மரத்தின் பழங்களை பறவைகள் தின்றுவிடுமென அவர்கள் பயந்தார்கள். பறவைகளை வேட்டையாடினார்கள். காய்களைப் பறித்து தடியால் கனிய வைத்தார்கள்.
“இது அநியாயம்” என்றேன்.
“நீ பறவைகளுக்காகவும் பழங்களுக்காகவுமே பரிந்து பேசுகிறாய்” குற்றம் சுமத்தினார்கள் அவர்கள்.
“நான் மரங்களுக்காகவும்தான் பேசினேன்” என்றேன்.
“நமக்காக ஏன் பேசவில்லை நீ?” விசாரித்தார்கள் அவர்கள்.
“இவன் ஒரு கவிஞன்” என்றன பறவைகளும், பழங்களும், மரங்களும்!
“இல்லை. இவன் ஒரு தேசத்துரோகி” என அறிவித்தார்கள் அவர்கள்.
அனேகமாக நாளை நான் கைது செய்யப்படலாம்.
அருமையான கவிதை.....
பதிலளிநீக்குஒரு முறை எழுத்தாளர் பிரபஞ்சன் “கொத்தித் திருடும் அந்தக் காக்கை” என்ற வரியை விமர்சனம் செய்து சொன்னார், மனிதர்கள் எல்லாரும் பொதுவாக இருக்கவேண்டியதை/உள்ளதை எல்லாம் தனதாக்கி அல்லது திருடிவிட்டு பறவையை நாம் ‘திருட்டுக் காக்கை’ என்றோம் என்றார்.
இது சமீபத்திய அரசியல் நிகழ்வை மனதில் கொண்டு எழுதியது என்று நினைக்கிறேன்... மிகவும் அருமை...
பதிலளிநீக்குஅருந்ததி ராயை கைது செய்ய கூக்குரலிடுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்....
நீங்க அதப்பத்திதான் பேசுறீங்களா?
பதிலளிநீக்குBOLD! Like an Activist! :)
பதிலளிநீக்குவருண் காந்தி,மோடி போன்ற இந்து தீவிரவாதிகளை விட அருந்ததி ராய் அப்படி ஒன்றும் பேசிவிடவில்லை.
பதிலளிநீக்குஅன்பு மாதவ்
பதிலளிநீக்குஅற்புதமான உருவகக் கதை.
எனக்கு இப்படி எழுதத் தோன்றுகிறது:
தேச மக்களைத் தாக்குவது
தேச மக்களைப் பிரித்தாளுவது
தேச மக்களைப் பட்டினி போடுவது
தேச மக்களைக் கசக்கிப் பிழிவது
தேச மக்கள் அற்பச் சாவு சாவதை வேடிக்கை பார்ப்பது
தேச மக்கள் அறியாமை இருளில் உழல்வதை ரசிப்பது
தேச மக்கள் பிச்சை எடுப்பதை, தாசிகள் ஆவதை
கொலைகள் செய்வதை கொலையுண்டு கிடப்பதை
வீணாய்ப் போவதை வெறித்துக் கிடப்பதை
..........எல்லாம் சாதாரணச் செய்தியைக் கூடக் கருதாது இருப்பது
இதெல்லாம் நியாயம், தருமம்.
கேள்விகள் வைப்பது, பின்
தேச துரோகம் அன்றி வேறென்ன?
எஸ் வி வேணுகோபாலன்
அதிருக்கட்டும் மாது..அருந்ததிரய்க்கு எதிரான தேசதுரோகவழக்கு மிரட்டல் பற்றி எழுத்தாளர்கள் வாயே திறக்க மாட்டாங்களா....
பதிலளிநீக்குவழக்கம போல அருமை!
பதிலளிநீக்குஅருந்ததி ராய் அவர்கள் ஏன் அப்படி பேசினார்கள் என்று தெளிவாகப் புரியவில்லை. சிந்தனையாளர்கள் மௌனம் சாதிக்கிறார்கள?
ஹரிஹரன்!
பதிலளிநீக்குஆஹா.... இதுவும் கடுமையாய் உறைக்குதே!
செங்கதிர்ச்செல்வன்!
நல்லாயிருக்கீங்களா? மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
லதாமகன்!
ஆமாங்க நீங்க நினைக்கிறதப்பத்தித்தான் பேசுறேன்.
நந்தா!
அப்படியா....! :-)))
என்.விநாயகமுருகன்!
//இந்து தீவிரவாதிகளை விட அருந்ததி ராய் அப்படி ஒன்றும் //
இந்த அப்படி ஒன்றும் ரொம்பவே இடிக்குதுங்க...
வேணு!
ஆமாம்ஜ், இங்கு கேள்விகள் எழுப்பவதும் குற்றம். மாற்றி யோசிப்பதும் குற்றம்.
வெற்றிமகள்!
யாரையும் கொன்று விடுவதாகவோ, குறிப்பிட்ட இனத்தையொ, மதத்தினரையொ புண்படுத்தி நிச்சயம் ஒன்றும் பேசவில்லை.
கருணா!
பதிலளிநீக்கு//அருந்ததிரய்க்கு எதிரான தேசதுரோகவழக்கு மிரட்டல் பற்றி எழுத்தாளர்கள் வாயே திறக்க மாட்டாங்களா...//
வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
அடக்கி ஒடுக்கப் படும் மக்களுக்காய் குரல் எழுப்புபவர்கள்
பதிலளிநீக்குபாசிச அதிகார மையங்களுக்கு எதிரானவர்கள், மொத்தத்தில்,
வாரிசு அரசியல்வாதிகளை வணங்கி வளையாது, அல்லறும்
அபலைகளுக்கு ஆதரவு தருபவர்கள் அனவரும், இந்திய தேசத்துரோகிகள்.
காடுகளை அழித்து, ஆதி வாசிகளை விரட்டிவிட்டு கனிவளம் திருடுபவன்,
அரசுக்கு வரவேண்டிய வருவாயை, பொய் கம்பனிகளுக்கு விற்று, தனதாக்கிக் கொள்பவன்,
பங்குச்சந்தையை, ஆட்டு மந்தைகளாக்கி, கறுப்பு ஆடுகளால் பல் பலகோடி சம்பாதிபவன், விளையாட்டு போட்டி தொடங்கும் முன்பே, போட்டி போட்டு பணம் பண்ணிய தலைவர்கள்,
உயிரைப் பணயம் வைத்து,நாடு காக்கும் ராணுவத்தினரின், ஆயுதங்கள் வாங்கியதிலும்,
இவர்கள் வயிறு வளர்க்க ஊழல், பாதுகாப்பு படையினரின் கவச அங்கியிலும் காசு.
முன்னாள் காவலதிகாரி கஞ்சா வளர்க்கிறார், முந்தைய சட்டமன்ற உறுப்பினர் ஐடி அதிகாரியாய் வேடமிட்டு ஏமாற்றுகிறார். இன்றைய ராஷ்யசபை பிரமுகர் சட்டத்தை ஏமாற்ற, போலி ஆவணம் சமர்ப்பிக்கிறார். நீதிபதிகள் லஞ்சத்தை நிர்ணயிக்கச் சொல்கிறார்கள். இவர்கள் இந்திய தேசத்தை காக்க பிறந்த கர்மவீரர்கள். இன்னும் என்னென்ன இடர்கள், இந்த மக்களாட்ச்சியில். உலகிலேயே "படித்த முட்டாள்கள்" நிறைந்த நாடு, நம்து நாடு மட்டும் தான். இது இங்குள்ள அரசுகளுக்கு நன்றாய் தெரியும். தப்புச் செய்பவனைத்தான் தலைவனாக்குவான் இந்தியன்.
உதாரணம் : முதன் முதல் பாரதப் பிரதமர்.
வாசன்!
பதிலளிநீக்குஉங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டைகளாக விளாருகின்றன.