புழுக்கத்தில் இருந்த தமிழ்ச்சினிமாவுக்குள் தென்றலின் தீண்டலாய் பாவிய மொழி படத்திற்கு இரண்டாவது பரிசாம். தமிழ்ச்சமூகத்தின் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு போனால் போகிறது என்று சிறப்புப் பரிசாம். இந்தப்படங்களையெல்லாம் தாண்டி ரசனையை, சிந்தனையை, பண்பாட்டை சீரழிக்கும் சிவாஜி படத்திற்கு 2007ம் ஆண்டு சிறந்த பட விருதாம். ரஜினி சிறந்த நடிகராம். இந்தச் செய்தி, எரிச்சலிலும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. பெரிய அளவில் எல்லோராலும் பேசப்பட்ட பருத்திவீரனை தமிழக அரசு தொலைத்து விட்டது போல. எடுக்கப்பட்ட விதத்தில் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்த கல்லூரியை கணக்கில் வைத்துக் கொள்ளவேயில்லை போலிருக்கிறது.
2008ம் ஆண்டு விருதுகளுக்கும் அதே கொடுமைதான். சீரியஸாய் ஆரம்பித்து காமெடியாகி எல்லோரையும் குழப்ப சுனாமியில் மூழ்கடித்த தசாவதாரம் படம் சிறந்த படமாம். ஒரே நேரத்தில் பத்து மாறுவேடப் போட்டிகளில் கலந்து கொண்ட கமல் சிறந்த நடிகராம்.(இவருக்கு இந்த படத்தில் பின்னணிக்குரலுக்கு வேண்டுமானால் பரிசு கொடுக்கலாம்). தமிழ்ச்சினிமாவுக்கு இன்னொரு அத்தியாயம் எழுதியதாய்ச் சொல்லப்படுகிற சுப்பிரமணியபுரத்தில் ஒரு பிண்ணனிப் பாடகருக்கு மட்டும் விருது கிடைத்திருக்கிறது.
முன்னணி நடிகர்களை கைக்குள் வைத்துக்கொள்வது என்னும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் தந்திரம் அப்பட்டமாய் தெரிகிறது. இந்த அரசியல் ஆலிங்கனத்தில் குருவிக்காரன் எப்படி விடுபட்டுப் போனார் என்பதற்கு என்ன கிளைக்கதை இருக்கிறதோ தெரியவில்லை. அது நமக்குத் தேவையுமில்லை. சன் டி.வியின் டாப் டென்னுக்கும், தமிழக அரசின் விருதுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
மீண்டும் தமிழ்ச்சினிமாவிற்குள் புதியவர்களும், புதிய சிந்தனைகளும் ஒரு மறுமலர்ச்சி போல பிரவேசித்திருக்கிற காலம் இது. கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் எதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்போடு அவர்கள் இருப்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தமிழக அரசு இந்த விருது மூலம் சொல்கிற செய்தி என்ன? பிரம்மாண்டமான படங்கள் பக்கம்தான் தமிழக அரசு நிற்கும் என்பதுதானா? உளி இங்கே சிலைகளை செதுக்கவில்லை, உடைத்துக் கொண்டு இருக்கிறது. அதன் சத்தம் நாராசமாய் கேட்கிறது.
தமிழக அரசு இந்த விருதுகளின் மாண்புகளையும், மதிப்பையும் சீர்குலைத்துவிட்டது. தமிழ்ச்சினிமாவின் மீது கரியை பூசியிருக்கிறது. நல்ல கலைஞர்கள் இப்படிப்பட்ட ‘கலைஞரிடம்’ இருந்து விருதுகளை இனி எதிர்பார்க்க மாட்டார்கள். உலகத் தமிழ் மாநாட்டை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!
பி.கு: சிவாஜி படத்திற்கு ஏன் விருது என்று பதிவர் சுரேஷ் ஆராய்ந்து வயிறு வலிக்கச் செய்திருக்கிறார். நல்ல பதிவு.
*
சன் டி.வியின் டாப் டென்னுக்கும், தமிழக அரசின் விருதுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
பதிலளிநீக்குullathuthaan sir.
நினைத்தேன்.... சொன்னீர்... நூறுவயது...
பதிலளிநீக்குசிறந்த் வசனகர்த்தா விருது நல்ல கூத்து.
பதிலளிநீக்கு//முன்னணி நடிகர்களை கைக்குள் வைத்துக்கொள்வது என்னும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் தந்திரம் அப்பட்டமாய் தெரிகிறது.//
பதிலளிநீக்குஉண்மையச் சொல்லாதீங்க
அன்பு மாதவ்
பதிலளிநீக்குஉங்கள் கோபம் நியாயமானது.
அதே வேளையில் சில விருதுகள் எப்படியோ தப்பி உரிய சில மனிதர்களுக்கு அனுமதிக்கப் பட்டு விட்டது. பிரிவோம் சந்திப்போம் படத்திற்காக சினேகாவும், சிறந்த கதைக்காக தமிழ்ச் செல்வனும்,....என்று பிற விருதுகளில் உண்மையான குழு ஒன்றின் தேர்வும், மற்ற அதிரடி விருதுகளில் அரசியல் அலம்பலும் வெளிப்பட்டிருக்கிறது. உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பற்றி நீங்களும் தான் எழ்தி இருந்தீர்கள். இன்னொரு புறம், தமிழ்த் தொலைக்காட்சி உலகம் அருமையான இயக்குனர்கள் சிலரையும் அழைத்து மீன்டும் கமலுக்கு சலாம் போட வைத்து ஆயுத பூஜை விடுமுறை கொண்டாட்டம் நடத்தியது. உண்மையான ரசிகர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எஸ் வி வேணுகோபாலன்
விருது என்பதே ஜால்ரா கூடத்திற்கு என்ற ஆகிவிட்டது.
பதிலளிநீக்குநாம் என்ன செய்ய முடியும். :(
காலையில் செய்தித்தாள்களில் விஷயத்தைப் பார்த்தவுடன் என் மனதில் தோன்றியதுதான்
பதிலளிநீக்கு// ஆயுதபூஜை அன்னிக்கு கடைக்கு பூஜை போட்டவுடன் கடைக்காரன் வாசல்ல நின்னு இந்தாப்பா பொரி கடலை வாங்கிப்போன்னு ஒரு கவர் நெறைய கொட்டிக்கிட்டு போற வர்ர தெரிஞ்சவஙக்ளுக்கு கவர் கொடுக்கற ஃபார்முலா மாதிரி இருக்கே இந்த விருது மேட்டர் //
சத்தியமா இன்னைக்கு காலைல எனக்கு இப்படித்தான் தோணுச்சு :))))))))
ஆஹா, எங்க தல ரஜினிக்கு சிறந்த நடிகர் விருதா ... கொண்டாடிட வேண்டியதுதான் :)
பதிலளிநீக்குவிருது கமிட்டியினரை மல்லாக்க படுக்கவைத்து காரித்துப்பிக் கொள்ள செய்ய வேண்டும்
பதிலளிநீக்குகுருவிக்காரர் காங்கிரஸின் பக்கம் நெருங்கியதால் குருவிக்கு விருது இல்லை.
பதிலளிநீக்கு//பெரிய அளவில் எல்லோராலும் பேசப்பட்ட பருத்திவீரனை தமிழக அரசு தொலைத்து விட்டது போல. எடுக்கப்பட்ட விதத்தில் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருந்த கல்லூரியை கணக்கில் வைத்துக் கொள்ளவேயில்லை போலிருக்கிறது.//
பதிலளிநீக்கு:((
அய்யா அறிவு சீஈஈஈவி,
பதிலளிநீக்குயார் ஆட்சிக்கு வருவாங்களோ அவங்களோட கூட்டனி வக்கிர உங்க கட்சியின் கொளுகையைதானே ஐயா கலைஞர் பின்பற்றுகிறார்? திமுக மாற்றி அதிமுகவுன்னு நீங்க சொம்படிக்கலாம், ஆனா அவரு அடிக்க்கூடாதோ? நல்லா இருக்கு உங்க ஞாயம்
சார் உங்களுக்கு ரொம்ப பொறாமைக்கும் இருக்கு... இப்படியே யோசிச்சா உடம்புக்கு நல்லதில்ல... உடனே பொய் நல்ல டாக்டரை பாருங்க! உங்களுக்கு தெரியுமா நாங்க என்ன என்ன விருதுகளை விட்டு கொடுத்திருக்க்றோம் என்று?
பதிலளிநீக்குbest producer: red gian movie;
best distributor: Sun pictures;
best Actress: namitha;
best dance master: kala;
best female support: manorama;
best lyricts: kani மொழி;
best movie: kathalil vilunthen
சிப்பு சிப்பா வருது தல!
பதிலளிநீக்குஇணைப்பு கொடுத்திருப்பதற்கு நன்றி நண்பரே..,
பதிலளிநீக்குமிஸ்டர் கருணாநிதியின் குடும்ப அரசியல் வியூகங்களில் இதுவும் ஒன்று. சினிமாவும் தனது குடும்பம் போல பாவித்து தனது அரசியல் பலத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார். மேலும் சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளுக்கு விலை போவகிறார்களே. . பின்னர் எங்கு தரமான சினிமா முன்னிறுத்தப்படும்.
பதிலளிநீக்குஈழப் படுகொலைகளைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கோண்டு கையாளத்தனமாக இருந்த இந்தியா அரசியலை என் வீட்டுக் குப்பைத் தொட்டியில் வைத்திருக்கிறேன். அவ்வபோது காரி துப்பிக் கொள்வதற்கு
நல்ல பதிவு நண்பரே. வாழ்த்துகள்
எல்லோருடைய சார்பாகவும் இப்பதிவை போட்டுவிட்டீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஅதானே பார்த்தன்.. எங்கை மாதவராஜ் இன்னும் பதிவு போடேல்லை எண்டு. இதையெல்லாம் கணக்கில எடுக்காதீங்கோ தோழர்...
பதிலளிநீக்குகாலையில் இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு அதிர்ச்சிதான். பிரமாண்டம் என்ற ஒன்றைத்தவிர வேறெந்த வகையிலும் இந்தப்படம் சிறந்ததல்ல என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குகலைஞரின் கண் இப்போது சரியாக தெரியவில்லைபோலும்.
சினிமாக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி குறைந்துகொண்டே வந்து, இன்னும் சிறிது நாளில் இல்லாமல் ஆகி விடுமோ என்று தோன்றுகிறது. இந்த கண்றாவி திரைப்படங்கள் தமிழை வளர்க்கிறது என்று இதற்கு மக்கள் வரிப்பணத்தை வரிவிலக்காக வாரி வழங்கும் கருணாநிதியை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "உளியின் ஓசை" சிறந்த உரையாடல் என்றால், நான் கடவுள் படத்தை என்னவென்று சொல்வதாம். இத்தனை அநியாயங்களையும் பொறுத்துக் கொண்டு, இந்த விருது வழங்கும் விழாவையும் கலைஞர் மற்றும் சன்டிவியில் தமிழ்ச் சமூகம் நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழத்தான் போகிறது. அதையும் நாம் பார்த்துவிட்டு பதிவு எழுதி அங்கலாய்க்கத் தான் போகிறோம்.
பதிலளிநீக்குஅப்படியே மத்திய அரசு ,
பதிலளிநீக்கு'உளியின் ஓசை' படத்த முழுசா பார்த்தவர்களுக்கு 'பரம் வீர் சக்ரா' விருது குடுத்தால் தேவலாம்.
ஒரே ஒரு தடவைக் கூட பார்க்க சகிக்க முடியாத படத்துக்கு சிறந்தபடம் என்று விருது !!!! பிரமாண்டம் என்று பார்த்தாலும் பாடல் காட்சிகளுக்கு செட்டிங் மட்டும் தான். அதைத் தான் நாங்க எம்.ஜி.ஆர். காலத்திலேயே பாத்துட்டமே...
பதிலளிநீக்குcom,
பதிலளிநீக்குvery effective - timely expression.. what to do with these dirty politics.. tamil film industry is with new current now with many freshers.. they dont need ofcourse, these awards.. they are recognised by people.
link to suresh is nice..
with regards,
pavithra
ரொம்ப கொடுமைதான் மாது.
பதிலளிநீக்குவிருதும் கூட அவரது வீட்டுச்சொத்தாக மாறிப்போனது.
எவ்வளவு தரமான படங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த
வரிசையில் தோழர் தமிழ்ச்செல்வனை எப்படி நிறுத்துவது ?
இந்த மாபெரும் படத்தை என்னைத் தெலுங்கிலும் பார்க்கத் தூண்டிவிட்டீர்கள் ... மிக்க நன்றி :)
பதிலளிநீக்குஅன்பு அண்ணன் மாதவராஜ்...
பதிலளிநீக்குஉங்கள் கோபம் நியாயமானதே... இதே நிலை தொடர்ந்தால் 2009 ம் ஆண்டுக்கான் விருதுப்பட்டியலில் 'கந்தசாமி' இடம்பெறும் அபாயம் உண்டு.
அண்ணே, சின்ன புள்ளைக மண் வீடு கட்டி விளையாடுற மாதிதானே விருதுக... லூஸ்ல விடுங்க...
பதிலளிநீக்குஜிமெயில் படுத்தி எடுக்கிறது. அதனால் தனிமடலில் கேட்க முடியவில்லை. இந்தக் கவிஞர் தங்களூக்கு அறிமுகமுண்டா..?!
http://angumingum.wordpress.com/2009/09/16/pradeepanpoems/
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
நோயுற்ற வலையுலகின் பிரதிநிதி ஒருவரிடமிருந்து, இன்னுமொரு நோயுற்ற பதிவு என்பதைத் தவிர இதற்கு வேறெந்த முக்கியத்துவமும் இல்லை...
பதிலளிநீக்கு-ஷங்கர்
ஐயா கருணாநிதிக்கு வழங்கப்படடிருக்கவேண்டிய மகா நடிகன்விருது ஏன் தவறிப்போய் கமலுக்கும் ரஜனிக்கும் இந்த மகா நடிகனாலேயே விழுந்திருக்கிறது?
பதிலளிநீக்குஇதுவே என்னை அரிக்கும்கேள்வி.
- இருபத்திநான்காம் எலிகேசி கருணாநிதி சக்கிரவர்த்தியின் அரசாட்சியின் மாண்பினைக் கண்டு உலகத்தமிழினம் மலைத்துக் கிடக்கிறது.
- 'ஐயாவின் நிகழ்த்துக்கலை பற்றி சற்று நினைத்தாலேயே... அடடா எப்பேர்ப்பட்ட நடிகனை இதுவரையில் இனம்காணாது விட்டிருந்தோமே!
நம்மைக் கவர்ந்த நடிகர்களெல்லாம் மேடையிலும், திரையிலுமே நடித்திருந்தார்கள். ஆனால் தனது இயல்பான நடிப்பாற்றலால் வாழ்நாள் நடிகனாக அதுவும் பாத்திரத்துடன் இயல்புற ஒன்றியதாக நடித்த மகாநடிகனை இனங்காணாதது குற்ற உணர்ச்சியாகவே துருத்தும்!'
என்ன இருந்தாலும் ஐயாதான் மகா நடிகன்!! - ஏன் இன்னமும் "உலகத்தமிழ் மகா நடிகன்" எனும் புதிய பட்டத்தை வழங்கும் பாராட்டுவிழாவை ஏற்படுத்தாமல் இருக்கிறது? தமிழ்நாடு அரசசபை!
-முகிலன்
தோரணம்
மண்குதிரை!
பதிலளிநீக்குஅனானி!
வடகரைவேலன்!
கதிர்!
வேணுகோபாலன்!
(காமராஜ் சொன்னதை கவனிச்சீங்களா)
தோமா!
அமிர்தவர்ஷிணி அம்மா!
ஜ்யோவ்ராம்சுந்தர்!
(இடம் எங்கே நண்பரே....!)
தண்டோரா!
(ஆனாலும் ஒங்களுக்கு மூக்கு மேலே கோபம்)
ஷாகுல்!
(அப்படியா....!
சந்தனமுல்லை!
அனைவருக்கும் நன்றி.
ரஜினிரசிகன்!
பதிலளிநீக்குஅய்யா முட்டாள் சீவி.... என்னப்பத்தி பேசுங்க....
my dear friend!
உடம்பைப்பார்த்துக் கொள்கிறேன். அக்கறைக்கு நன்றி.
வால்பையன்!
ஊரே சிரிக்குது தல....
சுரேஷ்!
நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.
கே.பாலமுருகன்!
வருகைக்கு நன்றி. தமிழ்மண நட்சர வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகள் எல்லாவாற்றையும் சேமித்துக் கொண்டு இருக்கிறேன்.
அனானி!
அனைவர் சார்பாகவும் நன்றி.
குமாரசாமி!
கணக்கில் எடுக்கவில்லை. தமிழில்தான் எடுத்திருக்கிறேன். :-))))
க.பாலாஜி!
கண்பார்வை சம்பந்தப்பட்டதா இது.....!
ஒப்பாரி!
பகிர்வுக்கு நன்றி.
அஹோரி!
பதிலளிநீக்குஆச்சரியமொன்றுமில்லை நண்பரே....!
அம்பிகா!
அதான.....!
பவித்ரா!
நன்றி.
காமராஜ்!
வேணுகோபால் பதில் சொல்லி இருக்கிறாரே.... பார்த்தியா?
நந்தா!
மிக்க ஸாரிங்க.
சரவணக்குமார்!
என்னங்க... இப்பமே பயமுறுத்துறீங்க...?
செல்வேந்திரன்!
விட்டுருவோம். அந்தக் கவிஞரைத் தெரியாதே.... கவிதைகள் நல்லாயிருக்கு.
ஷங்கர்!
பதிலளிநீக்குகீழ்ப்பாக்கத்திலிருந்து எப்போ தப்பிச்சு வந்தீங்க....!
முகிலன்!
இங்கு அரசியலில் நடிப்பதும், நடிப்பில் அரசியல் செய்வதும் நடந்துகொண்டே இருக்கிறது!!!!!!
/
பதிலளிநீக்குஅஹோரி said...
அப்படியே மத்திய அரசு ,
'உளியின் ஓசை' படத்த முழுசா பார்த்தவர்களுக்கு 'பரம் வீர் சக்ரா' விருது குடுத்தால் தேவலாம்.
/
:))))))))))))))))
விடுங்க மாதவராஜ் சார் நாமபோய் வேலைவெட்டிய பாப்போம்
:)))))))))))
சரியாக சொன்னீர்கள்
பதிலளிநீக்குஉன்னைப்போல் ஒருவன் என்று ஒரு தரமான(?) படம் எடுத்த கமலுக்கு விருது கொடுக்காவிட்டால் தமிழக அரசுக்கு என்ன வேறு வேலை
பதிலளிநீக்கு