காதல் வகுப்புகள்

child watching tv

 

கதாநாயகி போகும் இடமெல்லாம் கதாநாயகன் வந்து நின்றான். அவள் பின்னாலேயே போனான். தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த யூ.கே.ஜி படிக்கும் சிறுவன் கேட்டான். ”ஏம்மா.. அவன் அவளை டிஸ்டர்ப் செய்றான்”.

பத்திரிகை ஒன்றில் ஒரு கதாநாயகன் ஒரு கதாநாயகியை கட்டிப் பிடித்த நிலையில் இருந்தான். அதற்கு கீழே சிறுவன் எழுதினான். “திஸ் இஸ் நோ மேரேஜ். ஐ திங்க் லவ் மேட்டர்”. அப்போது அவன் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

மெகா தொடர் ஒன்றில், இருட்டான அறையில் தனியாய் ஒரு பெண் மேஜை விளக்கின் வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருந்தாள். இடையிடையே பொங்கி வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டும் இருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் சொன்னான். “இப்போ அவ வீட்டை விட்டு சூட்கேஸோடு ஓடிருவா”. சிறுவன் இப்போது இரண்டாம் வகுப்பு.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நிதர்சனம் !


  காதல் வகுப்புக்கள் இப்பொழுது வீட்டுக்கே தொலைக்காட்சிகள் மூலம்,இளைய தலைமுறைகளுக்கு மிக எளிதான வகுப்பாகவே நடைப்பெற்றுவருகின்றன :(

  பதிலளிநீக்கு
 2. கொடும தான்... என்ன செய்யுறது? காதல் மட்டுமா, எல்லா கருமமும் தான் வீட்டின வரவேற்பரைக்கே தொலைகாட்சி மூலம் வந்துவிடுகிறது :(

  பதிலளிநீக்கு
 3. ஹ்ம்ம்! பார்க்கக் கூடாதுன்னு பொத்தி பொத்தி வள்ர்க்கப்பட்ட ஒரு தலைமுறையினர்,தனது அடுத்த தலைமுறையை பார்த்துத் தெளியட்டும்னு நினைச்சுட்டாங்களோ! :-)

  பதிலளிநீக்கு
 4. இதாவது பரவாயில்லை இப்பொழுது வரும் விளம்பரங்களை பாருங்கள். குறிப்பாக உடல் நாற்றத்தை போக்க அடிக்கபடும் ஒரு perfume விளம்பரம் மற்றும் ஒரு பற்பசை விளம்பரம் இரண்டிலும் அதை உபயோகித்தால் நிங்கள் அருகில் செல்லும் பெண் அது போலிஸாக இருந்தாலும் உங்களை கற்பழித்து விட்டு தான் மறுவேலையே. நிங்கள் உபயோகிக்கும் எங்கள் நிறுவன பொருள் பெண்களை அப்படி ஒரு வெறி எற்றும் என்று நேரடியாகவே விளம்பரம் செய்கிறார்கள்.இதை
  என்னவென்று சொல்ல. விளங்கிவிடும் நம் சமுதாயம். வாழ்க நம் காலச்சார காவலர்கள்.

  பதிலளிநீக்கு
 5. மன்னிக்கவும் ஒரு பின் குறிப்பு முந்தய பின்னூட்டத்தில் சொல்லாமல் விட்டது. உடல் நாற்றத்தை போக்க அடிக்கபடும் ஒரு perfume விளம்பரம். உடல் நாற்றம் என்று சொல்வதும் அவர்கள் தான்.

  பதிலளிநீக்கு
 6. கதை சிறிதானாலும் காரணம் பெரிது
  இதில் பெற்றோர்களுக்கும் பெரும் பங்குண்டு என்று என்னுகின்றேன் அவர்கள் தங்களுடைய விருப்பத்தை மட்டுமேதான் பார்கின்றார்கள். பிள்ளைகளின் விருப்பங்கள் ஐஸ்க்ரீம், பொம்மை, வீட்டுபாடம், இதுதான் என்று என்னுகின்றனர். தொலைகாட்சியில் பலிவாங்கும் நாடகம், காதல் படம் வன்முறை சம்பவம், இவைகள் தான் எல்லா வீடுகளிலும் ஓடிக்கொண்டிருக்கின்றது யார் வீட்டிலாவது முழுமையாக குழந்தைகள் நிகழ்ச்சி ஓடுகின்றதா, வாங்கும் பத்திரிக்கையில் வரும் சிறுவர்மலரை எந்த தகப்பனாவது தன் குழதையிடம் படிக்க கொடுத்திருக்கின்றானா அல்லது சிறுவர்களுக்கான பத்திரிக்கை புத்தகம் ஏதாவது வாங்கியிருப்பானா. கிடையாது பெரியவர்களுக்கு அவர்களின் தேவைமட்டுமே முழுமையானதாக அறிந்திருக்கின்றனர்
  சிறுவர்களின் விருபங்களையும் தேவைகளையும் ஒரு வரையறுக்குள்
  வகுத்து அதையே பின்பற்றுகின்றனர். இப்படி இருக்கும் போது சிறுவர்கள்
  பெரியவர்கள் பார்க்கவேண்டியதை படிக்க வேண்டியதைதான் அவர்களுக்கும் நிர்பந்திக்கபடுகின்றது அதனால் அவர்களின் என்னங்களும் பிஞ்சிலேயே பழுக்க துவங்கிவிடுகின்றது.

  பதிலளிநீக்கு
 7. சிந்திக்க வைக்கும் பதிவு.

  //சந்தனமுல்லை: பார்த்துத் தெளியட்டும்னு நினைச்சுட்டாங்களோ! :-)//

  :-)))

  பதிலளிநீக்கு
 8. குழந்தைகளை நல்வழி படுத்த டிவி தொடர்கள் மற்றும் விளம்பரங்களை சென்சார் செய்து வெளியிடும் போது எதிர்கால சந்ததி நல்ல விருட்சம் வேருன்றி வளரும்

  பதிலளிநீக்கு
 9. கொஞ்சம் யோசிக்க வைத்த பதிவு!!! எவ்வளவு ஆழமான பதிதல்!!!

  சொல்லவேண்டியதை முத்துராமலிங்கம் அவர்கள் சொல்லிவிட்டார்...

  பதிலளிநீக்கு
 10. ஆயில்யன்!
  ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. நன்றி.

  பிரேம்குமார்!
  கவனமா இருங்க... இது ஒரு பிரச்சினை இல்ல. நாம் குழந்தைகளோடு சரியான அர்த்தத்தில் உரையாடணும்.

  சந்தனமுல்லை!
  தீபா சொல்றத கேட்டிங்களா...

  வெங்கடேஷ் சுப்பிரமணியம்!
  முக்கியமான விஷயம்.இதை எதிர்த்து பெரும் கருத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டியதிருக்கிறது.

  முத்துராமலிங்கம்!
  சரியாகச் சொன்னீரிகள். குழந்தைகளுக்கு நாம் அவர்களின் உலகத்தைப் பறித்துவிட்டு, நமது உலகத்தை காண்பிப்பதன் விளைவு இது.

  தீபா!
  சந்தனமுல்லையிடம் சொல்லிட்டேன்.

  அனானிமஸ்!
  இன்னும் யோசிக்கலாம்.

  ஆதவா!
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!