வெளிவராத உரையாடல்கள்: “ஆபத்து.... உயிருக்கு ஆபத்து!”
டிசம்பர் 18, 2010
6
"ஆபத்து!.... ஆபத்து”
“யாருக்கு ஆபத்து, என்ன ஆபத்து”
“எனக்கு ஆபத்து... அவருக்கு ஆபத்து, இவருக்கு ஆபத்து. எங்கள் உயிருக்கு ஆபத்து”
“உங்களைச் சுற்றி இத்தனை காவற்படை, குண்டுதுளைக்காத கார், ஹைடெக் உளவுத்துறை எல்லாம் இருக்கும்போதும் ஆபத்தா?”
“ஆமாம், ஆமாம்”
“உங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் ஆபத்தா?”
“இல்லை. விவசாயிகள் நல்லவர்கள். தற்கொலைதான் செய்துகொள்வார்கள்”
“உங்களால் சுரண்டப்பட்ட, அந்நியக்கம்பெனிகளில் அடிமைகளாக்கப்பட்ட தொழிலாளர்களால் ஆபத்தா”
“இல்லை. அவர்கள் ரொம்ப நல்லவர்கள். எவ்வளவு அடித்தாலும் திருப்பிக்கூட அடிக்கமாட்டார்கள்”
“வேலையில்லாமல் அவதிப்படும் இளைஞர்களால் ஆபத்தா?”
“அய்யய்யோ, பாவம் அவர்கள். சினிமாக்களில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறோம். இரண்டே இரண்டு சாய்ஸ்தான் அவர்களுக்கு. ஒன்று பிச்சைக்காரனாகலாம், அல்லது தீவீரவாதியாகலாம்.”
“அப்படியானால் தீவீரவாதிகளால், ஆபத்தா”
“ஹாஹ்ஹா... நல்ல ஜோக். குண்டுவெடிப்புகளில் எப்போதும் மக்களே செத்துப் போவார்கள்”
“காலகாலமாக உங்களால் ஏமாற்றப்படும் மக்களால் ஆபத்தா”
“ஒருபோதும் இல்லை, எங்களை வாழ வைக்கும் தெய்வங்கள் அவர்கள். தப்பித்தவறி நாங்கள் செத்துப் போனால் முதலில் துடித்துப் போவதும் அவர்கள்தான்!”
“அப்புறம் ஏன் கூக்குரலிட்டீர்கள்?”
“ஹி...ஹி... ஹி... அதோ பாருங்க ஏரோப்ளேன்....!”
செம நக்கல் ...
பதிலளிநீக்குதெளிவா புரிகிறது தோழர்
கலக்கல் பதிவு
பதிலளிநீக்குஎப்போதெல்லாம் ஆட்சியாளர்காளுக்கு உள்நாட்டில் ஊழல் புகார் நிர்வாகக் கொளாரால் பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இல்லாத ‘தீவிரவாதிகளால்’ தலவர்களுக்கு ஆபத்து..செத்துத் தொலையட்டுமே!
பதிலளிநீக்குபுரளியை அல்லது புலியைக் கிளப்புவதன் வழியாக மக்களை, ஊழல் அரசாங்கம் என்ற சிந்தனையிலிருந்து திசைதிருப்புவதுதானே அவர்கள் நோக்கம்... ஆனாலும், மக்களை இவ்வளவு கேனையர்கள் என்று நினைத்திருக்கவேண்டாம்.
பதிலளிநீக்கு//“ஹி...ஹி... ஹி... அதோ பாருங்க ஏரோப்ளேன்....!”//
பதிலளிநீக்குஇப்ப இந்த ஒழுகல் (லீக்) தான் ஆபத்தா இருக்கு.
விக்கிலீக்ல உலகத்தலவருங்க முகமூடியை கலட்டுராங்க.
நிராடிய டேப்புல பேரு போன கம்பனி முதலாளிங்க எல்லாம்
போன பெயர எப்படி காப்பாத்துறதுன்னு, காய்ச்சல்ல திரியராங்க.
ஆபத்துதான், ஐயோ கொல்றாங்களே..இந்த ஆங்கில மீடியாக்காரங்க வேற.
எவனைப் பார்த்தாலும் எமனா தெரியுதே..ஆபத்து. அடிச்சதெல்லாம் போயிருமோ?
வளைச்சதெல்லாம், கையவிட்டு விலகிருமோ!! கைவிலங்குதான் மிஞ்சுமோ?
பதிவு அருமை, உண்மை நிலை வேதனைக்குரியது.வங்காளத்தில் நடந்தது நினைவைவிட்டு விலகும் முன் , இங்கும் அதே அவலம் பெரிய அளவில். உங்களைப் போல் , என்னைப்போல் பலர் கோபப்பட்டால் தான் அவர்களுக்கு தெரியும் உண்மையான ஆபத்து எப்படி இருக்குமென்று.
பதிலளிநீக்கு