போதை!

கால்கள் தென்ன, அங்குமிங்கும் நடந்து, காற்றை பிடித்தபடியே  பொத்தென விழுவார்கள்.  பேசுவதை நிறுத்தி, ஒருமாதிரியாய் அடங்கிப்போய் இருந்து, தாங்கமுடியாமல் குபீரென வாந்தி எடுத்து அதன் மீதே விழுவார்கள். போகிற வருகிறவர்களையெல்லாம் வம்புக்கிழுத்து, சண்டித்தனங்கள் செய்து பெரும் வீரனாய்க் கருதியபடியே விழுவார்கள். போதையில் மயங்கிக் கிடந்த பலரையும் பார்த்த்துண்டு.

“இப்படியா அளவுக்கு மீறி.” என்று அந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தலையிலடிப்பார்கள். யாராவது தண்ணிர் தெளிப்பார்கள். பாதையில் கிடந்தால் ஓரமாய் ஒதுக்கிப் போடுவார்கள். மண்ணில் ஒருவன் அலங்கோலமாய் விழுந்து கிடக்க, எல்லோரும் அவர்கள் பாட்டுக்கு நடமாடிக்கொண்டிருப்பார்கள். தெருவில், சாலையில் வழக்கமாய் இவைகளைப் பார்த்ததுண்டு.

போதை தெளிந்து, அவனாகவே எழுந்து செல்கிற ஒருவனை இன்னும் பார்க்கவில்லை.

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நாங்க பார்த்திருக்கோங்க. மதுக்கடை வாசலில் வீடு வெச்சிருக்க நாம அதையும்தானே பார்த்துட்டு இருக்கோம். விழுறதையும் பார்த்திருக்கோம், எழுந்திருச்சு போறதையும் பார்த்திருக்கோம், எழுந்துப் போறவன் நேரா மதுவாங்க போறதையும் பார்த்தாச்சு :)

    பதிலளிநீக்கு
  2. கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (திருக்குறள் 930) (மதுவெறியன் ஒருவன், குடிகாரன் ஒருவனின் இழிவை நேரில் கண்ட பிறகு, தானும் அவ்வாறு தானே இழிவுற்றிருந்திருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்! அவ்வாறு சிந்தித்தால் ஒருபோதும் கள்ளைக் குடிக்க மாட்டான்!) என்று அன்றே திருவள்ளுவர் சொல்லிவிட்டார்! எவ்வளவு பெரிய உண்மை பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  3. நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.

    நண்பரின் ஒயின் ஷாப்பில் மாலை வேளைகளில் காசாளராக இருந்து இருக்கிறேன் பல நாட்களில்.

    பதிலளிநீக்கு
  4. இளா!
    //எழுந்துப் போறவன் நேரா மதுவாங்க போறதையும் பார்த்தாச்சு ://
    இதைத்தான் இந்தப் பதிவின் கடைசியில் நான் சொல்லியிருக்கிறேன் நண்பா!

    பதிலளிநீக்கு
  5. ஏழர!

    நண்பரே!

    நீங்கள் இட்ட பின்னூட்டத்தில் நிறைய வில்லங்கம் இருப்பது போல தெரிகிறது. அதை நான் யோசிக்கவில்லை. மிக இயல்பால இன்று நான் பார்த்த காட்சியிலிருந்து எழுதியதற்கு வேறு அர்த்தங்கள் வேண்யாம் மன்னியுங்கள். அதை நீக்கி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஆதி!

    ஆமாம் ஆதி. உங்களுடைய பின்னூட்டங்கள் அர்த்தமுள்ளவை. ஆரோக்கியமானவை.

    அம்பிகா!

    பின்னூட்டத்தை நீக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நான் தினமும் குடிப்பnவந்தான்... only 3 larges... but no one knows I drank

    எல்லா குடிகாரங்களும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு jugde பண்ணவேண்டாம் நண்பரே :)

    பதிலளிநீக்கு
  8. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...!

    நன்றி நண்பரே!

    D.R.Ashok!
    //எல்லா குடிகாரங்களும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு jugde பண்ணவேண்டாம் நண்பரே//
    நிச்சயமாக அப்படி நினைக்க மாட்டேன். நான் ரசிக்கிற குடிகாரர்களும் இருக்கிறார்கள்!!!

    இங்கு நான் சொல்ல வந்தது போதை பற்றி. ஒரு கவிஞராயிருக்கும் உங்களுக்கு அதன் அர்த்தங்கள் நிச்சயம் பிடிபட்டிருக்கும் எஅன் நம்புகிறேன். :-)))))

    பதிலளிநீக்கு
  9. அதனால என்னங்க பரவாயில்ல, என் அனுபவம் அப்படி

    பதிலளிநீக்கு
  10. சே.குமார்!
    நன்றி நண்பரே

    இனியா!
    அப்படியெல்லாம் இல்லைங்க. இதுவரைக்கும் தீராத பக்கங்களில் ஏறத்தாழ நூறு சொற்சித்திரங்கள் எழுதி இருக்கிறேன். அப்போதெல்லாம் வராத வில்லங்கம் இப்போது மட்டும் ஏன் வரப் போகிறது?

    ஏழர!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நண்டு @நொரண்டு -ஈரோடு!
    நன்றி.

    ராம்ஜி_யாஹூ !
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!