யாருங்க அந்த பிளாக்கர்?

எனக்கு மிக நெருக்கமான நண்பர் போல இருந்த ஒருவருடன் சிரித்தபடியே வந்தார் அவர். “என்ன எப்படியிருக்கீங்க...” என்று மிக சரளமாக பேசவும் ஆரம்பித்துவிட்டார். எனக்கு அவரை சுத்தமாகத் தெரியவில்லை. என் குழந்தைகள், அவர்களின் படிப்பு... என வரிசையாகக் கேட்டுக்கொண்டே இருந்தார். தயங்கித் தயங்கி சொல்லிக்கொண்டே வந்தேன்.

கறுப்பாய், சுமாரான உயரத்தில் இருந்தார். கிருதாக்கள் நீண்டு அடர்த்தியாக இருந்தன. அந்த அளவுக்கு மீசை சிறப்பாக இல்லை. வழுக்கைத் தலையில் முன்னால் கொத்தாய் முடியிருந்தது. குரல் மட்டும் பழக்கமானதாய் இருந்தது.

ஒருக் கட்டத்தில் மெல்ல, “நீங்க... யாரு....” என கேட்டும் விட்டேன். “என்னைத் தெரியலையா” என்று ஹோவென்று சிரித்தார். அவரருகில் இருந்த என் நண்பர் (?) அவரும் சிரித்தார். எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. இதுபோல அடிக்கடி நிகழ்ந்தும் விடுகிறது. “தெரிந்த மாதிரியும் இருக்கிறது.... தெரியாத மாதிரியும் இருக்கிறது....” என எதோ உளற ஆரம்பித்தேன். திரும்பவும் அவர்கள் சிரித்தார்கள்.

போனில் பேசிய பிளாக்கர் யாரோவாக இருக்க வேண்டும் என புரிதல் வந்தது. ‘யாராக இருக்கும்.... ராகவனா.... கும்க்கியா.... இல்லை. கும்க்கியைப் பார்த்திருக்கிறேன்.... ஜம்மென்று இருப்பார். ராகவனையும் போட்டோவில் பார்த்திருக்கிறேன். சிரித்தமுகமாய் இருப்பார். வேறு யார்.....? ஆனால் இந்தக் குரல் கேட்டு இருக்கிறேனே...’ என் தவிப்பை உணர்ந்த மாதிரி இருந்தது. அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

“சமீபத்தில் நீங்கள் கடல் பற்றி எழுதியிருந்தீர்களே.... அதுபற்றி நாம் பேசினோமே.... இப்போது ஞாபகம் வருகிறதா..?” என்றார். நானும் “ஆமாம், ஆமாம்...” என்று சொல்லிக்கொண்டே யோசித்துப் பார்த்தேன். யாரென்று மட்டும் தெரியவில்லை. சங்கடமாயிருந்தது. அவர்கள் சத்தம் போட்டு சிரித்தார்கள்.

கண்களைத் திறந்து பார்த்த போது காணாமல் போய்விட்டார்கள்.

தயவுசெய்து, வந்த பிளாக்கர் யாரென்று அவரேச் சொல்லி விட்டால் புண்ணியமாய் போகும்.

கருத்துகள்

19 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒருவேளை உங்க மனசாட்சியா இருக்குமோ.....

    இஃகிஃகி

    பதிலளிநீக்கு
  2. அன்பு மாதவராஜ்,



    வந்தது நானாகவும் இருக்கலாம் ஏனைய பிறராகவும் இருக்கலாம். அவர் ஒரு பிரதிநிதி இது போன்ற வலையில் அன்பு செலுத்தும், நேரில் பார்க்காத பிசிராந்தையார்கள், கோப்பெருன்சோழர்கள் போன்றவர்களுக்கு. உங்களை குழப்ப யாரோ செய்த விளையாட்டு என்று நினைக்கிறேன்.



    நான் பார்க்கவில்லை உங்களை, என் குரலில், அழைக்கும் விதத்தில் நீங்கள் என்னை பற்றி சொல்வீர்கள், அறிமுகப்படுத்திக்கொள்ள தேவை இருக்காது. ஆனாலும் அது நானாய் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அடையாளம் ஆளுக்காள்

    வேறுபடுகிறது, சிலருக்கு குரலில், வாசனையில், நடையில், சிரிப்பில் என்று எங்காவது இந்த அடையாளங்கள் தங்கி விடுகிறது மாதவராஜ். தோள் கண்டார் தோளே கண்டார் என்பது மாதிரி. பொங்கல் (புகைப்)படங்கள் நன்றாக இருந்தது... நாங்கள் இழந்ததை மீண்டும் பெற்றது போல இருந்தது...



    காமராஜ் சொன்னது போல கான்க்ரீட் பொங்கல் ஆகி விட்டது எங்கள் பொங்கல்... குக்கர் குலவை இடுகிறது உள்ளே பொங்கும் பொங்கலின் உற்சாகத்தில்...



    அன்புடன்

    ராகவன்

    பதிலளிநீக்கு
  3. நிச்சயமாக நான் இல்லை என்பதை உறுதி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கடைசி வரைக்கும் சொல்லாமலேயே போயிட்டாரா!

    பதிலளிநீக்கு
  5. இதில் நேரடியான அர்த்தங்களுக்கு பொருந்திப்போவது ஆபத்தாக தெரிகின்றது....
    உங்களின் நண்பருக்கு தெரிந்தவரெனில் உங்களுக்கும்..........

    உள்குத்து ஏதேனும் இருக்கிறதா...அல்லது அந்த வார்த்தைகளுக்கே எங்களிடம் அர்த்தம் கேட்பீர்களா...?

    பதிலளிநீக்கு
  6. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
    இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.

    பதிலளிநீக்கு
  7. surveysan!
    சிரித்ததற்கு நன்றி.

    ஈரோடு கதிர்!
    நான் அவர் இல்லை.

    பதிலளிநீக்கு
  8. ராகவன்!
    பேசி பேசி, குரல்களும் கனவில் வர ஆரம்பித்துவிட்டன!

    பதிலளிநீக்கு
  9. வெ.ராதாகிருஷ்ணன்!
    நன்றிங்க.

    வால்பையன்!
    ஆமாங்க.

    பதிலளிநீக்கு
  10. கும்க்கி!
    இதில் உள்குத்தெல்லாம் ஒன்றுமில்லை.

    அவர் நன்கு தெரிந்த நண்பராகவேத் தெரிந்தார். ஆனால் அவரையும் அடையாளம் காணமுடியவில்லையே!

    பதிலளிநீக்கு
  11. இது போல எங்களுக்கும் நேர்கிறது.
    யாரைப் பார்த்தாலும் இவர் ப்ளாக்கர் ஆக இருக்குமோ என்றும் தோன்றுகிறது:)
    ''சார் யார் தெரியலையே'' அப்படீன்னு கேட்டுடலாம்!

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா. வித்தியாசமான அனுபவம்தான். கடைசிவரை சொல்லாமலே போய்விட்டாரா அவரும்?

    பதிலளிநீக்கு
  13. அடடே! உளவியல் டாக்டர் யாரையும் கலந்தாலோசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. பிரவின் குமார்!
    மிக்க நன்றி.

    வல்லிசிம்ஹன்!
    ஆமாம்.நீங்கள் சொல்வதும் நடப்பதுண்டு.


    சி.கருணாகரசு!
    ரசித்ததற்கு நன்றி.


    நவாஸூதீன்!
    அதாங்க பிரச்சினையே..!

    பதிலளிநீக்கு
  15. ஜெஸ்வந்தி!
    நான் தெளிவாக இருப்பதால்தான் இதனை எழுதியிருக்கிறேன். உங்களுக்கு இன்னும் புரியவில்லையா :))))

    பதிலளிநீக்கு
  16. //ஜெஸ்வந்தி!
    நான் தெளிவாக இருப்பதால்தான் இதனை எழுதியிருக்கிறேன். உங்களுக்கு இன்னும் புரியவில்லையா :)))) //

    அடடே! நான் நகைச் சுவையாக போட்ட கருத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களா நண்பரே! மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  17. ஜெஸ்வந்தி!
    நானும் நகைச்சுவையாகத்தான் குறிப்பிட்டு இருந்தேன். ஸ்மைலி பார்க்கவில்லையா....!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!