பிள்ளை நிலா

ஒருநாள் குழந்தைக்கு நிலாவை அம்மா காண்பித்தாள்.
வாசலுக்கு வெளியே ஓடி நிலாவைப் பார்ப்பதும், வருவதாகவும் அந்த இரவில் குழந்தை விளையாட ஆரம்பித்தது.
“நிலா தனியாக இருக்கு! நண்பர்கள் இல்லையா?”
“இருக்கு. எல்லா நட்சத்திரங்களும் அதற்கு நண்பர்கள்தான்”
“நிலா எனக்கும் நண்பனா?”
“ஆமாம், என் கண்ணே!”
“நிலா பள்ளிக்கூடம் போகுமா?”
“ம்.... நிலாவுக்கு எல்லாப் பாடமும், பாட்டும் தெரியும்”
“நிலா விளையாடுமா”
“நிலா மேகத்தில் ஒளிந்து விளையாடும்”
“நிலா தூங்குமா?’
“நிலா காலையில்தான் தூங்கும்”
கண்ணை மூடுவதும், விழித்து கேள்வி கேட்பதுமாக இருந்தது குழந்தை.
“நிலாவுக்கு அம்மா யாரு?”
“அம்மாவைத் தேடித்தான் போய்க் கிட்டே இருக்கு” அம்மா குழந்தையைத் தட்டிக் கொடுத்தாள்.
“நிலா தரைக்கு வருமா?”
“நீ சிரித்தால் வரும்”
குழந்தை சிரித்துக்கொண்டே தூங்கிப் போனது.

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நிலாவுக்கு அம்மா யாரு?”
  “அம்மாவைத் தேடித்தான் போய்க் கிட்டே இருக்கு” அம்மா குழந்தையைத் தட்டிக் கொடுத்தாள்.////////////////////////////////

  ஏன் நிலாவின் அம்மா விட்டுட்டு ஒடீட்டாங்களா என கேட்கவில்லையா ?

  பதிலளிநீக்கு
 2. அண்ணா உங்களுக்கு
  என் பதிவில் சுவராசிய பதிவர் விருது
  காத்திருக்கு பெற்றுக்கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
 3. //“நிலா தரைக்கு வருமா?”
  “நீ சிரித்தால் வரும்”//

  அற்புதம்..

  பதிலளிநீக்கு
 4. அழகு அழகு! கொள்ளை அழகு!
  குழந்தையும் நிலாவும் அம்மாவும்...
  :-))

  பதிலளிநீக்கு
 5. குழந்தையும் அம்மாவும் எப்பவும் இயற்கையோடு உறவாடக்கூடியாது. நம் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட உணர்வு கொண்டது. அதை சொற்சித்திரத்தில் வரைந்து விட்டீர்கள். நல்ல படிமம். மாதவராஜ் சார்!


  (சமீபமாக வேலை பளூ அதிகம் அதனால் வலைபக்கம் வரவில்லை)

  பதிலளிநீக்கு
 6. //“நீ சிரித்தால் வரும்”//

  மிகவும் அழகு!! ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 7. /
  “நிலா தரைக்கு வருமா?”
  “நீ சிரித்தால் வரும்”
  /

  நல்ல அழகான உரையாடல்
  :)

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு உரையாடல்.. நீ சிரித்தால் நிலா தரைக்கு வரும்.. நல்ல கருத்து..

  என் மகள் சூர்யாவுடன் நான் நிலா காட்டிப் பேசிக்கொண்டிருந்த்தது நினைவுக்கு வந்தது..


  "Daddy Can you buy me the moon please?"

  "Sure டா செல்லமே..”

  “Can you paint it pink for me?"

  "நிச்சயமாடா...”

  பதிலளிநீக்கு
 9. தலைவரே.....!! நிலா வோட அடுத்த படம் என்னன்னு அப்புடியே சொல்லீருன்தீங்கனா பரவால ..!! இப்பவெல்லாம் அவுங்க எந்த படத்துலயும் நடிக்கிரதில்ல....!!!!  கவிதைக்கு வாழ்த்துக்களுடனும் நிலாவுக்கு வருத்தங்களுடனும் ,


  லவ்டேல் மேடி.......

  பதிலளிநீக்கு
 10. சுரேஷ்குமார்!

  நன்றி. ஏன் அப்படி ஒரு கேள்வி?

  ஜே!
  மிக்க நன்றி. விருது மகிழ்ச்சியளிக்கிறது.

  வெங்கிராஜா!
  ஃபாலோயர்ஸைச் சொல்றீங்களா....! நன்றி.


  கையேடு!
  நன்றி.

  முத்துவேல்!
  நன்றி.

  தீபா!
  நன்றி.

  முத்துராமலிங்கம்!
  அவ்வப்போது எழுதவும் செய்யுங்கள் நண்பரே!


  சந்தனமுல்லை!
  நன்றி.

  மங்களூர் சிவா!
  நன்றி.


  சீமாச்சு!
  குழந்தையுடனான உங்கள் உரையாடல், இந்தப் பதிவுக்கு மேலும் அர்த்தங்களையும் அழகையும் சேர்க்கிறது. ரசித்தேன்.

  யாத்ரா!
  நன்றி.... தம்பி.


  லவ்டேல்மேடி!
  நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே!


  மணிநேரன்!
  நன்றி.


  சென்ஷி!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. // லவ்டேல்மேடி!
  நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே! //  அட..... தலைவரே.... !! " அ....... ஆ.........." படத்துல எஸ்.ஜெ. சூர்யாவோட கதாநாயகியா நடுச்சாங்களே " நிலா ".....!


  அதுக்குள்ள அந்தம்முனிய மறந்துட்டீங்களா....???

  பதிலளிநீக்கு
 12. லவ்டேல்மேடி!

  அந்தப் படம் பார்க்கவில்லை. இருப்பினும் தகவலுக்கு நன்றி.

  நாஞ்சில் நாதம்!
  நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!