீறி மக்களின் கைகளுக்கு போராட்டத்தை எடுத்துச் செல்ல நீங்கள் உதவலாமே. சுதந்திர போராட்டத்துக்கு காந்தி ஒரு பெரிய கருவி என்றால் ஊழல் ஒழிப்புக்கு அன்னா ஹசாரே ஒரு கருவியாக இருக்கட்டுமே. அவர் இல்லேன்னா ஒரு மாதவராஜ் கூட இதை செய்யலாமே.

    பதிலளிநீக்கு
  4. //விளக்கெண்ணய்த்தனமாக இல்லை இது? //

    இல்லை.

    பதிலளிநீக்கு
  5. //அதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவே இப்போது அதே முதலாளிகள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.// பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்கிறார்களே. இதே பொதுமக்கள் மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டுகள் ஆட்சி நடத்திய லட்சணத்தை பார்த்து தோற்கடித்துவிட்டார்கள்.

    //ஆனால், காந்தியின் கை மீறி போராட்டங்கள் மக்களின் கைகளுக்கு வந்த பிறகே, வெள்ளையன் இந்தியாவை விட்டு புறப்படும் காலம் தனக்கு நெருங்கியதை உணர்ந்தான். அதுதான் வரலாறு // இது கம்யுனிஸ்டுகள் எழுதும் பொய் வரலாறு!

    பதிலளிநீக்கு
  6. // சட்டங்களை வரையறை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றம் இருக்கும்போது அதன் எல்லையை மீறினார் அன்னா ஹசாரே//
    நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்த பிரதிநிதிகள் இறுக்கும்போது, அவர்களுக்கு பணம் கொடுத்து லோக் பால் கொண்டு வந்திருக்கவேண்டும்.
    //விளக்கெண்ணய்த்தனமாக இல்லை இது? // அதெல்லாம் விளக்கெண்ணய்த்தனமாக இல்லை. நீங்கள் எழுதிருப்பதுதான் அக்மார்க் விளக்கண்ணைதனம்.

    பதிலளிநீக்கு
  7. @திலிப் நாராயணன்,
    சரியாகச் சொன்னீர்கள்.

    அ.மு.செய்யது!
    எப்படியிருக்கீங்க நண்பரே.
    இப்படிப்பட்டவரைத்தான் இந்திய முதலாளித்துவம் தூக்கிப் பிடிக்கிறது.

    @அமரபாரதி!
    இது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுக்கும். அதில் நானும் ஒரு துளியாக நிச்சயம் இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  8. @தருமி!
    இல்லையென்றால் விடுங்கள் பிரச்சினையை.

    ராபின்!
    இந்திய வரலாற்றை தெளிவாகப் படித்துப் புரிந்துவிட்டு பேசுங்கள். கப்பற்படை புரட்சிக்குப் பிறகு மவுண்ட் பேட்டன் பிரபு பிரிட்டிஷ் அரசுக்கு தெரிவித்த தகவல்களை அறிந்து கொண்டு விவாதிக்கலாமே!

    தமிழா, தமிழா!
    எனக்கும் இந்த பாராளுமன்றத்தின் மீதெல்லாம் பெரிய நம்பிக்கையில்லை. பாராளுமன்றத்தை நம்பாமல் அதை வரைவு செய்யும் குழுவில் தான் இடம் பெற வலியுறுத்தும் அன்னா ஹசாரே, அப்படி இறுதி செய்யப்பட்ட அந்த வரைவை சட்டமாக்க, அவர் இல்லாத/அவர் நம்பாத பாராளுமன்றத்திடம்தான் ஒப்படைக்க வேண்டியிருக்கிறது. இதைத்தான் நான் விளக்கெண்ணெய்த்தனம் என்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ஊழல் நிறைந்த இந்திய அரசியல்வாதிளை எதிர்க்கும், அவர்களுக்கு தண்டனை சட்டத்தை நிறைவேற்ற கூறும் அண்ணன்
    ஹ்ஸாரே அவர்கள், இந்த ஊழல்வாதிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வளர விடும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தலைவர்களை எதிர்த்து குரல் கொடுக்க மறுப்பது ஏன். இந்த so called corporate முதலாளிகளின் உதவியால் தான் இவர் ஒரே இரவில் மகாமகாத்மா (ஏன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இருக்கும் போது மகாமகா இருக்கக்கூடாதா?) ஆக்கப்படார்.
    அம்பையும் நொந்து எதை எய்தவனையும் நொந்து உண்ணாவிரதம் இருந்தால் நாங்களும் உங்கள் பக்கமே. அப்படி இருந்தால், 50 லட்சத்தில் உண்ணாவிரத project நடந்தேறி இருக்குமா. இவரின் புகை படத்தைக்கூட மெகா மீடியாக்கள் இந்த நவீன e-தேசபக்தர்களுக்கு காட்டி இருக்காது. மாறாக இவரை கொச்சைப்படுத்தி இருப்பார்கள்.
    என்ன சொல்றது சரிதானே மாதவராஜ்.

    பதிலளிநீக்கு
  10. இந்த சிவில் சமூகத்திற்கு ஊழலின் ஊற்றுக் கண்ணை அடைப்பதில் உண்மையில் அக்கறையில்லை;இதன் ஆரவாரமான பிரதிநிதிகள் பெரு முதலாளிகள், பெரு வணிகர்களில் தமக்கு 'உதவக் கூடிய'வர்க்கு ஆட்சியாளர்கள் உரிமம் வழங்கிட ஏதுவாகக் கொள்கைகளை வகுத்திடக் கையூட்டு தருகிற பண முதலைகளைப் பற்றி வாயே திறக்காமல் அவர்களுக்கு உதவியாக இருக்கிற முதளாளித்துவ அரசியல்வாதிகளிலும் கூடத் தமக்குப் பிடிக்காதவர்களை மட்டும் தனிமைப் படுத்தித் தாக்குவது என்பது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே; அன்று ஜெ.பி.யைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த வகுப்புவாதிகளுக்கு இன்று ஹசாரே கிடைத்துள்ளார்; அவ்வளவுதான்! இங்கே ஊழல் ஒழியப் போவதுமில்லை; இவர்களின் வெற்று ஓலம் ஓயப்போவதுமில்லை; இந்த கூச்சலுக்கிடையே சத்தமின்றி ஓய்வூதிய ஒழிப்பு,தொழிலாளர் நலச் சட்டங்கள் அழிப்பு ஆகிய வெகு மக்களைப் பாதிக்கக் கூடிய ஏற்பாடுகளை ஹசாரேவுக்குப் பிடித்தமான மோடிகள், தாக்கரேக்கள் ஆகியோரின் ஆதரவுடன் மன்மோகன்கள் பாராளுமன்றத்தில் அரங்கேற்றிக் கொள்வார்கள்! இந்த மக்களும் அது குறித்து கவலைப் படாமல் தேர்தல்தோறும் தங்களை வஞ்சிப்பவர்களையே தோள்மாற்றிக் கொள்வார்கள்! இத்தகைய ஊழல் ஒன்றில் கூட ஈடுபடாது இவர்களின் நலனுக்காகத் தமது இன்னுயிரையும் ஈந்து போராடி வருகிற கம்யூனிஸ்டுகளின் இடையே நுழைந்துவிடுகிற சில புல்லுருவிகளை மட்டும் கருதி ஒட்டு மொத்தமாகக் கட்சியையே ஒதுக்கித் தள்ளுவார்கள்! இந்த விந்தையை எவ்வாறு புரிந்து கொள்வது?

    பதிலளிநீக்கு
  11. பொதுவுடமைத் தோழர்களுக்காக 'எதற்காக அவர்கள் செயா வீட்டுக் கதவைத் தட்டினார்கள்' என்று விளக்கம் கொடுத்த நீங்கள்
    (http://www.mathavaraj.com/2011/03/blog-post_10.html
    http://www.mathavaraj.com/2011/03/2.html) இன்று அன்னா அசாரேவுக்கு மட்டும் உள் அரசியல் கற்பிப்பது வேடிக்கையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. Madhavaraj !Now the left, particularly, the cpi-m has given a clarion call for ANNA arrest and against the acts of central government..Now it is better to write another article on ANNA HASARE agitation.

    பதிலளிநீக்கு
  13. hello sir... why you talk about british period & about communist.... there is no need to talk about that.... even no need to talk about Mr.Anna Hazare also.... if our unity will help to kill corruption means why we step back to support....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!