நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 3


எதிர் பாராமல்
மன்னரின் ரதம்
பழுதடைந்து நின்றது
 
சுற்றி வளைத்து
நின்ற குதிரைகளில்
மெய்க்காப்பாளர்கள் வீற்றிருந்தனர் 
 
அவர்களை அடுத்து
அணி வகுத்த படை வீரர்கள்
அரணாக நின்றனர்
 
அதற்கும் அப்பால் மக்கள்
மக்களைத் தவிர யாருமில்லை
 
இன்னொரு ரதத்துக்கு  
ஏற்பாடு செய்து
அங்கேயே காத்திருந்தார்கள்
 
இருந்த ரதத்தை விட்டு
மன்னர் இறங்கவே இல்லை
 
திரைச்சீலைகளை இறக்கி விட்டு
நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தார்
 
”நான் என்ன செய்கிறேன் என்று  தெரியுமா?”
மெல்ல தனக்குள் முணுமுணுத்தார்.

Comments

0 Comments

You can comment here!

Header