எனக்கு
எல்லாம் தெரியும்
உனக்கு ஒன்றும் தெரியாது
என்பதே அது.
எளியவரின் இயலாமை
குறித்த ஏளனம் அது
பீடத்தில் அமர்ந்து
கீழ் இருப்பவரைப் பார்க்கும்
அலட்சியம் அது.
வாழ்வோடு போராடுகிறவர்களை
புழுக்களாய் நடத்தும்
அகங்காரம் அது
உனக்கு ஒன்றும் தெரியாது
என்பதே அது.
எளியவரின் இயலாமை
குறித்த ஏளனம் அது
பீடத்தில் அமர்ந்து
கீழ் இருப்பவரைப் பார்க்கும்
அலட்சியம் அது.
வாழ்வோடு போராடுகிறவர்களை
புழுக்களாய் நடத்தும்
அகங்காரம் அது
நானே முக்கியமானவன்
என்னும் ஆணவம் அது
சர்வ வல்லமை படைத்த எனக்கு
நீ சமமா என்னும்
சனாதனம் அது
“நான் என்ன செய்கிறேன் என்று
உனக்குத்
தெரியுமா?”
என்னும் கேள்வியில்
அதிகாரத்தைத் தவிர
வேறொன்றும் இல்லை.
என்னும் கேள்வியில்
அதிகாரத்தைத் தவிர
வேறொன்றும் இல்லை.
கேட்டது
நானாய் இருந்தாலும்
நீங்களாய் இருந்தாலும்
அரசனாயிருந்தாலும்
கடவுளாய் இருந்தாலும்
அரசனாயிருந்தாலும்
கடவுளாய் இருந்தாலும்
(பி.கு: இந்தக் கேள்வியோடு இன்னும் கவிதைகள் வரும்.)
அந்த அகங்காரம் ஒருநாள் வீழ்ந்து மண்ணோடு மண்ணாகி போகும்... காலம் ஒரு போதும் இத்தகைய போக்கை அனுமதித்தது இல்லை என்பதே வரலாறு
ReplyDeleteநிச்சயம் லூர்து தோழர். பாசிச மனோபாவத்தை அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளிலேயே நாம் அறிந்து கொள்ளலாம்.
ReplyDeleteஅதிகாரம் என்றாலே அடக்குமுறை தானே தோழரே. அதிகாரம் கையில் இருப்பதால் அகிலத்தையும் அடக்க நினைக்கிறார்கள்.
ReplyDelete