-->

முன்பக்கம் � இப்படியும் ஒரு அவுட்சோர்சிங்

இப்படியும் ஒரு அவுட்சோர்சிங்

காலையில்தான் சென்னையிலிருந்து வந்தேன். இப்போதெல்லாம் அடிக்கடி சென்னை போவதும், வருவதுமாய்த்தான் இருக்கிறது. எங்கள் பாண்டியன் கிராம வங்கியில் நிலைமை சரியில்லை. நபார்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (எங்கள் ஸ்பான்ஸர் வங்கி), ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதும், அவர்களை தலையிடச் சொல்வதுமாய் இருக்கிறோம்.

1988க்குப் பிறகு எங்கள் வங்கியில் புதிய பணி நியமனம் இல்லை. வங்கியின் தொழிலும், வளர்ச்சியும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மதுரைக்கு இந்தப் பக்கம் ஐந்து மாவட்டங்களில் மட்டும் இயங்கி வந்த வங்கி, இப்போது திருச்சி வரை 13 மாவட்டங்களுக்கு விஸ்திரிக்கப்பட்டு இருக்கிறது. கிளைகளின் எண்ணிக்கையும் வேகமாய் உயர்ந்திருக்கின்றன. கடுமையான ஆள் பற்றாக்குறை. ஊழியர்கள் நேரம் காலம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்.

வேறு வழியில்லாமல், 2002க்குப் பிறகு நிர்வாகத்தின் அனுமதியோடு இங்கு ஒரு காரியம் மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டது. கிளைகள் இயங்கும் அந்தந்தப் பகுதியில் உள்ள படித்த இளைய ஆண், பெண்களை வங்கியின் அன்றாடப் பணிகளுக்கு உதவிகரமாக இருக்க, எந்த முகாந்திரமும் இல்லாமல் பயன்படுத்தப்பட்டனர். ஒன்றிரண்டு கிளைகளில் ஆரம்பித்த இந்த வழக்கம், இன்று 197 கிளைகளிலும் படர்ந்திருக்கிறது. தலைமையலுவலகம், ஏரியா அலுவலகம் உட்பட தற்சமயம் 280க்கும் இளைஞர்கள் இப்படி பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர்.

இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகக் கொடுமையானது. பலர் ரூ.1000/-மும், சிலர் ரூ 1500/ம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். சில கிளைகளில் அப்ரைசர்கள் தங்களுக்கு வரும் கமிஷனிலிருந்து இந்த ஊதியத்தைக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில கிளைகளில் அங்குள்ள மேலாளர்களும், ஊழியர்களும் தங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்கிறார்கள். சில கிளைகளுக்கு நிர்வாகம் upkeepingcharges என கொடுக்க அனுமதிக்கிறது.

இப்படியாக எங்கள் வங்கியில் அவுட்சோர்சிங் நுழைந்திருந்தது. வங்கியில் கேஷ் பார்ப்பதைத் தவிர இப்போது அனைத்து வேலைகளையும் இவர்களேச் செய்கிறார்கள். தங்களுடைய வேலைப்பளு இப்படியாக ஒருவகையில் சமாளிக்கப்படுவதில் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஒரு நிம்மதி. கிளைகளில் அடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் எப்படியோ சமாளிக்கப்படுவதிலும், மிகக் குறைந்த செலவில் வங்கியின் நெருக்கடி சமாளிக்கப்படுவதிலும் நிர்வாகத்திற்கு பெரும் சந்தோஷம். இவர்களுக்கு பெயர் கிடையாது. வருகைப் பதிவேட்டில்  கையெழுத்து கிடையாது. சம உரிமையும் கிடையாது. சம ஊதியமும் கிடையாது. அடையாளங்களை நீக்கி அரூபங்களாக்கி மனிதர்களின் உழைப்பை உறிஞ்சும் நவீனச் சுரண்டல்.

இது மிகப்பெரும் மோசடி என்றும், கடுமையான உழைப்புச் சுரண்டல் என்றும் எங்களது ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தது. நிர்வாகத்திற்கும் மட்டுமல்ல, எங்கள் ஊழியர்களுக்குமே நாங்கள் இப்படிப் பேசுவதில் அதிருப்தி இருந்தது. “நாம் மாதம் இருபதாயிரம், இருபத்தையாயிரம் வாங்கிக் கொண்டு, நம் அருகில் அதே வேலையைச் செய்பவருக்கு வெறும் ஆயிரம் கொடுப்பது எப்படி நியாயம்”, “இவர்கள் நம் வீட்டுக் குழந்தைகள் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்”, ”வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் எனப் போராடிய நாமே இந்தக் கொடுமையை அனுமதிக்கலாமா? நமக்கு ஒரு நீதி, அவர்களுக்கு ஒரு நீதியா?” எனத் தொடர்ந்து நாங்கள் செய்து வந்த பிரச்சாரங்கள் இப்போது பலனளித்தது. கணிசமான ஊழியர்கள் இப்போது இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முன்வந்துள்ளனர்.

முதற்கட்டமாக, இப்படி அனைத்து கிளைகளிலும் ‘அவுட்சோர்சிங்’ முறையில் பணிபுரிபவர்களை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்தி நிலைமைகளை விளக்கினோம். இவர்களை நிரந்தரமாக்க வேண்டும் எனவும், அதுவரையில் தேசீய அளவில் அனுமதிக்கப்பட்ட (188+) 221 ருபாய் தினக்கூலியாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவது எனவும் முடிவு செய்தோம். இது தொடர்பாக, நிர்வாகத்துடன் பேசுவது எனத் திட்டமிட்டோம். நிர்வாகம் பேச  மறுத்தது. ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம்.

இவ்வளவுதான். இதுவரை இப்படியான மிகப்பெரும் உழைப்புச் சுரண்டலுக்கு அனுமதித்து மௌனமாக இருந்த நிர்வாகம் கடும் சீற்றத்துடன் எங்கள் சங்கத்தின் மீது பாய ஆரம்பித்திருக்கிறது. வங்கியின் தொழில் அமைதியைக் கெடுப்பதாகச் சொல்லி, பொய்யான குற்றச்சாட்டுகளோடு சங்கத் தலைவரையும், (நான் தான்), பொதுச்செயலாளரையும் (தோழர்.சோலைமாணிக்கம்) சஸ்பெண்ட் செய்யப் போவதாக மிரட்டுகிறது. பல கிளைகளில் பணிபுரிந்து கொண்டு இருந்த அவுட்சோரிங் ஊழியர்களை வெளியே அனுப்பிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் கண்ணீரோடு வெளியேறியக் காட்சிகளையும், கதைகளையும் இங்கே சொல்ல முடியாது. இந்த தேசத்தில் டிகிரி படித்து விட்டு ரூ.1000/-த்திற்கு வேலை கிடைக்காதா என்று காத்திருக்கும் இந்த இளைஞர்களைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?

“இவர்களை வெளியே அனுப்பிவிட்டால் எங்களுக்கு கவுண்டரில் உட்கார்ந்து மக்களுக்கு சேவை செய்ய ஆளே இல்லை. பிஸினஸ் பாதிக்கப்படும்” என்று பல மேலாளர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டு இருக்கிறார்கள். “அதைப்பற்றி உங்களுக்கென்ன?” என மிக அலட்சியமாக நிர்வாகம் நிராகரித்துவிட்டது.

சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துவிட்டோம் என்று எங்கள் மீது பழிச்சொல் விழுந்து கொண்டு இருக்கிறது. வெளியே அனுப்பப்பட்டவர்களின் ஏக்கமான முகங்கள் அலைக்கழிக்கின்றன. சட்ட ரீதியாக முயற்சி செய்வதோடு, தெருவில் இறங்கிப் போராடுவது எனவு முடிவு செய்து விட்டோம். வருவது வரட்டும். இப்போது எங்களிடம் இருப்பது நியாயமும், உண்மையும், நம்பிக்கையுமே!!!

*

Related Posts with Thumbnails

65 comments:

 1. ///இப்போது எங்களிடம் இருப்பது நியாயமும், உண்மையும், நம்பிக்கையுமே!!! ////

  ReplyDelete
 2. முள் மேல் துணி விழுந்த கதையாகி விட்டது.

  அவுட்சோர்சிங்கிற்கு வருபவர்கள் போராடினால் புரிந்து கொள்ள முடியும். நிங்கள் போராடுவது மனிதாபிமான அடிப்படியில்தான் என்றாலும் உங்கள் நிலைமை கஷ்டமே.

  வச்சால் குடுமி சரச்சால் மொட்டை என்பது போல ஒரு காலத்தில் மாமன் மச்சான் எல்லோருக்கும் வேலை கொடுத்து ஓவர் ஸ்டாஃபிங் கொண்டு வந்தது ஒரு பக்கம் என்றால், 20 ஆண்டுகளாக புது ரெக்ரூட்மெண்ட் இல்லாது இருப்பதும் தவறுதானே.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 3. போராட்டம் வெற்றி பெற்று அனைவரும் நிரந்தர பணியில் சேர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  அரசாங்க அலுவலகங்களில் தற்காலிகப்பணியில் இருப்பவர்களின் நிலை இது தான். வெட்கக்கேடு.

  //இப்போது எங்களிடம் இருப்பது நியாயமும், உண்மையும், நம்பிக்கையுமே!!! //

  நிச்சயம் வெல்லும். காலம் அழகாய் பதில் சொல்லும். மனம் தளர்ந்து விடாதீர்கள்.

  ReplyDelete
 5. உங்கள் போராட்டம் வெற்றி பெறும்!

  ReplyDelete
 6. Today without outsourcing you cant do any job, (even i am thinking to outsource my blog, pinnoottam jobs..)

  As Dondu said, the Pandian grama bank, karur vysyaa, tamilnadu mercantile, city union banks all recruited people based on caste, relativesm, friends, trade union recomendations.

  Thats why they cant compete with professionally manged banks like HDFC, ICIC, AXIS, ABN AMRO BANKS.


  Yesterday IICICI KV KAMATH sais they r going to introduse mobile phone banking in rural india, then these banks will vanish.

  ReplyDelete
 7. இப்போது எங்களிடம் இருப்பது நியாயமும், உண்மையும், நம்பிக்கையுமே!!! /

  உணமையும் நம்பிக்கையும் வெல்லட்ட்டும்..

  ReplyDelete
 8. நானும் ஒரு காலத்தில், ஆறு மாத காலம் தற்காலிக பணியாளனாக, விருதுநகர் கிளையில் வேலை செய்திருக்கிறேன்.

  இப்பவும் இதே நிலை எனும் போது மிகவும் வருத்தமளிக்கிறது.

  ReplyDelete
 9. All the best..

  True the company is exploiting unemployed ..they should at least pay min salary mentioned by Govt.

  Company should give clear appointment letter while joining with salary , duration of contract etc..If all details available only very very few min join for Rs1000/pm contact job...

  VS Balajee

  ReplyDelete
 10. தங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. //இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகக் கொடுமையானது. பலர் ரூ.1000/-மும், சிலர் ரூ 1500/ம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். சில கிளைகளில் அப்ரைசர்கள் தங்களுக்கு வரும் கமிஷனிலிருந்து இந்த ஊதியத்தைக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில கிளைகளில் அங்குள்ள மேலாளர்களும், ஊழியர்களும் தங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்கிறார்கள். சில கிளைகளுக்கு நிர்வாகம் upkeepingcharges என கொடுக்க அனுமதிக்கிறது.//

  கற்பனை குற்றச்சாட்டுகளை அரசு ஊழியர்கள் / வங்கி ஊழியர்களின் மேல் வீசும் அதிகம் படிக்காத தற்குறிகளும் அதை தொடர்ந்து தங்களது ஆழ்மன வக்கிரங்களை வெளிப்படுத்துபவர்களும் இது போன்ற நிகழ்வுகளை பற்றி வாய் மூடி இருப்பது ஏன்

  ReplyDelete
 12. //ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம்.//

  ஐயையோ

  நேர்மையாக மட்டுமே செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் (அலுவலகத்தில் சொந்த வேலை பார்க்காத) நேர்மையான வரி கட்டும் நமது பதிவர்கள் உங்களால் அவர்களின் பணி பாதிக்கப்படுவதாக புலம்பவில்லையா

  ReplyDelete
 13. //இந்த தேசத்தில் டிகிரி படித்து விட்டு ரூ.1000/-த்திற்கு வேலை கிடைக்காதா என்று காத்திருக்கும் இந்த இளைஞர்களைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?//

  திறமூல மென்பொருள்களை புறக்கணித்து கைக்ரோபாட்டிற்கும், கூறக்கிலுக்கும் சொம்பு தூக்கி, அந்த நிறுவனங்களில் செலவில் கான்பரெண்ஸ், ஐந்து நட்சத்திர விடுதிகளில் உணவு, மது என்று கும்மாளமிட்டுவிட்டு, திறமூல மென்பொருள்களுக்கு பதில் இந்த நிறுவனங்களின் மென்பொருளை பரிந்துரைக்கும் நேர்மையின் சிகரங்களுக்கு இது போன்ற கஷ்டங்கள் எங்கு தெரியப்போகிறது

  ReplyDelete
 14. //Today without outsourcing you cant do any job, (even i am thinking to outsource my blog, pinnoottam jobs..)//

  இன்று காலையில் பல்துலக்கி குளித்தீர்களா

  ReplyDelete
 15. //As Dondu said, the Pandian grama bank, karur vysyaa, tamilnadu mercantile, city union banks all recruited people based on caste, relativesm, friends, trade union recomendations.

  Thats why they cant compete with professionally manged banks like HDFC, ICIC, AXIS, ABN AMRO BANKS.//

  யார் யாருடன் போட்டி போட முடியவில்லை

  ஐசிஐசிஐ வங்கி கிளை எத்தனை கிராமங்களில் இருக்கிறது

  நீங்கள் கூறும் வங்கிகளில் கணக்கு வைக்க குறைந்த பட்ச தொகை எவ்வளவு

  அங்கு சேவைக்கட்டணம் எவ்வளவு

  --

  குளோபல் டிரஸ்ட் வங்கி என்று ஒன்று இருந்ததே. அதை நீங்கள் ஏன் உதாரணத்தில் கூறவில்லை

  --

  ஆனால் வாங்கிய கடனை வசூலிப்பதில் நீங்கள் கூறிய தனியார் வங்கிகள் சூரப்புலிகள் என்பது உண்மை தான்

  ReplyDelete
 16. //Yesterday IICICI KV KAMATH sais they r going to introduse mobile phone banking in rural india, then these banks will vanish.//

  ஹா ஹா ஹா !!!

  முதலில் vanish ஆகப்போவது யார் என்று தான் பார்ப்போமே

  காலம் பதில் சொல்லும்

  ReplyDelete
 17. //
  இப்போது எங்களிடம் இருப்பது நியாயமும், உண்மையும், நம்பிக்கையுமே!!!
  //
  உங்கள் போராட்டம் கண்டிப்பாக வெல்லும், வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. Bruno-

  After reading your comments one good idea has come,

  Really busy people like Jyovram sundar, ayyanaar, Bruno,gayathri, siddharth,Lekhaa (list is just example)could outsource their blog posting work to people like me, vaalpayyan,

  once they have written in word they could mail us, we will translate, rectify spell mistakes, post it in Tamilmanam, tamilish, tiratti, tamil10 so on...

  Maadhavraj- I am sorry for coming out of a serious topic.

  It seems u r new to this BPO world. If you come and see us in chennai or Pune we r all like those 1000 rupees salary people only.

  The job what we r doing here was done in UK & USA and people were paid $8000, $10000 and here we are being paid only $1000 or $2000.

  But we cant ask more salary,we cant form union. if we do they will divert our jobs to Philipines where people are ready to do for $800 or $500.

  CEO and board of directors are looking only the bottom line (profit in P&L, share price in Dalal/wall street) , they dont bother about humanity, right salary etc.

  ReplyDelete
 19. //Really busy people like Jyovram sundar, ayyanaar, Bruno,gayathri, siddharth,Lekhaa (list is just example)could outsource their blog posting work to people like me, vaalpayyan,//

  தேவையில்லை நண்பரே... என் பதிவை நான் எழுதிக்கொள்கிறேன்

  நான் ஏற்கனவே உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன் :) :)

  //once they have written in word they could mail us, we will translate, rectify spell mistakes, post it in Tamilmanam, tamilish, tiratti, tamil10 so on...//

  நான் பதிவை எழுதி அதை பளாக்கரில் post செய்து விட்டு பிற திரட்டி / புக்மார்க்கிங் தளங்களில் அந்த சுட்டியை இணைக்கிறேன்

  திரட்டிகளில் post செய்வது புதிதாக இருக்கிறதே

  அது நீங்கள் கண்டு பிடித்த முறையா

  உடனடியாக காப்புரிமை வாங்கிவிடுங்கள்

  ReplyDelete
 20. //It seems u r new to this BPO world. If you come and see us in chennai or Pune we r all like those 1000 rupees salary people only.//

  ஊதியத்திலா
  வேலை அளவிலா
  தகுதியிலா

  ReplyDelete
 21. //The job what we r doing here was done in UK & USA and people were paid $8000, $10000 and here we are being paid only $1000 or $2000.//

  நீங்கள் 30,000 வாங்குகிறீர்கள்
  அவர் கூறுபவரோ 1,000 வாங்குகிறார்

  அவ்வளவு தான் வித்தியாசம்

  //But we cant ask more salary,we cant form union. if we do they will divert our jobs to Philipines where people are ready to do for $800 or $500.//

  அங்குள்ளவர்களும் சங்கம் அமைத்தால் ????

  //CEO and board of directors are looking only the bottom line (profit in P&L, share price in Dalal/wall street) , they dont bother about humanity, right salary etc.//

  அது தவறு என்பது தான் மாதவராஜ் சாரின் வாதம் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 22. //once they have written in word they could mail us, we will translate, rectify spell mistakes, post it in Tamilmanam, tamilish, tiratti, tamil10 so on...//

  :) :) :)

  ReplyDelete
 23. போராட்டம் வெற்றி பெறவும் அனைவருக்கும் நியாயம் கிடைக்கவும் அனைவரும் நிரந்தர பணியில் சேரவும் வாழ்த்துக்கள்.

  பிற சங்கங்களை இணைத்து போரட முடியாதா (வங்கி பணியாளர்கள் இதர தொழிற்சங்கங்கள்).

  ReplyDelete
 24. First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

  http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

  ReplyDelete
 25. //
  //இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகக் கொடுமையானது. பலர் ரூ.1000/-மும், சிலர் ரூ 1500/ம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். சில கிளைகளில் அப்ரைசர்கள் தங்களுக்கு வரும் கமிஷனிலிருந்து இந்த ஊதியத்தைக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில கிளைகளில் அங்குள்ள மேலாளர்களும், ஊழியர்களும் தங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்கிறார்கள். சில கிளைகளுக்கு நிர்வாகம் upkeepingcharges என கொடுக்க அனுமதிக்கிறது.//

  கற்பனை குற்றச்சாட்டுகளை அரசு ஊழியர்கள் / வங்கி ஊழியர்களின் மேல் வீசும் அதிகம் படிக்காத தற்குறிகளும் அதை தொடர்ந்து தங்களது ஆழ்மன வக்கிரங்களை வெளிப்படுத்துபவர்களும் இது போன்ற நிகழ்வுகளை பற்றி வாய் மூடி இருப்பது ஏன்
  //
  இதில் அரசு வூழியர்களின் நல்ல பக்கம் எங்கிருக்கிறது? அவர்கள் செய்யவேண்டிய வேலைகளை அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பதில் ஒரு பாகம் கொடுத்து வேலை வாங்குவது exploitation இல்லையா?

  நிர்வாகம் ஒரு விதத்தில் exploit செய்கிறது என்றால் வூழியர்கள் வேறு விதமாய் செய்கிறார்கள் !

  ReplyDelete
 26. // இப்போது எங்களிடம் இருப்பது நியாயமும், உண்மையும், நம்பிக்கையுமே!!! //


  மெய்யால்மா.....???

  ReplyDelete
 27. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 28. தங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 29. @ புருனோ
  /
  கற்பனை குற்றச்சாட்டுகளை அரசு ஊழியர்கள் / வங்கி ஊழியர்களின் மேல் வீசும் அதிகம் படிக்காத தற்குறிகளும் அதை தொடர்ந்து தங்களது ஆழ்மன வக்கிரங்களை வெளிப்படுத்துபவர்களும் இது போன்ற நிகழ்வுகளை பற்றி வாய் மூடி இருப்பது ஏன்
  /

  குற்றச்சாட்டுகள் கற்பனையானவை அல்ல. நாங்கள் தற்குறிகள்தான் அதற்க்காக வெட்கப்படவில்லை.

  இதை சொல்லும் நீங்கள் எப்படி என்பது படிப்பவர்களுக்கு புரியும். உங்கள் டாக்டர் தொழில்மேல் இருக்கும் மரியாதையால் பலர் பின்னூட்டாமல் இருந்திருப்பார்கள்.

  ReplyDelete
 30. மங்களூர் சிவா!

  ப்ளீஸ்! இதுபோன்ற தனிப்பட்ட அவமதிப்புகள் வேண்டாமே!
  உங்கள் மீது அன்பும், மதிப்பும் எனக்கு எப்போதும் உண்டு.
  கருத்துக்களில் மட்டும் முரண்படுவது ஆரோக்கியமானதாகும். நம்மை வளர்க்கவும் செய்யும்.

  ReplyDelete
 31. உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 32. //குற்றச்சாட்டுகள் கற்பனையானவை அல்ல.//

  அனைத்து குற்றச்சாட்டுகளும் கற்பனை அல்ல. ஆனால் நான் அனைவரையும் பற்றி எழுதவில்லை. நான் எழுதியது கற்பனையாக குற்றச்சாட்டுகளை எழுதுபவர்களை பற்றி மட்டும் தான்

  அவ்வாறு கூறப்படும் கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு இரு உதாரணங்களை நான் மாதவராஜின் http://mathavaraj.blogspot.com/2009/07/blog-post_13.html இடுகையில் ஆதாரத்துடன் குறிப்பிட்டிருந்தேன்.

  அது சரி நீங்கள் உண்மையை மட்டுமே பேசுபவர் என்றால் இந்த வாசகம் உங்களை ஏன் பதற்றப்படவைக்கிறது !!!!

  //இதை சொல்லும் நீங்கள் எப்படி என்பது படிப்பவர்களுக்கு புரியும். உங்கள் டாக்டர் தொழில்மேல் இருக்கும் மரியாதையால் பலர் பின்னூட்டாமல் இருந்திருப்பார்கள்.//

  நான் அனைவரையும் கூறவில்லை. நான் கூறியது இரு வகை பதிவர்களை பற்றித்தான்
  முதல் வகை – கற்பனை குற்றச்சாட்டு எழுதுபவர்கள்
  இரண்டாவது வகை – மனவக்கிரம் மிகுந்தவர்கள்

  கற்பனை குற்றச்சாட்டு எழுதாதவர்களும் ஆழ்மனதில் வக்கிரமற்றவர்களும் என் கருத்து அவர்களை குறித்து ஒன்றும் கூறாததால் மறுமொழி எழுதவில்லை. நீங்கள் எழுதியுள்ளீர்கள்

  ஏன் மாதவராஜ் இது (என் கருத்து) அவரை குறிப்பிட்டதாக நினைக்கவில்லை. நீங்கள் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்கள் -- மடியில் கனம், வழியில் பயம் என்ற பழமொழி நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை

  ReplyDelete
 33. //இதில் அரசு வூழியர்களின் நல்ல பக்கம் எங்கிருக்கிறது? அவர்கள் செய்யவேண்டிய வேலைகளை அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பதில் ஒரு பாகம் கொடுத்து வேலை வாங்குவது exploitation இல்லையா?//

  அவர்கள் செய்யவேண்டிய வேலையல்ல - வேறு ஒரு ஊழியர் செய்யவேண்டிய வேலை. அந்த பணியிடம் காலியாக உள்ளது. அந்த பணியிடத்தில் நிரந்தர ஊழியர் ஒருவரை நியமிப்பதற்கு பதில் குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்

  நிரந்தர ஊழியர் நியமிக்கப்படவேண்டும் என்பது மாதவராஜ் சாரின் கோரிக்கை

  சரிதானே சார்

  --

  //இதில் அரசு வூழியர்களின் நல்ல பக்கம் எங்கிருக்கிறது?//

  தனக்கு மட்டும் சரியான சம்பளம் கிடைத்தால் போதாது. தன்னுடன் வேலை பார்க்கும் அனைவருக்குமே வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் தான் நல்ல பக்கம்

  --

  //நிர்வாகம் ஒரு விதத்தில் exploit செய்கிறது என்றால் வூழியர்கள் வேறு விதமாய் செய்கிறார்கள் !//

  ஊழியர்கள் அந்த exploitationஐ தடுக்க்முயல்கிறார்கள்

  சரிதானே சார்

  ReplyDelete
 34. //சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துவிட்டோம் என்று எங்கள் மீது பழிச்சொல் விழுந்து கொண்டு இருக்கிறது. வெளியே அனுப்பப்பட்டவர்களின் ஏக்கமான முகங்கள் அலைக்கழிக்கின்றன. சட்ட ரீதியாக முயற்சி செய்வதோடு, தெருவில் இறங்கிப் போராடுவது எனவு முடிவு செய்து விட்டோம்.//

  மாதவராஜ்,
  உங்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்.

  பால்வாடியில் ஆரம்பித்து டாஸ்மாக் வரை இப்படி நடந்து இருந்தாலும் அதில் சில விதிகளாவது கடைபிடிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தற்காலிகப்பணி நியமனம் நடந்தது என்று நினைக்கிறேன். அதுபோல நடந்திருந்தால் நல்லது.

  ஆனால், வேலை செய்வதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இப்படிச் செய்வது உழைப்புச் சுரண்டலே. மக்களின் பசியைப் பயன்படுத்தி விபச்சாரம் செய்வதுபோல்.

  பசியோடு இருப்பவன் போராட முடியாது. நீங்கள்தான் அவனுக்காகப் போராட வேண்டும். ஊதிக்கெடுத்ததாக பழிச்சொல் வந்தாலும், முடிவில் நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது.

  நீங்கள் அரசியல் கட்சியுடன் தொடர்புடைய சங்கங்களில் இருந்தால் அந்த தலைவர்கள் உதவலாம். தெரியவில்லை.

  **

  போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்!

  ReplyDelete
 35. அன்பின் மாதவ்,

  /
  கற்பனை குற்றச்சாட்டுகளை அரசு ஊழியர்கள் / வங்கி ஊழியர்களின் மேல் வீசும் அதிகம் படிக்காத தற்குறிகளும் அதை தொடர்ந்து தங்களது ஆழ்மன வக்கிரங்களை வெளிப்படுத்துபவர்களும் இது போன்ற நிகழ்வுகளை பற்றி வாய் மூடி இருப்பது ஏன்
  /

  அவர் அதிகம் படிக்காத தற்குறிகள் என சொன்னதால் அதை சொல்லவேண்டியதாயிற்று.

  யாராக இருந்தாலும் கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.

  /
  மடியில் கனம், வழியில் பயம் என்ற பழமொழி நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை
  /
  :))))

  ReplyDelete
 36. போராட்டம் வெற்றி பெற வாழ்த்திய அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி.

  புருனோ சார்!
  அரசு ஊழியர்கள் சார்பாக தாங்கள் எடுத்து வைக்கும் வாதமும், காட்டும் ஆதரவும் உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது. நன்றி. வார்த்தைகள் தவறான அர்த்தத்துடன் கற்பிக்கப்பட்டு விடக் கூடாதே என்ற விருப்பத்தைத்தான் தெரிவித்தேன்.

  மங்களூர் சிவா!
  )))):

  ReplyDelete
 37. ////கற்பனை குற்றச்சாட்டுகளை அரசு ஊழியர்கள் / வங்கி ஊழியர்களின் மேல் வீசும் அதிகம் படிக்காத தற்குறிகளும் அதை தொடர்ந்து தங்களது ஆழ்மன வக்கிரங்களை வெளிப்படுத்துபவர்களும் இது போன்ற நிகழ்வுகளை பற்றி வாய் மூடி இருப்பது ஏன்//

  அவர் அதிகம் படிக்காத தற்குறிகள் என சொன்னதால் அதை சொல்லவேண்டியதாயிற்று. //

  வேண்டுமென்றே கற்பனை குற்றச்சாட்டுகளை வீசுபவர்களை பற்றித்தான் நான் “அதிகம் படிக்காத தற்குறிகள்” என்று குறிப்பிட்டேன்

  உண்மையான குற்றச்சாட்டுகளை கூறும் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் :) :) :) :)

  //புருனோ சார்!
  அரசு ஊழியர்கள் சார்பாக தாங்கள் எடுத்து வைக்கும் வாதமும், காட்டும் ஆதரவும் உண்மையில் பிரமிப்பாக இருக்கிறது. நன்றி. //

  :) :)

  ReplyDelete
 38. மாதவ்ராஜ்,

  உங்கள் போராட்டம் நியாயமானது...வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  //
  இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகக் கொடுமையானது. பலர் ரூ.1000/-மும், சிலர் ரூ 1500/ம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். சில கிளைகளில் அப்ரைசர்கள் தங்களுக்கு வரும் கமிஷனிலிருந்து இந்த ஊதியத்தைக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில கிளைகளில் அங்குள்ள மேலாளர்களும், ஊழியர்களும் தங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்கிறார்கள். சில கிளைகளுக்கு நிர்வாகம் upkeepingcharges என கொடுக்க அனுமதிக்கிறது.
  //

  நன்கு படித்தவர்கள் கூட இப்படி உழைப்பு சுரண்டலுக்கு பலியாவது என்ன காரணம்?? ஆயிரத்துக்கும் ஆயிரத்து ஐநூறுக்கும் வேலை பார்க்க வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது??

  இப்படி ஒரு கொடூரமான நிலையை உருவாக்கியவர்கள் யார்??

  இப்படி ஆயிரத்துக்கு வேலை பார்ப்பதை விட, ஒரு சிறு தொழில் தொடங்கி வாழ்க்கை நடத்துவதையே இவர்கள் விரும்பக்கூடும்...ஆனால், தொழில் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல...இதற்கு என்ன காரணம்??

  கலாச்சாரமா? அரசாங்க நடைமுறைகளா? இல்லை தொழில் தொடங்க மக்களுக்கு இருக்கும் தயக்கமா? வாழ்க்கை சூழ்நிலையா??

  இதையும் விவாதித்தால் நல்லது...

  ReplyDelete
 39. //
  புருனோ Bruno said...
  //இவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகக் கொடுமையானது. பலர் ரூ.1000/-மும், சிலர் ரூ 1500/ம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். சில கிளைகளில் அப்ரைசர்கள் தங்களுக்கு வரும் கமிஷனிலிருந்து இந்த ஊதியத்தைக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சில கிளைகளில் அங்குள்ள மேலாளர்களும், ஊழியர்களும் தங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்கிறார்கள். சில கிளைகளுக்கு நிர்வாகம் upkeepingcharges என கொடுக்க அனுமதிக்கிறது.//

  கற்பனை குற்றச்சாட்டுகளை அரசு ஊழியர்கள் / வங்கி ஊழியர்களின் மேல் வீசும் அதிகம் படிக்காத தற்குறிகளும் அதை தொடர்ந்து தங்களது ஆழ்மன வக்கிரங்களை வெளிப்படுத்துபவர்களும் இது போன்ற நிகழ்வுகளை பற்றி வாய் மூடி இருப்பது ஏன்

  July 17, 2009 1:55 PM
  //

  அரசு ஊழியர்கள் மீது குற்றம் சொல்வதற்கும் இந்த நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்??
  இவர்கள் இப்படி கஷ்டத்தில் இருக்கிறார்கள்...அதனால் அவர்கள் அப்படி தான் இருப்பார்கள் என்று சொல்ல வருகிறீர்களா??

  இவர்கள் இப்படி கஷ்டத்தில் இருப்பது வங்கிக்கு வரும் வாடிக்கையாளருக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை...தவிர கஷ்டத்தில் இருப்பதால், வாடிக்கையாளரிடம் எரிந்து விழ அவர்களுக்கு உரிமையில்லை.

  எப்பொழுது, எங்கு, எந்த நிமிடத்தில் எரிந்து விழுந்தார்கள் என்று நீங்கள் கேட்கக் கூடும்... என்னிடம் தேதி, நிமிட வாரியாக விவரம் இல்லை....இருந்தாலும் உங்களிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

  ReplyDelete
 40. //
  புருனோ Bruno said...
  //ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம்.//

  ஐயையோ

  நேர்மையாக மட்டுமே செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் (அலுவலகத்தில் சொந்த வேலை பார்க்காத) நேர்மையான வரி கட்டும் நமது பதிவர்கள் உங்களால் அவர்களின் பணி பாதிக்கப்படுவதாக புலம்பவில்லையா

  July 17, 2009 2:00 PM
  //

  இது பிரச்சினையை புரிந்து கொள்ளாத வாதம்!

  தனியார் நிறுவனங்களில் ஊழல், பொறுப்பின்மை இருந்தால் அது முதல் போட்டவர்கள், நிர்வாகத்தை நடத்துபவர்கள் பிரச்சினை...

  ஆனால், அரசு நிர்வாகத்தில் ஊழல், பொறுப்பின்மை இருந்தால் அதை கேட்க மக்களுக்கு உரிமையுண்டு...ஏனெனில் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் அரசு நிர்வாகமே நடக்கிறது...

  ReplyDelete
 41. //
  புருனோ Bruno said...
  //இந்த தேசத்தில் டிகிரி படித்து விட்டு ரூ.1000/-த்திற்கு வேலை கிடைக்காதா என்று காத்திருக்கும் இந்த இளைஞர்களைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?//

  திறமூல மென்பொருள்களை புறக்கணித்து கைக்ரோபாட்டிற்கும், கூறக்கிலுக்கும் சொம்பு தூக்கி, அந்த நிறுவனங்களில் செலவில் கான்பரெண்ஸ், ஐந்து நட்சத்திர விடுதிகளில் உணவு, மது என்று கும்மாளமிட்டுவிட்டு, திறமூல மென்பொருள்களுக்கு பதில் இந்த நிறுவனங்களின் மென்பொருளை பரிந்துரைக்கும் நேர்மையின் சிகரங்களுக்கு இது போன்ற கஷ்டங்கள் எங்கு தெரியப்போகிறது

  July 17, 2009 2:02 PM
  //

  சொம்பு தூக்கி???

  சரி, அவர்கள் தான் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாங்கிய காசுக்கு பரிந்துரைக்கிறார்கள்...

  ஆனால், வாங்கியவர்கள் எங்கு கும்மாளமிட்டு விட்டு அதை வாங்குகிறார்கள்??

  ReplyDelete
 42. //
  புருனோ Bruno said...


  யார் யாருடன் போட்டி போட முடியவில்லை

  ஐசிஐசிஐ வங்கி கிளை எத்தனை கிராமங்களில் இருக்கிறது

  நீங்கள் கூறும் வங்கிகளில் கணக்கு வைக்க குறைந்த பட்ச தொகை எவ்வளவு

  அங்கு சேவைக்கட்டணம் எவ்வளவு

  --

  குளோபல் டிரஸ்ட் வங்கி என்று ஒன்று இருந்ததே. அதை நீங்கள் ஏன் உதாரணத்தில் கூறவில்லை

  --

  ஆனால் வாங்கிய கடனை வசூலிப்பதில் நீங்கள் கூறிய தனியார் வங்கிகள் சூரப்புலிகள் என்பது உண்மை தான்

  July 17, 2009 2:06 PM
  //

  அரசு வங்கிகளின் ரீச் அதிகம் தான்...எல்லாக் கிராமங்களிலும் வங்கி கிளை, ஊழியர்கள் என்று வைத்திருப்பதால் நஷ்டம் வர வாய்ப்புண்டு...

  ஆனால்....

  எந்த காரணத்திற்காக, யாருக்கு சேவை செய்ய அரசு வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன?? அவர்களுக்கு ஒழுங்கான சேவை கிடைக்கிறதா??

  ReplyDelete
 43. //
  மாதவராஜ் said...
  மங்களூர் சிவா!

  ப்ளீஸ்! இதுபோன்ற தனிப்பட்ட அவமதிப்புகள் வேண்டாமே!
  உங்கள் மீது அன்பும், மதிப்பும் எனக்கு எப்போதும் உண்டு.
  கருத்துக்களில் மட்டும் முரண்படுவது ஆரோக்கியமானதாகும். நம்மை வளர்க்கவும் செய்யும்.

  July 17, 2009 10:48 PM
  //

  மாதவ்ராஜ்,

  மாற்று கருத்து உடையவர்களை வயித்தெரிச்சல் பார்ட்டிகள், அதிகம் படிக்காத தற்குறிகள், ஆழ்மன வக்கிரம் பிடித்தவர்கள் என்று எழுதுவது மட்டும் ஆரோக்கியமான கருத்தா???

  ReplyDelete
 44. //
  புருனோ Bruno said...
  //குற்றச்சாட்டுகள் கற்பனையானவை அல்ல.//

  அனைத்து குற்றச்சாட்டுகளும் கற்பனை அல்ல. ஆனால் நான் அனைவரையும் பற்றி எழுதவில்லை. நான் எழுதியது கற்பனையாக குற்றச்சாட்டுகளை எழுதுபவர்களை பற்றி மட்டும் தான்

  அவ்வாறு கூறப்படும் கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு இரு உதாரணங்களை நான் மாதவராஜின் http://mathavaraj.blogspot.com/2009/07/blog-post_13.html இடுகையில் ஆதாரத்துடன் குறிப்பிட்டிருந்தேன்.

  அது சரி நீங்கள் உண்மையை மட்டுமே பேசுபவர் என்றால் இந்த வாசகம் உங்களை ஏன் பதற்றப்படவைக்கிறது !!!!

  //இதை சொல்லும் நீங்கள் எப்படி என்பது படிப்பவர்களுக்கு புரியும். உங்கள் டாக்டர் தொழில்மேல் இருக்கும் மரியாதையால் பலர் பின்னூட்டாமல் இருந்திருப்பார்கள்.//

  நான் அனைவரையும் கூறவில்லை. நான் கூறியது இரு வகை பதிவர்களை பற்றித்தான்
  முதல் வகை – கற்பனை குற்றச்சாட்டு எழுதுபவர்கள்
  இரண்டாவது வகை – மனவக்கிரம் மிகுந்தவர்கள்

  கற்பனை குற்றச்சாட்டு எழுதாதவர்களும் ஆழ்மனதில் வக்கிரமற்றவர்களும் என் கருத்து அவர்களை குறித்து ஒன்றும் கூறாததால் மறுமொழி எழுதவில்லை. நீங்கள் எழுதியுள்ளீர்கள்

  ஏன் மாதவராஜ் இது (என் கருத்து) அவரை குறிப்பிட்டதாக நினைக்கவில்லை. நீங்கள் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்கள் -- மடியில் கனம், வழியில் பயம் என்ற பழமொழி நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை

  July 17, 2009 11:33 PM
  //

  டாக்டர் ப்ரூனோ,

  அடுத்தவர்களை ஆழ்மன வக்கிரம் பிடித்தவர்கள் என்று சொல்ல நீங்கள் அவர்களை மனநிலை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினீர்களா?? பின் எப்படி உங்களால் சொல்ல முடிகிறது??

  //
  மடியில் கனம், வழியில் பயம் என்ற பழமொழி நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை
  //

  மடியில் கனம் இருப்பதால் அல்ல...மற்றவர்களை வயிற்றெரிச்சல் பார்ட்டிகள், ஆழ்மன வக்கிரம் பிடித்தவர்கள், தற்குறிகள் என்று பேசும் ஒருவருடன் விவாதித்து என்ன பலன் என்று மற்றவர்கள் ஒதுங்கி போயிருக்கக் கூடும்....

  ReplyDelete
 45. //
  புருனோ Bruno said...


  //நிர்வாகம் ஒரு விதத்தில் exploit செய்கிறது என்றால் வூழியர்கள் வேறு விதமாய் செய்கிறார்கள் !//

  ஊழியர்கள் அந்த exploitationஐ தடுக்க்முயல்கிறார்கள்

  சரிதானே சார்

  July 17, 2009 11:37 PM
  //

  இல்லை!

  ஊழியர்களும்(!) எக்ஸ்ப்ளாய்ட் செய்தார்கள்...இப்பொழுதும் மாதவ்ராஜ் போன்ற நல்ல ஊழியர்கள் குரல் கொடுத்திருக்காவிடில் இது தொடர்ந்திருக்கும்!

  ReplyDelete
 46. //
  மங்களூர் சிவா said...

  அவர் அதிகம் படிக்காத தற்குறிகள் என சொன்னதால் அதை சொல்லவேண்டியதாயிற்று.

  யாராக இருந்தாலும் கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.

  //

  முற்றிலும் வழிமொழிகிறேன்....

  உலகத்தை நன்றாக படித்தவர்களுக்கு தாங்கள் கற்றது கை மண் அளவு கூட இல்லை என்று தெரியும்....

  தாங்கள் அதிகம் படித்த மேதாவிகள், மற்றவர்கள் தற்குறிகள் என்று நினைப்பவர்களை பற்றி.....சொல்வதற்கு ஒன்றுமில்லை!

  ReplyDelete
 47. மாதவ்ராஜ்,

  அரசு ஊழியரின் ஒளி வட்டம் குறித்து உங்கள் வாதத்திற்கு "வலு" சேர்க்கும் சில செய்திகள்...

  http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11536

  http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11529

  http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=3509

  ReplyDelete
 48. //அடுத்தவர்களை ஆழ்மன வக்கிரம் பிடித்தவர்கள் என்று சொல்ல நீங்கள் அவர்களை மனநிலை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினீர்களா?? பின் எப்படி உங்களால் சொல்ல முடிகிறது??//

  எழுதும் கருத்தகளிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது நண்பரே :) :) :)

  ReplyDelete
 49. //நன்கு படித்தவர்கள் கூட இப்படி உழைப்பு சுரண்டலுக்கு பலியாவது என்ன காரணம்?? ஆயிரத்துக்கும் ஆயிரத்து ஐநூறுக்கும் வேலை பார்க்க வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது??

  இப்படி ஒரு கொடூரமான நிலையை உருவாக்கியவர்கள் யார்?? //

  லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்கள் எறியும் எலும்பு துண்டிற்கு ஆசைப்பட்டு அவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் :) :) :)

  ReplyDelete
 50. //இப்படி ஆயிரத்துக்கு வேலை பார்ப்பதை விட, ஒரு சிறு தொழில் தொடங்கி வாழ்க்கை நடத்துவதையே இவர்கள் விரும்பக்கூடும்...ஆனால், தொழில் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல...இதற்கு என்ன காரணம்??

  கலாச்சாரமா? அரசாங்க நடைமுறைகளா? இல்லை தொழில் தொடங்க மக்களுக்கு இருக்கும் தயக்கமா? வாழ்க்கை சூழ்நிலையா??

  இதையும் விவாதித்தால் நல்லது..//

  காளிமார்க், பொவோன்டோ போன்ற சிறுதொழில் நடத்தியவர்கள் எப்படி நஷ்டப்பட்டார்கள் என்று விளக்குங்களேன்

  அனைவருக்கும் புரியும்

  ReplyDelete
 51. //அரசு ஊழியர்கள் மீது குற்றம் சொல்வதற்கும் இந்த நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்??//

  அரசு ஊழியர்கள் மேல் மட்டும் குற்றம் மட்டுமே சொல்லும் (அதிலும் பல கற்பனை குற்றச்சாட்டுகள்) வயிற்றெரிச்சல் கும்பலை சுட்டிக்காட்ட எழுதப்பட்டது அது

  தனியார் துறை பற்றிய குறைகளையும், அரசு துறையின் சாதனைகளையும் புறக்கணித்து விட்டு அரசு துறையின் குறைகளை மட்டும் பெரிதாக எழுதி அரசு துறையின் மீது மக்களுக்கு வெறுப்பை வரவழைத்து, அதன் மூலம் தனியார் மயத்தை ஊக்குவிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கல்லாவை நிரப்ப உதவுபவர்களை பற்றிய குற்றச்சாட்டு அது

  ReplyDelete
 52. //இவர்கள் இப்படி கஷ்டத்தில் இருக்கிறார்கள்...அதனால் அவர்கள் அப்படி தான் இருப்பார்கள் என்று சொல்ல வருகிறீர்களா??//

  இல்லை

  //இவர்கள் இப்படி கஷ்டத்தில் இருப்பது வங்கிக்கு வரும் வாடிக்கையாளருக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை...//
  ஏற்றுக்கொள்கிறேன். இதை நான் எங்குமே மறுக்கவில்லை

  //தவிர கஷ்டத்தில் இருப்பதால், வாடிக்கையாளரிடம் எரிந்து விழ அவர்களுக்கு உரிமையில்லை.//
  இதுவும் சரியான கருத்து. ஏற்றுக்கொள்கிறேன்

  //எப்பொழுது, எங்கு, எந்த நிமிடத்தில் எரிந்து விழுந்தார்கள் என்று நீங்கள் கேட்கக் கூடும்...//

  இல்லை.
  உண்மைகளுக்கு நான் ஆதாரம் கேட்பதில்லை

  பொய் குற்றச்சாட்டுகளை, பொய் என்று நிருபிக்க மட்டுமே ஆதாரம் கேட்பேன் :)

  // என்னிடம் தேதி, நிமிட வாரியாக விவரம் இல்லை....இருந்தாலும் உங்களிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.//
  உங்களின் பண்பான பதிலுக்கு நன்றி :)

  ReplyDelete
 53. //இது பிரச்சினையை புரிந்து கொள்ளாத வாதம்!

  தனியார் நிறுவனங்களில் ஊழல், பொறுப்பின்மை இருந்தால் அது முதல் போட்டவர்கள், நிர்வாகத்தை நடத்துபவர்கள் பிரச்சினை...//

  தனியார் நிறுவனம், அரசு சேவையை செய்யும் போது அங்கிருக்கும் ஊழல் பொது ஜனத்தைத்தான் பாதிக்கிறது

  உதாரணமாக நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் தனியார் நிறுவனம். அங்கு பணிமுறையாக நடக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கும் எனக்கும் பாதிப்பில்லை என்று கூறுகிறீர்களா

  //ஆனால், அரசு நிர்வாகத்தில் ஊழல், பொறுப்பின்மை இருந்தால் அதை கேட்க மக்களுக்கு உரிமையுண்டு...//

  கண்டிப்பாக உண்டு
  அதே போல் அங்கு நடக்கும் நல்ல விஷயங்களை பாராட்டவும் கடமை உண்டு

  உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

  --

  நல்லதை பாராட்டாமல் கெட்டதை மட்டுமே எழுதும், அதிலும் பல கற்பனை குற்றச்சாட்டுக்களை எழுதுபவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்

  1. காழ்ப்புணர்ச்சி
  2. மனவக்கிர வெளிப்பாடு
  3. தனியார் மயத்தை ஊக்குவிப்பது

  இது என் கருத்து

  //ஏனெனில் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் அரசு நிர்வாகமே நடக்கிறது...//

  வங்கிகள் மக்களின் வரிப்பணத்திலிருந்தா நடக்கின்றன :) :) :)

  அதாவது வங்கிகளால் அரசிற்கு வரவா, செலவா :) :)

  ReplyDelete
 54. //சரி, அவர்கள் தான் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாங்கிய காசுக்கு பரிந்துரைக்கிறார்கள்...

  ஆனால், வாங்கியவர்கள் எங்கு கும்மாளமிட்டு விட்டு அதை வாங்குகிறார்கள்??//

  எங்கும் கும்மாளமிடவில்லை. இவர்களை நேர்மையாளர்கள் என்ற நம்பிக்கையில் ஏமாந்து போகிறார்கள்

  ReplyDelete
 55. //ஆனால்....

  எந்த காரணத்திற்காக, யாருக்கு சேவை செய்ய அரசு வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன?? அவர்களுக்கு ஒழுங்கான சேவை கிடைக்கிறதா??//

  கிடைக்கிறது.

  வேண்டுமென்றால் குளிரூட்டப்பட்ட அறை போன்ற fantasyகள் இல்லாமல் இருக்கலாம்

  ஆனால் அரசு வங்கிகளில் சேவை கிராமங்களில் கிடைத்துக்கொண்டிருக்கின்றது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை

  எங்காவது வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போனதுண்டா. அல்லது வட்டி வராமல் இருந்திருக்கிறதா


  இரவு பத்து மணிக்கு கூட வங்கியை திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற அதீத எதிர்ப்பார்ப்பு தான் பிரச்ச்னையின் அடி நாதம்

  ReplyDelete
 56. //மாற்று கருத்து உடையவர்களை வயித்தெரிச்சல் பார்ட்டிகள், அதிகம் படிக்காத தற்குறிகள், ஆழ்மன வக்கிரம் பிடித்தவர்கள் என்று எழுதுவது மட்டும் ஆரோக்கியமான கருத்தா???//

  மாற்றுக்கருத்து உடையவர்களை எழுதவில்லை.

  மாதவராஜின் பல கருத்துக்களுடன் எனக்கு மாற்று கருத்து தான். http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_3156.html

  நான் எப்பொழுதுமே நபர் சார்ந்த விமர்சணங்களை முன்வைப்பதில்லை

  கருத்து சார் விமர்சணங்கள் தான் - என்னொடு இந்த விஷயத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லா விஷயத்திலும் நான் உங்களுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டுமென்பதில்லை

  அல்லது ஒரு விஷயத்தில் நீங்கள் எனக்கு ஆதரவாக பேசினால் அதே போல் அனைத்து விஷயங்களில் பேச வேண்டும் என்பதில்லை

  (சில தற்குறிகள் அப்படி செய்வது தமிழ் வலையுலகின் சோகம் என்பது வேறு விஷயம்)

  --

  நான் எழுதியது மாற்று கருத்து உள்ளவர்களை அல்ல. நான் எழுதியது குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் :) :)

  நான் அனைவரையும் கூறவில்லை. நான் கூறியது இரு வகை பதிவர்களை பற்றித்தான்
  முதல் வகை – கற்பனை குற்றச்சாட்டு எழுதுபவர்கள்
  இரண்டாவது வகை – மனவக்கிரம் மிகுந்தவர்கள்

  எனவே உங்கள் குற்றச்சாட்டு அடித்தளமற்றது என்று பதிவு செய்கிறேன்

  ReplyDelete
 57. //மடியில் கனம் இருப்பதால் அல்ல...மற்றவர்களை வயிற்றெரிச்சல் பார்ட்டிகள், ஆழ்மன வக்கிரம் பிடித்தவர்கள், தற்குறிகள் என்று பேசும் ஒருவருடன் விவாதித்து என்ன பலன் என்று மற்றவர்கள் ஒதுங்கி போயிருக்கக் கூடும்....//

  உங்கள் கருத்தில் முரண் தெரிகிறது

  மடியில் கனமில்லாதவர்கள் விலகிபோயிருக்க வேண்டும் !!!

  :) :) :) :)
  ---

  //மற்றவர்களை //
  ”மற்றவர்களை” அப்படி பேசவில்லை என்றும் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள், ஆழ்மன வக்கிரம் பிடித்தவர்கள்,ஆகியோரை மட்டும் தான் அப்படி கூறியுள்ளேன் என்பதும் எளிதாக புரிந்து கொள்ள கூடியது தான்

  ReplyDelete
 58. //இல்லை!

  ஊழியர்களும்(!) எக்ஸ்ப்ளாய்ட் செய்தார்கள்...இப்பொழுதும் மாதவ்ராஜ் போன்ற நல்ல ஊழியர்கள் குரல் கொடுத்திருக்காவிடில் இது தொடர்ந்திருக்கும்!//

  மாதவராஜ் அந்த வங்கி ஊழியர் தானே

  அவர் நிர்வாகமா அல்லது பன்னாட்டு கம்பெனி ஊழியரா

  --

  ஆனால் தனியார் நிறுவனத்தில் இது போன்ற exploitation of othersஐ எதிர்த்து இது போல் எத்தனை குரல்கள் வருகின்றன

  --

  தனக்கு மட்டும் சரியான சம்பளம் கிடைத்தால் போதாது. தன்னுடன் வேலை பார்க்கும் அனைவருக்குமே வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் தனியார் துறையில் எத்தனை பேரிடம் உள்ளது

  --

  உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அடுத்தவரின் ஊதிய உயர்விற்காக நீங்கள் போராடி அனுபவம் உண்டா

  ReplyDelete
 59. In banking industry there should be a limit to this outsourcing work. The wages payable to them
  should be reasonable. In India the unemployment situation is bad but
  govt. using that to deny fair wages is shameful.The government is supposed to be a model employer and provide good working conditions.I differ with left on many issues and in these issues as highlighted by you
  I side with them. IOB and RBI should not remain as indifferent spectators when there are so many
  problems with this Grammen Bank.
  Wishing your struggle all success.

  ReplyDelete
 60. 1) I dont bank with ICICI bank.I earn about 40K.For me BOI or SBI is OK.I can afford only such banks.

  2)Open source is not a panacea and many in ITES sector contribute to open source. I can support Open Source but cant force the company to do so.
  3) There are many doctors who practise unethical means to earn
  more.Their practices are well known. Will Bruno dare to call them
  as சொம்பு தூக்கி.

  ReplyDelete
 61. Read the article with heavy heart.What is the position Today? How the situation happened? Because-on the part of the "Trade Union"has already failed to resist/stop the menace.The banking industry cannot be compared to other industry.The most powerful industry is banking.The major trade union is AIBEA-controled ? ! by CPI .The another trade union BEFI leaders are CPI-M supporters.The so called NCBE is non committal to any social conscious.The both AIBEA+BEFI FAILED TO STOP THE ATTACKS ON BANK EMPLOYEES because of the compromising attitude of the AIBEA leadership.The AIBEA ALREADY LOST/GIVEN UP ITS FIGHTING TENDENCIES.
  The only way is to strengthen the BEFI and fight for rights.In the name of "LEFT UNITY" and "Trade Union Unity" dont lose further time. Make the fighting organisation "BEFI" GET MAJORITY and solve the issue.If "BEFI" fail to act immediately there is no meaning at all--vimalavidya

  ReplyDelete
 62. //There are many doctors who practise unethical means to earn
  more.Their practices are well known. Will Bruno dare to call them
  as சொம்பு தூக்கி.//

  சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களை சொம்பு தூக்கி என்று தாராளமாக அழைக்கலாம்

  ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுபவர்களை அறியாமையாலும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாலும் திட்டுவதைத்தான் அனுமதிக்க முடியாது (உதாரணம் நான் ஏற்கனவே குறிப்பிட்ட தொடர்வண்டி சம்பவங்கள்)

  ReplyDelete
 63. போராட்டம் வெற்றி பெற்று அனைவரும் நிரந்தர பணியில் சேர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 64. You have tested it and writing form your personal experience or you find some information online?

  ReplyDelete
 65. This is my first visit here, but I will be back soon, because I really like the way you are writing, it is so simple and honest

  ReplyDelete