அந்தச் சிறுவனிடம் அவனது பாட்டி ஒரு வெங்காயத்தைக் கொடுத்து, “புதைத்து வைத்து, தினமும் தண்ணீர் ஊற்று. செடியாகும். வேரிலெல்லாம் வெங்காயம் முளைக்கும்” என்றார்கள். அப்படியே செய்தான். ஒவ்வொரு நாள் காலையிலும், மண்ணைத் தோண்டி வெங்காயம் முளைத்திருக்கிறதா என பார்த்து, ஏமாந்து போனான். திரும்பவும் மண்ணில் புதைத்து, தண்ணீர் ஊற்றினான். அடுத்தநாள் திரும்பவும் தோண்டி பார்த்தான். வெங்காயம் முளைக்காமலேயே போனது. “பொறுமையற்றவன்” என்றாள் பாட்டி.
அதே அவனிடம் பக்கத்து வீட்டுச் சிறுமி ஒரு ரோஜாக் கன்றைக் கொடுத்தாள். பத்திரமாக மண்ணில் பதித்து தினமும் தண்ணீர் ஊற்றி வந்தான். ஒருநாள் அது முதல் பூ பூத்திருந்தது. அவனது முகமும் சேர்ந்து பூக்க அன்று முழுவதும் வீட்டுக்குள் வருவதும், வெளியே சென்று ரோஜாவைப் பார்ப்பதுமாயிருந்தான் அந்தப் பொறுமையற்றவன்.
அழகு. பல சமயங்களில் நாமும் அப்பிடித் தான்.
ReplyDeleteகண்ணுக்குப் புலப்படாதவற்றைக் காணக் காத்திருக்கும் பொறுமையும் தத்துவப் பார்வையும் பலருக்கும் இருப்பதில்லை.
ReplyDeleteகண்ணால் காணும் காட்சிகளை மட்டுமே நம்பி வாழும் அனுபவம் பலருக்கும்.
இரண்டுக்கும் இடையில் மலர்கிறது வாழ்க்கை என்றென்றும்.