இந்தியா மட்டுமல்ல, உலகமே விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. ”வெளிநாட்டு முதலீடு உள்ளே வருகிறது, உள்ளே வருகிறது” என்று வாயைப் பிளந்துகொண்டே நமது ஆட்சியாளர்கள் இரு கை விரித்து காத்திருக்கிறார்கள். இந்த தேசத்தின் உடல், பொருள், ஆவி அனைத்தும் இந்த வெளிநாட்டு முதலீடுகளில்தான் இருப்பது போல ஒரு பெரும் பிரச்சாரத்தை நாள் தவறாமல் செய்துகொண்டு இருக்கிறார்கள். ”நல்ல காலம் பிறக்குது.... நல்ல காலம் பிறக்குது.... தொழில் வளருது, உற்பத்தி பெருகுது” என்று குடுகுடுப்பைக்காரன் போல மன்மோகன்சிங் பாடிக்கொண்டு இருக்கிறார். ஒருநாட்டின் பொருளாதாரம், வளம் எல்லாவற்றையும் ஒட்ட உறிஞ்சுவது தவிர இந்த சர்வதேச நிதி மூலதனத்திற்கு வேறு நோக்கங்கள் எதுவும் கிடையாது என்பதுதான் அப்பட்டமான பொருளாதார விதி. போனால் போகிறது என மூன்றாம் உலக நாடுகளின் மீது கரிசனம் கொண்டு முதலீடு செய்வது போல ஒரு படத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பூனைக்கு தென் அமெரிக்காவின் பிரேசில் என்னும் தேசம் மிக தைரியமாக இப்போது மணி கட்டி இருக்கிறது!
தனது நாடுகளில் முதலீடாக வரும் பணத்தின் மீது இரண்டு சதவீத வரியை விதிப்பது என பிரேசில் முடிவு செய்துள்ளது. இடதுசாரி சார்புள்ள லூலூ தலைமையிலான அரசின் இந்த துணிச்சலான முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே அதன் நோக்கமாகும். 1988ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியப்புலிகளுக்கு நுரை தள்ளியபோது இத்தகைய வரியை மலேசிய அரசு விதித்தது. அந்நிய முதலீடு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரசின் கஜானாவில் இருக்க வேண்டும் என்று சிலி நாடு கட்டுப்பாடு வைத்திருந்தது.
இருக்கும் வரை சுரண்டிவிட்டு அடுத்த நாட்டை நோக்கி ஓடும் முதலீட்டாளர்களுக்கு கடிவாளம் போடவே இத்தகைய நடவடிக்கைகள். அந்நிய முதலீடுகள் மீது போடப்படும் வரியை ஜேம்ஸ் டாபின் என்ற பிரபல பொருளாதார ஆய்வாளர் 1970களில் பரிந்துரைத்தார். இந்த வரிக்கு அவரது பெயரையே வைத்துவிட்டு கிடப்பில் போட்டார்கள். 40 ஆண்டுகள் கழித்து பிரேசில் இத்தகைய பொருளாதார நடவடிக்கைக்கு உயிர் கொடுத்துள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம், உற்பத்தி பாதிப்பு என பெரும் பொருளாதாரச் சிக்கல்களும், நெருக்கடியும் மிகுந்த இந்தக் காலக் கட்டத்திலும் இந்தியா இதுபோன்ற துணிச்சலான முயற்சிகளில் இறங்கப் போவதில்லை என்பது தெரிகிறது. மாறாக, பொதுத்துறை நிறுவனங்களின் பத்து சதவீத பங்குகளை விற்பது என்னும் முடிவுக்கு வந்திருக்கிறது. தான் பசியால் வாடினாலும் பரவாயில்லை, வீட்டிற்கு வந்திருக்கும் கொலைகாரர்கள் மனம் கோணாமல் உபசரிப்பது என்னும் தாராள மயம்தான் காரணம். ”பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் ஆலயங்கள்” என்றார் முன்னாள் பிரதமர் நேரு. “இல்லை... அவை தேசத்தின் வளர்ச்சிக்கு நந்திகள்” என்கிறார் மன்மோகன்சிங். அவ்வளவுதான் இருவரின் பொருளாதார சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் புதிய பொருளாதாரச் சித்தாந்தத்தின் நுழைவுவாயில். “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும்” துரோகங்களை எதிர்த்து தேசம் விழித்துக் கொண்டாக வேண்டிய நேரம் இது. தேசம் என்றால் மன்மோகன் அரசு அல்ல. மக்கள்!
“உலகை பணம் ஆள்வதற்கு பதிலாக உழைப்பு ஆண்டால் எப்படி இருக்கும்!” என உலகிற்கே நம்பிக்கைகளையும், கனவுகளையும் அள்ளி அள்ளித் தந்த சோவியத் புரட்சியின் நாள் இது. என் போன்ற பலரின் இளமைக்காலங்களில் ஆக்கிரமித்த சோஷசிசச் சித்தாந்தத்தின் நாள் இது. எங்கேங்கோ, யார் யாருடனோ பேசிக்கிடந்த எத்தனையோ இரவுகளில் நிலாவைப் போல நின்றிருந்த சித்திரம் இது. அந்த உயிரோட்டமான இலக்கியங்களில், சோவியத் வீதிகளில் பொழிந்த பனியை எடுத்து மேலெல்லாம் பூசிக்கொண்டு சிலிர்த்துக் கிடந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. நாடி நரம்புகளெல்லாம் வெப்பம் பற்றிக் கிடந்த நாட்கள் கண்முன்னால் தெரிகின்றன. காலத்தை கணிக்காத, மக்களின் உணர்வுகளை புரியாத சோவியத் தலைமையினால் அந்தக் கனவுப் பிரதேசம் ஒருநாள் கிரேன்கள் தூக்கியெறிந்த சிலைகளாய் சிதைந்து போனது. தொண்டையும், நாவும் அடைத்துப் போக விக்கிப் போன நாட்கள் வந்தன. வெடித்துச் சிதறிக் காணாமல் கரைவதற்கு அவை என்ன வெறும் மத்தாப்புகளா? உயிர்த்துடிப்புள்ள நினைவுகள். ஆரோக்கியமான சிந்தனைகள். இதோ அந்தப் பொறிகள் பற்றியெறிந்து கொண்டு இருக்கும் லத்தீன் அமெரிக்கா நம் முன்னால் எழுந்துகொண்டு இருக்கிறது! காலம் காத்துக் கிடக்கிறது. வரலாற்றின் முக்கியமான இந்த நாளை போற்றுகிறேன்!
கம்யூனிச சித்தந்தங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு.
பதிலளிநீக்குஆனால் உள்ளூர் முதலாளிகள் தொழில் தொடங்கி வேலை அளிக்காத பொது, நாம் அந்நிய முட்லடீட்டையும், அந்நிய தேசத்து கம்பெனி வேலை வாய்ப்புக்களையும் நம்பித்தானே ஆக வேண்டி உள்ளது.
இந்திய முதலாளிகள் கூகிள், யாகூ, HP, போன்ற நிறுவனங்களை தொடங்கலாமே.
New information
பதிலளிநீக்குthx
here many people thinking and talking but no one is moved little bit today our policy makers are having nothing in long term also we are
பதிலளிநீக்குஅன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குநிறைய எழுதத் தூண்டிய பதிவுகளை நீங்கள் எழுதியிருந்தும் என்னால் எழுத முடியாமல் போனதற்கு, கொஞ்சம் சுய, அலுவலக சம்பந்தமான வேலைகள் மாத்திரமே காரணம். எனக்கு தெரிந்தவரை, பிரேசில் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது, நமது நாட்டில் இருப்பது போல அந்நிய முதலீடுகளுக்கான கடும் விதிமுறைகள் அங்கு இல்லை என்றே நினைவு. நமக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள், ஓரளவு அந்நிய முதலீட்டைப் பெற்றவர்கள் இது போன்ற குறைவான வரிவிதிப்பது முடியும் எந்தவித நிர்பந்தங்களும் இல்லாமல். இந்தியாவிலும் இது நடக்கும் இன்னும் 5 ஆண்டுகளில் என்பது என்னுடைய கனிப்பு. கம்யூனிச நாடான சீனாவும் இது போன்ற அந்நிய முதலீடுகளுக்கு திறந்து வைத்து காத்திருக்கிறது இன்னும். சில்லறை வனிகத்திலும் நாம் இன்னும் நமது கதவுகளை மூடி தான் வைத்திருக்கிறோம். டெலிகாம் செக்டரிலும் நிலைமை ஓரளவு பரவாயில்லை என்றாலும் பெரிதான லாபங்கள் இல்லை. வெளி நாட்டினரின் முதலீட்டால் நாம் நசிவடைவோம் என்பது எப்படி என்பது இன்னும் எனக்கு புரியவில்லை. பாரதி டெல் நிறுவனம், ஏனைய அன்னிய நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தான் இருக்கிறது. எத்தனை தொழில் நிறுவனங்கள் இப்போது இந்தியாவில், அன்னிய முதலீட்டுக் கிடையில், சிறு நிறுவனங்கள் நசிந்து போகும் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை மாதவராஜ்! சீனாவில் வால்மார்ட் நுழைந்து ஏறக்குறைய 18 வருடங்கள் ஆகிறது இதனால் அங்குள்ள unorganized retail industry பாதிக்கப்படவில்லை என்பது நிஜம். அதிகபட்சமாக ஒரு 3 சதவிகிதம் வர்த்தகத்தைக் கூட வால்மார்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களால் எடுக்க முடியவில்லை.
இது போன்ற organized business model,technology வரும்போது இங்கிருப்போரின் போட்டி மணப்பாண்மையும் அதிகரித்து, தர நிர்ணயங்களும் உயராதா? என்ற கேள்விக்கு உங்கள் நியாயங்களைக் கூறவும். சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட் தானே சாஸ்வதம் மாதவராஜ்! இது ஒன்றிரண்டு காரணிகளால் ஆவதில்லை, ஆனதில்லை என்பது எனக்குத் தெரிகிறது. நசிவடைவோரைப் பற்றிய கவலை எல்லோருக்கும் இருக்கிறது, ஆனால் பலவீனங்களை, சரிசெய்யவோ, உரமேற்றவோ நாம் ஏன் இதை ஒரு வாய்ப்பாய் பார்க்கக்கூடாது. இந்தியாவில் முதிலீடு செய்வது கொஞ்ச காலம் வரை தான் நீடிக்கும், இந்தியா, சீனாவின் மிகப்பெரிய பலமான மக்கள்தொகை தான் இதற்கான ஒரு பெரும் ஈர்ப்பாக இருக்கிறது. இந்த நிலை மாறும், நம் நாடு, நம் மக்கள் எல்லோரும் வாங்கக்கூடிய மக்களாய் மாறுவார்கள் அமெரிக்கர்களைப்போல அப்போது இங்கு முதலீடு செய்யும் நமது நாட்டினரே ஏனைய பிற மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு செய்வார்கள், தொழில் உற்பத்திச் செலவைக் குறைத்து இன்னபிற சலுகைகளுக்காகவும், இது ஒரு சுழற்சியாகத் தான் தெரிகிறது எனக்கு. தொழில் தொடங்குவதற்கு விவசாய நிலங்களை இழக்கிறோம், காடுகளை அழிக்கிறோம், காற்று, நீர், ஆகாயத்தில் மாசு கலக்கிறோம் என்பது கவலைக்குரிய விஷயங்களாய் இருந்தாலும், இது போன்ற அந்நிய முதலீடுகள், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதை அரசாங்கம் ஒரு சமச்சீராய் செய்ய வேண்டும். ஒரு சமபங்கீட்டு முறைப்படி அதன் கொள்கைகள், கோட்பாடுகளில் ஆதாரம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கு பொருளாதாரம் நிறையத் தெரியாது, என் மனசுக்குத் தோன்றியதை எழுதுகிறேன்.
எந்த சித்தாத்தங்களும் தன்னை அடிக்கடி பரீட்சித்துப் பார்த்து, குறைகளை சீர் செய்யாத வரை, மெருகேற்றிக் கொள்ளாதவரை அதைப் பற்றிய கனவுகளும், கதைகள் மட்டுமே நமக்கு மிஞ்சும் என்று தோன்றுகிறது. சோவியத் யூனியன் அதற்கு ஒரு பெரிய உதாரணம் இல்லையா? கம்யூனிசம் பற்றி ஒன்றுமே தெரியாது எனக்கு, அதைப்பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என்றாலும் இதை சொல்வதற்கு காரணம், மாறுபாடுதலுக்கு உட்பட்ட கம்யூனிசம் நிஜமாகவே வளரும், அடிப்படை பலமாக இருந்து போதிலும், இதன் மேல் கோட்டை எழுப்ப முடியும் என்றாலும், அது வாழும் தண்மையற்றுப் போகிறது, அஸ்திவாரம் மட்டுமே செழுமை இல்லை தானே மாதவராஜ்? சோவியத் யூனியன் பற்றி நினைக்கையிலேயே உங்களுக்கு உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது, தித்திக்கிறது, ஒரு கற்பனை உலகத்தில் தள்ளுகிறது, பழங்கதைகளின் பச்சை பற்றிப் பேசுகிறது. ஆரோக்கியமான சிந்தனைகளில், நூலாம்படை படிந்தது எப்போது? அதை நோய்க்குள்ளாக்கியது எது? படுக்கையில் கிடத்தி பாடையில் ஏற்றியது யார்? எனக்கு இதற்கு விடைகளே தெரியவில்லை மாதவராஜ்! குறைகுடமாய் தளும்புகிறேன், கொஞ்சம் நீர் ஊற்றுங்கள் இட்டு நிரப்பி நிறைகுடமாக!
அன்புடன்
ராகவன்.
இந்திய முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களூக்கு இணையாக நமது இளைஞர்களின் அறிவை பயன்படுத்த தயாராக இல்லை.ஆகையால் தான் நமது நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் வெளி நாட்டை ஆராய்ச்சி கூடங்கள் ஆக்கவேண்டி இருக்கிறது .அருமையான பதிவு
பதிலளிநீக்கு//“உலகை பணம் ஆள்வதற்கு பதிலாக உழைப்பு ஆண்டால் எப்படி இருக்கும்!” என உலகிற்கே நம்பிக்கைகளையும், கனவுகளையும் அள்ளி அள்ளித் தந்த சோவியத் புரட்சியின் நாள் இது. //
பதிலளிநீக்குமகத்தான் இப்புரட்சி நாளைப் போற்றுவோம்!
இது போன்ற பதிவுகள் நிறைய எழுதுங்கள் அங்கிள்.
பேராண்மை படத்தில் ஒரு வசனம் நியாபகம் வருகிறது "ஊறுகாய் விற்க வந்த கூட சந்தேக படனும்" அந்த வசனம் எவ்வளவு உண்மை .....................
பதிலளிநீக்குரஷ்ய புரட்சி நாளை நியாபக படுத்தியதற்கு நன்றி தோழரே................
Your writing style is so interesting(only style!not the content definitely).
பதிலளிநீக்குSeveral times, you have been given fitting reply by the readers with actual data and information.
Indian people are not living in censored communist nations(Russia and china), to accept your fake points.
Any working youth who is travelling abroad(Russia,South America,China) know very well about the true-cruel face of communism(modern slavery).
You people cannot sell your ever "sitting on strike" attitude to todays informative world sir.
By saying this, i do not support Manmohan singh's condition less open market policy, but i 100% agree on his statements about PSU's. Just see, India railway and ICF factory. Same in the hands of indian people by diluting it's share will make the workers accountable for better functioning(hope every body agree that these are under performers in workwise).
If some one says open market is wrong then Communism is not a solution for that, sir.
Check with German,singapore and japanese models to correct the open market instead collapsing the nation by greedy strikes(one classic example: TNEB awarded bonus even after posting billion dollar dbt).
எனக்கு கம்யுனிச சிந்தனைகள் மீது ஈர்ப்பு எதுவும் இல்லை. ஆனால் முதலாளித்துவத்தை நான் எதிர்க்கிறேன்.. எனக்கு பொருளாதாரம் பயிற்றுவித்த இரு பெரும் ஆசிரியர்களின் மூலம் உணரப்பட்ட விஷயம் அது..
பதிலளிநீக்குஅந்நிய முதலீட்டை நாம் ஒரேயடியாக எதிர்க்க முடியாது.. எங்களுடைய வாதம் என்னவெனில், எல்லாருக்கும் பயன்பெறக்கூடிய வகையில் சமச்சீர் முன்னேற்றம் தரக்கூடிய முதலீடுகளை நாம் இரு கரம் நீட்டி வரவேற்கலாம்.. வேலை வாய்ப்பிற்க்காகவும் அரசாங்க வரி விதிப்பின் மூலமாகவும், மேலும் ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டால் அதற்குரிய ancillary industries எனப்படும் நம்மூரைசார்ந்த துணை நிறுவங்கள் பல தழைக்கும்.. இதற்க்கு ஒரு சிறு உதாரணம் ஹூண்டாய்: அந்த தொழிற்சாளைகளுக்குரிய உதிரிபாகங்களை தயாரிக்க பல சிறு நிறுவனங்கள் முளைத்தன..
ஆனால் நம்முடைய அரசாங்கம், அளவுக்கு மீறி வரி விடுமுறைகளை IT நிறுவங்களுக்கு அளிக்கிறது.. எனக்கு தெரிந்து IT மற்றும் அது சார்ந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்க காரணம் வரி விடுமுறைகளே.. அது முடிந்ததும் அவர்களுக்கு நம் நாடு கவர்ச்சிகரமாக தோன்றுவதில்லை..
எப்படி நாம் வெளிநாட்டு முதலீடு நமக்கு வேண்டும் என்று நினைக்கிறோமோ அதே போல நம் நாட்டில் அதிகமாக இருக்கும் resource-human resource, மனிதவளமே நம் நாட்டின் பெரும் சக்தி... அதை உலகம் முழுவதும் பரப்பி நம் நாட்டிற்கு வருவாய் ஈட்டி தர வழிவகுக்க வேண்டும்...இதெல்லாம் நாம் நம் கதவுகளை அடைத்துக்கொண்டிருந்தால் சரி வராது..
மேற்கூறியவை எல்லாம் FDI எனப்படும் Foreign Direct Investment - வெளி நாட்டு நேரடி முதலீட்டுக்கு மட்டுமே பொருந்தும்.. அதாவது, வெளி நாட்டவர்கள் அவர்களுடைய வளத்தை இங்கும் பரவ செய்யும் வகையில் அவர்கள் இங்கு நிறுவும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை.. நிச்சயமாக எல்லா துறைகளிலும் இவர்களை அனுமதிக்க கூடாது.. போட்டி இருந்தால் நுகர்வோர் பயன் பெறுவர் என்று கூறினாலும் அத்தியாவசிய பொருட்களில் போட்டி இருந்தால் அந்நிறுவனங்கள் ஒன்றுகூடி விலையை நிர்வாகிக்கும் cartel அமைய வாய்ப்புள்ளது..
ஆனால் இது எது இதுவும் FII-Foreign Institutional Investment எனப்படும் வெளி நாட்டு பங்கு முதலீட்டாளர்களின் அட்டகாசங்களுக்கு பொருந்தாது... வெறுங்கையில் முழம்போடும் பங்கு வர்த்தகத்தில் (நான் கூறுவது speculation: இதற்க்கும் சூதாட்டத்திற்கும் வேறுபாடு இல்லை) பல கோடி கோடி டாலர்களை கொட்டி, பண வீக்கத்தை அதிகப்படுத்தி, ஒரே நாளில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளை தாண்ட செய்து பின்னர் ஒரே நாளில் பல ஆயிரம் புள்ளிகளை இழக்க செய்து, நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக சென்செக்ஸ் ஐ நினைத்துக்கொண்டு நம்மை எடை போடுவது எல்லாம் கண்டிக்கத்தக்கது..
Sivakumar
பதிலளிநீக்குI go with you, If open market is wrong, communism is not the solution.
As Peter drucker says, employee share option is the open first invitation for mis management of an organisation.
வரலாறு திரும்புகிறது தோழர்......
பதிலளிநீக்குமுதலாளிதத்துவ கோட்பாடுகளின் விளைவுகள் மீண்டும் மார்க்சிய சித்தாந்தங்களை புரட்ட வைத்திருக்கின்றன.
மார்க்ஸியத்தை ஒரு பொருளியல் தத்துவமாக பார்க்காமல், வர்க்கப்போராட்டத்தின் நிலைகளமாக வரித்ததே தவறு என்று தோன்றுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளில் கூட இந்த புரிதல் உண்டு என நினைக்கின்றேன்.
எவனெல்லாம் தான் முதலாளி என்று சொல்லிக் கொண்டு எதிர்த்தானோ அவனையும் இந்த முதலாளிததுவ பொருளாதாரம் கீழே தள்ளி குழியும் பறித்துவிட்டது.
முதலாளி என்பதன் பொருளே கூட இவர்கள் உணரவில்லை அந்நாட்களில் என்று நினைக்கின்றேன்.
டாடாவும், பிர்லாவும், அம்பானிகளும் தான் இங்கே ஆள்கிறார்கள். அவர்கள் தான் இங்கே முதலாளிகள். மற்ற அனைவருமே இங்கு பாட்டாளி வர்க்கம்தான் என்ற உண்மை இப்போது இவர்களுக்கு உறைக்க ஆரம்பித்துள்ளது என நினைக்கின்றேன்.
அருமையான பதிவு
அன்புடன்
ஆரூரன்
குப்பன் யாஹூ!
பதிலளிநீக்குநன்றி. டாடா, அம்பானி ரேஞ்சுல நீங்க உள்ளூர் முதலாளிகளை யோசித்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். மற்றபடி பல உள்ளூர் தொழில்களே நசிந்து போகும்போது உள்ளூர் முதலாளிகள் எப்படி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்? இந்திய முதலாளிகள் யாஹூ,கூகிள் தொடங்கி..... ? என்னங்க நீங்களும் இப்படி யோசிக்கிறீங்க! உற்பத்தி சார்ந்த தொழிலைப் பற்றிப் பேசுவோமே...
சபாரத்தினம்!
நன்றி...
அனானி!
ஒப்புக்கொள்கிறேன். கொள்கையைத் தீர்மானிக்கிறவர்களுக்கு தொலை நோக்குப்பார்வையில்லைதான்.
ராகவன்!
பதிலளிநீக்குநிறைய பேசலாம்.
நீங்கள் இதுகுறித்து நிறைய யோசித்திருப்பதை புரிந்துகொள்கிறேன். அது மிக முக்கியமானது.
சீனாவில் அந்நிய முதலீடுகளுக்கு கடும் விதிகள் உண்டு. அத்னால்தான் இன்றைக்கும் அவர்களது உள்ளூர் தொழில் பாதிக்கப்படாமல் இருக்கின்றன. நம் வீடுகளில் இருக்கும் பெரும்பாலான கடிகாரங்கள் சீனாவில் குடிசைத் தொழில் போல தயார் செய்யப்படுபவை. அவை உயிருடன் இருக்கின்றன. வெளிநாட்டின் முதலீட்டால் நாம் எப்படி நசிவடைவோம் என்று கேடு இருக்கிறீர்கள். நம் நாட்டில் காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர் எல்லாம் என்னவாயிற்று? இதுபோல அழிந்து போன பல உதாரணங்கலை நாம் சொல்ல முடியும்.
அந்நிய முதலீடுகள் வருவதற்கான காரணம், அதிக மக்கள் தொகையுள்ள நம் நாட்டுச் சந்தை. இரண்டாவது குறைந்த செலவில் மனித உழைப்பு கிடைக்கிறது. இங்கே நாம், கடுமையான விதிகள் விதித்தாலும், அவர்கள் முதலீடு செய்தே தீருவார்கள். இதை ஏன் நம் ஆட்சியாளர்கள் ஏன் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரியவில்லை.
முதலாளிகளுக்கு காட்டுகிற விசுவாசத்தை இவர்கள் என்றைக்காவது உழைப்புக்கு காட்டி இருக்கிறார்களா?
போட்டி மனப்பான்மையால் தரம் உயரும் என்பது பொதுவான பார்வை. ஆனால் விலையைக் குறைத்து தரத்தையும் குறைப்பதுதான் நடக்கிறது. தரம் குறைவதால் பொருட்களின் ஆயுள் குறைகிறது. மீண்டும் அதே பொருள் விரைவில வாங்க வேண்டியிருக்கிறது. எங்கள் அப்பா காலத்தில் வாங்கிய ஃபேன் இன்றைக்கும் ஓடுகிறது. நான் இந்தப் பத்து வருடங்களில் மூன்று ஃபேன்கள் மாற்றிவிட்டேன். நீங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, கார் வரைக்கும் இந்த விதியைப் பொருத்திப் பார்க்கலாம்.
உண்மைதான்,. சித்தாந்தங்கள் ஒவ்வொரு காலத்துக்கும் பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டும். அதைக் கோருவது மார்க்சீயம் மட்டுமே. “மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும்” என்று சொல்லிய ஒரே தத்துவம் மார்க்சீயம் மட்டுமே.அதைச் சரியாக புரிந்துகொள்வதில், நடைமுறைபடுத்துவதில் உள்ள கோளாறுகளே தவிர, இவை முதலாளித்துவத்தின் வெற்றி அல்ல நிச்சயமாய்.
தங்க கிருஷ்ணா!
பதிலளிநீக்குஅதற்கான வாய்ப்புகளை உருவாக்க்கவோ, நம் மக்களை உற்சாகப்படுத்தவோ நம் ஆட்சியாளர்களுக்கு அக்கறையுமில்லை.
தீபா!
இனி இதுபோல நிறைய எதிர்பார்க்கலாம்.
வெண்ணிற இரவுகள்!
நல்ல, தேவையான வசனம் அது....!பகிர்வுக்கு நன்றி.
சிவகுமார்!
பதிலளிநீக்குஉங்கள் வார்த்தைகளில் நீங்கள் யாரெனப் புரிகிறது. அதிருக்கட்டும். எதோ நான் எழுதியதற்கு, fitting reply with actual data and information கொடுத்து இருப்பதாகச் சொல்லி நீங்களே ஏன் இப்படி சமாதானமாகிக் கொள்கிறீர்கள் எனத் தெரியவில்லை. உண்மையான idயோடு விமர்சனமோ, எதிர்வினைகளோ ஏன் ஆற்ற முடியாமல் போகிறது?
கம்யூனிசம் மீது உங்களுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியும், முதாளித்துவத்தின் மீதுள்ள மோகமும் தெரிகிறது. எதோ இரண்டிற்கும் நடுவில் ஒரு பாதையுள்ளது போல நகாசு வேலை காட்டி இருக்கிறீர்கள். லெனின் உங்களைப் போன்றவர்களைப் பற்றித் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நடுநிலை என்பதே தவறு. காஅட்சிப் பிழை. உண்மைக்கும், பொய்க்கும் நடுவில் ஒன்று இருக்கவே முடியாது என்று அழகாய் சொல்லி இருக்கிறார்.
ஆஹா... தென் அமெரிகா, சீனாவிலதான் true creul face தெரியுமாம். அமெரிகாவில், பிரிட்டனில்தான் true human face தெரிகிறதோ....? உலகத்தின் இரத்தத்தில் குளித்து எழுந்த வரலாறுகளை மறைத்துவிட்டு உங்களைப் போன்றவர்களால் எப்படித்தான் பேச முடிகிறதோ?
பொதுத்துறைகளின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால் workers accountable for better functioning சாத்தியமாகி இருக்கிறதாம். அருதப் பழசான, முட்டாள்தனமான இதுபோன்ற வாதங்களையேச் சொல்லி சொல்லி முதலாளித்துவத்திற்கு வென்சாமரம் வீசிக்கொண்டே இருங்கள் ந்நிங்கள் எல்லாம். இது என் நாடு, இது என் வீடு, இது என் தெரு, என்று மக்கள் எப்போது உணரத் தலைப்படுகிறார்களோ, அப்போது accountability தன்னால் வரும். யாருக்கோ ஆட்சி நடந்தால், யாருக்கோ வந்தது என்றுதான் தொழிலாளிகள் இருப்பார்கள்!
சிவக்குமார்! இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான வாதங்களை சொல்வதை நிறுத்திவிட்டு, உலகத்தை உற்று கவனித்து மனிதாபிமானத்தோடு சொல்வதற்கு முயர்சி செய்யுங்கள்.
குப்பன் யாஹூ!
கம்யூனிசம் soulution இல்லையென்றால் எது solution என யோசித்துப் பாருங்களேன்!!
ஆருரன்!
பதிலளிநீக்குஅருமையான விஷயங்களை மிக எளிதாகச் சொல்ல் விட்டீர்கள் நன்றி....
நாஸியா!
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களில் உள்ள யதார்த்தங்கள் வேறு மாதிரியானவை. ஹுண்டாய் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். அதனால் துணைத்தொழில்கள் வளரும் என்று சொல்லி இருக்கிறீர்கள். இதுபோலத்தான் சாத்தூரில் (இப்போது நான் இருக்கும் ஊர்) நிப்புக் கம்பெனி தயாரிக்க சேட்கள் வந்தார்கள். அதனால் சாத்தூரில் பல உப தொழில்கள் குடிசைத் தொழில்கள் போல வளர்ந்தன. ஆனால் சேட்கள் வைத்ததே சட்டம். விலை நிர்ணயம் செய்வதிலிருந்து, உற்பத்தி அளவு, அதில் வரும் போட்டிகளை ஊக்குவித்து குளிர் காய்தல் என தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான். பிறகு பால்பாயிண்ட் பேனா வரவும், அந்த சேட்கள் எளிதாக தீப்பெட்டித் தொழிலுக்கு shift ஆகிக்கொண்டனர். இதையே நம்பியிருந்த பல குடும்பங்கள் என்ன ஆயின என்பது தெரியாது. தீப்பெட்டித்தொழிலுக்கு பல குடும்பங்கள் வாழ்க்கைப் பட்டன. இப்போது முழுக்க இயந்திர மயமாகிவிட்டது. மீண்டும் பல குடும்பங்கள் பரிதவிக்கின்றன. இதுதான் நிகழும். அவன் கையில்தான் சாட்டை. மற்றவையெல்லாம் பம்பரங்களே!
நீங்கள் சொல்வது மனித வளத்தை இவர்கள் எங்கு உபயோகிக்கிறார்கள்? வருடத்திற்கு நூறு நாட்கள் வேலை கொடுப்பதே பெரும் சாதனையாகவும், தரும காரியம் போலவும் இங்கு அளக்கப்படுகிறது!
FDI. மற்றும் speculation குறித்து சம்பந்தமாக நீங்கள் சொல்வது உண்மை. தீர்வு என்ன?
//ஆஹா... தென் அமெரிகா, சீனாவிலதான் true creul face தெரியுமாம். அமெரிகாவில், பிரிட்டனில்தான் true human face தெரிகிறதோ....? உலகத்தின் இரத்தத்தில் குளித்து எழுந்த வரலாறுகளை மறைத்துவிட்டு உங்களைப் போன்றவர்களால் எப்படித்தான் பேச முடிகிறதோ?//
பதிலளிநீக்குஹீம்... காசு கொடுக்கும் எசமான்களுக்கு வாலாட்டுவது தானே விசுவாசம்? இது தான் அவர்களது நியாயம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்...
மூளை உழைப்பு, உடல் உழைப்பு, என்று பாகுபாடுகள் ஏற்படுத்தி அதற்குள்ளேயும் ஆயிரமாயிரம் பேதங்களையும் உட்புகுத்தி உழைப்பாளர்களிடையேயும் பயங்கர வர்க்க பேதத்தை உருவாக்கி விட்டார்களோ?
எது எப்படி இருந்தாலும்...
லத்தீன் அமெரிக்காவின் எழுச்சி நம்பிக்கை ஏற்படுத்துகிறது என்பதில் ஐயமே இல்லை! வாழ்க சோஷலிசம்.
எங்க ட்ரைன்ல ஒரு முஸ்லிமுக்கு உக்கார இடம் கொடுக்கவில்லை என்று போராடும், தமிழ் பதிவுலக புலிகள், அவர்களின் வந்தே மாதரம் மீதான பாத்வா பற்றி பேச்சு மூச்சே காணோம்? இந்த மாதிரி timid ஆக இருக்கிரதனால் தான், வடிவேல் மாதிரி, போற வரவன் எல்லா நம்மளை எட்டி உதைச்சுட்டு போறான். இங்க இருக்கிற முஸ்லிம் பதிவர்கள், இதை கண்டித்து ஏன் ஒரு பதிவு போட கூடாது? நீங்க அவ்வளவு வெறுக்கிற அமெரிக்காவில் பாருங்கள், பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள், Ft Hood சம்பவத்தை எதிர்த்து அறிக்கையாவது விட்டு இருக்கிறார்கள்.
பதிலளிநீக்கு\\இதையே நம்பியிருந்த பல குடும்பங்கள் என்ன ஆயின என்பது தெரியாது. தீப்பெட்டித்தொழிலுக்கு பல குடும்பங்கள் வாழ்க்கைப் பட்டன. இப்போது முழுக்க இயந்திர மயமாகிவிட்டது. மீண்டும் பல குடும்பங்கள் பரிதவிக்கின்றன. இதுதான் நிகழும். அவன் கையில்தான் சாட்டை. மற்றவையெல்லாம் பம்பரங்களே!\\
பதிலளிநீக்குநீங்கள் கூறுவது சரிதான்..அந்நிய முதலீடுகளின் மூலம் நமக்கு நன்மை இருந்தாலும் பாதகங்கள் நிறையவே இருக்கின்றன. என்னை பொறுத்த வரையில் என்ன தான் ஒரு தொழிற்சாலை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தாலும், அது நிறுவப்படுவதல் நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஒழுங்கான (பேருக்கு ஒன்றுக்கும் உதவாத நிலத்தை கொடுப்பது அல்ல) மாற்று ஏற்பாடுகள் செய்தாலே தவிர அந்த தொழிற்சாலை அங்கே நிறுவப்பட கூடாது. ...in capitalism, its a man-eat-man world!
\\FDI. மற்றும் speculation குறித்து சம்பந்தமாக நீங்கள் சொல்வது உண்மை. தீர்வு என்ன?\\
அவற்றை தடை செய்ய வேண்டும்!
"workers accountable for better functioning"
பதிலளிநீக்குDear Sivakumar,
I worked in SPIC Tuticorin. Where 80% of the workers, technicians and engineers are excellent performers and hardworkers. Other 20% of the employees are not performing below average. But what happened to SPIC? Now the company is under for the past 3 years due to financial crisis. It is not because poor performance of the workers but due to the mis management especially in handling their profit. Now the workers are the sufferers, top management had taken away lot of money and settled down peacefully.
அனானிக்கு
பதிலளிநீக்குவந்தே மாதரம் எப்படி எப்போது யாரால் யாருக்காக எழுதப்பட்டது என்பதை இந்த முகவரியை கிளிக் செய்தால் தெரியும்.http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_115632792939907853.html. இதற்கு பிறகும் இதை தேசியகீதம் என்றால் அவர்களை செருப்பால்தான் அடிக்க வேண்டும் .
நாடோடி!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.வந்தே மாதரம் குறித்து நானும் ஒரு பதிவு எழுதணும்னு இருக்கேன்.
தீபா!
பதிலளிநீக்குநாஸியா!
ஸ்பிக் குறித்து உண்மைகளைத் தெரியச் செய்த அனானி!
அனைவருக்கும் நன்றி.
If somebody really travels and see west bengal , they can easily accept the ineffective and arrogance of communist.
பதிலளிநீக்குAsk the people who come out for their life betterment from Kerala and Bengal, they will tell you the facts about communist.
If some one traveled to china they know very well how communist rule them(check Badri's webpage/podcast on china to know about how chinese government treat their citizen). The whole world know about Russia(even people of Russia well aware of these mordern dictators and thrown them out).
The whole world has real time facts and examples sir. Open your eyes and ears and listen .No one need to do any great investiagation on this to specially explain you.
If taking a middle path is not viable then may i know what kind of strategy Germany follows. Have you ever worked in Germany(not just a fancy visit).
There are enough examples in the world where countries strike fine balance between worker rights and foreign/private investment(Singapore, Japan,Korea).
Finally, i understand your level of reasoning when you compared human rights in USA,U.K with China.Even a school kid will laugh on you. And you are telling others as half baked. Only Indian communist(Those who kept Bengal and Kerala in dark for ever) can support poor work place safety ,censored & cruel life in china and Russia.
One final thing, I have clearly mentioned my name. I don't look for your id. Why do you need my id which i'm not interested to share in public?? Neither i written some thing vulgar about you nor spelled any abusive words.
I don't see you listening to any alternate comments,typical communist(instead looking for id which has no sense).Good bye!
To Anony(don't see your name),
பதிலளிநீக்குI agree your comments on SPIC and many other private institutions where workers gave their best but company failed not coping up with growing competition or mismanagement.
But i don't see communism is the solution for this. Neither restricting private participation.
This is where Government need to strike a balance between investments(India need lot more investments to maintain our growth) and welfare(we in india don't have social security - getting paid if jobless which most of the developed world gives to it's citizens).
I'm the one with many others passed out '2000 and suffered with out proper employment for years. We know very well how crucial the industrialization and growth means.
Without private investment , we would be like what west Bengal and Kerala.
That's why i speak for an middle path which Singapore, Germany,Japan,Korea demonstrated.
நினைத்தேன். இப்படி, நான் சொன்ன கருத்தை அரை குறையா புரிந்து கொண்டு, யாரவது ஒருவர், பதிவிடுவார் என்று. அது நாடோடி, அதற்க்கு மாதவராஜ் ஜால்ரா. நான் சொன்ன வந்தே மாதரம், ஒரு example, அப்ப, மும்பை 26/11 தீவிரவாதத்தை, எத்தனை முஸ்லிம் தலைவர்கள் கண்டித்து தங்கள் வருத்தத்தை தெரிவித்தார்கள்? ஒரு நாட்டிற்கு அதை ஒன்றிணைக்கும் ஏதாவது ஒரு பாடல், மிக முக்கியம். அது வந்தே மாதரமாக இருக்கிறது, அதை பெருன்பான்மை மக்கள், ஏற்று கொண்டிருக்கிறார்கள். நாட்டில், தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்ளவோ இருக்கு, இது மாதிரி தேவையற்ற சர்ச்சைகள் தேவையா? இது தான், பெருவாரி மக்களின் எண்ணோட்டம். ஆனால், உங்களை போல், ஒவ்வொரு நாளும், நாட்டை, துண்டாட நினைக்கும், அதிமேதவிகளால், இப்படி எழுத தான் முடியும். உலகம் எங்கும், எப்படி கூடி வாழ்ந்து மக்களுக்கு நன்மை செய்யலாம், என்று யோசித்து, செயல்படும், இந்த நாட்களில், ஒன்றாக இருக்கும் இந்தியா நாட்டை, அதன் ஒற்றுமையை, ஊக்குவிக்க முடியவில்லை என்றாலும், ஏன் எப்போதும், பிரிதாள்வதில்யே குறியாக இருக்கிறீர்கள். தமிழ் நாடு பிரிந்து போனால், நீங்கள் சந்தோஷ படுவீர்களா?
பதிலளிநீக்குஅதனால், கேள்வி, தீவிரவாதம், எந்த மதத்தின் பெயரால், செய்ய பட்டாலும், கண்டியுங்கள். அதை விட்டுவிட்டு நாட்டை, துண்டாட நினைக்கும், எந்த சக்தியையும், தயவு செய்து உற்சாகபடுததீர்கள்
Chavez can do certain things to day.But the country's economy is dependent on oil exports to a great extent.The mistakes of 70s like indiscriminate nationalization, fiscal indiscipline, state trying to do everything if repeated now will affect the economy and society.
பதிலளிநீக்குThe communist utopia is just an utopia. USSR was technologically backward in many sectors. They wasted resources as there was no incentive to produce more with less resources. USSR lagged behind USA and Japan in productivity.
Your comrades invite Ambanis and Tatas with all incentives.Why dont they implement Tobin tax ?.
'“மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும்” என்று சொல்லிய ஒரே தத்துவம் மார்க்சீயம் மட்டுமே'
பதிலளிநீக்குThat was a pretty old idea.Greeks spoke about much before Marx.
'If some one says open market is wrong then Communism is not a solution for that, sir.
பதிலளிநீக்குCheck with German,singapore and japanese models to correct the open market instead collapsing the nation by greedy strikes(one classic example: TNEB awarded bonus even after posting billion dollar dbt).'
So what, we can always increase the tariff. The unions know that if they ask 30% they will get 15%.