நண்பர்களுக்கு,
வணக்கம்.
மீண்டும் தீராத பக்கங்களுக்கே வந்து விட்டேன்.
நவீன வசதிகளோடு கூடிய புதிய வலைத்தளம் பக்கம் சென்று பார்த்து, பெரிதாய் ஒன்றும் பயனில்லை என்பது அறிந்திருக்கிறேன். அவ்வளவுதான். பட்டறிவுதான் நமது அறிவும் போல.
பிளாக் எனப்படும் இந்த வசதி கொண்ட ‘தீராத பக்கங்கள்’ பழைய ஏற்பாடுதான் என்றாலும் இதுதான் நமக்கான இடமாகவும், பழகிய இடமாகவும் இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில், AI தொழில்நுட்பம் மூலம் சில வீடியோக்களை உருவாக்கி யூடியுபில் பதிவேற்றி இருக்கிறேன். அதுகுறித்து பகிர விஷயங்கள் இருக்கின்றன.
பாதியில் விட்ட கதைகளை தொடர வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு நல்ல சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். அரசியல் களம் வெப்பமடைந்திருக்கிறது.
தீராத பக்கங்களை Mobile appல் வைத்திருக்கும் நண்பர்கள் கீழ் உள்ள இணைப்பில் சென்று அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
இனி, நாம் இங்கேயே
சந்திப்போம். பேசுவோம்.
I am waiting
ReplyDeleteசரித்தோழா
ReplyDelete