தமிழ் திரட்டியில் தங்கள் வலைப்பதிவுகளை இணைக்க விரும்பும் நண்பர்கள், தோழர்கள் அதுகுறித்த விளக்கங்களைக் கேட்டு வருகின்றனர். திரட்டப்பட்ட பதிவுகளை எப்படி அறிவது, படிப்பது என்றும் சிலர் கேட்கின்றனர். எனவே, அதுகுறித்த மிகச் சுருக்கமான தகவல்களைச் சொல்ல வேண்டியது இருக்கிறது.
தமிழ் திரட்டி ஒரு இணையச் செயலி ( Web App ).
ஒருவரது வலைத்தளத்தை இந்த திரட்டியில் இணைக்க வேண்டுமென்றால் அவர் தனது பெயர், இமெயில் முகவரி, வலைத்தளத்தின் பெயர், வலைத்தளத்தின் முகவரி ( url ) வலைத்தளத்தின் Address ஆகியவற்றை தீராத பக்கங்களில் உள்ள படிவத்தில் நிரப்பி சமர்பிக்கலாம். அல்லது jothi.mraj@gmail.com என்னும் இமெயிலில் தெரிவிக்கலாம்.
அவரது வலைத்தளம் இணைக்கப்பட்ட தகவல் இமெயில் மூலம் அவருக்குத் தெரிவிக்கப்படும்.
அதன் பின், வலைத்தளத்தின் பதிவுகளின் லேபிள்களில் ஒன்று தமிழ் திரட்டி என்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ( உதாரணமாக, நீங்கள் இலக்கியம், அரசியல், தமிழ் திரட்டி என மூன்று லேபிள்கள் ஒரு பதிவுக்கு கொடுக்கிறீர்கள் என்றால் கீழ்கண்டவாறு ஒவ்வொரு லேபிளுக்கும் இடையே கமா மட்டும் போட்டு இடைவெளியின்றி இலக்கியம்,அரசியல்,தமிழ் திரட்டி என கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். உங்கள் பதிவுகளைத் திரட்டி சேகரித்துக் காட்டத் துவங்கி விடும்.
ஒருவரது சமீபத்திய பதிவு (Latest post) மட்டுமே தெரியும்.
இதுபோன்று பலரது வலைப்பதிவுகளையும்
திரட்டி, தமிழ் திரட்டி காட்டும். யார் யார் என்னென்ன
எழுதுகிறார்கள் என்பதை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வலைத்தளத்துக்கும் சென்று பார்க்க
வேண்டிய அவசியமில்லை. திரட்டியில் ( https://www.mathavaraj.com/p/thiratti.html )
பார்த்துக் கொண்டாலே போதும்.
எழுதுகிறவர்களும், வாசிப்பவர்களும்
அறிந்துகொள்ள, பகிர்ந்து
கொள்ள ஒரு வெளி.
திரட்டியில் தெரியும் பதிவுகளை க்ளிக் செய்தால் அது அந்தந்த வலைத்தளங்களுக்குக் கொண்டு சென்று அந்த பதிவை முழுசாய் காட்டும்.
திரட்டியில் இணையும் வலைப்பதிவர்கள் கீழ்கண்ட Code-ஐ Copy செய்து, தங்கள் வலைத்தளங்களில் உள்ள HTML/JAVASCRIPT widget களில் paste செய்து, தங்கள் வலைத்தளத்தில் தமிழ் திரட்டியின் படத்தை இணைத்துக் கொள்ளலாம். அந்த படத்தை கிளிக் செய்தால் தமிழ் திரட்டிக்கு அவர்களைக் கொண்டு செல்லும்.
<a href="https://www.mathavaraj.com/p/thiratti.html" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: ஒரு 1em;" target="_blank"><img border="0" data-original-height="516" data-original-width="100%" height="100%" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY6XmJRiVNyUY3QMzxUtxsB00oFNrfvTeilg4JgLCDzG5RkvooWz88Adc-MQXzlIRTJIpXVKQS2Ri8OmKTel46rebqr6MqA22dmA5ubNL1s9tsaIjOgJPiTnE3B_4Rr8xvZF0c20dO0oJjgUsWthrzeQnkMePw1qgTkP-8PIkjz6uhKYdZVmk0UtQxbUE/s320/Thiratti%20Logo%2001.jpg" width="248" /></a><br /><div style="text-align: center;"><br /></div>
மெல்ல மெல்ல, வலைப்பதிவுகள் திரட்டியில் இணைக்கப்பட்டு, இது ஒரு வழக்கமாக, முறையாக உருவாகும்போது, வலைப்பதிவுகள் குறித்து கவனமும், பகிர்வுகளும் அதிகரிக்கும். வலைப்பதிவுகளுக்கான ஒரு வெளியும் அமையும்.
அதை நோக்கி பயணிப்போம்!





You can comment here!