அவனால் முடியாதவற்றை செய்வதற்கென்று அவனைப் போலவே ஒருவன் அவனுக்கு இருந்தான். எகிறி அந்தரத்தில் குட்டிக்கரணம் போட்டு, அப்படியே சுழன்று பின்னங்காலால் வில்லனின் நெற்றிப் பொட்டில் அடித்தான். நாயகியின் கற்பைக் காப்பாற்ற அதிவேக ரெயிலுக்கு இணையாக ஓடி, சட்டென்று பெட்டிக்குள் பாய்ந்து, ஒரே அடியில் நாற்பத்து ஏழு பேரை சிதற வைத்தான். இசைக்கேற்ப இடதுகாலை லேசாய் பின்னுக்கு வைத்து சட்டென்று இடுப்பை வெட்டி உடலை முன்னுக்கு ஊர்வது போல நகர்த்தி, மீண்டும் இடதுகாலை பின்னுக்கு வைத்து நளினமாக ஆடினான். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அவனுக்கு முடியாமல் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவனைப் போலவே இருந்தவனால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் இப்போது பிரார்த்தனை செய்தனர்.
இந்த டூப்புக்களுக்கெல்லாம் என்ன எதிர்காலம்???
ReplyDeleteசிந்திக்க வேண்டிய ஒன்று. மிக அருமை.
ReplyDeleteதன்னால் செய்யமுடியாத அசாதாரண சண்டை மற்றும் சாகசக்காட்சிகளில் தனது குழுவினர் யாரையுமே ஈடுபடுத்தமாட்டாராம் ஜாக்கி சான் என்னும் கலைஞன். இங்கே 'டூப்பு'கள் சாகசம் செய்வதையே தனதாக்கிக்கொண்ட கதாநாயகன்கள்(!)
ReplyDeleteஅதை நம்பும் மக்கள் அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் வேறு. ஒட்டகத்திற்கு ஒரு இடத்திலா கோணல் என்ற பாரதியின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
Mathav ji! Striking below the belt should always be avoided---kashyapan
ReplyDeleteகுத்துங்க எசமான்....குத்துங்க!!!!!!!!
ReplyDeleteதானே நினைக்காத, முயற்சிக்காத, ஒரு எதிர்பார்க்காத ஸ்தானத்திற்கு தன்னை இட்டுச் சென்றுள்ள, இன்னும் மண்சோறு தின்று தான் நல்வாழ்வு பெற வேண்டும் என நேர்த்திக்கடன் செய்யும் மக்களிடம் தன உடல் நிலையைக் கூட வெளிப்படித்திக்கொள்ள முடியாத மனிதரை இவ்வாறு கூறுவது முறையன்று. காஷ்யபன் அய்யாவை வழி மொழிகிறேன். வயதில் பத்து வயது மூத்தவரை ஏக வசனத்தில் அழைப்பது நமது பண்பாடல்ல.
ReplyDeleteLakshmi, I .Felix, திலிப் நாராயணன், anto அனைவரின் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.
ReplyDeleteகாஸ்யபன் தோழருக்கும், ஓலை அவர்களுக்கும்....
நான் சொல்ல வந்த விஷயத்தை, ஏன் ஒருத்தருக்கு/ஒரு நிகழ்வுக்கு அப்படியேப் பொருத்திப் பார்க்கிறீர்கள்? ஒரு நிகழ்விலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. அதை பொதுவாக முன்வைக்க முயற்சிக்கிறேன். அதிலிருக்கும் பொதுத்தன்மையை அறிய முற்படுவதை விடுத்து, குறிப்பிட்ட நிகழ்வோடு மாத்திரம் அதை சம்பந்தப்படுத்தி யோசிப்பது சரியான பார்வையாக இருக்குமா?
இது ரஜினிக்கு மாத்திரமா பொருந்தும். சினிமா உலகு தரும் பிம்பங்கள், மாயைகள் குறித்த விமர்சனம் இல்லையா? இங்கு அவன் என்றால் என்ன, அவர் என்றால் என்ன? பெல்ட்டுக்கு கீழே மேலே என்று ஆராய என்ன இருக்கிறது?
நல்ல பதிவு! பதிவைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் //இது ரஜினிக்கு மாத்திரமா பொருந்தும். சினிமா உலகு தரும் பிம்பங்கள், மாயைகள் குறித்த விமர்சனம் இல்லையா? இங்கு அவன் என்றால் என்ன, அவர் என்றால் என்ன? பெல்ட்டுக்கு கீழே மேலே என்று ஆராய என்ன இருக்கிறது?// என்னும் கருத்தையும் சேர்த்துப் படிப்பார்களேயானால் இன்னும் தெளிவு பெறுவார்கள். காலத்திற்குத் தேவையான கருத்துள்ள பதிவு! //குத்துங்க எசமான்....குத்துங்க!!!!!!!!// என்னும் அன்றோவை வழிமொழிகிறேன்...
ReplyDeleteடூப்பு போடுவதென்பது வேறு விஷயம், அதே சமயம் வேறு ஆளை வைத்து அதே கேரக்டரில் நடிக்க வைத்து அவனுக்கும் அதே டூப்பு போட்டு படத்தை எடுத்தால் படம் அதே வெற்றியைப் பெறுமா, தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை தருமா? நடிகரின் பங்களிப்பு இங்குதான் இருக்கிறது. வெறுமனே நடிகனைக் கிண்டல் செய்வதில் அர்த்தமில்லை.
ReplyDelete///அவனுக்கு முடியாமல் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவனைப் போலவே இருந்தவனால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் இப்போது பிரார்த்தனை செய்தனர்.///
ReplyDeleteமிக அருமை!!!
மனிதாபிமானம் ஏங்கே???