இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் சில முக்கியச் செய்திகளைச் சொல்கின்றன. சமூகம் குறித்த பிரக்ஞயற்றதாய் கலைகள் ஒருபோதும் இருந்திட முடியாது.
ஓவியர் செழியனின் கைவண்ணங்கள் இவை. எஸ்.வி.வேணுகோபாலன் எனக்கு ஒருமுறை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த ஓவியங்கள் உங்களிடம் என்ன சொல்கின்றன? சொல்லுங்களேன்!
****
****
****
****
****
****
தலையாட்டி பொம்மையோட மோனாலிசா இருக்கரது தஞ்சைலயா?
பதிலளிநீக்குதாஜ்மகாலை பிரதிபலிக்கும் தஞ்சைப்பெரிய கோயில். (தாஜ்மகால் சிவலிங்கம் இருக்குன்னு புரளி கிளப்பி விட்டவங்களுக்கு வசதியா இருக்கும் இந்தப்படம்)
1]
பதிலளிநீக்கும்ண்ணை நேசிக்கும் விவசாயி.
வளர்த்து விட்ட மக்கள் கை விட்டாலும் உழைத்து வாழ்ந்த மண் கை விடாதென்கிற நம்பிக்கையில், வறட்சிக் காலத்திலும் வானம் பார்த்துக் காத்திருக்கும் வயசாளி.
2] புன்னகையைத் தொலைத்து விட்ட இந்தியப் பெண்களுக்காக இந்திய சூழலில் மோனலிசா?
3] ஆணும் பெண்ணும் சமம்?
4]எம்மதமும் சம்மதமாய்..
(மிகப் பிடித்தது இந்த ஓவியம்)
5]சொல்லத் தெரியவில்லை :( !
இவை ஓவியங்களா இல்லை காவியங்களா?
பதிலளிநீக்குபெரியாரின் ஓவியம் ஓராயிரம் உண்மைகளை உரத்துச் சொல்கிறது.மோனலிசாவும் கிழவனின் படம் துயரம் படிந்த வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது.
பகிர்தலுக்கு மிக மிக நன்றி அய்யா.
மண் மீதுப் பாசம் கொண்ட விவசாயி.......அழகு
பதிலளிநீக்குஅது பெரியார் என நானும் ஒருகணம் நினைத்தேன். நிலாரசிகன் சொன்னதும் உறுதியாகி விட்டது:)! அந்தப் படமும் காவியமே.
பதிலளிநீக்குநாலாவது படத்தில் ஓவியரின் சிந்தனை அபாரம்.
சின்ன அம்மிணி நன்றாகக் கவனித்திருக்கிறார்கள். தஞ்சையிலே தலையாட்டிப் பொம்மையுடன் மோனலிசா!
இன்னும் மற்றவர் கருத்து காண ஆவலுடன்...
ராமலஷ்மியின் பதில்கள் ஓரளவுக்கு சரியாக இருக்குமென்று நம்புகிறென்.
பதிலளிநீக்குகாண்பதற்கரிய புகைப்பட பகிர்வுக்கு நன்றி !!!
//எம்மதமும் சம்மதமாய்..
பதிலளிநீக்கு(மிகப் பிடித்தது இந்த ஓவியம்)//
அங்கே சிலுவை மிஸ்ஸிங்!
மேலும் தாஜ்மகால் மதரீதியான அடையாளம் அல்லவே!
ரசிக்கத்தான் முடியுது தல, கருத்து சொல்லமுடியல!
பதிலளிநீக்குNice drawings..May be out of topic but i want to tell one thing, better restrict your experiments with only hindu monuments and religion....just think of doing this with other religions you will end up in mumbai blast scenario.
பதிலளிநீக்கு1. காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம் (வறண்ட காடுங்கறதை விட அறுத்த காடுன்னு வைச்சுக்கலாம்).
பதிலளிநீக்கு2. உலக மயமாக்கலில் நசிந்த உள்ளூர்த் தொழில்கள்/கலைகள். என்னை இன்னும் ஈர்த்தது, மகளின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த கறுப்பு மனிதர் தான். ஆனால் என்னவென்று உணரத் தெரியவில்லை.
3. எருதின் மீது ஏறிப் போகும் இணையர். யாரு?
4. வெள்ளைக்காரங்க சுத்திப் பாக்கறதுக்கு எம்புட்டுப் பேரு செத்தாங்களோ!! பொதுவாவே கட்டிடங்களைப் பாத்து வாயைப் பிளக்கும் போதெல்லாம் கொஞ்சம் உறுத்தலா இருக்கு.
5. அலைக்கழிக்கும் போதும் அசையாத அறிவுச் சுடர்
ஏன் உங்களுக்கு உணர்வுகள் பிரக்ஞையாவே தெரியுது. இல்லை பிரக்ஞைக்கு வேற பொருள் இருக்கா?
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதங்களில் அழகு..
பதிலளிநீக்குஆயினும் எனக்குப் பிடித்தது பெரியார் படம் தான்...
அறுத்தெரியப்பட்ட மூடநம்பிக்கையின் வேர்களால் வரையப்பட்ட படமாகவே எனக்குத் தோன்றுகிறது.
விவசாயியின் படமும், பெரியாரின் படம் டாப்!
பதிலளிநீக்குகாணக்கொடுத்தமைக்கு நன்றி
வற்றிய உடம்பும் ஒட்டிய வயிறுமாய் இருக்கும் விவசாயியை பார்க்கும் பொது வருத்தமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குமற்ற ஓவியங்களும் மிக அருமையாக உள்ளது
Kadavulum Kathalum onnu nnu solla varutho antha Tajmahal Padam
பதிலளிநீக்குஒவ்வொன்றும் கவிதை
பதிலளிநீக்குஉழைத்து உலர்ந்த தேகத்துக்கு
பதிலளிநீக்குபாலைமணலும் பஞ்சுமெத்தையே..!
கடவுளுக்கு நிற மத பேதமில்லை,
கலைக்கும் அப்படியே..!
குதிரை கிடைக்கவில்லை பிருதிவிராஜனுக்கு,
அவசரத்துக்கு எருது
கடவுளின் பிரதிபிம்பமே காதல்.!
பதிலளிநீக்குஇப்படிலாம் இருந்தா நல்லாதா இருக்கும்.
ஆனா இல்லையேனு ...
பெரியார் நினைக்கிறாரோ...!
முதல் படக்கதை!?
பதிலளிநீக்குஅஞ்சுக்கும் கதை எழுத ஒரு நாள் வேணும் மாதவராஜ்! ரொம்ப எழுதத்தூண்டுது, படிப்பவர் பற்றிய கவலை இல்லாது
திருப்பதி ஆசாரியும் சில எருமைமாடுகளும்:
ரெண்டு ஏக்கரா நிலமும்
ஒரு கிணறும், நாலு எருமை மாடும் தான் சொத்து.
முப்போகம் விளஞ்சதெல்லாம்,
எப்போதோ கதையாச்சு.
விவசாய எஞ்சினியர் சொல்ல,
மல்லிகைப்பூ, மிளகாய், தக்காளி,
காய்கறி, தர்பூசனி, வேர்கடல எல்லாம்
போட்டு பாத்தாச்சு,
புடிச்ச புடிக்கு பத்தல.
எருமை மாடுகள பாலுக்கு பீச்சினது தான்
பசியாத்திக்கிட்டு இருந்த நிலை
வீட்டம்மாவும்
காட்டுக்கு வேலைக்குப் போக
கால் வயத்து கஞ்சிக்கு மிஞ்சினத
மகராசன் படிப்புக்கு.
படிச்சு, முடிச்ச துர
பதவிசா வேலைக்குப் போக
பதறி அழுத பணம் பாதி நிலம் போயாச்சு
மிச்சத்துல
கடன் வாங்கி விதச்சதெல்லாம்
கடனாவே விளஞ்சு போச்சு
கை வழி ஓட்டையில காசெல்லாம்
கரைஞ்சு போச்சு
கடுதாசி அனுப்பிய பாங்க்காரன்
கை நாட்டுன்னு தெரியாம!
நோட்டீஸா கொடுத்துப்புட்டான்
படிச்ச மகராசனை வந்து பார்க்க
சொல்ல, பயபுள்ள
பதிலாய கடிதாசி வித்துப்போடு
நிலத்த! விதைச்சு என்ன கண்டன்னு
வானம் பார்த்த பூமி!
நீயே கதியின்னு மாரியாத்தா
கண் துறக்க காத்திருக்கேன் நாதியத்து
மல்லாக்க படுத்திருக்கேன்
மண் மேல,
நெய் தடவி
மீசை வச்சேன், நிலா மேல
ஆசை வச்சேன்
பொய் பேசும் உலகத்தில
புதைஞ்சு போகத் தோனுதடி!
மன்னிக்கவும். ரொம்ப பெரிசாயிடுச்சு.
அன்புடன்
ராகவன்
ஓவியர் செழியனின் கைவண்ணங்கள் மிக நல்ல விதை...
பதிலளிநீக்குகலை விமர்சகர் திரு கி. சந்திரசேகரன் சொல்வார்: “தாகூரின் ஒவ்வொரு கோட்டிலும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு” என்று. இந்த ஓவியங்களிலும் நாம் ஆயிரம் இல்லாவிட்டாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் காணலாம்.
பதிலளிநீக்கு1.உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது உள்ளது.ஒட்டிய வயிறுடன் வானம் பார்த்த விவாசயின் ஒவியம்.
பதிலளிநீக்கு2.கலைகளுக்கு இன மத நிற மொழி வேறு பாடு இல்லை என்பதை குறிக்கிறது.
3.மொஹஞ்சதாரோவில் பிருதிவிராஜ்,
சம்யுக்தை.
4.பக்தியின் உயர்ச்சியும்,காதலின் ஆழமும்.
5.காலம் வரைந்த கோலம்.
அற்புதமான ஓவியங்கள். கலவையான உணர்வுகள்.
பதிலளிநீக்குசெழியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி மாதவ் அண்ணா..
ஒவியர் செழியனுக்கும்,படம் பார்த்து கருத்து சொல்ல சொன்ன உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
படத்துல இருக்கிற "சமூக பிரக்ஞை" எல்லாம் புரிஞ்சுக்கிற அளவுக்கு நமக்கு அறிவு இல்லங்க. மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கத்தான் ஆவலா இருக்கேன். இருந்தாலும் எனக்குத் தோணினது கீழே.
பதிலளிநீக்கு1. பொட்டல் பூமின்னாலும் வானம் பாத்துக்கிடக்கிற விவசாயிக்கு அவனோட நிலம் தான் தூக்கம் தருகிற பஞ்சு மெத்தை. அவனோட மண்ணு மேல அவனுக்கு இருக்கிற நம்பிக்கை.
2. நம்ம ஆளுங்க எல்லாம் அவனவன் குடும்பம் புள்ளகுட்டிகளோட. மோனலிசா (வெளிநாட்டுக்காரங்க) அவங்களோட பொம்மையோட (அல்லது)
தலையாட்டி பொம்மை மாதிரி ஒரு ஆண் துணையாக் கிடைச்சுட்டா, நம்ம ஊர் பொம்பளைகளும் மோனலிசா (எப்போதும் புன்னைகையோட) தான் :-)...ஹிஹி ...கோச்சுக்கப்படாது
3. அழகா இருக்கு.
4. வெளிநாட்டுக்காரனுக்கு நம்ம ஊர் தாஜ்மஹாலும் ஒண்ணுதான் தஞ்சைப் பெரிய கோவிலும் ஒண்ணுதான். கட்டிடக் கலை குறித்த வியப்பேயன்றி மதம் சார்ந்தோ அல்லது வேறு பார்வையோ இல்லை.
5. பெரியார் படம் அப்படிங்கிறது தாண்டி வேற எதுவும் தோணல.
இந்தப் படங்கள் சொல்வது என்னவென்று நீங்கள் சொன்னால், என்னைப் போன்றவர்களுக்கு புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
பதிவு அருமை,
பதிலளிநீக்குராகவனின் பின்னோட்டம் உள்ள கவிதை மிக அருமை.
eela tamil view
பதிலளிநீக்குfarmer: suffering hard.
other view: even he dont ware kovanam, ke has betsheet and thundu.. our tamils life?
monolisa: no idea
kuthirai: (disabled by mines)(both have only 1 leg. makkal having kathal or life
Temple: worship place is like a tourst place. no one worship.
periyar: ???
1. வறட்சியில்
பதிலளிநீக்குவயிறு வற்றினாலும்
மண்ணைப் பற்றி வாழ்ந்து
வானம் பார்த்திருக்கும்
மண்ணின் மைந்தன்
2. பாகுபாடின்றி...
யாதும் ஊரே!!!
3. வாழ்க்கைப் பயணம்
இணைந்தே இருக்கும்?
4. மதம் என்று
எவ்வழி சென்றாலும்
எல்லாம் ஒன்றே
4. காலத்தால் அழியா சித்திரம்
பெரியார்
Ellame nalla irukku
பதிலளிநீக்குanal antha muthiyavar ...........
enna solla........
enge poikkondirukkirom nam?
appuram monalisavai antha soolalil karpanai seyya mudiyavillai
periyarai purinthu kolvathu konjamalla nirayave sikkal enkiratho?
ரசிக்கத்தான் முடியுது, கருத்து சொல்லமுடியல!
பதிலளிநீக்குகருத்துன்னு கேட்டப் பின்னாடி எப்படி சொல்லாம இருக்கிறது...:0)))
பதிலளிநீக்குமுதல் படம்...விவசாயிக்கு நடுத்தெரு கூட சொந்தமில்லை....அவன் வறண்டு போன நிலமே அவனுக்கு இடுகாடு....
ரெண்டாவது படம்...அது மோனலிஸாவா இல்லை சோனியா காந்தியா....கையில இருக்க பொம்மை மானா மோனா சினா மாதிரி இருக்கு...
மூணாவது படம்....எதுவும் தோணலை...
நாலாவது...கேப்பிடலிசத்திற்கு சிவன் கோயிலும் ஒண்ணு தான்...தாஜ்மஹாலும் ஒண்ணு தான்....டூரிஸ்ட் ஸ்பாட்டு...
அஞ்சாவது....பெரியாரை வரைஞ்சிருக்க கோடுகள் ஃபைபர் ஆப்டிக்ஸ் குறியீடு மாதிரி இருக்கு...இன்டர்நெட் காலத்திலயும் பெரியார் பாப்புலர்??
1. வறுமையின் நிறம் பழுப்பு.
பதிலளிநீக்கு2, சுற்றுலா தளம் போல ஆகி வரும் கோவில் தளங்கள் .
3. கடத்தி செலுத்தல் அல்லது ஒரு அரசன் அரசியின் பயணம்.
4. மேல சிவன் பார்வதி கீழே ஷாஜகான் மும்தாஜ் . ஆகா மொத்ததில் காதலர்கள் கோவில் இது .
5 . ஈர வெங்காய தோலில் பெரியார் ..
எனக்கு முதல் படம் நிறைய பிடித்திருக்கிறது. அதில் எனக்கு இரண்டு காட்சி தெரிகிறது. வரட்சியில் இறந்து கிடக்கும் யானையின் தலை.பின் வானம் பார்த்து படுத்திருக்கும் ஒரு வயதானவர். இரண்டுமே சொல்லும் ஒரே விஷயம் வறட்சி.
பதிலளிநீக்குபிறகு கடைசி சித்திரம். அவரது கருத்துகள் சேர்த்து அவரை நெய்தது போல. பெரியார் அருமை.
ஓவியங்களை ரசித்தவர்களுக்கும், அதுகுறித்த தங்கள் பார்வைகளை வெளிப்படுத்தியவர்களுக்கும் நன்றி. இது நாம் அனைவரும் ஓவியர் செழியன் அவர்களுக்கும் செய்யும் மரியாதையாகவே இருக்கட்டும்.
பதிலளிநீக்குநம்மக்கள் ஒவியத்தை இத்தனை அர்த்தங்களோடும் ஆழத்தோடும் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கும்போது ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறது. தோழர்.எஸ்வி.வி அவர்கள் எனக்கு ஓவியர் செழியனின் தொலைபேசி எண் வாங்கித் தருவதாகச் சொல்லி இருக்கிறார். அவரை, இந்தப்பதிவின் பின்னூட்டங்களை படிக்கச் சொல்ல வேண்டும் என்றிருக்கிறேன்.
வாழ்வெல்லாம் புறக்கணிக்கப்பட்டாலும், அந்த எளிய விவசாயி தனது வாழ்வும் சாவும் என்கிற இந்த மண்ணிலேதான் என்கிறாரோ?
சோகமா அல்லது சந்தோஷமா என்பதை புரிய முடியாத புன்னகையை வீசும் மோனலிசாவின் கைகளில் எதற்கும் தலையாட்டும் பொம்மையை கொடுத்து பெரும் முரணைக் காட்டி இருக்கிறாரா?
பெண்ணே சமூகத்தின் நடத்துபவளாக இருந்த காலத்தையும், மணிக்கட்டுகள் இல்லாத அதன் வரலாற்றுச் சிதைவையும் சொல்கிறதா?
மதங்களைத் தாண்டிய ஓவியனின் கலைப் பார்வையா?
இச்சமூகத்திலிருந்து பிரிக்க முடியாத படிக்கு, நார்களின் இழையில் பின்னப்பட்டவராய் பெரியார் இருக்கிறாரா?
என்கிற கற்பனைகளும், தோற்றங்களும் எனக்கு இந்த ஒவியங்களை பார்க்கும் போதெல்லாம் வருவதுண்டு.
முதல் படம் ரொம்ப ஈர்த்திருப்பதாகவேத் தெரிகிறது.மோனலிசாவை சோனியாவுக்கும், தலையாட்டி பொம்மையை மன்மோகனுக்கும் அதுசரி அவர்கள் பொருத்தமாக்கி இருப்பதை படித்து வாய்விட்டு சிரித்தேன். அவசரத்துக்கு குதிரையில்லாமல் காட்டெருமை என்னும் அம்பிகாவின் பின்னூட்டமும் ரசிக்கத் தக்கதுதான். ராமலஷ்மி, சின்ன அம்மணி, ரோமியோ பாய், அமுதா, மு.சீனிவாசன், கோமதி அரசு, முகவை மைந்தன் ஆகியோர் ஒவ்வொரு ஓவியத்துக்கும் கருத்துக்கள் அருமையாகச் சொல்லி இருக்கிரார்கள். கதிர், முனைவ்ர்.குணசீலன், வால்பையன், நிலாரசிகன் அனைத்து ஒவியங்களையும் ரசிக்கத்தான் முடியும் என்றிருக்கின்றனர். ராகவனின் கவிதை அற்புதம்!
அனைவருக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எனக்கும்தான்.
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.
1. புறம் வறண்டும், அகம் வறளாத நம்பிக்கை, மழையை எதிர்நோக்கி.
பதிலளிநீக்கு2. தலையாட்டி பொம்மையாய்க் கணவனை வைத்திருக்கும் மனைவிகளின் மோனாலிச மர்மப் புன்னகை
3. (கை, கால் மணிக்கட்டுக்கள் இழந்துவிட்டதால்) சுய செயலும், சுய நடையும் இழந்த மனிதம், இயற்கை(விதி)யினால் சுமக்கப்பட்ட நிலையில் வாழ்க்கைப் பயணம்.
4. பக்தியும், காதலும் முரண்பாடான விசயங்கள் அல்ல; பிரதிபலிப்புக்களே.
5. (வாழ்க்கைக்)கிறுக்கல்களை முறையாகக் கையாண்டதனால், கிடைத்த ப(ட்)டம் ‘பெரியார்'.
-ஹரன்.
//உழைத்து உலர்ந்த தேகத்துக்கு
பதிலளிநீக்குபாலைமணலும் பஞ்சுமெத்தையே..!
கடவுளுக்கு நிற மத பேதமில்லை,
கலைக்கும் அப்படியே..!
குதிரை கிடைக்கவில்லை பிருதிவிராஜனுக்கு,
அவசரத்துக்கு எருது
//
அம்பிகா அக்கா!
சூப்பர் போங்க!!
ஓவியங்கள் யாவும் அருமை. எல்லோரும் நல்ல கருத்துக்கள் கூறிவிட்டார்களே.
பதிலளிநீக்குபெரியார் ஓவியம் அழகு.