அகராதி



பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை. அம்மாவுடன்  இருந்த  பையன் ஜன்னலோரத்தில் உட்கார ஆசைப்பட்டான். இரண்டு இரண்டாய் இருந்த இடதுபக்க  இருக்கைகளில் காலியானதாய்ப் பார்த்து அமர்ந்துகொண்டான்.  பின்னாலிருந்து  பார்த்துக்கொண்டு இருந்த அவனது அப்பா, பையன் தனியாய் இருக்கிறானே என்று அவன் அருகில் போய் உட்கார்ந்தான். 

“கரம், சிரம் புறம் நீட்டாதீர்கள் என்றால் என்னப்பா?” என்றான்.
  
“கரம்ன்னா கை, சிரம்ன்னா  தலை, புறம்ன்னா வெளியே. கையையும், தலையையும் வெளியே நீட்டக்கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்காங்க” என்றான்.  கூடவே பையனை எச்சரிக்கையும் செய்தாகிவிட்டது என நிம்மதியடைந்தான்.

சிறிது நேரத்தில் பையன் எழுந்து  மீண்டும் அம்மாவிடமே போய் உட்கார்ந்துகொண்டான்.

“என்னடா, வந்துட்ட” என்று அம்மா கேட்டாள்.

“அந்த சீட்டுக்கு மேல பெண்கள்னு எழுதிப் போட்டிருக்காங்க. ” என்றான்.

அம்மா அப்பாவைப் பார்த்துச் சிரித்தாள் இப்போது.

Comments

10 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அதானே!அறிவுரைன்னா பின்பற்றுவதற்குத்தானே!

    ReplyDelete
  2. ஹா..ஹா..பையன் ரொம்ப ஷார்ப்!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. குழ‌ந்தை.. குருவாய்!
    ம‌னித‌ன் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ ம‌னித‌ம் தேய்கிற‌தோ?
    த‌லைப்பும் "அக‌ராதி", மிக‌ப் பொருத்த‌ம்.

    ReplyDelete
  5. "அம்மா அப்பாவைப் பார்த்துச் சிரித்தாள் இப்போது."

    Amma mattumma bus um sernthu serithatha.......

    ReplyDelete
  6. ஹா..ஹா..ஹா..
    பையன் ரொம்பவே ஷார்ப்.

    ReplyDelete
  7. ஏன் அவன் அப்பாவை இன்னொரு கேள்வியை கேட்க மறந்தான்?
    நீங்கள் ஏன் இந்த இருக்கையில் உட்கார்ந்து இருகிர்கள்?, என்று.

    ஏன் என்றாள், அதனால் அவனால் அவனுக்கு பல விடை கிடைதிற்கும்.

    ReplyDelete

You can comment here