வம்பரங்கம் -7

obama manmohan singh பெரும் உயிர்ப்பலிகளோடு காஷ்மீர் மக்களின் போராட்டம் உக்கிரமாகிக்கொண்டு இருக்கிறது.  அயோத்தி தீர்ப்பு குறித்த அறிவிப்பிலும், அரசு எடுத்த நடவடிக்கையிலும் லட்சணங்கள் தெரிகின்றன. காமன்வெல்த் போட்டியில் உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு ஊழல்களும், வீரர்களுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமபலமாகின்றன. உணவு தானியங்கள் அரசின் கிடங்குகளில் அழுகிப்போனாலும், ஏழை மக்களுக்குக் கொடுக்க முடியாது என உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் பின்னாலும் பிரதமர் அடம்பிடிக்கிறார். சொல்லிக்கொண்டே போகலாம்.....

ஆனாலும் மன்மோகன்சிங்தான் உலகின் சிறந்த நிர்வாகியாம். அமெரிக்க அமைப்பு சர்டிபிகேட்டும், விருதும் கொடுத்து விட்டது!  எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க...!

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. மன் மோகன் சிங் சிறந்த பிரதமர் என்று அமெரிக்காதான் சான்று தரும்.பின் இந்திய மக்களா கூறி கொள்ள முடியும்.அவர் எந்த நாட்டுக்கு நல்லது செய்கிறாரோ அவர்கள்தானே அவரைப் பாராட்டுவார்கள்!

  பதிலளிநீக்கு
 2. ஆசிரியருக்கு எடுபுடி வேலை செய்யும் மாணவன் படிக்காவிட்டாலும் ஆசிரியரிடம் நல்லபெயர் வாங்குவது ஆச்சரியமல்ல.

  பதிலளிநீக்கு
 3. மாது!
  எல்லாமே தலைகீழ் என்றானாம் ஒருவன்; இல்லை இல்லை இங்கே நிஜம் மட்டுமே தலைகீழ் என்றானாம் மற்றவன்.அந்தக்கதை இந்தியாவில் பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தைக்கட்டுப்படுத்தமாட்டோம் அதே நேரத்தில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைகளுக்கு அழுகிக்கொண்டிருக்கும் தானியத்தை இலவசமாகத்தரமாட்டோம்
  36000 கோடி ரூபாய் ஊழல் ஒருலட்சம் கோடி ரூபாய் ஊழலை மிஞ்சினாலும் என்ன நல்ல "ஸ்டேட்ஸ்மேன்" அமெரிக்காவின் கைகளால் வாங்குவதே கொள்கை
  என்று நிஜம் தலைகீழ் ஆகிப்போனதைப்போல் ஆகிப்போனது.

  பதிலளிநீக்கு
 4. சோனியா கம்பெனிக்கும், அமெரிக்கக் கம்பெனிகளுக்கும் சிறந்த நிர்வாகி தான். மக்களிடம் மக்கு மன்னார் சாமி விருதோ, எக்ஸலண்ட் எடுபிடி விருதோ தான் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 5. தமிழகத்தைப் பொருத்த வரை கலைஞர்தான்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!