கொட்டு அடித்து ஊரைக் கூட்டினான் மோடி மஸ்தான். “இதோ பாருங்க, இங்கே பாருங்க..” என்று எல்லோர் முன்பும்தான் அந்தக் காரியத்தை செய்தான். கையிலிருந்து கூரான வாளை இன்னொரு மனிதனின் கழுத்தில் வைத்தான். ”ஜெய்..’ என உரக்கக் கூவி அறுத்தான். வதைபடுபவனின் கை கால்கள் துடிதுடித்தன. எந்தச் சலனமுமற்ற மோடிமஸ்தானின் முகமெங்கும் மனித ரத்தம் தெறித்து வழிந்தோடியது. வெட்டப்பட்ட தலையை கையில் தூக்கி எல்லோருக்கும் காட்டினான். முகம் பொத்தியும், பதைபதைத்தும் நின்றது கூட்டம்.
வெறி பிடித்தவனாய் சுற்றிச் சுற்றி வந்தவன் மெல்ல அடங்கினான். மீண்டும் கொட்டு அடித்து “இதோ பாருங்க, இங்கே பாருங்க” என்று உரக்கக் கத்திவிட்டு, தன் முகத்தை ஒரு வெள்ளைத் துண்டால் மூடி அப்படியே உட்கார்ந்தான். மயான அமைதியோடு வெறித்துப் பார்த்தது கூட்டம். துண்டை விலக்கியபோது அவன் முகத்தில் ரத்தக் கறைகள் இல்லை. சாந்தமாய் புன்னகைத்தான். ஜெய்...” என ஓங்காரக் கூரலிட்டு எழுந்து கைகளை பரிசுத்தமானவனாய் விரித்தான். வித்தையை மெச்சி சிலர் கைதட்டினார்கள்.
கீழே ஒரு தலையும், முண்டமும் தனித்தனியாகத் தரையில் கிடந்தன. கைதட்டியவர்களின் உள்ளங்கைகளில் ரத்தம் அப்பியிருந்தது.
அருமை மாதவ்..
பதிலளிநீக்குவேறு வார்த்தைகள் இல்லை...
வேண்டுமானால் இப்படி சேர்த்துக் கொள்ளலாம்..
அவர்கள் கைதட்டிக் கொண்டிருந்த போது மஸ்தான்
மேலும் பேசலானான்:
வெட்டுண்டவனின் வலியையோ, அவனது தீனக் குரலையோ
நான் கேட்கவில்லை என்று எப்படி அவர்கள் சொல்ல முடியும்...
அவரவர்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும் என்பதை நான் இப்போதும் உரக்க முழங்குகிறேன்.. சொல்லப் போனால், இம்மாதிரி சமயங்களில், நீதியை எனது
கொலைக் கருவிகள் மூலமே நான் வழங்குவது வழக்கம்..
இப்போது, கை தட்டியவர்கள் அப்படியே உணர்ச்சிப் பெருக்கால்
கதறி அழுது கொண்டே குரல் எழுப்பினார்கள்: மஸ்தானை பிரதம ஸ்தானத்தில் ஏற்றி வை, சீக்கிரம்..
எஸ் வி வேணுகோபாலன்
அன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குரொம்ப நல்லாயிருக்கு மாதவராஜ்...
இந்த மோடி மஸ்தான் கதை...
கை தட்டியவர்களின் கைகளில் ரத்தக்கறை...அற்புதமான சிந்தனை...
வேணு அவர்களின் கருத்தும்... நீட்சியும் மேலும் அழகு...
அன்புடன்
ராகவன்
அருமை .அருமை .
பதிலளிநீக்குதாதாசாஹெப் பால்கே விருதை நரேந்திர மோதிக்கே வழங்கியிருக்கலாம் ;)
பதிலளிநீக்குஅருமை..அற்புதமான சிந்தனை...
பதிலளிநீக்குwonderful
பதிலளிநீக்குஉங்கள் கவிதை நிஜம் பேசுகிறது...
பதிலளிநீக்குகவிஞனின் பலமே இதுதான்....
வாழ்த்துக்கள்!
வெட்கமில்லாமல் மோடியை ஆதரிக்கும் கூட்டம் இங்கும் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.வெட்டுண்ட தலைகளை மறைக்க மோடி கட்டும் வித்தையை ஒரு கூட்டம் ரசிக்கிறது.2012 பிப்ரவரி நரவேட்டை நடத்தி முடிந்த பத்தாம் வருடத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கண்காட்சி நடத்தி இவர்களின் உண்மை மகத்தை தோலுரித்துக்காட்ட வேண்டும்.
பதிலளிநீக்குதொடர்ந்து மனுசக்கறி சாப்பிட்டால் உண்ணாவிரதம் இருந்து உடல்கொழுப்பை அடக்கணும்-இது நரமாமிசனுக்கு மருத்துவர் சொன்ன அறிவுரை. நிற்க. நாடாளுமன்ற மண்டபத்தில் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், ஜகஜீவன்ராம்...என தேசத்தலைவர்கள் உருவப்படங்கள் அலங்கரிக்க, அதே இடத்தில் காந்தியடிகளின் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சவர்க்காரின் படத்தையும் வைத்தார்கள், எனவே சவர்க்காரின் சிஷ்யரான நரன் பிரதமர் ஆக வேண்டும் என வெறிகுச்சல் கிளம்புவதில் வியப்பென்ன? (தோழர் எஸ்விவி, சவர்க்காரின் படத்தை சிறுபான்மையினரான அப்துல்கலாமை வைத்தே திறந்து வைத்ததுதான் ஆர் எஸ் எஸ் பரிவாரின் சாதுர்யம்!)
பதிலளிநீக்குI have translated your write-up in English. You can read it here: http://luthfispace.blogspot.com/2011/09/modi-magic.html
பதிலளிநீக்கு