ஒரு பிரஜையின் துப்பாக்கி


அன்று காலையில் கண் விழித்ததும் முதலில் பீரோவைத் திறந்து அதன் ரகசிய அறையில் வைத்திருந்த துப்பாக்கியைப் போய் பார்த்தார். அடங்காத குதிரை ஒன்று கால் தூக்கி நின்ற வாகில் கிடந்ததை கையில் எடுத்துக் கொண்டார். புழுக்கத்திலிருந்த வெக்கையான நெடியடித்தது.  உலோக ஸ்பரிசத்தில் லேசாய் நடுக்கம் வந்தது.

படாத பாடு பட்டு லைசென்சு வாங்கிய ஆரம்ப காலங்களில் அடிக்கடி எடுத்துப் பார்த்திருக்கிறார். அப்போதெல்லாம் ‘உங்களுக்கு எதுக்கு இந்த ஆசை. பைத்தியமா பிடிச்சிருக்கு’ என அவரது மனைவி முணுமுணுத்திருக்கிறார். அதற்குப் பிறகு யாராவது பிரபல அரசியல் தலைவர்கள் வருகையையொட்டி  உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் செய்ய வேண்டியிருந்ததை விட்டால் எத்தனை முறை இந்த துப்பாக்கியை கையில் எடுத்திருப்பார் என்று யோசித்துச் சொல்லி விடலாம்.

இந்த விடுமுறைக்கு வந்திருந்த பேரக்குழந்தைகளின் கண்ணில் படாமல் வைப்பது போதும் போதுமென்றாகி விட்டது. இத்தனை நாளும்  தானே இதனை பாதுகாத்து வருவதாகவும் உணர்ந்தார். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக வைத்திருந்த துப்பாக்கியை அன்றைக்கு மொத்தமாக சரண்டர் செய்யத் திடுமெனத் தோன்றியது.

கலெக்டர் அலுவலகத்தில், அந்த அரசு அதிகாரி மேஜையில் அவர் வைத்த துப்பாக்கியை எடுத்துப் பார்த்தார். ரவைகளை அத்தனையும் அப்படியே இருக்கிறதாவென எண்ணிப் பார்த்தார். நிமிர்ந்து, “ம்... எதற்கு சரண்டர் செய்கிறீர்கள்” என்றார்.

”போதும்... இருக்கட்டும்” என இவர் சொன்னார்
.
“இல்ல. அப்படியெல்லாம் சரண்டர் செய்ய முடியாது. சரியான காரணங்கள் வேண்டும்” என்றார் அதிகாரி.

அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

”இந்தாங்க” என்று சிரித்தவாறே அந்த அதிகாரி துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி நீட்டினார்.

”எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு. போதுமா” என்று அவர் துப்பாக்கியை வாங்காமல் எழுந்தார்.

“அதற்கு டாக்டரிடம் ஒரு சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு வாருங்கள்” என அதிகாரி துப்பாக்கியை அவரிடம் நீட்டிக் கொண்டு இருந்தார் அப்போதும்.

Comments

7 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

    ReplyDelete
  2. ஆஹா சிந்திக்க வச்சிட்டிங்களே....

    ReplyDelete
  3. மிக யதார்த்தமாய்.. உள்ளது சார் கட்டுரை..!!

    ReplyDelete
  4. நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. CPI, CPI(M) இரண்டும் ஏற்கெனவே சரண்டர் செய்துவிட்டன. எந்த இயக்கத்தோடு அல்லது யாரோடு பொருத்திப் பார்ப்பது என்றுதான் புரியவில்லை.

    ReplyDelete
  6. நல்ல சிந்தனைக் கதை.
    வெட்டிப் பந்தா செய்வோருக்கு சாட்டையடியான பதிவும் கூட.

    ReplyDelete

You can comment here