தேசத்திடம் இன்று ஒரு குழந்தையின் கேள்வி.

 

 

 

 

வீசியெறிந்து அப்புறப்படுத்தப்பட்ட
என்னைப் போல இருந்த ஒருவன்
என் மீதே வந்து விழுந்தான்.


தீப்பிழம்பும், இரத்தச் சிதறல்களும், உயிரற்ற உடல்களும்
என் வரவேற்பறை தாண்டியும் குவிந்து கிடக்கின்றன.
மரணத்தை எட்டிப் பார்த்து விட்ட சிலரின் கண்கள்
என்னோடு தொடர்ந்து பேசுகின்றன.


கண்கள் குளமாக நா வறண்டு
பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கிறேன்.


"நிலைமைக் கட்டுக்குள் வந்துவிட்டது
பிணையக் கைதிகளை விடுவித்து விடுவோம்
நாளைக் காலைக்குள் அவர்களைப் பிடித்து விடுவோம்.'
மெடல்கள் குத்தப்பட்ட காவல்துறை அதிகாரி பேட்டியளிக்கிறார்.


"அந்நிய நாட்டின் சதி.
இந்தியாவின் வர்த்தக நகரை சிதைப்பதேஅவர்களின் திட்டம்'
அவசரமாகக் கூடிய அமைச்சரவைக்குப் பின்னர்
பிரதமரும் பேட்டியளிக்கிறார்.


டியுஷன் விட்டு வந்து,
அருகில் அமர்ந்து,
என் மகன் கேட்கிறான்.
"இது என்ன சினிமா?"

கருத்துகள்

25 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //என் மகன் கேட்கிறான்.
    "இது என்ன சினிமா//
    நிகழ்ந்தது சினிமா படப்பிடிப்பாய் மட்டுமே இருந்து விடாதா என்றுதான் ஆதங்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. சின்ன அம்மிணி!

    நடந்தது எதுவும் புரியாத அந்தக் குழந்தையை பாவம் என்று சொல்வதா, பாக்கியவான் என்று சொல்வதா, தெரியவில்லை.
    Life is beautiful படத்தில் வரும் கதாநாய்கன் கியுடோவின் நிலையில் நான் இருக்கிறேன்.
    அந்தக் கேள்வி ஓராயிரம் கேள்விகளை எழுப்பியபடி இன்னும் எனக்குள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. யதார்த்தம் படீரென முகத்தில் அறைகிறது

    பதிலளிநீக்கு
  4. The Bombay incidents warrant condemn from all people of the nation.But unfortunatily many people really dont know what actually happened during the 48 hours of yesterday.
    Likewise the young SON asked you.The other side of the life and the cinema are not beautiful.It is true.
    vimalavidya@gmail.com
    ---9442634002

    பதிலளிநீக்கு
  5. மாதவராஜ்,
    படத்தை பார்த்தும் எனக்கு தோன்றிய கவிதை.

    என்னை
    மிகவும் கவனமாக
    அழைத்துக்கொண்டு
    போங்கள் காவலரே
    மகன் மறு மகள்
    பேரன் பேத்திகளுக்கு
    கொள்ளி வைக்க வேண்டும்
    நான்தான் ஒரே வாரிசு

    பதிலளிநீக்கு
  6. முரளி கண்ணன்!

    எனக்கு முகத்தில் விழுந்த அறைதான் உங்களுக்கும் விழுந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. விமலாவித்யா அவர்களுக்கு!

    ஆமாம். வாழ்க்கை இங்கு மிக மோசமாகி இருக்கிறது.
    ஏன் தீவீரவாதிகள் இந்தியாவை குறி வைத்திருக்கிறார்கள்?
    பத்து பேர் அழிவின் ஆயுதங்களோடு நூறு கோடி பேர் வசிக்கும் நாட்டை நிலைகுலையச் செய்ய முடியுமா?
    தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தவரையும் கொன்றுவிடுகிற மனநிலை எப்படி வருகிறது?
    கேள்விகளாய் துரத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  8. ரவிசங்கர்!

    ஆமாம்.
    பாவம் பையன்.
    பாவம் எதிர்காலம்.

    பதிலளிநீக்கு
  9. SMALL IDEA!! BUT BIG PROJECT!!
    We must introduced "SCANNER SYSTEMS" for luggages in Hotels,Railway stations,City enterance gate,Bazaar malls,Bus stations and where ever its possible.If it was happened we can avoid 60% to 70% of terrorist attacks !!!

    பதிலளிநீக்கு
  10. குழந்தை நிகிலின் கேள்வி தேசத்துக்கு மட்டுமல்ல மனிதகுலத்துக்கே தலை‌குனிவு.


    //பத்து பேர் அழிவின் ஆயுதங்களோடு நூறு கோடி பேர் வசிக்கும் நாட்டை நிலைகுலையச் செய்ய முடியுமா?
    தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தவரையும் கொன்றுவிடுகிற மனநிலை எப்படி வருகிறது?
    கேள்விகளாய் துரத்துகின்றன//

    உண்மை தான். பிடிபட்ட தீவிரவாதியின் வாக்குமூலத்தைக் கேட்டீர்களா? கொஞ்சமும் வருத்தமில்லையாம். நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறான். எப்படி வருகிறது இந்த இரக்கமில்லாத, மனிதாபிமானமில்லாத கயமைத்தனம்?

    பதிலளிநீக்கு
  11. நேற்று எனக்கு ஒருவன் விளக்கம் சொன்னான், சிலர் கோல்fவ் விளையாடுகிறார்கள். எவ்வளவு பணச் செலவு. பந்தை தட்டுகிற அந்தக் குச்சி எவ்வளவு விலை. சிலருக்கு அது பிடிக்காது. ஏன் விண் செலவு என்று? ஆனால் விளையாடுகிறவர்கள் என்ன சொல்லுகிறார்கள். தங்களிடம் பணம் இருக்குது. விளையாடுகிறான். அதனால் மற்றவர்களுக்கு என்ன என்று? அதே மாதிரித் தான் அவர்களின் மன நிலையும். பாதிக்கப் பட்டால் சத்தம் போடுகிறார்கள். இல்லாவிட்டால் மூடிக் கொண்டு போகிறார்கள். கோல்fவ் விளையாடுறவன் எவ்வளவு பேரைக் கொள்ளை அடித்து இருப்பான். அந்தக் களம் எவ்வளவு பேரின் நிலத்தை அபகரித்து இருக்கும்.மனசு நொந்து இருப்பானா? அவனுக்கு அவன் மகிழ்ச்சி முக்கியம். அதேபோல் கொலை காரனுக்கும் அவன் மகிழ்ச்சி முக்கியம். சமுதாய கண்ணோக்கமே மாற வேண்டும். இல்லாவிட்டால் இன்னமும் வரும்.

    பதிலளிநீக்கு
  12. yes>>for the question "on mind" we have to go through the psycological analysis.When man became frastrat, he starts hate all things under the sun>>..Then he will forget his own son also.Even at the peak of his frastration he will not bother to kill his own too... when The social conditions became worst a man will became agitated.That turning should be on good way and for changes in right direction.
    vimalavidya@gmail.com

    பதிலளிநீக்கு
  13. Very true. We must find out the psychological reasons behind terrorism and attempt to remove its causes from the society. Social and political imbalance forces people to become monstrous.
    What's the point of civilization when one section of people are so provoked to totally annihilate another section?

    பதிலளிநீக்கு
  14. உங்களைப் போலவே உணர்ச்சிப்பெருக்கில், ஒப்பாரி என்ற தலைப்பில் ஒரு சகோதரி எழுதிய கவிதைக்கு பின்னோட்டம் இடுகையில் நான் எழுதினேன்:

    "அந்தக் காலத்தில் அறம் பாடியே அழித்த புலவர்கள் இருந்ததைப் போல, இப்போதும் இருக்க முடிந்திருந்தால், கத்தியின்றி, ரத்தமின்றி இந்தக் கொடூரர்களை நாம் அழித்திருக்க முடியுமே!"

    மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!

    தமிழன் வேணு

    பதிலளிநீக்கு
  15. தீபா!

    //குழந்தை நிகிலின் கேள்வி தேசத்துக்கு மட்டுமல்ல மனிதகுலத்துக்கே தலை‌குனிவு.//
    ந்மது ஊடகங்கள்தான் இதற்கு பொறுப்பாகின்றன.
    யுத்தத்தை விளையாட்டாகவும், விளையாட்டை யுத்தம் போலவும் அவர்களே இங்கு திணிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஆட்காட்டி அவர்களுக்கு!

    //சமுதாய கண்ணோக்கமே மாற வேண்டும். இல்லாவிட்டால் இன்னமும் வரும்.//

    உண்மை.
    உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசிக்கிற யாரும், இப்படித்தான் பார்க்க முடியும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. விமலா வித்யா அவர்களுக்கு!

    //when The social conditions became worst a man will became agitated.That turning should be on good way and for changes in right direction.
    //

    எவ்வளவுச் சரியாகச் சொல்கிறீர்கள்.
    இந்த என்.டி.டி.வி யில் நேற்று பேசிய யாரும் இப்படியெல்லாம் பொறுப்பாகப் பேசியதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  18. தீபா!

    //Social and political imbalance forces people to become monstrous.
    What's the point of civilization when one section of people are so provoked to totally annihilate another section?//

    சல்யூட் மேடம்!

    பதிலளிநீக்கு
  19. வேணு!
    //அந்தக் காலத்தில் அறம் பாடியே அழித்த புலவர்கள் இருந்ததைப் போல, இப்போதும் இருக்க முடிந்திருந்தால், கத்தியின்றி, ரத்தமின்றி இந்தக் கொடூரர்களை நாம் அழித்திருக்க முடியுமே!//

    அறம் இருந்தால் அல்லவா, அறம் பாட?
    இந்தியாவின் மீது அவர்களுக்கு ஏன் இந்தக் கோபம் என்பதிலிருந்து நாம் நமது உரையாடல்களைத் துவங்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. Uncle, here's a very inspirational post by journalist Annie Zaidi on the same subject.

    http://www.anniezaidi.com/2008/11/incomprehensible-and-uncomprehending.html

    பதிலளிநீக்கு
  21. தீபா!

    அந்தக் கட்டுரையை படித்தேன்.

    தர்க்க பூர்வமாகவும், நடைமுறை வாழ்க்கையோடு உண்மைகளை எடுத்துரைத்தும், பிரமாதமான எழுத்து நடையில் வந்திருக்கிறது.
    அந்த பத்திரிக்கையாளரின் பெயரைக் குறிப்பிட்டு- நீ படித்ததை, உனக்கு பாதித்ததை தமிழில் சொல்ல முயன்றிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  22. Right Uncle! I would like to do that. But I just can't find the time. Somehow I manage to read your blog everyday! :-)

    பதிலளிநீக்கு
  23. தீபா!

    உன்னுடைய சிரமங்கள் எனக்குத் தெரியும்.
    அதனால்தான் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறேன்.
    இல்லையென்றால், ரொம்ப தொந்தரவு செய்திருப்பேன்.
    ஆனாலும், இத்தனைக்கும் மத்தியில், நீ படிப்பது, அவ்வபோது எழுதுவது சந்தோஷம்தான்.

    பதிலளிநீக்கு
  24. நீங்க‌ள் கொடுக்கும் வேலைகள் என‌க்குத் தொந்த‌ர‌வே இல்லை. ம‌கிழ்ச்சியோடு செய்வேன்
    தீபாதேன் (என் கல்லூரித்தோழி) அவ‌ர்க‌ளுக்கு 2 மாத‌க் குழ‌ந்தையும் கொஞ்ச‌ம் பெரிய‌ குழ‌ந்தை ஒன்றும் உள்ளனர். அப்படி இருக்கும் போது அவ‌ர்க‌ளின் படிக்கும் ஆர்வத்தை வெகுவாக‌ப் பாராட்ட‌ வேண்டும் இல்லையா?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!