மாதவராஜ் பக்கங்கள் 13

 

எப்போதோ நடக்கிற துயரமாக இல்லாமல், சமீப காலமாக வெடி விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. திருத்தணி அருகே பள்ளிப்பட்டில் கருகிக் கிடக்கும் மனித உடல்களைப் படங்களில் பார்ப்பதற்கான திராணி இல்லை. கதறி அழும் உறவினர்களை யாரும், எதுவும் சமாதானப்படுத்தி விட முடியாது. விபத்துக்கள் நடந்த பிறகு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதும், கொஞ்ச நாளைக்கு வேகமாக இருப்பதும், பிறகு அப்படியே விட்டு விடுவதும் இங்கு இயல்பான வாழ்க்கை முறை ஆகிவிட்டது. எத்தனை முறை இப்படி புலம்பி தீர்த்தாயிற்று. இங்கு வெடிவிபத்துக்களில் செத்துப் போவது டாட்டாக்களும், அம்பானிகளும் அல்ல. சாதாரண குப்பனும் சுப்பனும். எல்லாம் அந்த நேரம் மட்டுமே அவர்களுக்கு.

நேற்று அமெரிக்க விமானம் ஒன்று இந்திய வான்வெளியில் அத்து மீறி நுழைந்து விட்டதாக, இந்திய விமானப்படையினர் தரையிறக்கி இருக்கின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிஜூரியா நகரத்திலிருந்து தாய்லாந்து சென்ற அந்த பயணிகள் விமானத்தில் 205 அமெரிக்க கடற்படை வீரர்களும், ஆயுதங்களும் இருந்திருக்கின்றன. அலறிய அமெரிக்கத் தூதரகம் உடனடியாக தனது அத்தனை உத்திகளையும் மேற்கொண்டு இருக்கிறது. 7 மணி நேரத்தில் மன்மோகன் அரசு, ஆபத்தான விமானத்தை கல்கத்தா வழியாக பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக, வடகொரியக் கப்பல் ஒன்று இந்தியக் கடற்பகுதியில் நுழைந்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது. அதில் அணு ஆயுதங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்தியக் கப்பற்படையினர் முற்றுகையிட்டு அந்தமான் நிகோபார்த் தீவுகளில் பிடித்து வைத்துக் கொண்டனர். சோதனையிட்டுப் பார்த்ததில் எந்தவிதமான பேரழிவு ஆயுதங்களும் இருந்ததற்கான தடயங்கள் கூட கண்டு பிடிக்கப்படவில்லை. அந்தக் கப்பல் இரண்டு மாத காலத்துக்கும் மேலே இந்தியாவின் வசமே இருக்கிறது.

ஆனால் அமெரிக்க விமான நிலையத்தில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராயிருந்த ஜார்ஜ் பெர்னாண்டசிலிருந்து, இப்போது பிரபல நடிகர் ஷாருக்கான் வரை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு, சோதனையிடப்பட்டு, நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.

இவையாவும் தனித்தனிச் செய்திகள் அல்ல. தேசத்தின், மக்களின் பாதுகாப்பு குறித்து அரசுக்கு இருக்கும் அலட்சியமும், பாரபட்சமும் மேலிருந்து கீழ்வரை சீழ்பிடித்து இருப்பதைச் சொல்கின்றன. எல்லா யோக்கியர்களும் ஆளுக்கொரு சொம்பு வைத்திருக்கிறார்கள்.

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அரசின் கவனமின்மையால் நடக்கும் வெடி விபத்துகளில் இறப்பதும் இயற்க்கை மரணம் போலத்தான் என்று நம்மைபோன்றவர்கள் நினைக்க பழகிக்கொள்ள வேண்டியது தான்

    பதிலளிநீக்கு
  2. //அந்தக் கப்பல் இரண்டு மாத காலத்துக்கும் மேலே இந்தியாவின் வசமே இருக்கிறது.//
    எஜமானுக்கும் நமக்கு கீழே இருக்கும் அடிமைக்கும் வித்தியாசம் இல்லையா என்ன? இந்த ஃப்ளைட்ட இறக்கனுதக்கே எத்தினி தடவ மன்னிப்பு கேட்டுருப்பானுஙங்க இந்த கம்மநாட்டிங்க

    பதிலளிநீக்கு
  3. // எல்லா யோக்கியர்களும் ஆளுக்கொரு சொம்பு வைத்திருக்கிறார்கள்.
    //

    :-)))

    Great post! Thanks a lot.

    பதிலளிநீக்கு
  4. Comrade Mathavaraj, how about the accident in BALCO and the chinese involved in this.How about the absyml working conditions of workers in China.Human lives are cheap in China and India.In India atleast media will protest and the victims can protest.In china victims cant even protest.

    The U.S. plane was released after due enquiry.

    பதிலளிநீக்கு
  5. எல்லா யோக்கியர்களும் ஆளுக்கொரு சொம்பு வைத்திருக்கிறார்கள்.

    yes, some have them with a red label on all sides.

    பதிலளிநீக்கு
  6. // எல்லா யோக்கியர்களும் ஆளுக்கொரு சொம்பு வைத்திருக்கிறார்கள்.
    //
    முகத்தில் அறையும் வரி

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு மாதவராஜ் அவர்களே,

    //இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராயிருந்த ஜார்ஜ் பெர்னாண்டசிலிருந்து, இப்போது பிரபல நடிகர் ஷாருக்கான்// இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸை சேர்த்தது சரி. ஷாருக்க்கான் என்ன சோதனை செய்யப்படக் கூடாதவரா? இன்றைய செய்தியில் இங்கிலாந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்காமை 3 மணி நேரம் லாஸ் ஏஞ்செலிஸ் விமான நிலையத்தில் சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  8. டேவிட் பெக்கமை ஷாருக்கானுடன் ஒப்பிடலாம், ஆனால் ஜார்ஜ் பெர்னாண்டஸின் வேட்டிவரை சோதனை செய்தது நமது நாட்டின் கேபினட் அந்தஸ்து அமைச்சரை அமெரிக்கா கேவலப்படுத்தியது கண்டிக்கதக்கது.
    முதுகெலும்பில்லாத அரசு வேடிக்கை பார்க்கிறது.

    பதிலளிநீக்கு
  9. வடகொரிய கப்பல் விஷயத்தில் நம் மீடியா “அணுஆயுதங்களுடன் வடகொரிய கப்பல் இந்திய கடல்பகுதியில் நடமாட்டம்?” என்று கேள்விக்குறியுடன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுவார்கள், ஆனால் அது சோதனை செய்யப்பட்டு ஒன்றும் கிடைக்காமல் விடிவிக்கப்பட்டதை ஏதோ ஒரு ஓரத்தில் செய்தி போடுவார்கள்.

    மீடியா இப்போது சீன விவகாரத்தையும் பெரிய எதிரி சீனாவா?பாகிஸ்தானா? என்ற பாணியில் ஆரம்பித்துவிட்டன.
    உறவுகள் மேம்படைய கூறுவதற்கு அவர்களுக்கு வழிதெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  10. நாஸியா!
    கொலையை, எப்படி இயற்கையான மரணமென்பது?

    கதிர்!
    ஆமாங்க.....


    வரதராஜலு!
    உங்கள் கோபத்தை ரசித்தேன்.


    தீபா!
    நன்றி.


    அனானி!
    நான் என்ன சொல்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?



    நேசமிதரன்!
    மிக்க நன்றி.



    அமரபாரதி!
    ஹரிஹரன் அவர்கள் சொன்னதைக் கேட்டீர்களா!


    ஹரிஹரன்!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!