உரத்துக் கேட்கும் மவுனம்....

 
 

நடுகல் இருக்கக் கூடும் சிகாகோ மண்ணில்
தீரர்களின் கழுத்தைச் சுற்றி இறுக்கிய
கயிறுகளின் நடுக்கம் நிழலாடக் கூடும்
சிறைச் சுவர்களில்
வெற்றி எக்காளமிட்ட வெறிநாய்களின்
புழுத்துப் போன கனவுகள் தட்டுப்படக் கூடும்
தூக்கு மேடையின் பாதாளக் குழியில்  

வானொலிப் பெட்டியின் ஒலியளவைக் குறைப்பதுபோல்
பின் ஒரு போதும் பேச விடாதபடிக்குத்
திருகிப் போட்ட முதலாளித்துவத்தின் கைகள்
வீழ்ச்சி கண்ட தங்களது பொருளாதாரத்தின்
தோல்வியைக் கூட உழைப்பாளிகளின் கணக்கில்
எழுத அலைந்து கொண்டிருக்க   

உலகெங்கிலுமிருந்தும்
அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறியும் வேகத்தோடு
ஒன்றிணைந்து ஒரே கரமாக நீண்டு செல்லும் பாட்டாளிகளின் கை,
அதே குரல் நாண்களை எதிர்த் திசையில் திருகிப்
பேச வைக்கும் ஒவ்வொரு மே தினத்திலும்
முழங்க வைக்கும் ஒவ்வொரு போராட்ட நாளிலும்

மவுனத்தின் இடி முழக்கமாய்  

-எஸ்.வி.வேணுகோபாலன்

Comments

4 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. மௌனங்கள் உடையும்...!
    "சிகாகோ வீதிகளில்" மேதினம் மட்டுமன்றி தொடர்ந்து தினமும் உரக்கப்பேசும் குரலாக உலகம் முழுதும் எதிரொலிக்கப் போகிறது!

    ReplyDelete
  2. *Excellent portrayal for May Day observance. Congrats Venugopal.
    *I do not miss to read Theeratha Pakkangal. If I do not browse the pages daily, I feel missing something. Mathavaraj's writings are superb.
    - J Gurumurthy (aiieaguru), presently in California (USA) on a family visit.

    ReplyDelete
  3. மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மே தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete

You can comment here