Type Here to Get Search Results !

வீடு தேடி வரும் பட இயக்கம்: ஞாநி அவர்களின் அழைப்பு!

எழுத்தாளர் ஞாநி அவர்களின்  இந்த முயற்சி புதுமையானது மட்டுமல்ல, தேவையானதாகவும் இருக்கிறது. மக்களின் ரசனையை மேம்படுத்தும் நோக்கில் துவங்கப்படும் இது போன்ற காரியங்களுக்கு நல்ல உள்ளங்கள் துணையாகவும், தூண்டுதலாகவும் இருக்க வேண்டும்.

 

தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒரு அவலம்தான். அந்தக் கவலையோடு புறப்பட்டு இருக்கும் இந்த இயக்கம் வலுப்பெறுவது காலத்தின் அவசியம்.

 

இந்த வலைப்பக்கத்தில்  பதிவு ஒன்றுக்கு அவர் பின்னூட்டமாக தெரிவித்து இருந்ததை இங்கே அனைவருக்குமான அவரது அழைப்பாக பதிவிடுகிறேன்.

 

ஊர் கூடித் தேர் இழுப்போம்!

 

நன்றி.

 

ஞாநி அவர்களின் அழைப்பு

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.


கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 

முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.


இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.


இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.


முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

 

*

கருத்துரையிடுக

7 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. நன்றி மாதவராஜ். மறுபடியும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் நண்பர்களுகு நினைவூட்டல் செய்து உதவுங்கள்.

  ஞாநி

  பதிலளிநீக்கு
 2. என் பதிவிலும் பின்னூட்டமிட்டிருக்கிறார். நல்ல முயற்சி.

  பதிலளிநீக்கு
 3. ஒரு வித்தியாசமான, தேவையான முயற்சி.

  பதிலளிநீக்கு
 4. ஞாநி!
  நிச்சயமாய் செய்கிறேன். இங்கே கோபாலா என்னும் நண்பர் ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார். தாங்களே பதில் சொல்லலாமே!

  அனானி!
  உடனடியாகத் திருத்திக் கொண்டேன்.


  ராம்ஜி!
  தீபா!
  காமராஜ்!
  வாழ்த்துக்களோடு, தாங்களும் இந்த முயற்சிக்கு கைகொடுப்பீர்கள் என நம்புகிறேன்.

  கோபாலா!
  நன்றி. ஞானி அவர்களின் இ-மெயில் முகவரி: gnani@gnani.net. முடிந்தால் தொடர்புகொள்ளுங்களேன்.

  பதிலளிநீக்கு