கிழிந்தது கிருஷ்ணகிரி!

அது
அதுவாய்க் கிழிய
இது
இதுவாய்க் கிழிய
அதை
அவர் வாய் கிழிய
இதை
இவர் வாய் கிழிய
அப்படியே
அவரவர் வாய் கிழிய
எது எதுவோ
எப்படி எப்படியோ
எங்கெல்லாமோ கிழிய
கிழிந்தது
கிருஷ்ணகிரி!

*

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //கிழிந்தது கிருஷ்ணகிரி// இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .. மற்றபடி வார்த்தை விளையாட்டு அருமை

  பதிலளிநீக்கு
 2. கும்க்க்கிக்கு யாராவ்து போன் போட்டு சொல்லுங்கப்பா!
  அவரு அங்க தான் இருக்குறாரு!

  பதிலளிநீக்கு
 3. :))

  நல்ல செறிவான பொருள் நிறைந்த கவிதை!

  பதிலளிநீக்கு
 4. ஏன் தோழர் இதுல உள்,வெளி,நடு, மேல்,கீழ், சைடு, குத்து ஏதும் இல்லையே...?

  கிழிஞ்சுபோன கிருஷ்ணகிரியிலருந்து,
  கும்க்கி.

  பதிலளிநீக்கு
 5. கிழிவதன் சுகவேதனை ஜனனம்
  அழுவதேன்?

  பதிலளிநீக்கு
 6. அண்ணன் மாதவராஜின் முதல் மொக்கைக் கவிதை இது என்று நினைக்கிறேன்..!

  கும்மிக்கு இடமளிக்கும் அளவுக்கு அண்ணன் இறங்கிவிட்டது வருத்தமளிக்கிறது..!

  பதிலளிநீக்கு
 7. அப்பாவி முரு!
  heam!
  நட்புடன் ஜமால்!
  வால்பையன்!
  நாமக்கல் சிபி!
  கும்க்கி!
  ருத்ரன்!
  யாத்ரா!
  உண்மைத்தமிழன்!
  நாஞ்சில்நாதம்!

  அனைவருக்கும் நன்றி.

  உண்மைத்தமிழன், நிச்சயமாய் மொக்கை கவிதை இல்லை இது.

  பதிலளிநீக்கு
 8. அய்யய்யோ.....!! அய்யய்யோ....!! நா இல்ல ..... நா இல்ல ....... !!!!

  பதிலளிநீக்கு
 9. என்ன சொல்ல வருகின்றீர்கள் சார்?????

  பதிலளிநீக்கு
 10. லவ்டேல் மேடி!
  இனியவன்!

  நன்றி.

  தமிழில் ‘கிழிதல்’ என்னும் வார்த்தை பல பிரயோகமும், அர்த்தமும் கொண்டதாக இருக்கிறது. ‘கோடு கிழித்தான்’,’படித்துக் கிழித்தான்’, ‘வாய் கிழியப் பேசினான்’, ‘கிழிந்தது கிருஷ்ணகிரி’
  ‘கிழி கிழி என்று கிழித்தான்’ என அதன் சொல்லாடல்களுக்கு பல தன்மைகள் இருக்கின்றன. அதனைச் சொல்லவே இப்படியொரு கவிதை முயற்சி செய்தேன். இன்னும் திருத்தினால், கவித நன்றாக வரக்கூடும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. மொழி விளையாட்டு...
  நல்லாவும் இருக்கு.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!