Type Here to Get Search Results !

இப்படியும் மூன்று சினிமா விமர்சனங்கள்!

அவதார்:

ஒபாமாவை நாயகனாக அவதாரம் எடுக்க வைத்த ஆங்கிலப்படம். தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அமெரிக்கக் கப்பல் பொருளாதாரச் சரிவால் மூழ்கியதை எடுத்த படக்குழுவினரின் அடுத்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு. படம் தயாரித்துக் கொண்டு இருக்கும்போதே ஒபாமாவுக்கு பரிசு கிடைத்திருந்தது கூடுதல் சிறப்பு. பிரம்மாண்டமாக இருக்கிறது. தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒபாமாவினர் செய்யும் சாகசங்களும், தந்திரங்களும் அதிரவைக்கின்றன. கடைசிக் காட்சியில் ஒபாமா, செல்போனை எடுத்து “என்ன, இன்னும் முப்பதாயிரம் பேர் தேவைப்படுகிறார்களா.” எனச் சொல்வதுடன் படம் முடிவடைகிறது. இதன் அடுத்த பாகம் வரக்கூடும். இன்னொரு பரிசும் ஒபாமாவுக்கு உண்டுதான் போலும்.

 

வேட்டைக்காரன்:

பா.ஜ.கவின் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடுகிறார் கதாநாயகர் மோகன் பகவத். அத்வானியுடனான மோதல்தான் கதையின் முக்கியமான பகுதி. படத்தின் முதற்பகுதியில் அத்வானி முரண்டு  பிடித்தாலும், பிற்பகுதியில் தாக்குப் பிடிக்க முடியாமல் வெள்ளைக்கொடி காட்டுகிறார். வெளியில் அது சமாதானம் போலத் தெரிந்தாலும், சரணாகதி என்பது பார்வையாளர்களுக்குப் புரிகிறது. அடைக்க முடியாத பெரிய ஓட்டையை பா.ஜ.கவில் வேட்டைக்காரன் போடுகிறான்.

 

நான் அவன் இல்லை – 3 :

படம் எடுத்ததே தெரியாமல் திடுமென ரிலீசான படம். ஏற்கனவே இந்தப் படத்தின் தலைப்பும், அதில் சொல்லப்படுகிற செய்தியும் பரபரப்பானவை என்பதால் இந்த மூன்றாவது படமும் எகிறுகிறது. கதாநாயகனாக என்.டி.திவாரி நடித்துள்ளார். இந்தப் படத்தின் துவக்கத்திலேயே அப்பாவிப்பெண் ஒருவரை ஏமாற்றிய வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார் திவாரி. அப்பாவிதானோ என நினைப்பதற்குள் வில்லத்தனமான காட்சிகள் துவங்குகின்றன. தள்ளாத வயதிலும், அவர் தறிகெட்டு ஆடுவது கண்டு அதிர்ச்சி ஏற்படுகிறது. கையும், களவுமாக சிக்கியவுடன் ‘இதெல்லாம் சும்மா, செட்டப்’ என அலறுகிறார். கிளைமாக்சில் சொந்த ஊருக்கு ரகசியமாக திரும்புகிறார். அங்கும் “நான் அவன் இல்லை” என்கிறார். ஊரே சிரிக்கிறது.

(நண்பர் கணேஷ் எழுதிய கற்பனை விமர்சனங்கள் இவை!)

 

கருத்துரையிடுக

11 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. (இங்கே உள்ள)மூன்றுமே நல்லாத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. அவதார்: - A Class audience

  வேட்டைக்காரன்:- B Class audience

  நான் அவன் இல்லை – 3 :- C Class audience


  - Juergen

  பதிலளிநீக்கு
 3. விமர்சனம் அருமை. குறிப்பாக அவதாரில் ஒபாமா பேசும் இறுதி வசனம். மிக அருமையாக எழுதியிருக்கிறார் நண்பர் கணேஷ்.

  பதிலளிநீக்கு
 4. தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 5. அன்பு மாதவ்

  கணேஷ் எப்பொழ்தும் இப்படி திரைப்படங்களை வைத்து, அரசியல் அரங்கில் அட்டகாசம் செய்யும் பேர்வழிகளை அசத்தலாக அம்பலப்படுத்துவார். அது சரி, ஆயிரத்தில் ஒருவன்,இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம், குட்டி போன்ற அற்புதமான தலைப்புகளை ஏன் விட்டுவிட்டார்? இடவசதி காரணமாகவோ...

  குட்டி: இது தமிழகத் தலைவரின் சிறப்புப் பொங்கல் வெளியீடு. தயாநிதி மாரனைத் தலையில் 'குட்டி' வைக்கிற பழைய காட்சியோடு டைட்டில் போடப்படுவது அருமையிலும் அருமை. அப்படியே, அழகிரி திருமங்கலம் வாக்காளர்களைக் குட்டுவது, ராசா ஸ்பெக்ட்ரம் தலையில் 'குட்டி' விளையாடுவது....என்று பெரிய பெரிய விஷயஙளையெல்லாம் எப்படி 'குட்டிக்' குட்டி ஆக்குகிறார்கள் என்று விரிகிற திரைக்கதையில், அடிக்கடி தமிழகத் தலைவரின் கழுத்தில் இருக்கும் குட்டி மஞ்சள் துண்டும் காட்டப்படுவது விசில் பறக்க வைக்கிறது.

  இது எப்படி இருக்கு?

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 6. சுரேஷ்(பழனியிலிருந்து)
  செம குசும்பு உங்களுக்கு. அந்தப்படத்தில் நடித்த கதாநாயகி தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்.... போதுமா!


  நவாஸூதீன்!
  ரொம்ப நன்றி.

  அனானி!( Juergen)
  இப்படியும் பார்க்கலாமா..! நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சரவணக்குமார்!
  நன்றி தம்பி!


  பா.ரா!
  ரசித்தீர்களா.... போதும் மக்கா!


  அண்ணாமலையான்!
  தெரிந்துகொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. எஸ்.வி.வி!
  கணேஷை கொஞ்சம் வலையில் வெளிக்கொண்டு வரமாம் என்றுதான்....
  உங்களது குட்டி விமர்சனம் அருமை!


  அமுதா!
  நன்றி.....

  பதிலளிநீக்கு