சொலவு நிறைய சுண்டைக்கா!

village

 

“சொலவு நிறைய சுண்டைக்கா
விடிஞ்சு பாத்தா ஒண்ணுமில்ல?”

புதிர் போடுகிறாள் அந்த பனிரெண்டு வயதுச் சிறுமி. ஆள் ஆளுக்கு ஒவ்வொன்று சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் இல்லை, இல்லை, என்று சொல்லிக்கொண்டே அடுத்த புதிருக்கான யோசனை செய்கிறாள்.

யாரோ “நட்சத்திரம்” என்று சொல்ல.... அடுத்த விடுகதை வருகிறது.

“கோட்டுக்குள்ளக் கெடந்து
குத்துப்படுற ஜாதி... அது என்ன?

திரும்பவும் யோசிக்கிறார்கள். புதிர் போடும் பள்ளிக்கூடம் சென்றதில்லை. இப்போதுதான் அறிவொளியில் படிக்க ஆரம்பித்திருக்கிறாள். அவள் சொல்லும் விடுகதைகளில் உள்ள அருமைகளை அறிந்திருக்கவில்லை. உவமைகளும், படிமங்களும் அற்புதமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. அவளைப் பொறுத்த வரையில் அது ஒரு விளையாட்டு. அவ்வளவே.

“சின்னப் பையன் வந்தான்
திருடன் ஒடிப் போனான்... அவன் யார்?”

“ராஜா மக
பூ வைக்காம
சட போட மாட்டா... அவள் யார்?”

“முங்கி முங்கி
மண் எடுக்கும்
மூளிப் புறாக்குஞ்சு... அது என்ன?”

சுரங்கம் போல் விடுகதைகள். ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் நுட்பம் அதிசயம் தருகிறது. புதிர் அவிழ்க்கப்பட்டதும் ‘அட’ சொல்ல வைக்கிறது. விடுகதைகளின் விடைகளை நீங்களும் யோசியுங்கள். விளையாட்டுத்தான்... கூடவே இலக்கியமும்!

பி.கு:  டிசம்பர் 1993ல் நாங்கள் நடத்திய விழுது பத்திரிக்கையில் எழுதியது இது.

 

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. “சொலவு நிறைய சுண்டைக்கா
    விடிஞ்சு பாத்தா ஒண்ணுமில்ல?”

    இந்த ஒரு விடுகதைக்கு மட்டும்தான்
    எனக்கு விடை தெறிந்திருந்தது

    உண்மையாக சொன்னீர்கள்
    நம் அன்றாடங்களின் வழியே நமக்கு நிறைய விசயம் சொல்லி வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்
    அதில் இலக்கியம், பக்தி, ஆரோக்கியம்
    பன்பு, இப்படி எல்லாமே இருக்கு
    அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுகதை மூலமும் உள்ளதை சொல்லியிருக்கீங்க உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  2. சஸ்பென்ஸ் தாங்க முடியல.நீங்களே விடை சொல்லிருங்க

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.

    விடுகதைகள் அறிவை மட்டும் அல்ல மனிதம், எண்ணங்கள் மேபாடு, சக மனிதர்களை மதித்தல் போன்ற நல்ல பழக்கங்களையும் கற்று கொடுக்கின்றன.

    பொருள் ஈட்டும் அவசரத்தில் நாம் விடுகதைகள், இலக்கியங்களை மறந்து விடுகிறோம்.

    விடுகதைகள் அறியாமலேயே அடுத்த தலைமுறை வளர்ந்து விடுமோ என்ற கவலை உள்ளது.

    குப்பன்_யாஹூ

    பதிலளிநீக்கு
  4. //ராஜா மக
    பூ வைக்காம
    சட போட மாட்டா... அவள் யார்?//

    பூமாலை?

    மற்றது முடியல, Sir நீங்களே சொல்லிருங்க..

    பதிலளிநீக்கு
  5. ஏங்க... இது நியாயமா.. நமக்கும் கேள்விக்கும் ரொம்ப தூரம்....

    எழுத்து நடை நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. இன்னைக்கு மக்கள் தொலைக்காட்சியில குழந்தைகளோட விடுகதையும் விளையாட்டுமா ஒரு நிகழ்ச்சி பார்த்தேன், அந்த மழலையில் கரைந்து போனேன்,

    இங்கு நீங்கள் உங்கள் பதிவில்,,,,

    விடைகளை நீங்களே சொல்லிடுங்க சார், எனக்கு ஒன்னுத்துக்கு கூட பதில் தெரியல சார்.

    பதிலளிநீக்கு
  7. நண்பர்களே!

    இன்னும் கொஞ்சம் யோசியுங்களேன்.

    பதிலளிநீக்கு
  8. அபாரமான விடுகதைகள். ஒன்றுக்கும் விடை தெரியவில்லை என்பதைப் பெருமையுடன் (!) அறிவித்துக்கொள்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க மாதவ்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  9. அன்பின் நண்பருக்கு,

    சிறுவர்கள் எப்பொழுதுமே தமக்குத் தெரிந்திருக்கும் மொழிகளின் சொற்ப அளவிலிருந்தும் விசித்திரங்களை அள்ளித்தருகிறார்கள். ஆச்சரியப்படுத்துகிறார்கள். உங்கள் பதிவையும் பார்த்தபொழுது அது மீண்டும் உறுதியாகிற்று.

    உங்கள் 'விழுது' பத்திரிகையை நீங்கள் மீண்டும் இணையத்தில் தொடங்கினால் என்ன நண்பரே ?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!