நண்பர்களே!
வணக்கம்.
இன்றோடு ஒரு வாரம் ஆகிறது.
தீராத பக்கங்களின் இன்னொரு பக்கமாக – மொபைல் செயலியாக உருவெடுத்திருக்கிறது.
(16.1.2025 ) முந்தாநாள் வரை இந்த மொபைல் செயலியை தரவிறக்கம் (Download) செய்தவர்கள் எண்ணிக்கையை 214 என்று காட்டுகிறது கூகிள்.
அதிகமாக எல்லாம் ஆசைப்படாததால், இந்த எண்ணிக்கை மகிழ்ச்சியே. ஐந்தாறு மாதங்களுக்குள் ஆயிரத்தைத் தொட முடிந்தால் பெரும் மகிழ்ச்சி.
சராசரியாக ஒரு பதிவை 300 பேர் படித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரத்தில் 400 என உயர்ந்திருக்கிறது. உங்களுக்கு என் நன்றி.
இன்னும் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளாதவர்கள், இன்றே செய்து கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ளுங்கள். உங்களுக்கு என் அன்பு வேண்டுகோள்.
சரி. விஷயத்துக்கு வருவோம். மொபைலில் தீராத பக்கங்களை படித்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொன்னால் இந்த செயலியை மேம்படுத்த உதவியாய் இருக்கும்.
1. செயலியைத் தொட்டவுடன் தீராத பக்கங்கள் திறக்கிறதா?
2. வடிவமைப்பும் எழுத்துருக்களும் படிக்க வசதியாக இருக்கின்றனவா?
3. புதிய பதிவு வெளியானதும் ‘தீராத பக்கங்கள்’ என்னும் குரலோடு உங்கள் மொபைலுக்கு அழைப்பு வருகிறதா?
4. லிங்க்கைத் தொட்டதும், அந்தப் பக்கத்துக்கு அழைத்துச் (Redirect) செல்கிறதா?
5. இடையிடையே விளம்பரங்கள் வராமல்தான் செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி விளம்பரங்களின் தொந்தரவு இருக்கிறதா?
6. சில வெளி நாடுகளுக்கு மட்டும்தான் App Availability Option கொடுக்கப்பட்டிருக்கிறது. யாராவது தெரியப்படுத்தினால் விரைவில் update செய்துகொள்ளலாம்.
7.கமெண்ட் செய்யும்போது Google Account sign செய்வதில் சிரமம் இருக்கிறதா?
8. இது தவிர வேறு எதேனும் issues / advices / assessment இருந்ததால் தெரியப்படுத்துங்கள். செயலியை சரி செய்யவும் மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.
மேற்கூறிய விஷயங்களில் உங்கள் கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள் நண்பர்களே!
உங்கள் பொதுவான மதிப்பீடுகளை Play storeல் Mathavaraj App-ன் பக்கத்திற்கு சென்று Rating and Reviewல் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் ஆதரவும், கருத்துக்களும் இந்த முன்முயற்சிக்கு ஊக்கமளிக்கும்.
நன்றி.
அன்புடன்
மாதவராஜ்
அருமை!! வாழ்த்துககள்
ReplyDelete//அருமை!! வாழ்த்துககள்// நல்லது. கூகிள் அக்கவுண்டு மூலம் பதிவிட்டால் தங்களை அறிந்து கொள்ள முடியும். அல்லது உங்கள் பெயரையும் சேர்த்து பதிவிடலாமே.
Deleteநன்றாக இருக்கு தோழா
ReplyDelete//நன்றாக இருக்கு தோழா// மகிழ்ச்சியும் நன்றியும் தோழர். குறைகளே இல்லையா? கூகுள் அக்கவுண்டு மூலம் பதிவிட்டால் தங்களை அறிந்து கொள்ள முடியும். அல்லது உங்கள் பெயரையும் சேர்த்து பதிவிடலாமே.
Deleteஅருமை 👌
ReplyDelete//அருமை 👌// .நல்லது நண்பரே. கூகுள் அக்கவுண்டு மூலம் பதிவிட்டால் தங்களை அறிந்து கொள்ள முடியும். அல்லது உங்கள் பெயரையும் சேர்த்து பதிவிடலாமே.
Deleteசிறப்பு தோழர்
ReplyDeleteஇது வரை எவ்வித தொந்தரவுகள் இன்றி
நகர்கிறது.
தங்களின் தீராத பக்கங்கள்!
வாழ்த்துகள்
மு.அருணகிரி
அவனியாபுரம் மதுரை
மகிழ்ச்சி தோழர். தங்கள் வருகையும், கருத்தும், ஆதரவும் உற்சாகமளிக்கிறது.
Deleteசெயலியில் எந்தவிதமான தடங்கலும் இன்றி நன்றாக உள்ளது தோழர்.
ReplyDeleteநல்லது தோழர். தங்களுக்கு என் அன்பும், மகிழ்ச்சியும். (தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே..)
Deleteகூகுள் கணக்கில் தான் கருத்து பதிவு செய்தேன்,
Deleteஇரா.தமிழ்செல்வம்,
தீரா பக்கங்களை பின் தொடர்பவன்,ஓசூரில் பணிபுரிந்தேன்,அங்கு நீங்கள் கலந்து கொண்ட கூட்டங்களில் நானும் கலந்து கொண்டு உங்கள் கருத்துரைகளை கேட்டுள்ளேன்.பணி ஓய்வுக்கு பின் இப்பொழுது மதுரையில் உள்ளேன்.
அப்படியானால், ‘anonymous' என்று வரக் கூடாதே. கூகுளில் தாங்கள் பதிந்திருக்கும் பெயரோடு அல்லவா வரவேண்டும்?
Deleteஒவ்வொரு முறையும் கூகுள் கணக்கை தேர்வு செய்து தான் கருத்து பதிவு செய்கிறேன் தோழர்
Deleteசர்வர் தவறு போல,இப்பொழுது சரி ஆகி விட்டது தோழர்.தொடர்ந்து வாசித்துக்கொண்டே தான் இருக்கிறேன்.தனியார் நிறுவனமோ,பொது துறையே சங்கம் என்றாலே அவர்களுக்கு உவப்பானதாக இருக்காது போல.
Deleteஇப்பொழுது சரியாக உள்ளது தோழர்.தொடர்ந்து வாசிப்பில்.
Deleteமகிழ்ச்சி தோழர் தமிழ்ச்செல்வன். தொடர்ந்து வாசிப்பதும், உரையாடுவதும் உற்சாகமளிக்கிறது தோழர். மதுரை என்றவுடன் அருகில் இருப்பது போல உணர்வு கிடைக்கிறது.
Delete