-->

முன்பக்கம் , , � சொல்லுங்கள் பார்ப்போம்!

சொல்லுங்கள் பார்ப்போம்!

எள்ளலுடன் வேதாந்தம் பேசும் இந்தக் கவிதைகள் நாடறிந்த இலக்கியவாதி ஒருவரின் படைப்புகள். எழுதியவரைத் தெரிகிறதா? சொல்லுங்கள் பார்ப்போம்.

(1)


ஒற்றைச் செருப்பு
ஒன்று கிடக்கிறது
இடமோ வலமோ
எதுவும் தெரியவில்லை
குப்புறக் கிடந்து
குமுறி அழுகிறது
இணையைப் பிரிந்த
இலக்கியச் சோகம்
இதற்கு மட்டும்
இல்லையா என்ன?

 

(2)

எதிர் வீட்டுச் சன்னலை
எவரோ திறக்க
என் வீட்டில் வெளிச்சம்
எவ்வாறு வருகிறதோ?
புதிரான உலகில்
புதிராக வந்தேன் - இதில்
புரிகின்ற செய்தி எதுவோ?

Related Posts with Thumbnails

12 comments:

 1. ஜெயகாந்தன் அல்லது வைரமுத்து அல்லது கலைஞர் கருணாநிதியா

  இரண்டாம் கவிதை அருமை, சூரியன் மனிதர்களிடம் ஜாதி, மதம், ஏழை பணக்காரன், கறுப்பன், வெள்ளை என்ற பாகுபாடு பார்ப்பதில்லை.

  எல்லோருக்கும் ஒரே அளவில் தன ஒளியை வெப்பத்தை அளிக்கும் சூரியனுக்கு வணக்கங்கள்.

  ReplyDelete
 2. முதல் கவிதை வெகு அருமை

  ReplyDelete
 3. நல்ல கவிதைகள். பகிர்விற்கு நன்றி!

  ஆனால், இதை இப்ப பகிர்ந்திருக்க வேணாம் குசும்பரே. :-)

  ReplyDelete
 4. ராம்ஜி!

  அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
  நன்றி.

  கதிர்!
  நன்றி.

  ReplyDelete
 5. பா.ரா!

  இந்தக் கவிதைத் தொகுப்பு ரொம்பநாட்களாய் வீட்டில் இருந்தது. இன்றுதான் நிதானமாய் படித்தேன்.

  புழுக்கத்திலிருந்து கொஞ்சம் நிதானமாக சுவாசித்தது போலிருந்தது.அதில் இரண்டை பகிர்ந்து கொண்டேன். சுவார்சியமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தோன்றியது.

  ஐயா, கவிஞரே!
  தாங்கள் எதாவது அர்த்தம் கற்பித்து, மீண்டும் புழுக்கத்தில் ஆழ்த்திவிடாதீர்கள்.

  ReplyDelete
 6. who is the author of the poem, is it you or Kamaraj

  I am curious to know.

  ReplyDelete
 7. இதில்

  புரிகின்ற செய்தி எதுவோ?

  ReplyDelete
 8. :-))

  தெரியும் மாது. எல்லோரும் அடைந்துதானே கிடக்கிறோம். வம்பிழுத்தாவது 'வெளியில்' வர வைக்கத்தான்..

  ReplyDelete
 9. மாதவராஜ் இரு கவிதைகளும் அருமை

  பூவை வைத்து -ஒரு
  புனைவாம் - அதை
  எழுதியவன் - இங்கு
  நாராய் போனான்.

  அடுத்து ...

  நீதி கதை சொல்ல - கிழ
  ஓணாய் வந்ததாம் - அது
  தப்பான கதையை சொல்லி
  கழிவு நீரில் வீழ்ந்ததாம்.

  ReplyDelete
 10. கவிதை நல்லா இருக்கு.
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 11. முதல் கவிதை எனக்கு ரொம்ம பிடித்தது.
  இரண்டாம் கவிதை புரியல.

  ”இங்க” எழுதியது.... நீங்கதான்!!!

  ReplyDelete
 12. ரசித்த அனைவருக்கும் நன்றி.

  எழுதியவர், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவரது கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்து பகிர்ந்திருக்கிறேன்.

  சந்தேகத்தின் பேரில் சொன்ன ராம்ஜி யாஹூவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete